பாடம் 12
எதிர்மறை வாக்கியங்கள்
मैं मैदान में खेलता हूँ ।
நான் மைதானத்தில் விளையாடுகிறேன்.
राम घर में नहीं खेलता ।
ராமன் வீட்டில் விளையாடுவதில்லை.
हम चाय नहीं पीते, दूध पीते हैं ।
நாங்கள் தேனீர் அருந்துவதில்லை, பால் அருந்துகிறோம்.
குறிப்பு:- நிகழ்காலத்தில் எதிர்மறையைக் குறிக்க 'नहीं உபயோகிக்கப்படும். मत கட்டளை வினைக்குமட்டுமே பொருந்தும்.
[तुम मत जाओ- நீ போகாதே]
நிகழ்கால வாக்கியத்தில் முக்கிய வினைக்குமுன் ' नहीं ' சேர்க்கப்படல் வேண்டும். அவ்வாறு ' नहीं ' சேர்க்கப்படும் எதிர் மறை வாக்கியங்களில் பொதுவாக हूँ, हो, है, हैं , ஆகிய வினை முற்றுக்கள் சேர்க்கப்படுவதில்லை.
(உ-ம்) कमला और प्रेमा नहीं गातीं ।
கமலாவும், பிரேமாவும் பாடுகிறதில்லை.
வினைமுற்றுக்கள் நீக்கப்படும் வாக்கியங்களில் முக்கிய வினையுடன் ஆண்பால் ஒருமைக்கு ता பன்மைக்கு ते விகுதியும் இருப்பதால் எழுவாயின் எண், பால் அறியப்படும். ஆனால் பெண் பாலுக்கு ती மட்டுமே இருப்பதால், எழுவாய் பெண்பால் பன்மையானால் तीं யென ஓர் புள்ளியிட வேண்டும்.
உதாரண வாக்கியத்தை பார்க்கவும்.
ஆண்பால்: मैं नहीं जाता । हम नहीं जाते ।
பெண்பால்: मैं नहीं जाती । हम नहीं जातीं ।
கவனிக்க: नहीं வராத நிலையில் हैं இருப்பதால் பெண்பால் பன்மையைக் குறிப்பதற்காக ती -யின் மேல் புள்ளி தேவையில்லை.
पढ़ना - படித்தல்
ஆண்பால் பெண்பால்
मैं पढ़ता हूँ । मैं पढ़ती हूँ ।
वह/ यह / पढ़ता है । वह यह / पढ़ती है ।
तुम पढ़ते हो । तुम पढ़ती हो ।
हम/ आप/वे/ये पढ़ते हैं । हम / आप / वे/ये पढ़ती हैं ।
எதிர் மறை வாக்கியங்கள்
में नहीं पढ़ता । मैं नहीं पढ़ती ।
वह/ यह नहीं पढता । वह / यह नहीं पढ़ती ।
तुम नहीं पढ़ते । तुम नहीं पढ़ती ।
हम/आप/वे/ये नहीं लिखते । हम/आप/वे/ये नहीं लिखतीं ।
பொதுவாக யார், எது வென்று அறியப்படாத நிலையில் கேட்கப்படும் கேள்விகள் பின் வருமாறு அமையும்.
वह क्या है ? वह कौन है ? वे क्या हैं ?
ये कौन हैं ? हाथ में क्या है ? पुस्तक में क्या है ?
वे कौन - कौन हैं ? ये क्या - क्या हैं ?
யார், எதுவென ஓரளவு அறிந்த போதிலும் சந்தேகத்துடன் கேட்பதானால், தமிழில் வாக்கியத்தின் கடைசிச்சொல்லுடன் 'ஆ' ஒலியைச் சேர்த்து வினாவாக்கப்படுகிறது.ஹிந்தியில் அம்மாதிரி வாக்கியத்தின் ஆரம்பத்தில் 'क्या ' சேர்க்கப்படுகிறது.
அவள் கனகாவா? क्या वह कनका है ?
இவன் முருகனா? क्या यह मुरुगन है ?
கையில் கடிகாரம் இருக்கிறதா?
क्या हाथ में घडी है ?
புத்தகம் மேஜை மீது இருக்கிறதா?
क्या पुस्तक मेज पर है ?
எதிர்மறையான வாக்கியங்களிலும் துவக்கத்தில் क्या சேர்த்து கேள்வியாக்கப்படும்.
நீங்கள் ஹிந்தியில் பேசுகிறதில்லையா?
क्या आप हिन्दी में नहीं बोलते ?
क्या सीता पाठ नहीं लिखती ?
क्या तुम बाज़ार नहीं जाते ?
क्या आज सुशीला नहीं गातीं ?
ஹிந்தியில் கேள்விச் சொற்கள்
அனைத்தும் ''க'வில் துவங்கும்.
क्या - என்ன कौन - யார் कहाँ - எங்கே
कब - எப்பொழுது क्यों - ஏன் कितना - எவ்வளவு
कितने - எத்தனை कैसा - எப்படி कैसे - எப்படி
किसलिए - எதற்காக
1. तुम सबेरे क्या खाते हो ?
நீ காலையில் என்ன சாப்பிடுகிறாய் ?
2. आज सभा में कौन-कौन बोलते हैं ?
இன்று கூட்டத்தில் யார்-யார் பேசுகிறார்கள் ?
3. तुम कहाँ जाते हो ?
நீ எங்கே போகிறாய்?
4. राम कब सेलम जाता है ?
ராமன் எப்பொழுது சேலத்திற்கு போகிறான் ?
5. सीता क्यों वहाँ जाती है ?
சீதை ஏன் அங்கே போகிறாள் ?
6. वह कितना खाता है ?
அவன் எவ்வளவு சாப்பிடுகிறான்?
7. तुम रोज़ कितने बजे खेलता हो ?
நீ தினமும் எத்தனை மணிக்கு விளையாடுகிறாய்?
8. गोपाल कैसा लड़का है ?
கோபால் எப்படிப்பட்ட பையன்?
सीता कैसी लड़की है ?
சீதை எப்படிப்பட்ட சிறுமி?
वे कैसे लोग हैं ?
அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
कैसा --எப்படிப்பட்ட என்பது அதை அடுத்துவரும் பெயர்ச் சொல்லின் எண், பாலை அனுசரித்து மாற்றம் பெறும்.
9. आप किसलिए वहाँ जाते हैं ?
தாங்கள் எதரற்காக அங்கே போகிறீர்கள்?
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும் கவனிக்கவும்.
रहीम अब कहाँ जाता है ?
ரஹீம் இப்பொழுது எங்கே போகிறான்?
कमला कितना दूध लाती है ?
கமலா எவ்வளவு பால் கொண்டு வருகிறாள்?
सरला कैसे गाती है )
சரளா எப்படிப் பாடுகிறாள் ?
[இங்கு 'कैसे'' வினை உரிச்சொல்லாக வந்துள்ளது.]
वर्ग में कितनी लडकियाँ पढ़ती हैं ?
வகுப்பில் எத்தனை சிறுமிகள் படிக்கிறார்கள்?
கேள்வியும் - பதிலும்
क्या रामनाथ रोज यहाँ आता है ?
ராமனாத் தினந்தோறும் இங்கு வருகிறானா?
जी हाँ , वह रोज यहाँ आता है ।
ஆம், அவன் தினந்தோறும் இங்கு வருகிறான்.
अब कितने बजे हैं ?
இப்பொழுது எத்தனை மணி?
अब नौ बजे हैं ।
இப்பொழுது ஒன்பது மணி.
आप यहाँ क्या करते हैं ?
தாங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?
मैं अख़बार पढ़ता हूँ ।
நான் செய்தித்தாள் வாசிக்கிறேன்.
क्या आप भात खाते हैं ?
நீங்கள் சாதம் சாப்பிடுகிறீர்களா?
जी नहीं , मैं फल खाता हूँ ।
இல்லை நான் பழம் சாப்பிடுகிறேன்.
वह कितना खाता है ?
அவன் எவ்வளவு சாப்பிடுகிறான்?
वह बहुत खाता है ?
அவன் நிரம்பச் சாப்பிடுகிறான்.
आज आप कैसे हैं ?
இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
आज मैं खुश हूँ ।
இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன்.
**********************
No comments:
Post a Comment
thaks for visiting my website