Sunday, January 7, 2024

அபிராமி அந்தாதி

      

          அபிராமி பட்டர் அருளிய

        அபிராமி அந்தாதி

          

          




                   ஓம் சக்தி

"விழிக்கே யருளுண்டு அபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்குழிக்கே அழுந்துங்கயவர் தம்மோடு என்ன கூட்டினீயே".

ஏறக்குறைய 270 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூர் எனும் பதியில் தோன்றினார், அபிராமிபட்டர். ஒரு சமயம் சரபோஜி மன்னர் அவரிடம் "அன்றைய திதி என்ன" என்று கேட்க அவரோ ஏதோ நினைவில் அமாவாசை என்பதற்கு பதில் பௌர்ணமி என்று வாய்தவறி சொல்லிவிட்டார். ஆனால் சபையிலிருந்தோர் இதை மறுத்தனர். உண்மையும் அதுவாய் இருக்க சினத்துடன் அபிராமி பட்டரை நோக்கினார். மன்னரின் பார்வைக்கு பயந்த அவர், அம்பிகை ஒருவளாலேயே தன்னை இப்பழியிலிருந்து காக்க இயலும் என்று எண்ணியவராய் அம்பிகையை நோக்கி அந்தாதி பாட ஆரம்பித்தார். "விழிக்கே..." என்று தொடங்கும் 79வது பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருத்தோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாகக் காட்சி தந்தது. அபிராமி பட்டரை மன்னனும் உலகத்தாரும் போற்றினர்.

அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்கள் பலவற்றையும் எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் கூறிச் செல்கிறார்.

ஒரு மனதோடு இதை தினம் பாராயணம் பண்ணுபவர்கள் அடையும் பலன்கள் வர்ணிக்க முடியாது. ஆகையால் எல்லோரும் நற்பயன் அடைய வேண்டுமென்றே இதைப் பராசக்தியின் பாதாரவிந்தங்களில் ஸமர்ப்பிக்கின்றோம்.

Blessed by Abrami Butter


Abhrami Anthadi


Om Sakthi


"Wake up and pray to Abram Valli in the way of the Vedas, and then turn around and do bad deeds and cry in the pit of hell, what have you done with him?"


About 270 years ago, Abhiramibhatta appeared in Tirukkadaiyur. Once when King Sarabhoji asked him "What is the Tithi of that day" he remembered something and in reply answered Poornami as Amavasi. But the congregation denied this. Abhirami looked at Buttar with a smile to be true. 

Afraid of the king's gaze, he began to sing anthadi towards Ambikai, thinking that only Ambikai could save him from this crime. After singing the 79th hymn beginning with "Wake up..." she took off her thirutot and threw it in the sky to make her devotee's claim come true. It showed satisfaction. Abhirami Bhattar was admired by the king and the world.

Anthadi also sang Bhatar Padhigam. Kesathi padamaga of Thiruvuruvina of Ambikai

He enumerates in one padhigam and enumerates the many names of Ambikai in another padhigam.

The benefits of daily recitation of this with single mind are indescribable. Therefore we are deliberately submitting this to Parashakti's blessings for the benefit of all.



                   அபிராமி பட்டர் அருளிய

               அபிராமி அந்தாதி

                                        காப்பு


தாரமர் கொன்றையும் செண்பக மாலையுஞ் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே ! நிற்கக் கட்டுரையே.


