கவிதைப் பூங்கா
1. கடவுள் வாழ்த்து
2.திருக்குறள்
3.புறநானுாறு
4.சிலப்பதிகாரம்
5.கம்பராமாயணம்
6.குற்றாலக் குறவஞ்சி
7.மனோன்மணீயம்
8.சுப்பிரமணிய பாரதியார்
9.பாரதிதாசன்
10.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
11.நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
12.தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம்
கவிஞர் கண்ணதாசன்
13.மனித தெய்வம் காந்தி காதை
14.கவிஞர் வைரமுத்து
15.வழிபாட்டுப் பாடல்கள்
1. கடவுள் வாழ்த்து
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு
பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்
ஊரும் உலகும் கழற
உழறி உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
1. சேந்தனார் தான் அடைந்த சிறப்பிற்காக சிவபெருமானை போற்றி பல்லாண்டு கூறும் வகையினை எழுதுக.
வேறு எவரும் பெறாத சிரும் செல்வமும் நாள்தோறும் பெருகிட சிவ பெருமானுடைய திருவடிக்கீழ் தங்கி பெருமை, அறிவு ஆகியவை தாம் பெற்றுள்ளதாக ஆசிரியர் சேந்தனார் கூறுகிறார். இவ்வாறாக தான் பெற்ற இப்பேரின்பப் பெருவாழ்வின் சிறப்பை மற்றும் தான் இறைவனுக்கு அடிமையாக திகழ்வதையும் இவ்வுலகும், வானும் அறியுமாறு சிவ பெருமானின் புகழைப் பல்லாண்டு பாடி புகழ்ந்து ஆசிரியர் சேந்தனார் கூறுகிறார்.
Praveen poorvardh tamil guide shabari
2. திருக்குறள்
பொருட்பால்
(பெரியாரைத் துணைக்கோடல்)
1. "பெரியாரைத் துணைக்கோடல்" என்ற தலைப்பில் வள்ளுவர் கூறுவன யாவை?
முன்னுரை :
நூற்குறிப்பு :
முப்பால், பொய்யா மொழி. உத்தர வேதம், வாயுறை வாழ்த்து, தமிழ் மறை என பத்துப் பெயர்களை கொண்டுள்ளது. திருக்குறள், திருக்குறளுக்கு தருமர், மணக்குடவர் பரிதி பரிமேலழகர் முதலான பத்து சான்றோர்கள் உரை எழுதியுள்ளனர். திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. 133 அதிகாரங்கள் உள்ளன அறத்துப்பால் பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுதிகள் உள்ளன.
ஆசிரியர் குறிப்பு :
இந்நூலை இயற்றியவர் "வள்ளுவன் ஆவார் இவரை திருவள்ளுவர் என்று சிறப்பித்து அழைப்பர். இவர் தேவநாயனார். பொய்யில் புலவர், செந்நாப்போதார் எனப் பத்து சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்
இவ்வதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் கருத்தினை நாம் இங்கு காண்போம்.
L. அரசர் போன்ற உயப்பதவியில் உள்ளவர் முதிர்ந்த அறிவுடையோரின் நட்பைப் பெற வேண்டும்
2. உயர் பதவியினர் வந்த துன்பங்களை நீக்கி அவை மீண்டும் வராதவாறு தற்காத்து கொள்ளும் வல்லவரின் நட்பைப் பெற வேண்டும்
3. உயர் பதவியினருக்கு பெரியோர்களின் நட்பே மிகவும் சிறந்த பேறு ஆகும்
4. வயது, அறிவு, அனுபவம் ஆகியவற்றால் தம்மைவிட முத்தவரைத் தேர்வு செய்து அவர் காட்டும் வழியில் நடத்தல் ஒருவர் பெற்றுள்ள பல விதமான வலிமைகளுள் பெரிய வலிமையாகும்
5. அரசன் தன் அமைச்சர்களின் உதவியைக் கொண்டே உலகைக் காப்பவன் ஆகையால் நன்கு ஆராய்ந்த பின்னரே அமைச்சர்களை துணையாகக் கொள்ள வேண்டும்.
6. ஒரு தலைவர் தக்க அறிவுடையவரைத் தேர்ந்தெடுத்து அவரு ல அவர் சொல்லும் வழியில் நடந்தால் அவர் எந்த பகைணை வெல்லப்பட மாட்டார்.
7.எடுத்துரைத்து, அறிவுரை சொல்லி வழி நடத்தும் அமைச்சர்கள் உள்ள அரசருக்கு பகைவர்கள் எப்பொழுதும் இல்லை.
8. எடுத்துரைத்து அறிவுரை சொல்லும் அமைச்சர்கள் இல்லாத அரசர் பகைவர்களே இல்லாத போதும் கெடுவர்.
9. முதலீடு" செய்யாத வணிகருக்கு ஊதியம் கிடைப்பதில்லை. அதுபோலவே ஏற்ற துணை இல்லாத நாட்டின் தலைவருக்கும். நிலை என்பதில்லை.
