Saturday, November 16, 2024

✍तैत्तिरीयोपनिषत्

 

॥ तैत्तिरीयोपनिषत् ॥

॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥

தைத்திரீயோபநிஷத்து

முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ)


1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்டான தேவதையான ) மித்திரன் எங்களுக்கு மங்கள்கரனாக வும் (இரவுக்கும் அபானனுக்கும் அதிஷ்டான தேவ தையான ) வருணன் எங்களுக்கு மங்களகரனாகவும் (சூரியனுக்கும் கண்ணுக்கும் அதிஷ்டான தேவதை யான) அர்யமா எங்களுக்கு மங்கள கரனாகவும் இருத் தல் வேண்டும். (பலத்துக்கு அதிஷ்டான தேவதை யான ) இந்திரனும் (வாக்குக்கும் புத்திக்கும் அதிஷ் டான தேவதையான) பிருஹஸ்பதியும் எங்களுக்கு மங்களகரர்களாக இருத்தல் வேண்டும்). அனை த்தை யும் அளவிடும் அடியுடைய விஷ்ணு எங்களுக்கு மங்களகரனாக (இருக்க வேண்டும்).



பிரமமத்திற்கு நமஸ்காரம். வாயுவே! உன்னை வணங்குகிறேன். நீயே கண்கண்ட பிரம்மமாக இருக் கிறாய். உன்னையே கண்கண்ட பிரம்மமாகப் போற்று கிறேன். (உன்னையே உலகில் காணும் அழகும் ஒழுங்குமாகிய உண்மை) ருதம் எனப் போற்று கிறேன். (உன்னையே உலகின் அழகுக்கும் ஒழுங் குக்கும் இருப்புக்கும் ஆதாரமான உண்மை) ஸத்யம் எனப் போற்றுகிறேன்.

அது (அந்தப் பிரம்மம்) என்னைக்காப்பாற்றட்டும். அது ஆசாரியனைக் காப்பாற்றட்டும். (மீண்டும் அதுவே பிரார்த்தனை). என்னைக் காப்பாற்றட்டும்; ஆசாரியனைக் காப்பாற்றட்டும். முவ்வகையிலும் சாந்தி நிலவுக!

உபநிஷத்தின் பெயருந்தொடர்பும் :-

 வேதவியாஸரிடமி ருந்து ருக்வேதத்தைப் பைலரும், யஜுர் வேதத்தை வைசம்பாய னரும், ஸாம வேதத்தை ஜைமினியும், அதர்வ வேதத்தை ஸுமந் துவும் பெற்றுக்கொண்டதாகக் கூறுவர். இவர்கள் ஒவ்வொருவருக் கும் சிஷ்யர்கள் பலர். அவர்கள் மூலம் பல சாகைகளாக வேத நெறி பெருகி வந்தது.

வைசம்பாயனர் மிதிலாபுரியிலிருந்து கொண்டு சிஷ்யர்களைப் பயிற்சி செய்து வருகையில் அவரிடம் சேர்ந்தவர்களுள் யாஜ்ஞவல் கியரும் ஒருவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிஷ்யன் ஜனக மகா ராஜனுக்குக் குருவினிடமிருந்து மந்திராக்ஷதை கொண்டுபோய்க் கொடுத்து வரவேண்டும் என்று ற்பாடாயிருந்தது. யாஜ்ஞவல் கியர் சென்ற ஒரு நாளன்று அரசன் சபையில் இல்லாதது கண்டு காத்திருக்காமல் அக்ஷதையைச் சிம்மாசனத்தில் மேல் வைத்து விட்டு வந்துவிட்டார். அரசன் வருமுன் அக்ஷதை முளைத்துச் சிம் மாசனத்தின் மேல் விதானம்போல் வளர்ந்து பரவியிருந்தது. அரசன் இதைக் கண்டு வியந்து, நிகழ்ந்ததுணர்ந்து, அன்று அக்ஷதை கொண்டு வந்த சிஷ்யனை அழைத்துவரும்படி கூறினார். கல்வி கற்கும் சமயததில் அரசன் கூப்பிட்டதை மதிக்காமல் யாஜ்ஞவல்கியர் போக மறுத்துவிட்டார்.

இக்காரணத்தாலும், முன் இரண்டொரு முறை வேறு சிஷ்யர் களை யாஜ்ஞவல்கியர் வித்தியா கர்வத்தால் அவமதித்ததாய் வைசம் பாயனர் கருதியதாலும், அவர் தனக்குரிய சிஷ்யனல்லவென்று தீர்மானித்து "என்னிடம் கற்ற வேதத்தைக் கக்கிவிடு" என்றார். உண்டசோற்றைக் கக்குவதுபோல் உண்மையாகவே கக்கிவிட்டா ரென்றும், குருவின் கட்டளையால் மற்ற சிஷ்யர்கள் அப்போது தித்திரிப்புறா வடிவங்கொண்டு யாஜ்ஞவல்கியர் கக்கியதை உட் கொண்டனர் என்றும், அதனால் அந்த வித்தையை அறிந்தவர்களா யினர் என்றுங் கதை வழங்கி வருகிறது. தித்திரிப்புறா வடிவத்தில் சிஷ் பர்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தால் அன்று முதல் வேதத் தின் இப்பகுதி தைத்திரீய சாகை எனவும் கிருஷ்ண யஜுர்வேதம் எனவும் வழங்கலாயிற்று. யாஜ்ஞவல்கியர் இதன்பின் விவஸ்வானை (சூரியனை) குருவாயடைந்து அத்தியயனம் செய்தது வாஜஸனேய ஸம்ஹிதை என வழங்கும் சுக்லயஜுர்வேதம்.

கிருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஆரணியகத்தின் ஏழு, எட்டு, ஒன்பதாவது பிரபாடகங்களாக அமைந்துள்ளது.

தைததிரீயோபநிஷத்து. மற்ற உபநிஷத்துக்களைவிட அதிகமாக அத்தியயனம் செய்யப்பட்டும் உபாசிக்கப்பட்டும் கர்மானுஷ்டானங் களினிடையில் உபயோகிக்கப்பட்டும் வருவதால் இவ்வுபநிஷத்துக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. முதல் அத்தியாயமாகிய சீக்ஷாவல்லீ, ' ஸாம்ஹிதீ' எனப்படும்.

இது பிரம்மச்சரிய ஆசிரமத்தின் முறைகளையும் கடமைகளை யும் பெருமைகளையும் விரித்துக் கூறி வேதத்தை அத்தியயனம் செய்யும் கிரமத்தையும், ஓங்கார உபாசனையின் ரஹஸ்யத்தையும், உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த மஹரிஷிகளின் வாழ்க்கை லக்ஷியங் களையுங் கூறுகிறது. பிரம்மானந்தவல்லீ எனப்படும் இரண்டாவது அத்தியாயம் யாஜ்ஞிகீ எனப்படும். மூன்றாவது அத்தியாயத்திற்கு ரிஷி வருணரானதால் இது ' வாருணீ' எனப்படும். இவ்விரு வல்லி -களில் சிருஷ்டிக் கிரமமும், பஞ்சகோசங்களின் அமைப்பும், படிப்படி யாக உபாசனையால் ஒப்புயர்வற்ற பிரம்ம பாவத்தை எய்துதலும், உதாரணத்தாலும் உபகதையாலும் விளக்கப்படுகின்றன.


No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...