Monday, September 13, 2021

ஹிந்தியில் எளிய வாக்கிய அமைப்பு: / simple sentences

 

ஹிந்தியில் 

எளிய வாக்கிய அமைப்பு:



आदमी - மனிதன்

गाय - (பெ) பசு

नौकर - வேலைக்காரன்

रसोई घर -  சமையலறை

भाई -சகோதரன்

विद्यार्धी    _(வித்யார்த்தி) மாணவன்

मैदान  - மைதானம்

नौकरानी - வேலைக்காரி 

मेहल - மாளிகை

बहन - சகோதரி

குறிப்பு:

(1) 'आ' வென முடியாத ஆண்பால் சொற்கள் பன்மையில் மாற்றம் அடைவதில்லை. आदमी ,  भाई , अध्यापक,  विद्यार्धी  போன்ற ஆண்பால் சொற்கள் பன்மையிலும் அவ்வாறே மாறாம லிருக்கும்.


(2) பன்மையிலும் மாறாமல் அவ்வாறே இருக்கும் சொற்,கள் அனைத்தும் ஆண்பால் என அறியவும்.

वे कौन हैं ? அவர்கள் யார் ?

वे आदमी  हैं ।   அவர்கள் மனிதர்கள்.

ये अध्यापक हैं ।     இவர் ஆசிரியர்.

यह नौकर है ।  இவன் வேலைக்காரன். 

वहाँ क्या है ? அங்கே என்ன இருக்கிறது?

वहां गाय है । அங்கே பசு இருக்கிறது.

नौकरानी घर में है । வேலைக்காரி வீட்டில் இருக்கிறாள்.

हम दूकान में हैं । நாம் கடையில் இருக்கிறோம்.

राम मैदान में है । ராமன் மைதானத்தில் இருக்கிறான்.

मैं राजन हूँ।      நான் ராஜன். 

वह राधा है।   அவள் ராதா.

हम भाई-बहन हैं । நாங்கள் சகோதர சகோதரி.

यह बहन है।  இவள் சகோதரி.

यह बहन  मीरा है।   இந்த சகோதரி மீரா.

भाई और बहन कहाँ  हैं ? 

சகோதரனும் சகோதரியும் எங்கே இருக்கிறார்கள்?

भाई और बहन घर में  हैं ।

சகோதரனும் சகோதரியும் வீட்டில் இருக்கிறார்கள்.

गाय और कुत्ता मैदान में है । 

பசுவும் நாயும் மைதானத்தில் இருக்கின்றன.


में -ல்         - हाथ में    - கையில்

                    गिलास  में  - கிளாஸில்


पर -  மேல்  -   मेज़ पर  - மேஜையின் மேல்

                          पेड़ पर - மரத்தின் மேல்.


यह हाथ है । இது கை.

हाथ में कलम है । கையில் பேனா இருக்கிறது.

हाथ में गिलास है । हाथ में पुस्तक है ।

मेज़ पर गिलास है । மேஜையின் மீது கிளாஸ் இருக்கிறது.

गिलास में पानी है । கிளாஸில் தண்ணீர் இருக்கிறது.

ज़मीन पर कुरसी है । தரையில் நாற்காலி இருக்கிறது.

कुरसी पर अध्यापक हैं । நாற்காலியில் ஆசிரியர் இருக்கிறார்.

पेड पर बंदर है । மரத்தில் குரங்கு இருக்கிறது.










No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...