Showing posts with label AKSHARAM TAMILஅக்ஷரம் தமிழ். Show all posts
Showing posts with label AKSHARAM TAMILஅக்ஷரம் தமிழ். Show all posts

Thursday, January 25, 2024

வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்

 

வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்


  தமிழின் 18 மெய்யெழுத்துகளை
  வல்லினம் (6), 
  மெல்லினம் (6), 
  இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர்.

    மெய்யெழுத்துகள் 18-இல்,
 க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். 
இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா.
 வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.



தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். 
இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துகள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ வாக்கியத்திலோ பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இருக்காது. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.


வல்லெழுத்துகள் மிகும் இடங்கள்

அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்

அ + காலம் = அக்காலம்
இ + சமயம் = இச்சமயம்
உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)

எ என்னும் வினா எழுத்தின் பின்

எ + பொருள் = எப்பொருள்

அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுக்கள், வினாச் சுட்டுக்களின் பின்

அந்த + காலம் = அந்தக் காலம்
இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
எந்த + பையன் = எந்தப் பையன்

அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்

அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்
எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது

இரண்டாம் வேற்றுமை அசை உருபுக்குப்பின் (ஐ)

அவனைக் கண்டேன்
செய்யுளைச் சொன்னேன்
அவளைத் தேடினேன்
குறளைப் படித்தேன்

நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)

அவனுக்குக் கொடுத்தேன்.
அவளுக்குச் சொன்னேன்.

என, ஆக என்ற சொற்களுக்குப்பின்

எனக் கூறினான்.
அவனாகச் சொன்னான்.

வல்லெழுத்து மிகா இடங்கள்


அது, இது, எது என்னும் சொற்களின் பின் 

அது காண்  
எது செய்தாய்  
இது பார்   

ஏது, யாது என்னும் சொற்களின் பின்

ஏது கண்டாய்
யாது பொருள்

அவை, எவை, இவை, யாவை

அவை பெரியன 
யாவை போயின

அத்தனை, எத்தனை, இத்தனை

அத்தனை செடி
எத்தனை பசு
எத்தனைப் பசு.

அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு

அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு

அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
(இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்)

அங்கு செல்
எங்கு கற்றாய்
இங்கு பார்

சில மென்றொடர்க்குற்றியலுகரத்திற்குப்பின் 

அன்று சொன்னான்
சங்குபட்டி
என்று தந்தான்
இன்று கண்டான்
மென்று தின்றார்
வந்து சேர்ந்தான்

சில வினையெச்ச விகுதிக்குப்பின்

நடந்து சென்றான் 
தந்து போனான்
சென்று திரும்பினான்


நன்றி 🙏🙂















Tuesday, January 9, 2024

Vishnu Sahasranamam / விஷ்ணு சஹஸ்ரநாமம்

 


விஷ்ணு சஹஸ்ரநாமம் /Vishnu Sahasranamam

 மகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட 
விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து 
விஷ்ணு சஹஸ்ரநாமம் போதித்தார்.


ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாம்தயே 1


யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஸ்ஸதம்
விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே 2

வ்யாஸம் வஸிஷ்ட னப்தாரம் ஸக்தேஃ பௌத்ரமகல்மஷம்
பராஸராத்மஜம் வம்தே ஸுகதாதம் தபோனிதிம் 3

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே
னமோ வை ப்ரஹ்மனிதயே வாஸிஷ்டாய னமோ னமஃ 4

அவிகாராய ஸுத்தாய னித்யாய பரமாத்மனே
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே 5

யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பம்தனாத்
விமுச்யதே னமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே 6

ஓம் னமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

ஸ்ரீ வைஸம்பாயன உவாச
ஸ்ருத்வா தர்மா னஸேஷேண பாவனானி ச ஸர்வஸஃ
யுதிஷ்டிரஃ ஸாம்தனவம் புனரேவாப்ய பாஷத 7

யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வா‌உப்யேகம் பராயணம்
ஸ்துவம்தஃ கம் கமர்சம்தஃ ப்ராப்னுயுர்-மானவாஃ ஸுபம் 8

கோ தர்மஃ ஸர்வதர்மாணாம் பவதஃ பரமோ மதஃ
கிம் ஜபன்-முச்யதே ஜன்துர்-ஜன்மஸம்ஸார பம்தனாத் 9

ஸ்ரீ பீஷ்ம உவாச
ஜகத்ப்ரபும் தேவதேவ மனம்தம் புருஷோத்தமம்
ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண புருஷஃ ஸததோத்திதஃ 10

தமேவ சார்சயன்னித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச யஜமானஸ்தமேவ ச 11

அனாதி னிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வ துஃகாதிகோ பவேத் 12

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகானாம் கீர்தி வர்தனம்
லோகனாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் 13

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ‌உதிக தமோமதஃ
யத்பக்த்யா பும்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னரஃ ஸதா 14

பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ
பரமம் யோ மஹத்-ப்ரஹ்ம பரமம் யஃ பராயணம் 15

பவித்ராணாம் பவித்ரம் யோ மம்களானாம் ச மம்களம்
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ‌உவ்யயஃ பிதா 16

யதஃ ஸர்வாணி பூதானி பவன்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரலயம் யாம்தி புனரேவ யுகக்ஷயே 17

தஸ்ய லோக ப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே
விஷ்ணோர்னாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் 18

யானி னாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மனஃ
றுஷிபிஃ பறுகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே 19

றுஷிர்னாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனிஃ
சம்தோ‌உனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுதஃ 20


அம்றுதாம் ஸூத்பவோ பீஜம் ஸக்திர்-தேவகி னம்தன:
த்ரிஸாமா ஹ்றுதயம் தஸ்ய ஸாம்த்யர்தே வினியுஜ்யதே 21

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அனேகரூப தைத்யாம்தம் னமாமி புருஷோத்தமம் 22

பூர்வன்யாஸ:
அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்திவ்ய ஸஹஸ்ரனாம ஸ்தோத்ர மஹாமன்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் றுஷி:
அனுஷ்டுப் சம்த:
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமன்னாராயணோ தேவதா
அம்றுதாம் ஸூத்பவோ பானுரிதி பீஜம்
தேவகீ னம்தன: ஸ்ரஷ்டேதி ஸக்தி:
உத்பவ:, க்ஷோபணோ தேவ இதி பரமோமம்த்ர:
ஸம்கப்றுன்னம்தகீ சக்ரீதி கீலகம்
ஸாங்க தன்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாம்க பாணி ரக்ஷோப்ய இதி னேத்ரம்
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்
ஆனம்தம் பரப்ரஹ்மேதி யோனிஃ
றுது: ஸுதர்ஸன: கால இதி திக்பம்த:
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ர னாம ஜபே வினியோக:

கரன்யாஸ:
விஸ்வம் விஷ்ணுர்-வஷட்கார இத்யம்குஷ்டாப்யாம் னம:
அம்றுதாம் ஸூத்பவோ பானுரிதி தர்ஜனீப்யாம் னம:
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்றுத் ப்ரஹ்மேதி மத்யமாப்யாம் னம:
ஸுவர்ணபிம்து ரக்ஷோப்ய இதி அனாமிகாப்யாம் னம:
னிமிஷோ‌உனிமிஷ: ஸ்ரக்வீதி கனிஷ்டிகாப்யாம் னம"
ரதாம்கபாணி ரக்ஷோப்ய இதி கரதல கரப்றுஷ்டாப்யாம் னம:


அம்கன்யாஸ:
ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம இதி ஜ்ஞானாய ஹ்றுதயாய னம:
ஸஹஸ்ரமூர்தி: விஸ்வாத்மா இதி ஐஸ்வர்யாய ஸிரஸே ஸ்வாஹா
ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ இதி ஸக்த்யை ஸிகாயை வஷட்
த்ரிஸாமா ஸாமகஸ்ஸாமேதி பலாய கவசாய ஹும்
ரதாம்கபாணி ரக்ஷோப்ய இதி னேத்ராப்யாம் வௌஷட்
ஸாங்கதன்வா கதாதர இதி வீர்யாய அஸ்த்ராயபட்
றுது: ஸுதர்ஸன: கால இதி திக்பம்த:

த்யானம்
க்ஷீரோதன்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகானாம்
மாலாக்லுப்தா ஸனஸ்த: ஸ்படிகமணி னிபைர்-மௌக்திகைர்-மம்டிதாம்க:
ஸுப்ரைரப்ரை ரதப்ரை ருபரிவிரசிதைர்-முக்த பீயூஷ வர்ஷை:
ஆனம்தீ ன; புனீயா தரினலின கதா ஸம்கபாணிர்-முகும்த; 1

பூ: பாதௌ யஸ்ய னாபிர்-வியதஸுர னிலஸ்சம்த்ர ஸூர்யௌ ச னேத்ரே
கர்ணாவாஸா: ஸிரோத்யௌர்-முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அம்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர னரகககோ போகி கம்தர்வ தைத்யை:
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபுவன வபுஸம் விஷ்ணுமீஸம் னமாமி 2

ஓம் னமோ பகவதே வாஸுதேவாய !