10. தலைவர் போன்றோர், சான்றோர் மற்றும் பெரியோர் நட்பிலை கொண்டிராமல் இருந்தால் அவர்கள் பத்து மடங்கு பலமிக்க பகைவர்களின் தீமைக்குள்ளவார்கள்.
இவையே பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களின் திரண்ட கருத்தாகும்.
சுற்றம் தழால்
1. “சுற்றம் தழால்" என்னும் தலைப்பின் கீழ் வள்ளுவர் கூறுவன யாவை?
சுற்றம் தழால் என்னும் அதிகாரத்திலுள்ள பத்து குறட்பாக்களின் கருத்துகளை இங்கு காண்போம்.
1. ஒருவர் தம் செல்வமனைத்தையும் இழந்து ஏழையானாலும் பழமை கொண்டாடுதல் சுற்றாறிடத்து உண்டு
2. ஒருவருக்கு உண்மையான அன்புள்ள சுற்றம் கிடைத்தால் அது அவருக்கு மிகப்பெரிய செல்வங்களைத் தரும்.
3. யாரொருவர் தன் சுற்றத்தாரோடு மனம் மகிழ்ந்து உறவாடு வதில்லையோ அவரது வாழ்க்கை கரை இல்லாத குளத்தில் நீர் நிறைந்து இருப்பதைப் போன்றது.
4. ஒருவருக்கு செல்வம் கிடைத்ததனால் வரும் பயன் என்பது தன் சுற்றத்தாரை நன்கு பேணிக்காத்தலே.
5. தன் சுற்றத்தாருக்கு வேண்டியவற்றை தருதலும் இன்சொல் கூறுதலும் ஒருவர் செய்தால் அவரை எப்பொழுதும் சுற்றத்தார் சூழ்ந்து இருப்பர்.
6. எவரொருவர் தன் வாழ்வில் மிக்க கொடை, சினமின்மை என்ற இரண்டு சிறப்பையும் கொண்டிருக்கிறாரோ அவர் தன் வாழ்வில் பெருஞ்சுற்றம் உடையவராவார்.
7. காகம் இரை கிடைத்தவுடன் தன் இனத்தை அழைத்து அவற்றோடு சேர்ந்து உண்ணும் அதுபோல ஒருவர் தன் சுற்றத்தாரோடு தன் செல்வத்தை சேர்த்து செலவிட வேண்டும்.
8. அரசர் போன்ற பெரும் பதவியிலுள்ளோர் அனைவரையும் ஒரே மாதிரியாகப் பார்க்காமல் அவரவர் தகுதி அறிந்து பார்த்தால் அவரை சுற்றத்தார் சூழ்ந்து வாழ்வர்.
9. ஒரு காலத்தில் உறவினராக இருந்து பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து மீண்டும் வந்து உறவினராதல் என்பது உண்டாவது உண்டு.
10. ஒரு காலத்தில் உறவினராக இருந்து பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து மீண்டும் உறவினராக வருபவரை அரசர் ஆராய்ந்து தழுவிக் கொள்ள வேண்டும்.
இவையே "சுற்றம் தழால்" என்னும் அதிகாரத்திலுள்ள பத்து குறட்பாக்களின் திரண்ட கருத்தாகும்.
3. புறநானூறு
(அதியமான் நெடுமான் அஞ்சியும் ஒளவையாரும்)
1. அதியமான் நெடுமான் அஞ்சியும் ஔவையாரும் என்னும் தலைப்பிலுள்ளபுறநானூற்றுப்பாடல்களின் திரண்ட கருத்தை விளக்குக.
ஒளவையார் கூறினார் பகைவர்களே!போர்க்களத்தில் வருவதற்குமுன் தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் அதியமான் நெடுமான் என்று ஒரு வீரன் உள்ளான். அவன் ஒரு நாளில் எட்டு தேர்களை செய்யும் திறமைபடைத்த ஒரு தாசன் ஒரு மாதம் எடுத்துக்கொண்டு செய்த தோச்சக்கரத்தைப் போல வேகமும், திண்மையும் உடையவன்.
உயர்ந்த வலிமைமிக்க சிறந்த வேலைக் கையில் ஏந்தியபடி அழகிய மார்பினைக் கொண்ட களவேள்வியில் மிக சிறந்த போர் புரிகின்ற மத்தளத்தைப் போன்று திரண்ட அகலமானத தோள்களைக் கொண்ட அதியமானை பார்க்கும் முன் நீங்கள் யாராக இருந்தாலும் அவன் பின்னே இருக்கும் படையையும் தூசிய படையையும் கொண்டு எளிதாக எண்ணிவிடாதீர்கள் அவனைக் போர் கண்டால் புரியலாம் என்று அவ்வாறு செய்ய இயலாது.
பெரிய கரங்களையுடைய அதியமானே! நீ பால் போன்ற பிறைச்சந்திரன் அமைந்த நெற்றியையும், நீல மணி போன்ற கழுத்தையும் சிவபெருமானபோல நிலைபெறுக, ஏனென்றால் பெரிய மலையின் உச்சியிலிருந்து கரு நெல்லிபழத்தை பெற்றதும் அதனால் கிடைக்கும் பெரும் பயனைக் கூறாமல் மரணமில்லா பெரு வாழ்வு தரும் அதனை ஒளவையாகிய எனக்கு உண்ணக் கொடுத்தாய்.
புதல்வர்களின் இனிமையான மழலைச்சொல் யாழின் இசைபோல் இன்பம் தர மாட்டாது. அது காலத்தோடும் பொருத்தமாக இருக்காது அதன் பொருளையும் அறிந்து கொள்ள இயலாது இருந்தாலும் மழலைச்சொல் பெற்றோருக்கு அன்பையும் அருளையும் வழங்கியது அதியமானே! நீ எனக்கு அதிகமாக பொருள் கொடுத்து அருள் செய்வதால் என் வாய்ச்சொல்லும் மழலைச் செல்வங்களின் சொல் போன்றன.
ஊரிலுள்ள சிறுவர்கள் வெள்ளை நிற யானைத் தந்தங்களைக் கழுவும் காரணத்தால் நீரில் படியும் பெரிய யானை அவர்களுக்கு வசதியாக உடம்பை புலவர்களாகிய காட்டுவதைப்போல எங்களுக்கு அதியமானே இனிமையாக விளங்குகின்றாம் ஆனால் அதே யானை மதம் பிடித்துவிட்டால் எவ்வாறு துண்டாம் தருமோ அவ்வாறே நீ உன் பகைவர்களுக்கு மிகக் கொடியவனாகர் திகழ்கிறாய்.
தொண்டைமானின் வேல்கள் மயில் தோகை அணிவிக்கப்பட்டு மாலையிடப்பட்டு முழுமையாக அழகு படுத்தப்பட்டு எண்ணெய் தடவப்பட்டு அரண்மனையில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதியமானுடைய வேல்கள் பகைவரை குத்துவதால் ஓரமும் நுனியும் முறிந்து கொல்லனுடைய உலைக்கொட்டிலில் எப்பொழுதும் உள்ளன அதியமான் செல்வம் கிடைத்தவுடன் மற்றவருக்கு கொடுத்தும், இல்லை என்றால் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் வழக்கத்தை கொண்டவன் என்று தொண்டைமானிடம் அதியமானுக்காக தூது சென்ற போது ஔவையார் கூறினார்.
அதியமானுடைய வீரத்தை புகழும் போது ஒளவையார் கூறுகிறார் தேவர்களை போற்றி வாழ்த்தியும், தீமூட்டியாகம் வளர்த்தும் கருமப் பயனை வானத்திலிருந்து பூமிக்கு கொண்டுவந்தும் தன் முன்னோர்களைப் போல அதியமான் அரசுரிமையைப் முறையாகப் பெற்றான். அத்துடன் அமைதியடையாமல் போரை விரும்பி ஏழு அரசர்களோடு போர் புரிந்து தன் தவ வலிமையைக் காட்டி வெற்றி அடைந்தான். அவன் புலவர்களின் பாராட்டிற்கு உரியவன்.
பகைவர்களையும் போற்றும் அதியமானின் சிறப்பினை ஔவையார் கூறுகிறார். நாங்கள் பலநாள் பலரோடு சென்றாலும் முதல் நாள் காட்டிய இன்முகத்தையே எல்லா நாட்களும் காட்டும் பண்புடையவன் அதியமான் யானைகளையும் தேர்களையும் உடைய அதியமான் பரிசில் தரும் காலம் நீட்டித்தாலும் நீட்டிக்கா விட்டாலும் அவன் பரிசில் தருவது தவறாது. அந்த பரிசு யானை தன் கொம்பிற்கிடையே வைக்கப்பட்டுள்ள பெரிய உருண்டை சோற்றைப் போன்றது. உண்ண விரும்புகிற மனமே நீ! பரிசிற்காக ஏங்காதே! அவளது முயற்சி வாழ்வதாக!
அதியமான் பிரிவை தாங்காது ஔவையார் கூறியது அதியமான் சிறிதளவு உணவு கிடைத்தாலும் அதை புலவர்களுக்குத் தருவான் அதிகமாகக் கிடைத்தாலும் அனைவரோடும் பகிர்ந்து உண்பான் அது இன்று இல்லை என்றாகி விட்டது. சிறு சோற்றையும், மிக்க சோற்றையும் பல உண்கலங்களில் வைத்து கொண்டு உண்பான் இன்று அது இல்லை. தன்னையே பிறர்க்கு தருவான். போர் களத்தில் முன்னே நிற்பான், அவனை இழந்ததால் இன்று அதுவும் இல்லை .
காந்தள் மலர் மணக்கும் தன் கைகளால் புலவர்களின் தலையை தடவிக் கொடுப்பான். அவன் மீது பாய்ந்த வேல் அவன் மார்பில் மட்டுமல்லாது பாணர்களின் மண்டை எனப்படும் பிச்சை பாத்திரத்திலும் பாய்ந்தது. மேலும் அங்கிருந்து சான்றோர்களின் நாக்கிலும் பாய்ந்தது இனி பாடுவோர் யாரும் இல்லை . பாடுவோருக்குப் பரிசில் தருவோரும் இல்லை. யாரும் அணியாது கொன்றை மலர் அழிவதுபோல பிறருக்கு பொருளை கொடுக்காது வீணாக அழியும் பல உயிர்கள் தான் இங்கே உள்ளன.
4.சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம்
அடைக்கலக்காதை
1. சிலப்பதிகாரத்தில் மாடலன் கோவலனின் உடல்கொடை, பொருட்கொடை, உயிர்க்கொடை ஆகியவற்றை எவ்வாறு விளக்கினான் ?
மாடலன், கோவலன் பூம்புகாரில் சிறப்பாக வாழ்ந்த காலத்தில் பார்த்தவன், இதை மதுரையில் ஏழ்மை நிலையில் சிலம்பு விற்க வந்ததைக் கண்டு கோவலன் செய்த |. உடல் கொடை, 2 பொருட்கொடை, 3. உயிர்க்கொடை ஆகியவற்றைப்பற்றி கூறுகிறார்
உடல்கொடை:
கோவலன் மணிமேகலைக்கு நடந்த பெயர்சூட்டு விழாவில் வந்த அனைவருக்கும் செம்பொன்னை வாரி வாரி வழங்கினான். அந்த நேரத்தில் ஒரு வயதான அந்தணன் தானம் பெறுவதற்காக தள்ளாடியபடி வந்தான். அவன மதயானை கோபத்தால் பற்றிக் கொண்டது. யானையின் கொம்பிற்கிடையே புகுந்து யானையின் மதத்தை அடக்கி அந்த வயதான அந்தனணைக் காப்பாற்றினான் இச்செய்கையில் நாம் கோவலனின் கருணையையும் மறமாகிய வீரத்தையும் காண்கிறோம். அதனால் அவன் கருணை மறவன் எனப் பெயர் பெற்றான். தன்னுயிரைப் பொருட்படுத்தாது தானம் கேட்டு வந்த அந்தணனைக் காக்க யானையின் மதத்தை அடக்கியது உடல் கொடை யாயிற்று.
பொருட்கொடை
அந்தணன் வளர்த்து வந்த ஒரு கீரிப்பிள்ளையை அவனது மனைவி கொன்று விட்டாள். ஆகையால் அவள் கையால் சமைத்த உணவை உண்பது பாவம் என்று அந்தணன் தன் மனைவியை இகழ்ந்தான். அவன் வடதிசை நோக்கி செல்லத் தொடங்கினான். அவ்வாறு செல்லும் போது வடமொழி வாசகம் எழுதப்பட்ட ஓர் ஓலையை அவள் கைகளில் கொடுத்து இதனை அறிவார் பக்கம் காட்டுக என்றுக் கூறிச் சென்று விட்டான். அவள் அவவோலையை எடுத்துக்கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்த பிறகு கோவலனிடம் அதைக் கொடுத்தான். அதைப் படித்து அவளது துன்பத்தைப் போக்க மிக்க பொருட்கொடை கொடுத்து அவளது பாவத்தைப் போக்கினான். பிரிந்த கணவனையும் அவளுடன் சேர்த்து வைத்தான். இதுவே கோவலன் செய்த பொருட்கொடையாகும்
உயிர்க்கொடை
அறிவில்லாத ஒருவன் பத்தினிப்பெண் ஒருத்தியைப் பற்றி அவள் கணவனிடம் சென்று அவள் ஒழுக்கம் கெட்ட பெண் என்று பொய்சாட்சி சொன்னான். இவ்வாறு பொய் கூறுபவர்களை அடித்துக் கொல்லும் பூதம் தன் பாசக்கயிற்றால் அவனைக் கட்டி வாட்டியது அதனால் அவனது தாய் மிகவும் வருந்தினாள், அத்தாயின் வருத்ததைக் கண்டு வருந்திய கோவலன் அப்பூதத்திடம் சென்று தன்னுயிரை எடுத்துக் கொண்டு அவன் உயிரை விட்டு விடுமாறு வேண்டிக் கொண்டான் அப்பொழுது அந்த பூதம் கெட்டவன் உயிருக்காக நல்லவர் உயிரை வாங்கும் வழக்கம் தனக்கு இல்லை எனக் கூறி அந்த கயவனை அனைவரின் கண் முன்னே கொன்றது கருணை வடிவான கோவலன் அந்த கயவனின் தாய்க்கு மிக்க பொருள் உதவி செய்து வாழ வழி செய்தான்.
இவ்வாறு தன்னுயிரையே தர முன் வந்த செயல் உயிர்க் கொடையாயிற்று.
5. கம்பராமாயணம் -
அயோத்தியா காண்டம்
கங்கைப் படலம்
1.அயோத்தியா காண்டம் கங்கைப் படலம் என்னும் பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் யாவை?
குகன் கங்கைக்கரையில் சிருங்கிபேரம் என்ற ஊரில் வாழ்ந்தான். அவன் வேடர் குலத்தைச் சேர்ந்தவன் ஆப்பிரம் படகுகளுக்கு தலைவனாவான் அவனது கையில் துடியும், கால்களில் செடுப்பும் இருந்தன் அவன் கருப்பாக இருந்தான். பல சுற்றத்தாரைக் கொண்டவன் பம்பை என்னும் படை ஒன்று அவனுக்கிருந்தது எண்ணெய் தடவிய இருள் போன்று அவனது உடம்பு இருந்தது அவனது அரைக்கச்சில் இரத்தம் படிந்த வாள் இருந்தது. எமனும் அவனைக் கண்டு அஞ்சினான்.
குகன் இராமனைக் கண்டவுடன் தன் தலையை மண்ணில் வைத்து வணங்கினான் உட்கார சொல்லியும் அவன் உட்காரவில்லை அவன் இராமனைப் பார்த்து தான் உணவாக தேனும் மீனும் கொண்டு வந்துள்ளதாகக் கூறினான், உடனே மற்ற முனிவர்களைப் பார்த்து அன்பினால் கொடுக்கப்படும் எத்தகையப் பொருளையும் ஏற்க வேண்டும் என்று கூறினான். அதை ஏற்றுக்கொள்வது உண்பதற்கு சமமாகும் என்றும் கூறினான்.
இராமன் படகு கொண்டு வரும்படிக் கூறினான். அப்பொழுது ககன், இராமபிரானே! நாங்கள் இருக்குமிடம் காடுதான். நாங்கள் வலிமைமிக்கவர்கள். தங்களின் எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற தயாராக உள்ளோம். எங்களை உறவினராகக் கருதி இங்கேயே தங்கி இருங்கள். இங்கு தேன் மிகுதி, திணை மிகுதி தேவர்களும் விரும்பி உண்ணும் மாமிச உணவும் மிகுதி விளையாடுவதற்கு காடுகள் உள்ளன, நீராட கங்கை உள்ளது. ஆகையால் இங்கேயே தங்கியிருங்கள் என வேண்டினான் உடுத்திக் கொள்ள பட்டாடை போன்ற தோலாடையும் உள்ளது. உறங்கப் பரண்கள் உள்ளன சிறுகுடிசைகளும் உள்ளன. எனது ஏவல் கேட்க ஐந்து லட்சம் வீரர்கள் உள்ளனர். ஆகையால் இங்கு தங்கியிருங்கள் என குகள் கூறினான்,
இராமன் சித்திரக் கட மலைக்கும் செல்ல வழி கேட்டப் போது தான் தானும் இராமபிரானுடன் வந்தால் அவர்களுக்கு வழித்துணையாக இருப்பேன் எனக் கூறினான். மேலும் அவர்களுக்கு வேண்டிய காய் கனி கிழங்கு முதலியவற்றை கொண்டு தருவேன் என்றால், அவர்களுக்கு பாண் சாலை அமைத்து தருவதாகவும் கூறினான். அவர்களை ஒருபொழுதும் பிரியமாலிருந்து காப்பேன் எனவும் கூறினான்.
நெடுந்தொலைவிலுள்ள நீரையும் கொண்டு தருவேன், எதற்கும் அஞ்சேன் எனக் கூறினான் தேவைப்படுமானால் எனது சேனையைக் கொண்டு தங்களை காப்பேன் என்றும் கூறினான், இதனைக் கேட்டவுடன் இராமன் என்னுயிரிலும் மேலான குகனே இனி இலக்குவன் உனது தம்பி, சீதை உனக்கு அண்ணியாவாள்.
இந்த உலகம் எல்லாம் உனக்குரியது உன் வழிக்காட்டுதல் படியே நான் நடப்பேன். இதுவரை நாங்கள் நான்கு பேராக இருந்தோம் இனி உன்னுடன் சேர்ந்து நாங்கள் ஐவரானோம். எனக்கு வரும் துன்பத்தைப் போக்க தம்பி இலக்குவன் உள்ளான் நீ உன் இருப்பிடத்திற்கு சென்று உன் மக்களைப் பாதுகாப்பாயாக உன் சுற்றம் என் சுற்றமாகும். அவர்களது நலன் எனது நல்னாதும் நீ இல்லாமல் அவர்கள் துன்பட்டடக்கூடாது. நீ சென்று அவர்களைப் பாதுகாப்பாயாக எனக் கூறினான்.
குகப் படலம்
பரதன் பெரும் படையுடன் வரக்கண்ட குகன் அவன் இராமனுடன் போர் புரியவே வருகிறான் என எண்ணிக் கோபமடைந்தான், அவன் பரதனது படையை தூசிபோலக் கருதினான். அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. வில்வித்தையில் சிறந்த குகன் எமனே ஐந்து லட்சம் உருவம் எடுத்தது போன்ற படையை உடையவன். கடிந்து பேசும் இயல்புடையவன் அவனிடம் உடைவாளும் உண்டு போர் மூளுவதைக் கண்டு மகிழ்கின்றவன் அவன் பரதனது படை வீரர்கள் எலியைப் போன்றவர்கள்.
நான் பாம்பு போன்றவன் புலிகள் எல்லாம் ஓரிடத்தில் கூடுவதைப் போல் தன் படை வீரர்களை அழைத்துக்கொண்டு குகன் கங்கையின் தென்கரையிலிருந்தான். அவன் வீரர்களிடம் நான் பரதனை வீரசுவர்க்கம் அனுப்பவும், இராமபிரானுக்கு அரசுரிமை மீட்டு தருவதற்கும் கூளுரைத்துள்ளேன் அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினான். வழிகளை அடைத்து, தோணிகளை ஓட்டுவதை நிறுத்தி அவர்களை பிடித்து வெட்டுங்கள் என்று குகன் கூறினான்
இராமபிரானை அரசாள விடாமல் செய்து காட்டிற்கு அனுப்பியப் பிறகும், காட்டிலும் வந்து துன்புறுத்தும் அவர்களை என் அம்பால் தாக்குவேன். என் அம்பிற்கு அவர்கள் தப்பிவிட்டால் என்னை இவ்வுலக மக்கள் நாயைப் போல தாழ்ந்தவன் என இகழ்வார்களே? இவர்களை இந்த கங்கை நதியைக் கடக்க இராமன் என் நண்பன் என்று கருதுகிறான் எனவும் விடக்கூடாது கூறினான் இராமன் பரதனை தன்சகோதரனாகக் கூட எண்ணவில்லை. புலி போன்ற வலிமையான இலக்குவன் இருக்கிறான் என்றும் பரதன் எண்ணவில்லை. வீரமிக்க நானொருவன் இருக்கிறேன் என்பதையும் பரதன் பொருட்படுத்தவில்லை.
வேடர்கள் விடும் அம்பு இவர்களை தாக்காது என்று இவர்கள் எண்ணுகிறார்களா? இவர்கள் இராமன் மீது படையெடுப்பது என்பது நானும் என் சேனை முழுவதும் இறந்த பிறகே இயலும் என குகன் கூறினான், பரதனுடைய படை மட்டுமல்ல தேவர்களே படையெடுத்து வந்தாலும் அக்கூட்டத்தை அழித்து விடுவேன். அரசுரிமையை தம்பிக்கு கொடுத்து விட்டு காட்டில் இருக்கும் இராமனை எதிர்த்து போரிடும் பரதனுடைய செயல் முறையற்றது.
இதனைக் கண்டு வேடர்குலம் அமைதியாக இருக்கக்கூடாது. பரதனின் படை ஏழுகடலைப் போலயிருந்தாலும் அழித்து விடுவோம் எனக் கூறினான். குகன் பரதனைக் காண சென்றான். சுமந்தரன் என்ற தேர்ப்பாகனிடம் பரதன் குகனைப் பற்றி கூறினான். குகன் ஆயிரம் படகுகளின் தலைவன். இராமனுக்கு உயிர்த்தோழன், ஆண்யானைகளைப் போல பலமிக்கவன். நீலமேகம் போல கரிய நிறமுடையவன், இராமனின் மீது அன்பு கொண்ட அவன் உன்னை காண வந்துள்ளான் என பரதனிடம் தெரிவித்தான்.
அதைக்கேட்டவுடன் என் தமையன் இராமனின் தோழனை நான் சென்று பார்ப்பதே முறையாகும் எனக் கூறி வெளியே வந்தான். பரதன் மரவுரி தரித்திருந்தான். புழுதியடைந்த உடலைப் பெற்றிருந்தான் ஒளியிழந்த நிலவைப் போன்று அவனது முகமிருந்தது. பரதன் இராமனைப் போலவும் சத்ருகன் இலக்குவனைப் போலவும் இருப்பதைக் கண்டு குகன் வியந்தான். குகன் பரதனின் காலில் வீழ்ந்து வணங்கினான், பரதன் அவனை ஆரத்தழுவிக் கொண்டான் தாயாகிய கைகேயின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தசரதன் தந்த அரசாட்சியை மறுத்து கவலையுடன் விளங்கும் பரதன் ஆயிரம் இராமனுக்கு சமமாக மாட்டார்கள் என்று குகன் கூறிப்புகழ்ந்தான் சந்திரன் போன்ற பல நட்சத்திரங்களின் ஒளியை சூரியன் தன் ஒளியில் மறைத்துக் கொள்வதுப் போல பரதன் குலத்தில் பிறந்த அனைத்து அரசர்களின் புகழையும் தன் புகழுக்குள் அடக்கிக் கொண்டான் என பரதனை குகன் பாராட்டினான்.
அப்பொழுது பரதன் கோசலையை தசரதனின் முதல் மனைவி என்றும் இராமனின் தாயென்றும் பரதனாகிய தான் பிறந்ததினால் அரசுரிமையை இழந்தவன் என்றும் குகனிடம் அறிமுகப்படுத்தினான். குகன் கோசலையின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அப்பொழுது கோசலையிடம் குகனை காண்பித்து இவன் குகன். இராமனின் உற்ற நண்பன் எனவும் தெரிவித்தான். சுமித்திரையையும் குகனுக்கு அறிமுகப்படுத்தினான். பிறகு தனது தாயை பற்றி சொல்லும் போது தசரதன் இறப்பதற்கும், பரதன் துன்பக்கடலில் மூழ்குவதற்கும் இராமனின் துன்பத்திற்கும் காரண மான கைகேயி இவள் தான் எனவும் கூறினான்.
6. குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர்
1. குற்றாலத் திரிகூட மலையின் சிறப்புகளாக திரிகூடராசப்பக் கவிராயர் கூறும் கருத்துகள் யாவை ?
குறும்பலா ஈசர் எனப்படும் திருக்குற்றால நாதா எழுந்தருளும் திரிகூட மலையில் ஆண் குரங்குகள் பழங்களை கொய்து பெண் குரங்குகளுக்கு அவற்றைத் தந்து கொஞ்சிக் குலாவும், அவைகள் சிந்தும் கனிகளுக்காக சொர்க்க லோகத்துக் குரங்குகள் கெஞ்சும் வேடர்கள் தம் மலை உயரம் காரணமாக சைகையாலேயே தேவர்களை அழைப்பார்கள்.
சிறந்த அறிவுடைய சித்தர்கள் அட்டமா சித்திகளை செய்து காட்டுவார்கள், தேனருவி அலைகளோடு ஆகாயத்திலிருந்து ஓடி வரும். அதில் சூரியனுடைய குதிரைகளின் கால்களும் தேரின் சக்கரமும் வழுக்கும். அருவிகளில் முத்துகள் தோன்றும். வீட்டு முன் இடங்களில் பெண்கள் சிறுமணல்களை அழிக்கும். அங்கு விளையும் வள்ளிக்கிழங்குகளுக்கு தேன் மிகுதியாகக் கிடைக்கும். அங்கு மக்கள் யானையின் கொம்புகளை உலக்கையாகக் கொண்டு திணைகுற்றுவர்
குரங்குகள் பலாப்பழங்களைப் பறித்து பந்து போல், விளையாடும் வானுலகம் வரை செண்பக மலர்களின் மணம் வீசும் பாம்புகள் தரும் மாணிக்கக்கற்கள் ஒளி வீசும், நிலவை தான் உண்ணும் உணவு என்று யானை நினைத்து அதை வழிமறித்துத் தடுக்கும். திணை விதைப்பதற்காக காடுகளை அழிக்கும் பொழுது எங்கு பார்த்தாலும் அகில் கட்டைகள், சந்தனம் ஆகியவற்றின் வாசனை வீசும். காடுகளில் மலை ஆடுகள் குதித்துப் பாயும் காகங்களால் நெருங்க முடியாத குற்றால மலையில் மேகக் கூட்டங்கள் படியும். இவ்வாறாக திரிகூடமலையின் சிறப்புகளை கவிஞர் வர்ணித்துள்ளார்.
7. மனோன்மணீயம்
(பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை )
பெயர் : பெ. சுந்தரம் பிள்ளை
பிறப்பு : 04.04.1855
பிறந்த இடம் : ஆலப்புழா (கேரளா)
இறப்பு : 26.04.1897
1.புல்லின் வாழ்க்கை மற்றும் வாய்க்கால் பற்றி நடராசன் கூறும் கருத்துகள் யாவை?
புல்லின் வாழ்க்கை :
சிறு புல் தனக்கென்று ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது.
புல் சிறுபூக்குலை அடி ஒன்றினை உயர்த்தி நிற்கிறது. அது தேனிக்களை அழைத்து தேன் துளிகளைத் தருகிறது. மகரந்தப் பொடிகளை எல்லா இடங்களிலும் பரப்பி காய்களை உருவாக்குகிறது. பறவை, பசு, எருது. ஆடு ஆகியவற்றின் மீது ஒட்டிக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வளர்ச்சியடையுங்கள் என தன் சேய்களை அனுப்பிகிறது. ஒரே இடத்தில் இருந்தால் வளர்ச்சியடைய மாட்டோம் என அது கருதுகிறது, பார்ப்பதற்கு புல் அழகாக விளங்குகிறது அது அனைவரின் மனதையும் கவருகிறது.
வாய்க்கால்:
உணவளிக்கும் வயலுக்கு அற்புதமான பல உதவிகளை வாய்க்கால் செய்கிறது. அது கடலை மலையாகவும், மலையைக் கடலாகவும் மாற்றுகிறது. கற்களைப் பொடியாக்குகிறது. மண், கல், புல், புழு ஆகியவற்றைக் இழுத்துக்கொண்டு சென்று கடலில் சேர்க்கின்றது. பிறகு கடல் நீரே ஆவியாகி மேகமாக மாறுகிறது மீண்டும் மலைகளில் தங்கி அருவியாக பாய்ந்து ஓடிவருகிறது. அது குகைகளின் வழியே ஊர்ந்து செல்கிறது. மலைகளில் அதுவே சுனையாகத் தேங்குகிறது அதுவே ஊற்றாக மாறுகிறது ஆறாகவும், மடுவாகவும், விளங்குகிறது, மதகுகளை முட்டி மோதி தள்ளியபடி வந்து வாய்க்காலாக ஓடிவருகிறது. இவ்வாறு பலவித துன்பங்களைத் தாங்கிய படி வந்து தான் தரும் பொருள் சிறிதே எனினும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வாய்க்கால் கூறி இரவு பகலாக தன் பயணத்தை மேற்கொள்கிறது.
இவ்வாறாக நடராசன் புல்லின் வாழ்க்கை மற்றும் வாய்க்கால் ஆகியவற்றைப் பற்றி மனோன்மணியத்தில் கூறுகிறார்.
8. சுப்பிரமணிய பாரதியார்
யோக சித்தி (வரங்கேட்டல்)
1. பாரதியார் அன்னை பராசக்தியிடம் வேண்டும் வரங்கள் யாவை?
பெயர் : சுப்பிரமணிய பாரதியார்
பிறப்பு 11.12.1882
பிறந்த இடம் : எட்டயபுரம்
இறப்பு . 09.11.1921
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அன்னை பராசக்தியிடம் கீழ்க்கண்ட வரங்களை தருமாறு வேண்டுகிறார்.
செய்த தீவினைகள்யாவும் அழிய வேண்டும். புதிய உயிர்கள் உண்டாக்க வேண்டும். காளியே! நான் இத்தனை வேண்டி உன்னை புகழ்ந்து பாடியும் வரம் தர மறுப்பதேனோ? எமது கவலைகள் நீங்க வேண்டும். எமது தோள்கள் வலிமையுடையதாக வேண்டும், எல்லா வித சோர்வும் நீங்கி, நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் வாள் கொண்டு வெட்டினாலும் மனந்தளராது மன வலிமையும் உடல் வலிமையும் வேண்டும். மலர்ந்த முகம் வேண்டும். ஆசையை அறவே அறுக்க வேண்டும் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியடைய வேண்டும். பெருஞ்செல்வம் தந்து பலதொழில்கள் புரிய வரந்தர வேண்டும். அன்னையே! பலரின் உதவி எனக்கு வேண்டும்.
கவிதை இயற்றும் ஆற்றலும் தந்திட வேண்டும். சாதாரண கல்லையும் வைரக்கல்லாக மாற்றவும், செம்பினை செம்பொன்னாக ஆக்கவும், புல்லை நெற்பயிராகச் செய்யவும், பன்றியை சிங்கமாக மாற்றவும் மண்ணை சுவைமிக்கதாக செய்யவும் எனக்கு ஆற்றல் மிடைக்க வேண்டும். நமது நாட்டை கல்விவளம் தொழில்வளம் மிக்க நாடாக மாற்ற வேண்டும். நம் நாட்டின் வறுமை நீங்க வேண்டும். அச்சம் முழுமையாக மறைய வேண்டும்.) அர்ஜைைனயும் கண்ணனையும் ஆட்கொண்டது போலவே என்னையும் அன்னையே ஆட்கொண்டு வரமருள வேண்டும். இவையே பாரதியார் அவனை பராசக்தியிடம் கேட்ட வரங்களாகும்.
2. சுப்பிரமணிய பாரதியார் புதுமைப் பெண்ணின் குண நலன்களைப் பற்றி எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
முதலில் புதுமைப் பெண்ணின் பொன்னடிக்கு ஓர் ஆயிரம் போற்றிகள் தெரிவித்து கவிஞர் வாழ்த்துகிறார். சேற்றிலே பூத்திருக்கும் செந்தாமரை மலர் போல் ஒளிபொருந்தியவள் புதுமைப் பெண். அவள் சுதந்திர பேரிகைக் கொட்டி இவ்வுலகிற்கு வந்தது நாம் செய்த தவத்தின் பயனாகும். ஆணும் பெண்ணும் சமம். சிறந்த அறிவு நல்லறம், வீர சுதந்திரம் இவையனைத்தும் பெண்களின் உயாந்த அணிகலனாகும். நோகொண்ட பார்வை அஞ்சாமை, நிமிர்ந்த நடை அறிவாற்றல் இவையனைத்தும் பெற்றிருப்பதால் பெருமைமிக்க பெண்கள் எதிலும் மாறுவதில்லை. புதுமைப்பெண்ணின் சொற்களும் செய்கைகளும் இக்கலியுகத்திற்கோர் வரப்பிரசாதமாகும்.
வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் நூல்கள் பல கற்பதுவும் பல நாடுகளுக்குச் சென்று புதுமைகளைக் கற்று நம் நாட்டிற்கு கொண்டுவருவதும் பெண்கள் கற்க வேண்டும். வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும். வழக்கத்தை ஒழித்து வீரபெண்களாகத் திகழ வேண்டும். சாத்திரங்கள் பல கற்க வேண்டும். வீரமிக்க காரியங்கள் செய்து பழைய பொய்மைகளை இந்நாட்டை விட்டு ஓட்ட வேண்டும். மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் பல நற்காரியங்கள் செய்து ஆடவர் போற்றும் வண்ணம் வாழ வேண்டும். இவ்வாறாக பல நல்ல உயர்ந்த குணங்கள் புதுமைப்பெண்கள் பெற வேண்டும் எனப் பாரதியார் வேண்டுகிறார்.
No comments:
Post a Comment
thaks for visiting my website