                                    நூல்


உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம், உணர்வுடையோர் 

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன 

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே 1


துணையும், தொழுந்தெய்வமும், பெற்றதாயும், சுருதிகளின் 

பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங் 

கணையும், கரும்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே  2


அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு 

செறிந்தேன், உனது திருவடிக்கே; திருவே ! வெருவிப் 

பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் 

மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே ! 3


மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்து சென்னிக் 

குனிதரும், சேவடிக்கோமளமே! கொன்றை வார்சடைமேல் 

பனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 

புனிதரும் நீயுமென்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4


பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையாள் 

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி ! வார்சடையோன் 

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல் 

திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே. 5


சென்னியது உன்பொற் திருவடித்தாமரை சிந்தையுள்ளே 

மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே 

முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே 

பன்னியது, என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. 6


ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் 

கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும் 

மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும் 

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே! 7


சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம் 

வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் 

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் 

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8


கருத்தன, எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பில் 

பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் 

திருத்தன பாரமும்; ஆரமும் செங்கைச் சிலையும், அம்பும் 

முருத்தன மூரலும், நீயும் அம்மே! வந்து என்முன் நிற்கவே. 9


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, 

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் 

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து 

அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே! 10


ஆனந்தமாய், என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய், 

வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் 

தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் 

கானந் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 11


கண்ணியது உன் புகழ்; கற்பது உன் நாமம்; கசிந்துபத்தி 

பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில்; பகல் இரவா 

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான்முன்செய்த 

புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே! 12


பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம் 

காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு 

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! 

மாத்தவளே! உன்னை அன்றி, மற்றோர் தெய்வம் வந்திப்பதே . 13


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்; 

சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே 

பந்திப்பவர், அழியாப்பர மானந்தர்; பாரில் உன்னைச் 

சந்திப்பவர்க்கு எளிதாம்-எம்பிராட்டி! நின் தண்ணளியே!  14


தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார், 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர்தம் 

விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும் அன்றோ? 

பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!  15


கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 

ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்றும் இல்லா 

வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! 

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே! 16


அதிசயமான வடிவுடையாள்! அரவிந்தமெல்லாம் 

துதிசய ஆனன சுந்தரவல்லி! துணை இரதி 

பதிசய மானது அபசய மாக முன் பார்த்தவர் தம் 

மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே. 17


வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 

செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே 

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து 

வெவ்வியகாலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே 18


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் 

களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே 

தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? 

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே! 19


உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ 

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் 

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்தன் நெஞ்சகமோ 

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே 20


மங்கலை, செங்கலை, சம்முலை யாள், மலையாள், வருணச் 

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை 

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் 

பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே! 21


கொடியே! இளவஞ்சிக்கொம்பே - எனக்கு வம்பே பழுத்த 

படியே! மறையின் பரிமளமே! பனி மால் இமயப் 

பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! 

அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே 22


கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதன்பர் கூட்டம் தன்னை 

விள்ளேன்; பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு 

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தேவிளைந்த 

கள்ளே! களிக்கும் களியே! அளிய என்கண்மணியே! 23


மணியே! மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 

அணியே! அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 

பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! 

பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே!. 24


பின்னே திரிந்து உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க 

முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும் 

அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! 

என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! 25

CLICK HEAR

AKSHARAM TAMIL VIDEO LESSONS


ஏத்தும் அடியவர் ஈரேழு உலகினையும் படைத்தும் 

காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு 

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்கென் 

நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.26


உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு 

படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 

அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் 

துடைத்தனை; சுந்தரி! நின் அருள் ஏதென்று சொல்லுவதே. 27


சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன் 

புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புதுமலர்த்தாள் 

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும் 

செல்லும் தவநெறியும் சிவ லோகமும் சித்திக்குமே.28


சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா 

சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார் 

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த 

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே. 29


அன்றேதடுத்தென்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை 

நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்

சென்றே வீழினும் கரையேற்றுகை நின் திருவுளமே 

ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே. 30



உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்திங்கு 

எமையும் தமக்கன்புசெய்யவைத்தார்; இனி எண்ணுதற்குச் 

சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை; 

அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே 31


ஆசைக்கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப் 

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் 

வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட 

நேசத்தைஎன் சொல்லுவேன் ? ஈசர்பாகத்து நேரிழையே! 32


இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க, 

அழைக்கும்பொழுதுவந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் 

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! 

உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.33

வந்தே சரணம் புகும் அடியார்க்கு, வானுலகம் 

தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும், 

பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும், பாகமும் பொற் 

செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும், திங்களுமே.34


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க 

எங்கட் கொருதவம் எய்தியவா! எண் இறந்தவிண்ணோர் 

தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள் 

வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே! 35


பொருளே! பொருள்முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் 

மருளே! மருளில் வரும்தெருளே! என் மனத்து வஞ்சத்து 

இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன் 

அருள் ஏதறிகின்றிலேன் அம்புயாதனத் தம்பிகையே! 36


கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன 

மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின் 

பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத் 

திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே! 37


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல் 

தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனைத் 

துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் 

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 38


ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால் 

மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு; மேல் இவற்றின் 

மூளுகைக் கென் குறை, நின்குறையே அன்று; முப்புரங்கள் 

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே! 39


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் 

பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில் 

காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

 பூணுதற்கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.40


புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் 

கண்ணியம் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் 

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் 

பண்ணி, நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.41


இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து 

வடங்கொண்ட கொங்கைமலை கொண்டிறைவர் வலியநெஞ்சை 

நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி ! நல்லரவின் 

படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே 42


பரிபுரச் சீரடிப் பாசாம்குசை, பஞ்சபாணி இன்சொல் 

திரிபுர சுந்தரி! சிந்துர மேனியள்! தீமைநெஞ்சில் 

புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப் புச்சிலைக்கை, 

எரிபுரை மேனி, இறைவர்செம் பாகத் திருந்தவளே!43


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் 

அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள்; ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்; 

துவளேன், இனியொரு தெய்வம் உண்டாகமெய்த்தொண்டு செய்தே.44


தொண்டு செய்யாது, நின்பாதம் தொழாது, துணிந்திச்சையே 

பண்டு செய்தார் உளரோ இலரோ ? அப்பரி சடியேன். 

கண்டு செய்தால், அது கைதவமோ அன்றிச் செய்தவமோ?

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின்வெறுக்கை அன்றே. 45


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரைமிக்கோர் 

பொறுக்கும் தகைமை புதியது அன்றே; புது நஞ்சை உண்டு 

கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே! 

மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே. 46


வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் 

வீழும்படி அன்று; விள்ளும்படி அன்று; வேலை நிலம் 

ஏழும், பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல் 

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் 

படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில் 

இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ 

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48


குரம்பை அடித்துக் குடி புக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட 

வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து 

அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல், என்பாய் 

நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே .49


நாயகி நான்முகி, நாராயணிகை நளின பஞ்ச 

சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை சாதி நச்சு 

வாயகி, மாலினி,  வாராகி சூலினி, மாதங்கி என்று 

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50


அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அகரர் தங்கள் 

முரண் அன்று அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே, 

'சரணம் சரணம்' என நின்ற நாயகி தன் அடியார், 

மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 51


வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,

 பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த 

ஐயன் திருமனை யாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு 

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், 

பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த 

கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் 

தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே. 53


இல்லாமை சொல்லி ஒருவர்தம் பாற் சென்று, இழிவுபட்டு 

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் 

கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒருகாலத்திலும் 

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54


மின் ஆயிரம் ஒரு மெய்வடி வாகி விளங்குகின்றது 

அன்னாள், அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு 

முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை 

உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.55


ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து, இவ் வுலகு எங்குமாய் 

நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பான் என்தன் நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்ற வா இப்பொருள் அறிவார் 

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 56


ஐயன் அளந்தபடி இருநாழிகொண்டு அண்டமெல்லாம் 

உய்ய அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால் 

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் 

மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன் தன் மெய்யருளே. 57


அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்

தருணாம் புயமுலைத் தையல்நல்லாள், தகைசேர்நயனக் 

கருணாம் புயமும் வதனாம் புயமும், கராம் புயமும் 

சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று, உன்தவநெறிக்கே 

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்; ஒற்றை நீள் சிலையும் 

அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய்; அறியார் எனினும் 

பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59


பாலினும் சொல்இனியாய் பனிமா மலர்ப் பாதம் வைக்க 

மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் 

மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு 

நாலினும் சாலநன்றோ அடி யேன்முடை நாய்த்தலையே? 60


நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து, 

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம் 

பேயேன் அறியும் அறிவுதந்தாய்; என்ன பேறு பெற்றேன் 

தாயே மலைமகளே செங்கண் மால்திரு தங்கச்சியே 61


தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து மத 

வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக் 

கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி, கோகனகச் 

செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே 62


தேறும் படிசில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் 

கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறிகுறிக்கும் சமயம் 

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் 

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 63


வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு 

பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்

பேணேன்; ஒருபொழுதும்; திருமேனிப்ரகாசமன்றிக் 

காணேன், இருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம் 

தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் 

முகனும்முந் நான்கிரு மூன்றுஎனத்தோன்றிய மூதறிவின்

 மகனும்உண் டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே. 65


வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன்; நின் மலரடிச்செம் 

பல்லவம் அல்லதுபற்று ஒன்றுஇலேன்; பசும் பொற்பொருப்பு 

வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினை யேன்தொடுத்த 

சொல் அவ மாயினும், நின்திரு நாமங்கள் தோத்திரமே. 66


தோத்திரம்செய்துதொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு 

மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம் 

கோத்திரம், கல்வி, குணம் குன்றி, நாளும் குடில்கள் தோறும் 

பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பார் எங்குமே. 67


பாரும், புனலும், கனலும் வெங் காலும் படர்விசும்பும்; 

ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் 

சேரும் தலைவி! சிவகாம சுந்தரி! சீரடிக்கே 

சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே. 68


தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா 

மனம்தரும்; தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா 

இனம்தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 

கனம் தரும்; பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 69


கண்களிக் கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் 

பண்களிக் கும்குரல் வீணையும் கையும் பயோதரமும் 

மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் 

பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே. 70


அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள் 

பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பனிமாமதியின் 

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க 

இழவுற்று நின்றநெஞ்சே! இரங்கேல் உனக்கென் குறையே. 71


என்குறை தீரநின் றேத்துகிறேன்; இனி யான்பிறக்கின்; 

நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின் 

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் 

தன்குறை தீர, எம்கோன்சடை மேல்வைத்த தாமரையே. 72


தாமம் கடம்பு; படைபஞ்ச பாணம்; தனுக்கரும்பு; 

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக்கென்று வைத்த 

சேமம் திருவடி; செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை 

நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே. 73


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும், நாரணனும் 

அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் 

பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் 

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74


தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்; தாயர்இன்றி 

மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் 

பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும், பூத்தஉந்திக் 

கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75


குறித்தேன்மனத்தினில், நின்கோலம் எல்லாம்; நின்குறிப் பறிந்து 

மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டு கிண்டி 

வெறித்தேன் அவிழ்கொன்றை வேணி பிரான் ஒருகூற்றை,மெய்யில் 

பறித்தே குடி புகுதும் பஞ்ச பாணபயிரவியே! 76


பயிரவி ! பஞ்சமி! பாசாங் குசைபஞ்ச பாணி! வஞ்சர் 

உயிர் அவி உண்ணும் உயர்சண்டி! காளி! ஒளிரும்கலா 

வயிரவி! மண்டலி! மாலினி சூலி! வராகி-என்றே 

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 77


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் 

அப்பும் களப அபிராமவல்லி! அணிதரளக் 

கொப்பும் வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும், 

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. 78


விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழிகிடக்கப் 

பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்து, பாழ்நரகக் 

குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே? 79


கூட்டியவா என்னை தன் அடியாரில்! கொடியவினை 

ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம் 

காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! 

