Tuesday, December 17, 2019

ஹிந்தியில் கடிதம் எழுதும் முறை

ஹிந்தியில் கடிதம் எழுதும் முறை


1. விளி : கடிதத்தின் துவக்கத்தில் நாம் யாருக்குக் கடிதம்எழுதுகிறோமோ, அதற்கேற்றபடி விளிச் சொற்கள் பயன்படுத்துகிறோம். ஹிந்தியிலும்
இதேமுறை நிலவுகிறது.


அ) நம்மைவிடப் பெரிய ஆடவர்களுக்கு :
पूज्य, पूजनीय, आदरणीय, माननीय, श्रद्देय ।
வணக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய என்பது பொருள்

ஆ) நம்மைவிடப் பெரிய பெண்களுக்கு :
पूज्य, पूजनीया, आदरणीय, माननीय, श्रद्धेय।
(பொருள் அதுவே.)

இ) நம்மைவிடச் சிறியவர்களுக்கு :
प्रिय, प्रियवर, चिरंजीवी அன்பான, அன்புக்குரிய, சிரஞ்சிவி,

ஈ) நண்பர்களுக்கு:
प्रिय, प्रियवर,प्यारे, मित्रवर
அன்பான, அன்புக்குரிய, அன்பரே, நண்பரே

உ) தோழிகளுக்கு
प्रिय प्यारी, स्नेप्हिल ।
அன்பான, அன்புக்குரியவளே, நட்புக்குரியவளே



ஊ) கணவருக்கு
प्रिय, प्रियतम , प्राणप्रिय , प्राणनाथ , प्राणेश्वर।
அன்புக்குரியவரே அன்பில் சிறந்தவரே, உயிருக்கும்மேலானவரே, உயிருக்கு உயிரானவரே, ஆருயிரே

எ) மனைவிக்கு :
प्रिये , प्राणप्रिये, प्राण, प्राणेश्वरी
அன்பே, உயிரினும் மேலானவளே, ஆருயிரே.

ஏ)அதிகாரிக்கு (ஆடவர்) :
मान्यवर, माननीय, आदरणीय, धीमान, महानुभाव, महोदय ।
மரியாதைக்குரிய, மாண்புமிகு, திருவாளர், பெரியாரே,அன்புடையீர்,

ஐ) அதிகாரிக்கு (பெண்) :
माननीय, आदरणीय, श्रीमती। [பொருள் அதுவே]

ஓ) வியாபாரிகளுக்கு :
मननीय ,प्रिय महोदय , महोदय,
 [பெண்] महोदया, प्रिय महोदया
அன்புடையீர்,அன்பார்ந்த, மதிப்பிற்குரிய


3. கடிதம் தொடர்பான விஷயம் தொடங்குமுன் வணக்கம்
கூறும்முறை நிலவி துவருகிறது.

அ) நம்மைவிடப் பெரியவர்களை :
प्रणाम, सादर प्रणाम , चरणस्पर्श, सादर नमस्कार।
வணக்கம், அன்பு கலந்த வணக்கம், பாதங்களுக்குத் தண்டன்.

a) நம்மைவிடச் சிறியவர்களுக்கு :
आशीर्वाद, शुभाशीष, चिरायू हो, चिरंजीवी हो, खुश रहो ।
ஆசிகள், நல்லாசிகள், சிரஞ்சீவியாக இரு, சந்தோஷமாக இரு.


3. கடிதத்தின் இறுதியிலும் விளிச் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன.

அ) நம்மைவிடப் பெரியவருக்கு [எழுதுபவர் ஆடவர்) :
आपका आज्ञाकारी, आपका कृपाकांक्षी, आपका कृपापात्र, आपका प्रिय , आपका।
தங்கள் ஆணைக்குட்பட்ட, உங்கள் அருளைக் கோரும், தங்கள் ஆணைக்குட்பட்ட, உங்கள் அருளைக் கோரும்,உங்கள் அன்பிற்குப் பாத்திரமான, உங்கள் அன்புக்குரிய,தங்கள்.

ஆ) (எழுதுபவர் பெண்)
आपकी आज्ञाकारिणी, आपकी कृपाकांक्षी, आपकी प्रिय,
காசி (பொருள் அதுவே)

இ)சிறியவர்களுக்கு (ஆடவர்) :
तुम्हारा शुभचिंतक, तुम्हारा हितचिंतक, तुम्हारा हितैषी।
உன் நன்மையை விரும்பும்

ஈ)சிறியவர்களுக்கு (பெண்):
तुम्हारी शुभचिंतक, तुम्हारी हितचिंतक, तुम्हारी होती ।
உன் நன்மையை விரும்பும்.

உ)நண்பனுக்கு
तुम्हारा, तुम्हारा मित्र, तुम्हारा अभिनंदन, तुम्हारा स्नेहाकांक्षी।
உன், உன் நண்பன், இணைபிரியாத நண்பன், உன் அன்புக்குரிய

ஊ) தோழிக்கு :
तुम्हारी, तुम्हारी सहेली, तुम्हारी अमीन, तुम्हारी स्नेहाकांक्षी।
உன், உன் தோழி, இணைபிரியாத் தோழி, உன் அன்புக்குரிய

எ) வியாபாரிக்கு :
भवदीय, विनीत, आपका विनम्र ।

ஏ) (பெண்பால்) : भवदीया, विनीता।

4. பெயர்களுக்கு முன் போட வேண்டிய மரியாதைசொற்கள் :
श्री-திரு,श्री मती -- திருமதி, सुश्री- செல்வி.

நன்றி
धन्यवाद





No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS