Monday, November 27, 2023

துளசிதாசர் / TULSIDAS


 


துளசிதாசர்


இந்தி இலக்கியத்தையே ஆசார்ய சுக்லஜீ நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார். அவைகளில் மிகவும் சிறந்தது பக்திகாலம். இதை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கிருஷ்ண பக்தி, ராம பக்தி. சூர்தாசர் கிருஷ்ண பக்தியில் எப்படிச் சிறந்தவரோ அதே போல் ராமபக்தியில் சிறந்தவர் துளசிதாசர். இந்தியில் ஒரு சூக்தியே இருக்கிறது.


सूर सूर तुलसी ससि उडुगन केशवदास சூர் சூர் துளசி சசி உடுகண் கேசவதாஸ் அதாவது சூர்தாசர் சூரியனானால் துளசிதாசர் சந்திரனாவார். துளசிதாசர் அவதீ, விரஜபாஷை இரண்டிலும் கவிதைகள் இயற்றியுள்ளார்.


துளசிதாசர் இயற்றிய ராமசரித மானஸ் எல்லா மானசிற்கும் வழிகாட்டியாகும். இதை தவிர அவர் கவிதாவளி, வினய பத்திரிகா முதலிய சிரேஷ்ட நூல்களையும் இயற்றியுள்ளார். 

ராமனிடம் அவருக்குள்ள பக்தி வெளியாகும் இடம்:-


जाके प्रिय न राम वैदेही तजिये ताहि कोटी बैरी सम, जदपि परम सनेही ।

ராமனையும், வைதேஹியையும் விரும்பாதவர்களை பிரியமுள்ளவர்களாக இருந்தபோதிலும் கோடி விரோதிகளுக்குச் சமமாகக் கருதச் சொல்லுகிறார் துளசிதாசர்.

துளசிதாசர் மட்டுமல்ல, கவி சமூக சீர்திருத்தவாதியும் கூட. ராமசரிதமானசைப் படித்தால் ஒரு தாய், பிள்ளை, சகோதரன், சகோதரி, தந்தை முதலியவர்களின் கடமைகள் உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெள்ளெனத் தெரியும்.

ராமனை அவர் பல விதங்களில் ஆராதிக்கிறார். சகியாகவும், சகோதரனாகவும், பதியாகவும் வர்ணிக்கிறார். கடைசியில் ராமனைவிட பெரியவர் இல்லை என்ற கொள்கை கொள்கிறார்-


राम सो बले है कौन मों से कौन छोटो राम सो खरो है कौन खोटो


இலங்கையை எரிக்கும் காட்சியை தத்ரூபமாக வர்ணித்திருக்கிறார்.


बसन बटोरि बोरि बोरि तेल तमीचर


விருத்யா அனுப்ராவிற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் கவிதைகளில் கிடைக்கிறது.


कंकन किंकिनि नूपुर ध्वनि सुनि कहत लषन सन राम हृदय गुनि


இவ்வாறு துளசிதாசர் எல்லாவற்றிலும் சிறந்ததான கவிதைகளை இயற்றி உள்ளார்.


தன்னுடைய கவிதைகளைப் பற்றி தானே கூறுகிறார்.


कविता कर तुलसी न लसे कविता लसी पा तुलसी की कला

இந்திப் பழமொழியான


तत्त्व तत्त्व सूरा कहीं, तुलसी कहीं अनूठे உண்மையிலேயே துளசிதாசர் மிகவும் புகழ் வாய்ந்தவர்தான்.


தமிழ் இலக்கியத்தில் கம்பருக்கு எவ்வளவு சிறப்பும், புகழும் இருக்கின்றதோ அதே போல்தான் ஹிந்தியில் துளசிதாசருக்கும்.





No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...