ஆட்டியவா நடம்! ஆடகத் தாமரை ஆரணங்கே. 80


அணங்கே! அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால் 

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு 

இணங்கேன்; எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும் 

பிணங்கேன் அறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே. 81


அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின் 

ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும் 

களியாகி அந்தகரணங்கள் விம்மிக் கரைபுரண்டு 

வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே. 82


விரவும் புதுமலர் இட்டு, நின் பாத விரைக்கமலம் 

இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும் 

பரவும், பதமும், அயிராவதமும், பகீரதியும்

 உரவும் குலிசமும் கற்பகக் காவும் விழிக்கே 83


உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ் 

சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கும் நுண்ணூல் 

இடையாளை, எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப் 

படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு 

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் 

தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும், 

வார்க்கும் குங்குமமுலையும், முலைமேல் முத்துமாலையுமே. 85


மால் அயன் தேட மறைதேட வானவர்தேட நின்ற 

காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்தகப்பு 

வேலைவெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய் 

பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே! 86


மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி, எந்தன் 

விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்; விழியால் மதனை 

அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டமெல்லாம் 

பழிக்கும்படி, ஒருபாகம் கொண்டாளும் பராபரையே! 87


பரம் என்றுனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் 

தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம் 

புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் 

சிரம் ஒன்று செற்றகை யான் இடப்பாகம் சிறந்தவளே! 88


சிறக்கும் கமலத்திருவே நின் சேவடி சென்னிவைக்கத் 

துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும், துரியமற்ற 

உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு 

மறக்கும் பொழுதென்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே. 89


வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து 

இருந்தாள், பழைய இருப்பிடமாக; இனி எனக்குப் 

பொருந்தாது ஒருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு 

விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90


மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன் 

புல்லிய மென்முலை பொன்னனை யாளைப் புகழ்ந்துமறை 

சொல்லிய வண்ணம்தொழும் அடியாரைத்தொழும் அவர்க்கு 

பல்லியம் ஆர்த்து எழ வெண்பக டூரும் பதம் தருமே. 91


பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி, உன்றன் 

இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்; இனி யான் ஒருவர் 

மதத்தே மதிமயங்கேன்; அவர்போன வழியும் செல்லேன்! 

முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே! 92


நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு 

முகையே, முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த 

வகையே பிறவியும் வம்பே; மலைமகள் என்பது நாம்; 

மிகையே, இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே.93


விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்ப்புளகம் 

அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி, அறிவிழந்து, 

சுரும்பிற் களித்து, மொழிதடு மாறி முன் சொன்ன எல்லாம் 

தரும் பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே. 94


நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது 

ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம் எனக் குள்ளவெல்லாம் 

அன்றே உனதென் றளித்துவிட்டேன்; அழியாதகுணக் 

குன்றே! அருட்கடலே! இம வான்பெற்ற கோமளமே! 95


கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில்வைகும் 

யாமள வல்லியை, ஏதமி லாளை, எழுதரிய 

சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால் 

ஆமள வும் தொழுவார், எழுபாருக்கும் ஆதிபரே. 96


ஆதித்தன், அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன், 

போதில் பிரமன், புராரி, முராரி பொதியமுனி 

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல் 

சாதித்த புண்ணியர் எண்ணிலர்-போற்றுவர் தையலையே. 97


தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக் 

கைவந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே 

மெய்வந்த நெஞ்சின் அல்லால், ஒரு காலும் விரகர் தங்கள் 

பொய்வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே! 98


குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை; கோல இயல் 

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்து உதித்த 

வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின்மீது அன்னமாம் 

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே .99 


குழையைத்தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி 

கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்புவில்லும் 

விழையைப் பொருதிறல்வேரியம் பாணமும், வெண்ணகையும் 

உழையைப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே. 100


                              நூற்பயன்


ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் 

பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக் 

காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை 

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.! 


&&&&&&&&&&&&&&&&&

இதையும் வாசிக்கவும்👇👇👇

அபிராமியம்மை பதிகம்




No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS