V.P/ இலக்கியக்கனிகள்&மலர்ச்செண்டு
1. திருமூலர் திருமந்திரம்
முன்னுரை
நந்திதேவர் மரபில் வந்தவர்-எண்வகைச் சித்திதவராச யோகி என்று தாயுமானவர் போற்றப்பட்டவர் திருமூலர். அவர் இயற்றியதே சைவசித்தாந்த முதல் நூல் என்றும், பத்தாம் திருமுறை என்றும் கூறப்படும் திருமந்திரம். அவர் நூல் சிறப்பைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம் கைவரப்பெற்றவர்.
பொருள்
ஒருமுறை திருமூலர், திருவாவடுதுறையில் சில பசுக்கள், பாம்பு கடித்து இறந்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனைச் சூழ்ந்து கதறக் கண்டார். இந்நிலையில் இறைவன் திருவருளால் அப்பசுக்களின் துயரைப் போக்கக் கருதித் தம் உடலை ஓர் இடத்தில் மறைத்து வைத்துத் தம் உயிரை அம்மூலன் உடலில் புகுத்தினார் மூலன் உயிர் பெற்று எழக்கண்ட பசுக்கள் அவரை மோந்து கனைத்தன; துள்ளின. கன்றை நினைந்து ஊர் நோக்கிச் சென்றன. மூலன் மனைவி தெருவில் நிற்கும் திருமூலர் தன் கணவன் எனக்கருதி அழைக்க நமக்குத் தொடர்பு ஒன்றும் இல்லை' என்று கூறித் திருமூலர் பொதுமடம் நுழைந்தார் தம் உடல் தேடியும் காணப்பெறாதது கண்டு இறைவன் ஆகம உண்மை பொருளை உலகிற்கு அருளிச் செய்யவே தம் உட மறைத்தார் போலும் என்று கருதித் திருவாவடுதுறையில் ஓர் அரசமரத்தின் கீழ் இருந்து ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார்
இவ்வாறு திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரம் கொண்டது. அது சாத்திர நூல்; தோத்திர நூல் அறநூல். உள் நிகழும் நெறியாவருக்கும் ஒக்குமல்லவா திருமூலர் கருத்தும், திருவள்ளுவர் கருத்தும் பல இடங்களில் ஒன்றுபடக் காணலாம். எடுத்துக்காட்டாகக் காகம் தனக்குக் கிடைத்த இரையினைத் தனித்து உண்ணாது. பிற காகங்களையும் அழைத்து உண்ணும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இக்கருத்தைத் திருமூலர் காக்கை வாயிலாக
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின் காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே என்று கூறுகின்றார் .
திருவள்ளுவர் வறுமை கொடியது விடக்கொடியது ஒன்றும் இல்லை என்று கூறுகிறார் திருமூலரும் வறுமை உற்றவர்களுக்குக் கொடை இல்லை, கோளில்லை, கொண்டாட்டமில்லை. அவர் நடைப்பிணம் என்கின்றார். நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம் என்று திருவள்ளுவர் நிலையாமையைப் பற்றிக்கூறுகிறார்.
திருமூலர், உணவு உண்ட மனைவியுடன் பேசி இருந்த இடது பக்கம் வலி என்று படுத்த மணாளன் இயற்கை எய்தினார் என்று கூறுகிறார்
திருவள்ளுவர், ஆசை இல்லாதவர்கள் துன்பம் இல்லை என்று கூறுகிறார். இவ்வாறே திருமூலரும் ஆசை விட விட ஆனந்தம் ஆமே என்று முடிக்கிறார்
திருமந்திரம் பல மகளைத் உவமை தன்பால் கொண்டது. எடுத்துக்காட்டாகப் பலாக்கனி விட்டு ஈச்சம்பழம் நாடி உண்பது போல நயப்போர் மனையாள் பிறன்மனை அகத்திருக்கப் பிறர் மனையாளை விரும்பும் செயல் உள்ளது என்கிறார் மலரில் மணம் மறைந்திருப்பது போலக் கண்ணுக்குத் தெரியாமல் சீவனில் சிவம் கலந்திருக்கும் என்ற உண்மையை பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது என்று உவமை மணம் கமழ உயர்ந்த உண்மை ஒன்றைக் கூறுகிறார்
இறுதியாகச் சில தத்துவப் பொருளை நகைச்சுவை தோன்ற எளிய முறையில் கூறி உயர்ந்த உண்மையை விளக்குவார் திருமூலர். எடுத்துக்காட்டாகக் கத்திரி விதைக்கப் பாகல் முளைத்தது பின் தோண்டிப் பார்க்கப் பூசணி பூக்கத் தோட்டக்குடிகள் தொழுது ஓடப் பின்னர் தோட்டம் முழுவதும் வாழை பழுத்தது என்கிறார். இதன் உண்மை யோகப் பயிற்சி செய்ய வைராக்கியம் தோன்றும். தத்துவ ஆராய்ச்சி செய்யச் சிவம் தோன்றும். சிவம் தோன்ற ஐம்பொறி அடங்கும் ஆன்ம லாபம் கிட்டும் என்பதாகும். ஐம்பொறிகளை அடக்கி ஆள்வோர் பேரின்ப வாழ்வில் திளைப்பர் என்ற உண்மைப் பொருளைக் கூறவரும் திருமூலர், மேய்ப்பார் இன்றித் திரியும் 'பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியும்' என்று கூறுகிறார்
முடிவுரை
இவ்வாறு சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை எனப் போற்றப்படும் திருமூலர் திருமந்திரம் தன்னேரிலாத உயர்ந்த உண்மைகளைக் கொண்ட உயர்ந்த தமிழ்க் கருவூலம் என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
2. இலக்கியம் காட்டும் இன்பத் தம்பியர்
முன்னுரை:
யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பண் பாடுவது தமிழ் மரபு. உடன் பிறவாதோரையும் உடன் பிறந்தவராகக் கொண்டு வாழ்வது தமிழர் மரபு.
ஆதலின், இலக்கியம் காட்டும் இன்பத் தம்பியர் சிலர் வரலாற்றை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்
பொருள்
கல்வியில் பெரியவர்' என்று போற்றப்படும் கம்பர் தாம் இயற்றிய இராம காதையில் வரும் தம்பியர் பலர் அவர்கள் ஒருவனே இலக்குவன். இவன் இராமன்பால் பெரும் பற்றுக் கொண்ட தம்பி. இராமன் கானகம் சென்றபோது தானும் நிழல்போல உடன் சென்றவன். இராமன் சிற்றன்னையால் காடு செல்ல நேர்ந்தது என்பது கேள்வியுற்றுச் சீற்றங் கொண்டு கைகேயியின் எண்ணம் நிறைவேற விடேன்' என்று வெகுண்டு கூறி நின்றவன். அவன் இராமனை மீட்டு நாட்டிற்கு அழைத்துச் செல்ல வரும் பரதன் பண்பு உணராது அவனைக் கொன்று அழிப்பதாகக் கூறி நின்றவன். இவ்வாறு இவன் கொள்ளும் சீற்றம் எல்லாம் இராமன் பால் வைத்த பேரன்பே காரணம் ஆகும்.
அயோமுகி என்ற அரக்கி இலக்குவனைத் தூக்கிச் செல்ல, அவனைக் காணாது வருந்திய ராமன்
அறப்பால் உளதேல் அவன் முன் னவனாய்ப்
பிறப்பால் உறின் வந்து பிறக்க
என்று கூறி இறக்கத் துணிகிறான். ஆனால், தம்பியால் மூக்கு அறுபட்ட அரக்கி அயோமுகி குரல் கேட்டு அவன் இருப்பிடம் உணர்ந்து கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைகிறான். இவ்வாறே, இந்திரசித்து ஏவிய நாகபாசத்தால் இலக்குவன் இறந்தால் தானும் இறப்பேன்' என்று இராமன் கூறுவது அவன் அன்பின் ஆழத்தைக் காட்டும்.
அடுத்துக் கம்பர் காட்டும் தம்பியாம் பரதனின் பண்பு நலத்தைப் பார்ப்போம். இராமன் நாடு ஆளாமல் காடு ஆள நேரிட்ட பொழுது தன் தாய் கோசலையிடம்
பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்கமா முடி சூடுகிறான்' என்று கூறுகிறான்
இவ்வாறே தந்தையை இழந்த, இராமனைப் பிரிந்த பரதனும், அந்தமில் பெருங்குணத்து இராமனே, தன் தந்தையும், தாயும், தம்முனும் ஆதலால் அவனைக் கண்டு வணங்கினாலன்றித் தன்துயர் தீராது என்று
கூறுகின்றான். தாய் வாங்கிக் கொடுத்த ஆட்சியைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி இராமனை மீட்கக் காடு போந்த பரதன் பண்பிற்கு ஆயிரம் இராமர் ஒன்று சேர்ந்தாலும் அவன் ஒருவனுக்கு ஈடாக மாட்டார்கள் என்று குகன் கூறும் கூற்றுக்கு மாற்றுரைக்கக் கல் இல்லை. இராமனே பரதனைச் 'சேணுயர் தருமத்தின் தேவு' என்றும் செம்மையின் ஆணி என்றும் போற்றி உரைக்கின்றான்
குலத்தினால் தாழ்ந்து, கொள்கையால் உயர்ந்து தொடர்ந்து தம்பியாக இராமனால் போற்றப்பட்டவன் கங்கை வேடன் குகன். இவன் இராமனிடத்துப் பேரன்பு கொண்டவன். அதனால் தான் இராமனை மீட்கப் படையுடன் வந்த பரதனை அவன் மனநிலை உணராது, இராமனைக் காட்டிற்கு அனுப்பியதோடு அவன் மீது போர் தொடுக்கவும் வருகின்றான் என்று கருதி அப்பர் தன் படைகளை எலிகளாகும், தன்னைப் பாம்பு எனவும் கூறுகின்றான். ஆனால் மரவுரி தரித்து, உடல் மாசடைந்து, ஒளியிழந்த முகம் கொண்டு துன்பமே உருவமாய் இராமன் சென்ற திசை நோக்கித் தொழுது வருகின்ற பரதனைக் கண்டு தன் மனக்கருத்தினை மாற்றிக் கொள்கின்றான். வில்கையிலிருந்து விம்முகிறது எம்பெருமான் விழ பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு' என்ற முடிவுக்கு வருகிறார் .
இனி, இராவணன் தம்பியாம் கும்பகர்ணன் சிறப்பைக் காண்போம். கும்பகருணன் தோள் வலிமை வாய்ந்தவன். அவன் இருதோள் அகலம் காணப் பின் பலநாள் பிடிக்குமாம். செஞ்சோற்றுக் கடன் கழிக்க விரும்பிய கும்பகருணன் தன் தமையன் செய்வது தவறு என்று அறிந்தும், தன்னை நெடிது நாள் வளர்த்த போர்க்கோலம் செய்வித்துப் போருக்கு அனுப்பிய என்று கூறும் அவன் கூற்று செய்ந்நன்றி மறவாத சீலத்திற்கு ஓர் உரைகல்.
இன்னும் குரங்கினத் தலைவனாம் சுக்கிரீவனும் அரக்கர் குலத் தலைவனாம் வீடணனையும் தம்பியாக ஏற்று வாழ்ந்தவன் கோசல நாடு உடைய வள்ளல் எனப்போற்றப்படுகின்ற ராமன் இராவணனுக்காகவே போரிட்டு மாள்வேன் நீர்க்கோலம் போன்ற நிலையாத வாழ்வை விரும்பேன்.
No comments:
Post a Comment
thaks for visiting my website