ஸான்தாகாரம் புஜகஸயனம் பத்மனாபம் ஸுரேஸம்
விஸ்வாதாரம் ககன ஸத்றுஸம் மேகவர்ணம் ஸுபாம்கம்
லக்ஷ்மீகாம்தம் கமலனயனம் யோகி ஹ்றுத்த்யான கம்யம்
வம்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோகைக னாதம் 3


மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம் ஸ்ரீவத்ஸாகம் கௌஸ்துபோத்பாஸிதாம்கம்
புண்யோபேதம் பும்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வம்தே ஸர்வலோகைக னாதம் 4

னமஃ ஸமஸ்த பூதானாம் ஆதி பூதாய பூப்றுதே
அனேகரூப ரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே 5

ஸஸம்கசக்ரம் ஸகிரீட கும்டலம் ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம்
ஸஹார வக்ஷ:ஸ்தல ஸோபி கௌஸ்துபம் னமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் 6

சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேமஸிம்ஹாஸனோபரி
ஆஸீனமம்புதஸ்யாம மாயதாக்ஷ மலம்க்றுதம் 7

சம்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாம்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்றுஷ்ணமாஸ்ரயே 8


பம்சபூஜ

லம் – ப்றுதிவ்யாத்மனே கம்தம் ஸமர்பயாமி
ஹம் – ஆகாஸாத்மனே புஷ்பைஃ பூஜயாமி
யம் – வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம் – அக்ன்யாத்மனே தீபம் தர்ஸயாமி
வம் – அம்றுதாத்மனே னைவேத்யம் னிவேதயாமி
ஸம் – ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜா னமஸ்காரான் ஸமர்பயாமி

ஸ்தோத்ரம்

ஹரி: ஓம்….

விஸ்வம் விஷ்ணுர்-வஸட்காரோ பூதபவ்ய பவத் ப்ரபு:
பூதக்றுத் பூதப்றுத்-பாவோ பூதாத்மா பூத பாவன: 1

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதி:
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஸேத்ரஜ்ஞோ‌உக்ஷர ஏவ ச 2


யோகோ யோக விதாம் னேதா ப்ரதான புருஷேஸ்வர:
னாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஸவ: புருஷோத்தம: 3

ஸர்வ: ஸர்வ; ஸிவ: ஸ்த்ராணுர்-பூதாதிர்-னிதிரவ்யய:
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: 4

ஸ்வயம்பூ: ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன:
அனாதி னிதனோ தாதா விதாதா தாதுருத்தம: 5

அப்ரமேயோ ஹ்றுஷீகேஸ: பத்மனாபோ‌உமரப்ரபு:
விஸ்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோ த்ருவ: 6

அக்ராஹ்ய: ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் 7


ஈஸான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி:
ஹிரண்யகர்போ பூகர்போ மாதவோ மதுஸூதன: 8

ஈஸ்வரோ விக்ரமீதன்வீ மேதாவீ விக்ரம: க்ரம:
அனுத்தமோ துராதர்ஷ: க்றுதஜ்ஞ: க்றுதிராத்மவான் 9

ஸுரேஸ: ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ:
அஹ-ஸ்ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யய: ஸர்வ தர்ஸன: 10

அஜ-ஸ்ஸர்வேஸ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:
வ்றுஷா கபிரமேயாத்மா ஸர்வயோக வினிஸ்றுத: 11

வஸுர்-வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா-ஸ்ஸம்மித: ஸம:
அமோக: பும்டரீகாக்ஷோ வ்றுஷகர்மா வ்றுஷாக்றுதி: 12


ருத்ரோ பஹுஸிரா பப்ருர்-விஸ்வயோனிஃ ஸுசிஸ்ரவா:
அம்றுத: ஸாஸ்வத ஸ்தாணுர்-வராரோஹோ மஹாதபா: 13

ஸர்வக: ஸர்வ வித்பானுர்-விஷ்வக்ஸேனோ ஜனார்தன:
வேதோ வேத விதவ்யம்கோ வேதாம்கோ வேதவித்-கவி: 14

லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்றுதாக்றுத:
சதுராத்மா சதுர்-வ்யூஹ: சதுர்தம்ஷ்ட்ர: சதுர்புஜ: 15

ப்ராஜிஷ்னுர்-போஜனம் போக்தா ஸஹிஷ்னுர்-ஜகதாதிஜ:
அனகோ விஜயோ ஜேதா விஸ்வயோனி: புனர்வஸு: 16

உபேம்த்ரோ வாமன: ப்ராம்ஸுரமோக: ஸுசிரூர்ஜித:
அதீம்த்ர: ஸம்க்ரஹ: ஸர்கோ த்றுதாத்மா னியமோ யம: 17


வேத்யோ வைத்ய: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீம்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: 18

மஹாபுத்திர்-மஹாவீர்யோ மஹாஸக்திர்-மஹாத்யுதி:
அனிர்-தேஸ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரி த்றுக்: 19

மஹேஸ்வாஸோ மஹீபர்தா ஸ்ரீனிவாஸ: ஸதாம்கதி:
அனிருத்த: ஸுரானம்தோ கோவிம்தோ கோவிதாம் பதி: 20

மரீசிர்-தமனோ ஹம்ஸ: ஸுபர்னோ புஜகோத்தம:
ஹிரண்யனாப: ஸுதபா: பத்மனாப: ப்ரஜாபதி: 21

அம்றுத்யு: ஸர்வத்றுக்-ஸிம்ஹ: ஸம்தாதா ஸம்திமான் ஸ்திர:
அஜோ துர்மர்ஷண: ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா 22


குருர்-குருதமோ தாம: ஸத்ய-ஸ்ஸத்ய பராக்ரம:
னிமிஷோ‌உனிமிஷ: ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: 23

அக்ரணீ: க்ராமணீ: ஸ்ரீமான் ன்யாயோனேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் 24

ஆவர்தனோ னிவ்றுத்தாத்மா ஸம்வ்றுத: ஸம்ப்ரமர்தன:
அஹ: ஸம்வர்தகோ வஹ்னி-ரனிலோ தரணீதர: 25

ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஸ்வத்றுக்-விஸ்வபுக்-விபு:
ஸத்கர்தா ஸத்க்றுத: ஸாதுர்-ஜஹ்னுர்-னாராயணோ னர: 26

அஸம்க்யேயோ‌உப்ரமேயாத்மா விஸிஷ்டஃ ஸிஷ்ட க்றுச்சுசி:
ஸித்தார்த: ஸித்த ஸம்கல்ப: ஸித்தித: ஸித்தி ஸாதன: 27


வ்றுஷாஹீ வ்றுஷபோ விஷ்ணுர்-வ்றுஷபர்வா வ்றுஷோதர:
வர்தனோ வர்தமானஸ்ச விவிக்த: ஸ்ருதிஸாகர: 28

ஸுபுஜோ துர்தரோ வாக்மீ மஹேம்த்ரோ வஸுதோ வஸு:
னைகரூபோ ப்றுஹத்-ரூப: ஸிபிவிஷ்ட: ப்ரகாஸன: 29

ஓஜஸ்தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபன:
றுத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மம்த்ர-ஸ்சம்த்ராம்ஸுர்-பாஸ்கரத்யுதி: 30

அம்றுதாம் ஸூத்பவோ பானு: ஸஸபிம்துஃ ஸுரேஸ்வர:
ஔஷதம் ஜகத: ஸேது: ஸத்யதர்ம பராக்ரம: 31

பூதபவ்ய பவன்னாதஃ பவனஃ பாவனோ‌உனல:
காமஹா காமக்றுத்-காம்த: காம: காமப்ரத: ப்ரபு: 32


யுகாதி க்றுத்யுகாவர்தோ னைகமாயோ மஹாஸன:
அத்றுஸ்யோ வ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனம்தஜித் 33

இஷ்டோ‌உவிஸிஷ்ட: ஸிஷ்டேஷ்ட: ஸிகம்டீ னஹுஷோ வ்றுஷ:
க்ரோதஹா க்ரோத க்றுத்கர்தா விஸ்வபாஹுர்-மஹீதர: 34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:
அபாம் னிதிரதிஷ்டான மப்ரமத்த: ப்ரதிஷ்டித: 35

ஸ்கம்த: ஸ்கம்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன:
வாஸுதேவோ ப்றுஹத்-பானுராதிதேவ: புரம்தர: 36

அஸோகஸ்தாரண ஸ்தார; ஸூர: ஸௌரிர்-ஜனேஸ்வர:
அனுகூல: ஸதாவர்த: பத்மீ பத்ம னிபேக்ஷண: 37


பத்மனாபோ‌உரவிம்தாக்ஷ: பத்மகர்பஃ ஸரீரப்றுத்
மஹர்திர்-றுத்தோ வ்றுத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: 38

அதுல: ஸரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிம்ஜய: 39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்-தாமோதர: ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவான மிதாஸன: 40

உத்பவ:, க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப: பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்தா விகர்தா கஹனோ குஹ: 41

வ்யவஸாயோ வ்யவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:
பர்தி: பரமஸ்பஷ்ட: துஷ்ட: புஷ்ட: ஸுபேக்ஷண: 42


ராமோ விராமோ விரஜோ மார்கோனேயோ னயோ‌உனய:
வீர: ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோதர்ம விதுத்தம: 43

வைகும்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்றுது:
ஹிரண்யகர்ப: ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: 44

றுது: ஸுதர்ஸன: கால: பரமேஷ்டீ பரிக்ரஹ:
உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வதக்ஷிண: 45

விஸ்தார: ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்தோ‌உனர்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதன: 46

அனிர்விண்ண: ஸ்தவிஷ்டோ பூத்தர்மயூபோ மஹாமக:
னக்ஷத்ரனேமிர்-னக்ஷத்ரீ க்ஷம:, க்ஷாம: ஸமீஹன: 47


யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது-ஸ்ஸத்ரம் ஸதாம்கதி:
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் 48

ஸுவ்ரதஃ ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்றுத்
மனோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹுர்-விதாரண: 49

ஸ்வாபன: ஸ்வவஸோ வ்யாபீ னைகாத்மா னைககர்மக்றுத்
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்போ தனேஸ்வர: 50

தர்மகுப்-தர்மக்றுத்-தர்மீ ஸதஸத்-க்ஷரமக்ஷரம்
அவிஜ்ஞாதா ஸஹஸ்த்ராம்ஸுர்-விதாதா க்றுதலக்ஷண: 51

கபஸ்தினேமி: ஸத்த்வஸ்தஃ ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்றுத்-குரு: 52


உத்தரோ கோபதிர்-கோப்தா ஜ்ஞானகம்யஃ புராதன:
ஸரீர பூதப்றுத் போக்தா கபீம்த்ரோ பூரிதக்ஷிண: 53

ஸோமபோ‌உம்றுதப: ஸோம: புருஜித் புருஸத்தம:
வினயோ ஜய: ஸத்யஸம்தோ தாஸார்ஹ: ஸாத்வதாம் பதி: 54

ஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகும்தோ‌உமித விக்ரம:
அம்போனிதிரனம்தாத்மா மஹோததி ஸயோம்தக: 55

அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன:
ஆனம்தோ னம்தனோனம்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: 56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்றுதஜ்ஞோ மேதினீபதி:
த்ரிபதஸ்-த்ரிதஸாத்யக்ஷோ மஹாஸ்றும்க: க்றுதான்தக்றுத் 57


மஹாவராஹோ கோவிம்த: ஸுஷேண: கனகாம்கதீ
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ர கதாதர: 58

வேதா: ஸ்வாம்கோ‌உஜித: க்றுஷ்ணோ த்றுட: ஸம்கர்ஷணோ‌உச்யுத:
வருணோ வாருணோ வ்றுக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: 59

பகவான் பகஹா‌உ‌உனம்தீ வனமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்னுர்-கதிஸத்தம: 60

ஸுதன்வா கம்டபரஸுர்-தாருணோ த்ரவிணப்ரத:
திவஸ்ப்றுக்-ஸர்வ த்றுக்வாஸோ வாசஸ்பதிரயோனிஜ: 61

த்ரிஸாமா ஸாமக: ஸாம னிர்வாணம் பேஷஜம் பிஷக்
ஸன்யாஸ க்றுச்சம: ஸாம்தோ னிஷ்டா ஸாம்தி: பராயணம் 62


ஸுபாம்க: ஸாம்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேஸய:
கோஹிதோ கோபதிர்-கோப்தா வ்றுஷபாக்ஷோ வ்றுஷப்ரிய: 63

அனிவர்தீ னிவ்றுத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்றுச்சிவ:
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்வர: 64

ஸ்ரீத: ஸ்ரீஸ: ஸ்ரீனிவாஸ: ஸ்ரீனிதி: ஸ்ரீவிபாவன:
ஸ்ரீதர: ஸ்ரீகர: ஸ்ரேய: ஸ்ரீமான் லோகத்ரயாஸ்ரய: 65

ஸ்வக்ஷ: ஸ்வம்க: ஸதானம்தோ னம்திர்-ஜ்யோதிர்-கணேஸ்வர:
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்தி-ச்சின்ன ஸம்ஸய: 66

உதீர்ண: ஸர்வதஸ்சக்ஷு ரனீஸ: ஸாஸ்வதஸ்திர:
பூஸயோ பூஷணோ பூதிர்-விஸோகஃ ஸோகனாஸன: 67


அர்சிஷ்மா னர்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதன:
அனிருத்தோ‌உப்ரதிரத: ப்ரத்யும்னோ‌உமித விக்ரம: 68

காலனேமினிஹா வீர: ஸௌரி: ஸூர: ஜனேஸ்வர:
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ: கேஸிஹா ஹரி: 69

காமதேவ: காமபால: காமீ காம்த: க்றுதாகம:
அனிர்தேஸ்யவபுர்-விஷ்ணுர்-விரோ‌உனம்தோ தனம்ஜய: 70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்றுத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்தன:
ப்ரஹ்மவித்-ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: 71

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக:
மஹாக்ரதுர்-மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: 72


ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய:
பூர்ண: பூரயிதா புண்ய: புண்ய கீர்தி ரனாமய: 73

மனோஜவ-ஸ்தீர்தகரோ வஸுரேதா வஸுப்ரத:
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்-வஸுமனா ஹவி: 74

ஸத்கதி: ஸத்க்றுதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண:
ஸூரஸேனோ யதுஸ்ரேஷ்ட: ஸன்னிவாஸ: ஸுயாமுன: 75

பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸு னிலயோ‌உனல:
தர்பஹா தர்பதோ த்றுப்தோ துர்தரோ‌உதாபராஜித: 76

விஸ்வமூர்திர்-மஹாமூர்திர்-தீப்தமூர்தி ரமூர்திமான்
அனேக மூர்திரவ்யக்த: ஸதமூர்தி: ஸதானன: 77


ஏகோ னைக: ஸவ: க; கிம் யத்தத்-பதம னுத்தமம்
லோகபம்துர்-லோகனாதோ மாதவோ பக்தவத்ஸல: 78

ஸுவர்ணவர்ணோ ஹேமாம்கோ வராம்கஸ்சம்தனாம்கதீ
வீரஹா விஷம: ஸூன்யோ க்றுதா ஸீரசலஸ்சல: 79

அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்றுத்
ஸுமேதா மேதஜோ தன்ய: ஸத்யமேதா தராதர: 80

தேஜோவ்றுஷோ த்யுதிதர: ஸர்வஸஸ்த்ர ப்றுதாம்வர:
ப்ரக்ரஹோ னிக்ரஹோ வ்யக்ரோ னைகஸ்றும்கோ கதாக்ரஜ: 81

சதுர்மூர்தி ஸ்சதுர்பாஹு ஸ்சதுர்வ்யூஹ ஸ்சதுர்கதி:
சதுராத்மா சதுர்பாவ: சதுர்வேத விதேகபாத் 82


ஸமாவர்தோ‌உனிவ்றுத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம:
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா 83

ஸுபாம்கோ லோகஸாரம்க: ஸுதம்து: தம்துவர்தன:
இம்த்ரகர்மா மஹாகர்மா க்றுதகர்மா க்றுதாகம: 84

உத்பவ: ஸும்தர: ஸும்தோ ரத்னனாப: ஸுலோசன:
அர்கோ வாஜஸன: ஸ்றும்கீ ஜயம்த: ஸர்வவிஜ்ஜயீ 85

ஸுவர்ணபிம்து ரக்ஷோப்ய: ஸர்வவாகீ ஸ்வரேஸ்வர:
மஹாஹ்றுதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹானிதி: 86

குமுத: கும்தர: கும்த: பர்ஜன்ய: பாவனோ‌உனில:
அம்றுதாஸோ‌உம்றுதவபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: 87


ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: ஸத்ருஜிச்சத்ருதாபன:
ன்யக்ரோதோ தும்பரோ‌உஸ்வத்த: சாணூராம்த்ர னிஷூதன: 88

ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன:
அமூர்தி ரனகோ‌உசிம்த்யோ பயக்றுத்-பயனாஸன: 89

அணுர்-ப்றுஹத்-க்றுஸ: ஸ்தூலோ குணப்றுன்னிர்குணோ மஹான்
அத்றுத: ஸ்வத்றுத: ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்தன: 90

பாரப்றுத்-கதிதோ யோகீ யோகீஸ: ஸர்வகாமத:
ஆஸ்ரம: ஸ்ரமண:, க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: 91

தனுர்தரோ தனுர்வேதோ தம்டோ தமயிதா தம:
அபராஜித: ஸர்வஸஹோ னியம்தா‌உனியமோ‌உயம: 92

ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்ய தர்ம பராயண:
அபிப்ராய: ப்ரியார்ஹோ‌உர்ஹ: ப்ரியக்றுத்-ப்ரீதிவர்தன: 93

விஹாய ஸகதிர்-ஜ்யோதி: ஸுருசிர்-ஹுதபுக்விபு:
ரவிர்-விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: 94

அனம்தோ ஹுதபுக் போக்தா ஸுகதோ னைகஜோ‌உக்ரஜ:
அனிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகதிஷ்டான மத்புத: 95

ஸனாத் ஸனாதனதம: கபில: கபிரவ்யய:
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்றுத்-ஸ்வஸ்தி: ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிண: 96

அரௌத்ர: கும்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதஸாஸன:
ஸப்தாதிக: ஸப்தஸஹ: ஸிஸிர: ஸர்வரீகர: 97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண:, க்ஷமிணாம் வர:
வித்வத்தமோ வீதபய: புண்யஸ்ரவண கீர்தன: 98

உத்தாரணோ துஷ்க்றுதிஹா புண்யோ து:ஸ்வப்னனாஸன:
வீரஹா ரக்ஷண: ஸம்தோ ஜீவன: பர்யவஸ்தித: 99

அனம்தரூப‌உனம்த ஸ்ரீர்-ஜிதமன்யுர்-பயாபஹ:
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: 100

அனாதிர்-பூர்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராம்கத:
ஜனனோ ஜனஜன்மாதிர்-பீமோ பீம பராக்ரம: 101

ஆதார னிலயோ‌உதாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர:
ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத ப்ரணவ பண: 102


ப்ரமாணம் ப்ராணனிலய: ப்ராணப்றுத் ப்ராணஜீவன;
தத்த்வம் தத்த்வ விதேகாத்மா ஜன்மம்றுத்யு ஜராதிக: 103

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ:
யஜ்ஞோ யஜ்ஞபதிர்-யஜ்வா யஜ்ஞாம்கோ யஜ்ஞவாஹன: 104

யஜ்ஞப்றுத் யஜ்ஞக்றுத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதன:
யஜ்ஞான்தக்றுத் யஜ்ஞ குஹ்ய மன்னமன்னாத ஏவ ச 105

ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ வைகான: ஸாமகாயன:
தேவகீனம்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபனாஸன: 106

ஸம்கப்றுன்னம்தகீ சக்ரீ ஸாங்க தன்வா கதாதர:
ரதாம்கபாணி ரக்ஷோப்ய: ஸர்வப்ரஹரணாயுத: 107


ஸ்ரீ ஸர்வப்ரஹரணாயுத ஓம் னம இதி

வனமாலீ கதீ ஸாங்கீ ஸம்கீ சக்ரீ ச னம்தகீ
ஸ்ரீமான்னாராயணோ விஷ்ணுர்-வாஸுதேவோ‌உபிரக்ஷது 108

உத்தர பாகம்


பலஸ்ருதி:
இதீதம் கீர்தனீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மன:
னாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானா மஸேஷேண ப்ரகீர்திதம் 1

ய இதம் ஸ்றுணுயான்னித்யம் யஸ்சாபி பரிகீர்தயேத்
னாஸுபம் ப்ராப்னுயாத் கிம்சித்-ஸோ‌உமுத்ரேஹ ச மானவ: 2


வேதாம்தகோ ப்ராஹ்மண: ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தனஸம்றுத்த: ஸ்யாத் ஸூத்ர: ஸுக மவாப்னுயாத் 3

தர்மார்தீ ப்ராப்னுயாத்தர்ம மர்தார்தீ சார்த மாப்னுயாத்
காமான வாப்னுயாத் காமீ ப்ரஜார்தீ சாப்னுயாத் ப்ரஜாம் 4

பக்திமான் ய: ஸதோத்தாய ஸுசி: ஸத்கதமானஸ:
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய னாம்னாமேதத் ப்ரகீர்தயேத் 5

யஸஃ ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதான்யமேவ ச
அசலாம் ஸ்ரியமாப்னோதி ஸ்ரேய: ப்ராப்னோத்ய னுத்தமம் 6

ன பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜஸ்ச விம்ததி
பவத்யரோகோ த்யுதிமான் பலரூப குணான்வித: 7


ரோகார்தோ முச்யதே ரோகாத்-பத்தோ முச்யேத பம்தனாத்
பயான்-முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத: 8

துர்காண்யதிதர த்யாஸு புருஷ: புருஷோத்தமம்
ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண னித்யம் பக்தி ஸமன்வித: 9

வாஸுதேவாஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸனாதனம் 10

ன வாஸுதேவ பக்தானா மஸுபம் வித்யதே க்வசித்
ஜன்ம ம்றுத்யு ஜராவ்யாதி பயம் னைவோபஜாயதே 11

இமம் ஸ்தவமதீயான: ஸ்ரத்தாபக்தி ஸமன்வித:
யுஜ்யேதாத்ம ஸுகக்ஷாம்தி ஸ்ரீத்றுதி ஸ்ம்றுதி கீர்திபி: 12


ன க்ரோதோ ன ச மாத்ஸர்யம் ன லோபோ னாஸுபாமதி:
பவம்தி க்றுதபுண்யானாம் பக்தானாம் புருஷோத்தமே 13

த்வௌ: ஸ சம்த்ரார்க னக்ஷத்ரா கம் திஸோ பூர்மஹோததி:
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்றுதானி மஹாத்மன: 14

ஸஸுராஸுர கம்தர்வம் ஸயக்ஷோரக ராக்ஷஸம்
ஜகத்வஸே வர்ததேதம் க்றுஷ்ணஸ்ய ஸ சராசரம் 15

இம்த்ரியாணி மனோபுத்தி: ஸத்த்வம் தேஜோ பலம் த்றுதி:
வாஸுதேவாத்ம கான்யாஹு:, க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச 16

ஸர்வாகமானா மாசார: ப்ரதமம் பரிகல்பதே
ஆசர ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுதி: 17


றுஷய: பிதரோ தேவா மஹாபூதானி தாதவ:
ஜம்கமா ஜம்கமம் சேதம் ஜகன்னாராயணோத்பவம் 18

யோகோஜ்ஞானம் ததா ஸாம்க்யம் வித்யா: ஸில்பாதிகர்ம ச
வேதா: ஸாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் 19

ஏகோ விஷ்ணுர்-மஹத்-பூதம் ப்றுதக்பூதா ன்யனேகஸ:
த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா பும்க்தே விஸ்வபுகவ்யய: 20

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர்-வ்யாஸேன கீர்திதம்
படேத்ய இச்சேத்-புருஷ: ஸ்ரேய: ப்ராப்தும் ஸுகானி ச 21

விஸ்வேஸ்வரமஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம்
பஜம்தி யே புஷ்கராக்ஷம் ன தே யாம்தி பராபவம் 22


ன தே யாம்தி பராபவம் ஓம் னம இதி

அர்ஜுன உவாச
பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மனாப ஸுரோத்தம
பக்தானா மனுரக்தானாம் த்ராதாபவ ஜனார்தன 23

ஸ்ரீபகவான் உவாச
யோ மாம் னாம ஸஹஸ்ரேண ஸ்தோதுமிச்சதி பாம்டவ
ஸோ‌உஹமேகேன ஸ்லோகேன ஸ்துத ஏவ ன ஸம்ஸய: 24

ஸ்துத ஏவ ன ஸம்ஸய ஓம் னம இதி

வ்யாஸ உவாச
வாஸனாத்-வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்
ஸர்வபூத னிவாஸோ‌உஸி வாஸுதேவ னமோஸ்துதே 25


ஸ்ரீவாஸுதேவ னமோஸ்துத ஓம் னம இதி

பார்வத்யுவாச
கேனோபாயேன லகுனா விஷ்ணோர்-னாம ஸஹஸ்ரகம்
பட்யதே பம்டிதைர்-னித்யம் ஸ்ரோது மிச்சாம்யஹம் ப்ரபோ 26

ஈஸ்வர உவாச
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே 27

ஸ்ரீராம னாம வரானன ஓம் னம இதி

ப்ரஹ்மோவாச

னமோ‌உஸ்த்வனம்தாய ஸஹஸ்ரமூர்தயே ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே
ஸஹஸ்ர னாம்னே புருஷாய ஸாஸ்வதே ஸஹஸ்ரகோடீ யுக தாரிணே னம: 28


ஸஹஸ்ர கோடீ யுகதாரிணே னம ஓம் னம இதி

ஸம்ஜய உவாச
யத்ர யோகேஸ்வர: க்றுஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர:
தத்ர ஸ்ரீர்-விஜயோ பூதிர்-த்ருவா னீதிர்-மதிர்-மம 29

ஸ்ரீ பகவான் உவாச
அனன்யாஸ்சிம்த யம்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் னித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் 30

பரித்ராணாய ஸாதூனாம் வினாஸாய ச துஷ்க்றுதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே 31

ஆர்தா: விஷண்ணாஃ ஸிதிலாஸ்ச பீதாஃ கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானா:
ஸம்கீர்த்ய னாராயண ஸப்தமாத்ரம் விமுக்த து:கா: ஸுகினோ பவம்தி 32


காயேன வாசா மனஸேம்த்ரி யைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்றுதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத்-ஸகலம் பரஸ்மை னாராயணாயேதி ஸமர்பயாமி 33

சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று பொருள். ஆக திருமாலின் மந்திர சக்திகொண்ட ஆயிரம் நாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பதிவில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் பதிவிடப்பட்டுள்ளது..

விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிப்பதன் பலன்கள் ஏராளம். மகாபாரதத்தில் தர்மன் பீஷ்மரிடம் சில கேள்விகளை கேட்கிறார். எவர் சிறந்த கடவுள் ?, அவரை அடைவதற்கு சிறந்த வழி என்ன ? எந்த தெய்வத்தின் புகழை பாடினால் நலம் பெற முடியும் ? எந்த தெய்வத்தை உள்ளத்திலோ அல்லது வெளியிலோ வழிபட்டால் வாழ்வில் சிறக்க முடியும் ?, எந்த தெய்வத்தின் நாமத்தை ஜபித்தால் பிறவி இல்லா பெருநிலையை அடைய முடியும் என்று தர்மன் கேட்க அதற்கு ஒரே விடையாக பீஷ்மர் சொன்னது விஷ்ணுவையே. அதோடு விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் விஷ்ணுவின் பெயர்களை மந்திர சக்தியோடு இணைத்து தர்மனுக்கு பீஷ்மர் போதித்தார்.

Monday, January 8, 2024

அபிராமியம்மை பதிகம்

 

              திருக்கடையூர்

 அபிராமியம்மை பதிகம்

நாட்டை               காப்பு                   விருத்தம்  

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம் நால் 

வாய்ஐங் கரன்தாள் வழுத்துவாம்-நேயர் நிதம் 

 எண்ணும் புகழ்க் கடவூர் எங்கள் அபிராமவல்லி 

நண்ணும்பொற் பாதத்தில் நன்கு




ஸௌராஷ்டிரம்            நூல்        விருத்தம்

கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்குங் கலாமதியை நிகர் வதனமுங்

கருணைபொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங் கூந்தலுஞ் 

சங்கையில்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணந்தங்குமணி மிடறு மிக்க 

சதுர்பெருகு துங்கபா சாங்குசம் இலங்கு கர தலமும் விர லணியும் அரவும்

புங்கவர்க்கு அமுதருளும் அந்தர குசங்களும் பொலியும் நவ மணிநூபுரம்

பூண்ட செஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றியென வாழ்த்த விடைமேல் மங்கள மிகுந்தநின் பதியுடன் வந்து, அருள்செய் வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!   1


ஸௌராஷ்டிரம்                        கண்டசாபு

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் 

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் 

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் 

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும் 

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்ட ரொடு கூட்டு கண்டாய்

 அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே! ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!  2

பொருள்

கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!



விருத்தம்                                பூர்வீகல்யாணி 

சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசுலோசன மாதவி 

சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்றருங் கருணாகரி 

அந்தரி வராகி சாம்பவி அமர தோத்தரி அமலை செக சால சூத்ரி 

அகிலாத்ம காரணி வினோதசய நாரணி அகண்ட சின்மய பூரணி 

சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி! கெளமாரி உத்

துங்க கல்யாணி புஷ்பாஸ்திராம்புயபாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி 

அந்தரி மலர்பிரமராதி துதிவேத வொலி வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! 

சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி 

மகிழ் வாமி அபிராமி! உமையே! 3


பூர்வீகல்யாணி                             கண்டசாபு

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும் 

கர்ண குண்டலமு மதிமுக மண்டலம் நுதற் கஸ்தூரிப் பொட்டு மிட்டுக்

கூரணிந்திடு விழியும் அமுத மொழியுஞ் சிறிய கொவ்வையின் கனி அதரமும் 

குமிழனைய நாசியும் முத்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும் 

வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும் மணி நூபுரப் பாதமும்

வந்தெனது முன் நின்று மந்தகாச முமாக வல்வினையை மாற்றுவாயே 

ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள்வாமி! அபிராமியே! 4


ஹிந்தோளம்                           விருத்தம்

வாசமலர் மருவளக பாரமும் தண்கிரண மதிமுகமும் அயில் விழிகளும் 

வள்ளம்நிகர் முலையும் மான் நடையும் நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார் 

பாச பந்தத்திடை மனங் கலங்கித் தினம் பலவழியும் எண்ணி யெண்ணிப் 

பழிபாவம் இன்ன தென்று அறியாமல் மாயப்ர பஞ்ச வாழ்வு உண்மை என்றே

ஆசை மேலிட்டு வீணாக நாய்போல் திரிந்து அலைவதல்லாமல் உன்றன்

அம்புயப் போதெனுஞ் செம்பதம் துதியாத அசடன்மேற் கருணை வருமோ? 

மாசிலாது ஓங்கிய குணாகரி பவானி சீர் வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! 

சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே! 5


ஹிந்தோளம்                                 கண்டசாபு

மகரவார் குழல்மேல் அடர்ந்து குமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து

மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள் வரம் பெற்ற பேர்களன்றோ

செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேற் சிங்கா தனத்தி லுற்றுச் 

செங்கோலும் மநுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு 

புகர் முகத்(து) ஐராவதப்பாகராகி நிறை புத்தேளிர் வந்து போற்றிப் 

போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமிசை யொடுஞ் சுகிப்பர் 

அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே! ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாதசுகபாணி! அருள்வாமி! அபிராமியே!  6


நாட்டக்குறிஞ்சி                               விருத்தம்

நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள் நவின்றதே உலகி லுள்ளோர்

நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும் 

இன்றென்று சொல்லாமல் நினதுதிரு வுள்ளமது இரங்கி யருள் செய்கு வாயேல்

 ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழியிஃதுன் இதயம் அறியாதது உண்டோ?

குன்றமெல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த

குமரி மரகத வருணி விமலி பைரவி கருணை குலவு கிரிராச புத்ரி

மன்றல்மிகு நந்தன வனங்களில் சிறை அளிமுரல வளர்ந்திருக் கடவூரில் வாழ் வாமி!

சுபநேமி ! புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே! 7


நாட்டக்குறிஞ்சி                                      கண்டசாபு

மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் மாதிரக் கரி யெட்டையும்

மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையும் ஓர்

பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும் புத்தேளிர் கூட்டத்தையும் 

பூமகளையுந் திகிரி மாயவனையும் அரையிற் புலியாடை உடையானையும்

முறைமுறைக ளாயீன்ற முதியவளாய்ப் பழைமை முறைமை தெரியாத நின்னை

மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்று அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய்

அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 8

CLICK HERE

AKSHARAM TAMIL VIDEO LESSONS


பந்துவராளி                                             விருத்தம்

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்

ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளந் தளர்ந்து மிகவும்

அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ் அடிமைபால் கருணை கூர்ந்து

அஞ்சேல் எனச்சொல்லி ஆதரிப்பவர்கள் உனை அன்றியிலை உண்மையாக

இருநாழிகைப் போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும் 

இயற்றி யருளுந் திறங்கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளல் அரிதோ? 

வருநா வலூரர் முதலோர் பரவும் இனிய புகழ் வளர் திருக் கடவூரில் வாழ் வாமி!

சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி உமையே! 9


பந்துவராளி                                                    கண்டசாபு

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத் தோங்கிவர அருள் மழை பொழிந்தும் இன்ப

வாரிதியிலே நின்ன தன்பெனுஞ் சிறகால் வருந்தாமலே யணைத்துக்

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான சீவ

கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும் 

நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும் 

நின்மலி! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும் நீலியென்(று) ஓது வாரோ?

ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே! 10


இதையும் வாசிக்கவும்👇👇👇

அபிராமி அந்தாதி





Sunday, January 7, 2024

அபிராமி அந்தாதி

      

          அபிராமி பட்டர் அருளிய

        அபிராமி அந்தாதி

          

          




                   ஓம் சக்தி

"விழிக்கே யருளுண்டு அபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்குழிக்கே அழுந்துங்கயவர் தம்மோடு என்ன கூட்டினீயே".

ஏறக்குறைய 270 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூர் எனும் பதியில் தோன்றினார், அபிராமிபட்டர். ஒரு சமயம் சரபோஜி மன்னர் அவரிடம் "அன்றைய திதி என்ன" என்று கேட்க அவரோ ஏதோ நினைவில் அமாவாசை என்பதற்கு பதில் பௌர்ணமி என்று வாய்தவறி சொல்லிவிட்டார். ஆனால் சபையிலிருந்தோர் இதை மறுத்தனர். உண்மையும் அதுவாய் இருக்க சினத்துடன் அபிராமி பட்டரை நோக்கினார். மன்னரின் பார்வைக்கு பயந்த அவர், அம்பிகை ஒருவளாலேயே தன்னை இப்பழியிலிருந்து காக்க இயலும் என்று எண்ணியவராய் அம்பிகையை நோக்கி அந்தாதி பாட ஆரம்பித்தார். "விழிக்கே..." என்று தொடங்கும் 79வது பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருத்தோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாகக் காட்சி தந்தது. அபிராமி பட்டரை மன்னனும் உலகத்தாரும் போற்றினர்.

அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்கள் பலவற்றையும் எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் கூறிச் செல்கிறார்.

ஒரு மனதோடு இதை தினம் பாராயணம் பண்ணுபவர்கள் அடையும் பலன்கள் வர்ணிக்க முடியாது. ஆகையால் எல்லோரும் நற்பயன் அடைய வேண்டுமென்றே இதைப் பராசக்தியின் பாதாரவிந்தங்களில் ஸமர்ப்பிக்கின்றோம்.

Blessed by Abrami Butter


Abhrami Anthadi


Om Sakthi


"Wake up and pray to Abram Valli in the way of the Vedas, and then turn around and do bad deeds and cry in the pit of hell, what have you done with him?"


About 270 years ago, Abhiramibhatta appeared in Tirukkadaiyur. Once when King Sarabhoji asked him "What is the Tithi of that day" he remembered something and in reply answered Poornami as Amavasi. But the congregation denied this. Abhirami looked at Buttar with a smile to be true. 

Afraid of the king's gaze, he began to sing anthadi towards Ambikai, thinking that only Ambikai could save him from this crime. After singing the 79th hymn beginning with "Wake up..." she took off her thirutot and threw it in the sky to make her devotee's claim come true. It showed satisfaction. Abhirami Bhattar was admired by the king and the world.

Anthadi also sang Bhatar Padhigam. Kesathi padamaga of Thiruvuruvina of Ambikai

He enumerates in one padhigam and enumerates the many names of Ambikai in another padhigam.

The benefits of daily recitation of this with single mind are indescribable. Therefore we are deliberately submitting this to Parashakti's blessings for the benefit of all.



                   அபிராமி பட்டர் அருளிய

               அபிராமி அந்தாதி

                                        காப்பு


தாரமர் கொன்றையும் செண்பக மாலையுஞ் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே ! நிற்கக் கட்டுரையே.


                                    நூல்


உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம், உணர்வுடையோர் 

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன 

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே 1


துணையும், தொழுந்தெய்வமும், பெற்றதாயும், சுருதிகளின் 

பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங் 

கணையும், கரும்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே  2


அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு 

செறிந்தேன், உனது திருவடிக்கே; திருவே ! வெருவிப் 

பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் 

மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே ! 3


மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்து சென்னிக் 

குனிதரும், சேவடிக்கோமளமே! கொன்றை வார்சடைமேல் 

பனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 

புனிதரும் நீயுமென்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4


பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையாள் 

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி ! வார்சடையோன் 

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல் 

திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே. 5


சென்னியது உன்பொற் திருவடித்தாமரை சிந்தையுள்ளே 

மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே 

முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே 

பன்னியது, என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. 6


ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் 

கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும் 

மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும் 

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே! 7


சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம் 

வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் 

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் 

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8


கருத்தன, எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பில் 

பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் 

திருத்தன பாரமும்; ஆரமும் செங்கைச் சிலையும், அம்பும் 

முருத்தன மூரலும், நீயும் அம்மே! வந்து என்முன் நிற்கவே. 9


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, 

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் 

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து 

அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே! 10


ஆனந்தமாய், என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய், 

வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் 

தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் 

கானந் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 11


கண்ணியது உன் புகழ்; கற்பது உன் நாமம்; கசிந்துபத்தி 

பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில்; பகல் இரவா 

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான்முன்செய்த 

புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே! 12


பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம் 

காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு 

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! 

மாத்தவளே! உன்னை அன்றி, மற்றோர் தெய்வம் வந்திப்பதே . 13


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்; 

சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே 

பந்திப்பவர், அழியாப்பர மானந்தர்; பாரில் உன்னைச் 

சந்திப்பவர்க்கு எளிதாம்-எம்பிராட்டி! நின் தண்ணளியே!  14


தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார், 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர்தம் 

விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும் அன்றோ? 

பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!  15


கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 

ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்றும் இல்லா 

வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! 

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே! 16


அதிசயமான வடிவுடையாள்! அரவிந்தமெல்லாம் 

துதிசய ஆனன சுந்தரவல்லி! துணை இரதி 

பதிசய மானது அபசய மாக முன் பார்த்தவர் தம் 

மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே. 17


வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 

செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே 

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து 

வெவ்வியகாலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே 18


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் 

களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே 

தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? 

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே! 19


உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ 

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் 

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்தன் நெஞ்சகமோ 

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே 20


மங்கலை, செங்கலை, சம்முலை யாள், மலையாள், வருணச் 

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை 

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் 

பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே! 21


கொடியே! இளவஞ்சிக்கொம்பே - எனக்கு வம்பே பழுத்த 

படியே! மறையின் பரிமளமே! பனி மால் இமயப் 

பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! 

அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே 22


கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதன்பர் கூட்டம் தன்னை 

விள்ளேன்; பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு 

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தேவிளைந்த 

கள்ளே! களிக்கும் களியே! அளிய என்கண்மணியே! 23


மணியே! மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 

அணியே! அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 

பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! 

பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே!. 24


பின்னே திரிந்து உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க 

முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும் 

அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! 

என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! 25

CLICK HEAR

AKSHARAM TAMIL VIDEO LESSONS


ஏத்தும் அடியவர் ஈரேழு உலகினையும் படைத்தும் 

காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு 

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்கென் 

நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.26


உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு 

படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 

அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் 

துடைத்தனை; சுந்தரி! நின் அருள் ஏதென்று சொல்லுவதே. 27


சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன் 

புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புதுமலர்த்தாள் 

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும் 

செல்லும் தவநெறியும் சிவ லோகமும் சித்திக்குமே.28


சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா 

சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார் 

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த 

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே. 29


அன்றேதடுத்தென்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை 

நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்

சென்றே வீழினும் கரையேற்றுகை நின் திருவுளமே 

ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே. 30



உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்திங்கு 

எமையும் தமக்கன்புசெய்யவைத்தார்; இனி எண்ணுதற்குச் 

சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை; 

அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே 31


ஆசைக்கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப் 

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் 

வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட 

நேசத்தைஎன் சொல்லுவேன் ? ஈசர்பாகத்து நேரிழையே! 32


இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க, 

அழைக்கும்பொழுதுவந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் 

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! 

உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.33

வந்தே சரணம் புகும் அடியார்க்கு, வானுலகம் 

தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும், 

பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும், பாகமும் பொற் 

செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும், திங்களுமே.34


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க 

எங்கட் கொருதவம் எய்தியவா! எண் இறந்தவிண்ணோர் 

தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள் 

வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே! 35


பொருளே! பொருள்முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் 

மருளே! மருளில் வரும்தெருளே! என் மனத்து வஞ்சத்து 

இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன் 

அருள் ஏதறிகின்றிலேன் அம்புயாதனத் தம்பிகையே! 36


கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன 

மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின் 

பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத் 

திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே! 37


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல் 

தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனைத் 

துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் 

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 38


ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால் 

மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு; மேல் இவற்றின் 

மூளுகைக் கென் குறை, நின்குறையே அன்று; முப்புரங்கள் 

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே! 39


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் 

பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில் 

காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

 பூணுதற்கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.40


புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் 

கண்ணியம் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் 

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் 

பண்ணி, நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.41


இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து 

வடங்கொண்ட கொங்கைமலை கொண்டிறைவர் வலியநெஞ்சை 

நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி ! நல்லரவின் 

படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே 42


பரிபுரச் சீரடிப் பாசாம்குசை, பஞ்சபாணி இன்சொல் 

திரிபுர சுந்தரி! சிந்துர மேனியள்! தீமைநெஞ்சில் 

புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப் புச்சிலைக்கை, 

எரிபுரை மேனி, இறைவர்செம் பாகத் திருந்தவளே!43


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் 

அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள்; ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்; 

துவளேன், இனியொரு தெய்வம் உண்டாகமெய்த்தொண்டு செய்தே.44


தொண்டு செய்யாது, நின்பாதம் தொழாது, துணிந்திச்சையே 

பண்டு செய்தார் உளரோ இலரோ ? அப்பரி சடியேன். 

கண்டு செய்தால், அது கைதவமோ அன்றிச் செய்தவமோ?

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின்வெறுக்கை அன்றே. 45


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரைமிக்கோர் 

பொறுக்கும் தகைமை புதியது அன்றே; புது நஞ்சை உண்டு 

கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே! 

மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே. 46


வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் 

வீழும்படி அன்று; விள்ளும்படி அன்று; வேலை நிலம் 

ஏழும், பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல் 

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் 

படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில் 

இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ 

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48


குரம்பை அடித்துக் குடி புக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட 

வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து 

அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல், என்பாய் 

நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே .49


நாயகி நான்முகி, நாராயணிகை நளின பஞ்ச 

சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை சாதி நச்சு 

வாயகி, மாலினி,  வாராகி சூலினி, மாதங்கி என்று 

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50


அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அகரர் தங்கள் 

முரண் அன்று அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே, 

'சரணம் சரணம்' என நின்ற நாயகி தன் அடியார், 

மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 51


வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,

 பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த 

ஐயன் திருமனை யாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு 

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், 

பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த 

கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் 

தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே. 53


இல்லாமை சொல்லி ஒருவர்தம் பாற் சென்று, இழிவுபட்டு 

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் 

கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒருகாலத்திலும் 

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54


மின் ஆயிரம் ஒரு மெய்வடி வாகி விளங்குகின்றது 

அன்னாள், அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு 

முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை 

உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.55


ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து, இவ் வுலகு எங்குமாய் 

நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பான் என்தன் நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்ற வா இப்பொருள் அறிவார் 

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 56


ஐயன் அளந்தபடி இருநாழிகொண்டு அண்டமெல்லாம் 

உய்ய அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால் 

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் 

மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன் தன் மெய்யருளே. 57


அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்

தருணாம் புயமுலைத் தையல்நல்லாள், தகைசேர்நயனக் 

கருணாம் புயமும் வதனாம் புயமும், கராம் புயமும் 

சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று, உன்தவநெறிக்கே 

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்; ஒற்றை நீள் சிலையும் 

அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய்; அறியார் எனினும் 

பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59


பாலினும் சொல்இனியாய் பனிமா மலர்ப் பாதம் வைக்க 

மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் 

மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு 

நாலினும் சாலநன்றோ அடி யேன்முடை நாய்த்தலையே? 60


நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து, 

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம் 

பேயேன் அறியும் அறிவுதந்தாய்; என்ன பேறு பெற்றேன் 

தாயே மலைமகளே செங்கண் மால்திரு தங்கச்சியே 61


தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து மத 

வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக் 

கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி, கோகனகச் 

செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே 62


தேறும் படிசில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் 

கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறிகுறிக்கும் சமயம் 

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் 

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 63


வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு 

பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்

பேணேன்; ஒருபொழுதும்; திருமேனிப்ரகாசமன்றிக் 

காணேன், இருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம் 

தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் 

முகனும்முந் நான்கிரு மூன்றுஎனத்தோன்றிய மூதறிவின்

 மகனும்உண் டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே. 65


வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன்; நின் மலரடிச்செம் 

பல்லவம் அல்லதுபற்று ஒன்றுஇலேன்; பசும் பொற்பொருப்பு 

வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினை யேன்தொடுத்த 

சொல் அவ மாயினும், நின்திரு நாமங்கள் தோத்திரமே. 66


தோத்திரம்செய்துதொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு 

மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம் 

கோத்திரம், கல்வி, குணம் குன்றி, நாளும் குடில்கள் தோறும் 

பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பார் எங்குமே. 67


பாரும், புனலும், கனலும் வெங் காலும் படர்விசும்பும்; 

ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் 

சேரும் தலைவி! சிவகாம சுந்தரி! சீரடிக்கே 

சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே. 68


தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா 

மனம்தரும்; தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா 

இனம்தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 

கனம் தரும்; பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 69


கண்களிக் கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் 

பண்களிக் கும்குரல் வீணையும் கையும் பயோதரமும் 

மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் 

பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே. 70


அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள் 

பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பனிமாமதியின் 

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க 

இழவுற்று நின்றநெஞ்சே! இரங்கேல் உனக்கென் குறையே. 71


என்குறை தீரநின் றேத்துகிறேன்; இனி யான்பிறக்கின்; 

நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின் 

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் 

தன்குறை தீர, எம்கோன்சடை மேல்வைத்த தாமரையே. 72


தாமம் கடம்பு; படைபஞ்ச பாணம்; தனுக்கரும்பு; 

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக்கென்று வைத்த 

சேமம் திருவடி; செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை 

நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே. 73


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும், நாரணனும் 

அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் 

பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் 

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74


தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்; தாயர்இன்றி 

மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் 

பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும், பூத்தஉந்திக் 

கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75


குறித்தேன்மனத்தினில், நின்கோலம் எல்லாம்; நின்குறிப் பறிந்து 

மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டு கிண்டி 

வெறித்தேன் அவிழ்கொன்றை வேணி பிரான் ஒருகூற்றை,மெய்யில் 

பறித்தே குடி புகுதும் பஞ்ச பாணபயிரவியே! 76


பயிரவி ! பஞ்சமி! பாசாங் குசைபஞ்ச பாணி! வஞ்சர் 

உயிர் அவி உண்ணும் உயர்சண்டி! காளி! ஒளிரும்கலா 

வயிரவி! மண்டலி! மாலினி சூலி! வராகி-என்றே 

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 77


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் 

அப்பும் களப அபிராமவல்லி! அணிதரளக் 

கொப்பும் வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும், 

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. 78


விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழிகிடக்கப் 

பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்து, பாழ்நரகக் 

குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே? 79


கூட்டியவா என்னை தன் அடியாரில்! கொடியவினை 

ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம் 

காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! 

ஆட்டியவா நடம்! ஆடகத் தாமரை ஆரணங்கே. 80


அணங்கே! அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால் 

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு 

இணங்கேன்; எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும் 

பிணங்கேன் அறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே. 81


அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின் 

ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும் 

களியாகி அந்தகரணங்கள் விம்மிக் கரைபுரண்டு 

வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே. 82


விரவும் புதுமலர் இட்டு, நின் பாத விரைக்கமலம் 

இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும் 

பரவும், பதமும், அயிராவதமும், பகீரதியும்

 உரவும் குலிசமும் கற்பகக் காவும் விழிக்கே 83


உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ் 

சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கும் நுண்ணூல் 

இடையாளை, எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப் 

படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு 

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் 

தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும், 

வார்க்கும் குங்குமமுலையும், முலைமேல் முத்துமாலையுமே. 85


மால் அயன் தேட மறைதேட வானவர்தேட நின்ற 

காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்தகப்பு 

வேலைவெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய் 

பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே! 86


மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி, எந்தன் 

விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்; விழியால் மதனை 

அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டமெல்லாம் 

பழிக்கும்படி, ஒருபாகம் கொண்டாளும் பராபரையே! 87


பரம் என்றுனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் 

தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம் 

புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் 

சிரம் ஒன்று செற்றகை யான் இடப்பாகம் சிறந்தவளே! 88


சிறக்கும் கமலத்திருவே நின் சேவடி சென்னிவைக்கத் 

துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும், துரியமற்ற 

உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு 

மறக்கும் பொழுதென்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே. 89


வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து 

இருந்தாள், பழைய இருப்பிடமாக; இனி எனக்குப் 

பொருந்தாது ஒருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு 

விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90


மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன் 

புல்லிய மென்முலை பொன்னனை யாளைப் புகழ்ந்துமறை 

சொல்லிய வண்ணம்தொழும் அடியாரைத்தொழும் அவர்க்கு 

பல்லியம் ஆர்த்து எழ வெண்பக டூரும் பதம் தருமே. 91


பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி, உன்றன் 

இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்; இனி யான் ஒருவர் 

மதத்தே மதிமயங்கேன்; அவர்போன வழியும் செல்லேன்! 

முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே! 92


நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு 

முகையே, முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த 

வகையே பிறவியும் வம்பே; மலைமகள் என்பது நாம்; 

மிகையே, இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே.93


விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்ப்புளகம் 

அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி, அறிவிழந்து, 

சுரும்பிற் களித்து, மொழிதடு மாறி முன் சொன்ன எல்லாம் 

தரும் பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே. 94


நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது 

ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம் எனக் குள்ளவெல்லாம் 

அன்றே உனதென் றளித்துவிட்டேன்; அழியாதகுணக் 

குன்றே! அருட்கடலே! இம வான்பெற்ற கோமளமே! 95


கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில்வைகும் 

யாமள வல்லியை, ஏதமி லாளை, எழுதரிய 

சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால் 

ஆமள வும் தொழுவார், எழுபாருக்கும் ஆதிபரே. 96


ஆதித்தன், அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன், 

போதில் பிரமன், புராரி, முராரி பொதியமுனி 

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல் 

சாதித்த புண்ணியர் எண்ணிலர்-போற்றுவர் தையலையே. 97


தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக் 

கைவந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே 

மெய்வந்த நெஞ்சின் அல்லால், ஒரு காலும் விரகர் தங்கள் 

பொய்வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே! 98


குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை; கோல இயல் 

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்து உதித்த 

வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின்மீது அன்னமாம் 

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே .99 


குழையைத்தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி 

கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்புவில்லும் 

விழையைப் பொருதிறல்வேரியம் பாணமும், வெண்ணகையும் 

உழையைப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே. 100


                              நூற்பயன்


ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் 

பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக் 

காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை 

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.! 


&&&&&&&&&&&&&&&&&

இதையும் வாசிக்கவும்👇👇👇

அபிராமியம்மை பதிகம்




Sunday, December 31, 2023

தமிழ் வெற்றி தத்துவங்கள்



தமிழ் வெற்றித் தத்துவங்கள்


1.வாழ்க்கையில் வெற்றி என்னும் படிகளை நாம் தொடும் போது அதில் தோல்வி என்னும் 1000 குழிகள் இருக்கும்.. குழியில் விழுந்து முயற்சிப்பவன் விண்ணை தொடுவான்.. குழியில் விழுந்து முயற்சிக்காதவன் மண்ணை தொடுவான் இதுதான் வாழ்க்கை.

2. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

3. நேரத்தை வீணாக்கத் துணிந்தவர்கள், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.

4. லட்சியம் பெரிதாக இருக்குமானால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.

5. எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

6. மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.

7. உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்.

8. எதிலேனும் சிறந்து விளங்குவதற்காக எத்தகைய முயற்சிக்கும் அஞ்சாதீர்.

9. மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.

10. கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.


11. உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.

12. பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது ஏனென்றால் நேரம் ஈடு செய்யமுடியாதது.

13. வெற்றி என்பது உங்களுக்கு என்ன தேவையோ அதை பெறுவது; மகிழ்ச்சி என்பது நீங்கள் எதை பெற்றீர்களோ அதை விரும்புவது.

14. பலகீனமான மனங்களே சோம்பலிடம் தஞ்சம் அடைகின்றன. முட்டாள்களின் சுகமான பொழுதுபோக்குதான் சோம்பல்.

15. நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் தான் அதனால் பயன் பெறுகிறார்கள்.

16. எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்.

17. பெரிய எண்ணங்களை சிந்தனை செய்; ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு.

18. தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை.

19. வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழ்பெற முடியாது.

20. கெட்ட விஷயங்கள் காற்றைப்போல் ஆகி விரைவில் பரவும். நல்ல விஷயங்கள் தாமதிக்கும்.



21. உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

22. எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.

23. திருப்தியான மனம் ஒன்றே மனிதர்களுக்குகிடைக்கும் மிகப்பெரிய கொடை.

24. தனது செயலில் தயக்கம் உடைய ஒருவர் அதில் இழப்பையே சந்திக்கிறார்.

25. எரிகிற விளக்காக இரு அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.

26. விதியை எள்ளி நகைப்பவனே வெற்றிகள் பலவற்றைக் காண்பான்.

27. வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.

28.நேரத்தை இலாபமாக அடைபவர்களுக்கு எல்லாமே இலாபம்தான்.

29. பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

30. வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், இரண்டுமுறை வென்ற மனிதன் ஆகிறான்.


31. மோசமானவற்றிற்காக நான் தயாராகவே இருக்கின்றேன்; ஆனால், சிறந்தவற்றிற்கான நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

32. செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.

33. மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.

34. தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.

35. பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

36. மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.

37. மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை நல்லவிதமாகப் பயன் படுத்தவும் வேண்டும்.

38. எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.

39. ஒவ்வொருவர் சொல்லுக்கும் கீழ்படிந்து கொண்டிருந்தாள் நீங்கள் சாதிக்க முடியாது.

40. ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.



एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS