வாலிவதைப்படலம்
பொருளடக்கம்
1. இராம, இலக்குவர், சுக்குரிவலுடன் சேர்ந்து சென்ற கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள் யாவை?
2. சுக்கிரவன் போருக்கு அழைத்தவுடன் வாலி அடைந்த சீற்றத்தினை விளக்குக
3.சுக்கிரீவனுடன் போர்புரிய புறப்பட்ட வாலியிடம் தாரை சுக்கிரீவன், இராமனின் பெருந்துணை கொண்டே வந்துள்ளான் என்று கூறிய போது வாலி கூறியனவற்றை எழுதுக.
4. வாலியும், சுக்கிரீவனும் போரில் ஆர்ப்பரிப்பதைக் கண்டு இராம இலக்குவர்கள் தங்களுக்குள் நினைத்தவை யாவை?
5. வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடந்த போரினை விளக்குக.
6. இராமன் வாலியின் மீது அம்பு தொடுத்த விதமும் வாலியின் நிலையையும் விளக்கி எழுதுக.
7. அம்பில் இராமனின் பெயரைப் பார்த்ததும் வாலி இராமனை இகழ்ந்து கூறியவை யாவை?
8. வாலியை கொன்றதன் காரணங்களாக இராமன் கூறியது யாவை அதற்கு வாலி உடரைத்த பதில் யாது?
(அல்லது)
தீது தீர்ப்பது தன் சிந்தைக் கருத்து என ஏன் இராமன் கூறினான் அதற்கு வாலி என்ன பதிலளித்தான்?
Priya Fashion Hub Green Designer Traditional Ethnic Gold Plated Bead Necklace For Women (Pf-97)
9. வாலி தன் பரம்பரைக் குணம் என எதை கூறினான் அதற்கு இராமன் என்ன பதில் அளித்தான்?
(அல்லது)
உணர்ச்சி வழி செல்வது தம் பரம்பரை குணம் என வாலி என் கூறினான். அதற்கு இராமன் என்ன பதில் கூறினான்?
10. வாலியை இராமன் மறைந்து தாக்கியது சரியே என இலக்குவன் எவ்வாறு வாலியிடம் விளக்கினான்?
11. இறக்கும் நிலையில் வாலி இராமனிடம் வேண்டியவை யாவை?
12. வாலி தன் சகோதரன் சுக்கிரீவனுக்கு அளித்த அறிவுரைகள் யாவை?
13. இராமனின் அம்பினால் தாக்கப்பட்டு விழுந்துகிடக்கும் தன் தந்தையை கண்டு அங்கதன் எவ்வாறு வருந்தினான்? அவனுக்கு வாலி எவ்வாறு ஆறுதல் கூறினான்?
Ethics Perfect (CLYMB) Ultra Lite Sport Shoes for Men (8 UK/India, Navy Blue)
நூற்சிறப்பு
இனிமையும், நடை எளிமையும் கருத்தாழமும் கொண்ட கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர். இவர் தம் நூலுக்கு இராமாவதாரம் என்றே கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
வடலூர் கதையினைத் தமிழ் மரபுக்கேற்ப பாடி சென்றுள்ள திறத்தினை நூலில் காணலாம்.
இங்கு நாம் கம்பராமாயணத்தில் வாலிவதைப்படலம் என்னும் பகுதியைப் பார்க்கிறோம்.
ஆசிரியர் குறிப்பு :
கம்பர் ஏரெழுபது, திருக்கை வழக்கம், சடகோபர் அந்தாதி சரசுவதி அந்தாதி, இலக்குமியந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
1. இராம, இலக்குவர், சுக்குரீவனுடன் சேர்ந்து சென்ற கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள் யாவை?
இராம, இலக்குவர், சுக்குரிவலுடன் சேர்ந்து சென்ற கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்:
இராம, இலக்குவர், சுக்குரீவனுடன் சென்ற கிட்கிந்தை மலைப் பகுதியில் எங்கு பார்த்தாலும் ஆச்சா மரங்கள், பச்சிலை மரங்கள், ஏல மரங்கள், மாமரங்கள், வாழை மரங்கள் சுரனை மரங்கள் ஆகியவை செழிப்பாக வளர்ந்து இருந்தன ஆண்பாளி ஒன்று இரு புலி, இரு யான, இரு ஆண் சிங்கள் ஒரு சேர கூடி செல்வதுபோல சுக்கிரீவனுடன் இராம, இலக்குவர் மலை மீது சென்று கொண்டிருந்தனர்
எல்லா இடங்களிலும் ஊஞ்சல்கள், சந்தன மரங்கள், மேகம் தவமும் மலை சிகரங்கள், செண்பக மரச்சோலைகள், தங்கமலைகள், தென் டாட்டன. இராம இலக்குவர் வரும் வேகத்தைக் கண்டு பயந்து மேகங்கள் கலைந்து ஓடின. அப்போது மேகத்திலிருந்து மழை ஒழுகியது, மலைப்பகுதியில் படமெடுத்து ஆடும் பாம்புகள், யானை கள், சிறும் சிங்கங்கள் அனைத்தும் ஓடின. நீரில் வாளை மீன்களும் நீர் பாம்புகளும் ஓடின. மதம் கொண்ட யானையால் சாய்த்த பட்ட மரங்களில் இருந்த தேனடைகளிலிருந்து சிந்திய தேன் பொன் ஒளி வீசி, நெருப்புப் போல தென்படும் செந்நிற மணிகளை அளப்பது போல ஓடிக்கொண்டிருந்தது. தேன் வழிந்தோடுவதால் மலைப்பாதை முழுவதும் வழுக்கின.
மலை வழி ஓங்கி இருந்தால் வாவிகளில் வானயாறு வந்து பாய்ந்துக் கொண்டிருந்தது, தினை தாழ்ந்து இருக்குமிடத்தை நோக்கி பாயும் காளைகள் போல நீர் அருவி வந்து பாய்ந்து கொண்டிருந்தது குளங்களை நோக்கி யானைகள் பாய்ந்தன குருவிகள் தினைக் கதிர்களை நோக்கி பாய்ந்தன. குரங்குகள் மரக்கிளைகளில் ஓடியாடின. மலைப்பகுதிகள் ஏலக்காய் மணம் பரவி இருந்தது. அது அனைவரின் மனதையும் கவர்ந்தது. சிர் பெருக்கு நட்சத்திரங்களையும் கவர்ந்தது வான் வில்லையும் பிறை நிலவையும், மற்ற கோள்களையும் கவர்ந்தது. இவ்வாறாக மலைப்பகுதி எழில் மிக்கதாக இருந்தது.
U-TURN Men's Slim Fit Casual Shirt (mandarin-M-green_Green_Medium)
2. சுக்கிரவன் போருக்கு அழைத்தவுடன் வாலி அடைந்த சீற்றத்தினை விளக்குக
சுக்கீரவன் போருக்கு அழைத்தவுடன் வாலி அடைந்த சீற்றம்:
இராம, இலக்குவருடன், கிட்கிந்தை மலையை நெருங்கியவுடன் கக்கிரவன் தன் தோள்களையும், தாள்களையும் தட்டியபடி வாலியைப் போருக்கு அழைத்தான். அவனுடைய ஆரவாரமான சொற்கள் வாலியின் செவிகளில் போய் சேர்ந்தன. சுக்கிரவனின் அழைப்பை கேட்ட வாலி, ஏளனமாகச் சிரித்த சிரிப்பு ஈரேழு உலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும் நடுங்க செய்தது, அவைகள் திசைகளுக்கு அப்பால் அஞ்சி ஓடின யுகமுடிவில் எல்லா உலகங்களையும் அழிக்கும் கடல் போல் பொங்கி எழுந்த பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி கிட்கிந்த மலையை குலுங்க செய்தது.
வாலி தன் தோள்களை தட்டிய பொழுது வேகமான காற்று எழுந்து மற்ற மலைகளையெல்லாம் சிதறச் செய்தது. அவனது உடலின் மயிர்க்கால்களிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் வடவைக்கனலும் நடுங்கும் படியாக ஒளி வீசின. வாலியின்மூச்சுக்காற்றும் அதிலிருந்து புறப்பட்ட புலிகளையும் தேவர் வசிக்கும் ஆகாயத்தையும் தாண்டி சென்றன, அவன் கையைப் புடைத்தப் பொழுது எழுந்த ஒலி திசை யானைகளின் மதக்களிப்பை போக்கியது. அவ்வொலியினால் இடிக் கூட்டங்கள் கூட வலிமை இழந்தன. மேலுலகங்கள் யாவும் நடுங்கின மலைகள் யாவும் உடைந்து சிதறின.
சுக்கிரீவலுடன் போர் புரிய வந்து விட்டேன் என வாலி கூறிய சொற்கள் எட்டு திக்குகளிலும் எதிரொலித்தன. வாலியின் மகுடம் பட்டதால் நட்சத்திரங்கள் சிந்தின. அவனது உருவத்தைக் கண்டு எமனும் அஞ்சினான். எமனின் கண்களும் கூசின. தேவர்கள் அனைவரும் பயந்தனர். வாலி தன் பற்களை கடித்தபொழுது இடிக் கூட்டம் சிதறுவது போல் நெருப்புத் தோன்றியது. தோள்களைத் தட்டிய போது தோளிலிருந்த வளை ரத்தினங்கள் மின்னல் வெட்டியதுப் போல சிதறி விழுந்தன.
வாலி சீற்றம் கொண்டு சுக்கிரீவனுடன் போர் புரிய புறப்பட்டப் போது ஈரேழு உலகமும், கடலும் தேவர்களும், பஞ்ச பூதங்களும் நிலை குலைந்தன. யுகமுடிவில் தோன்றும் ஊழியைப் போல அவனது கோபம் பரவியது. பாற்கடலில் தோன்றி ஆலகால விஷம்
போல வாலியின் சீற்றம் வெளிப்பட்டது இவ்வாறாக சுக்கிரீவன் போருக்கு அழைத்தவுடன் வாலி சீற்றம் கொண்டான் என்று கம்பர் வர்ணிக்கின்றார்.
3. சுக்கிரீவனுடன் போர் புரிய புறப்பட்ட வாலியிடம் தாரை, சுக்கிரீவன், இராமனின் பெருந்துணை கொண்டே வந்துள்ளான் என்று கூறிய போது வாலி கூறியனவற்றை எழுதுக.
கிட்கிந்த மலையை நெருங்கியவுடன் சுக்கிரீவன், வாலியைப் போருக்கு அழைத்தான் அவனது செருக்கு அழைப்பை கேட்டவுடன் சீற்றம் கொண்ட வாலி உடனடியாக போர் புரிய தயாரானான், அவன் போர் புரிய தயாராவதைக் கண்ட அவனது மனைவி தாரை சுக்கிரீவன் போருக்கு ஒரு புதிய பெரிய துணைக் கொண்டே வந்துள்ளான் என்று கூறினாள். அதைக் கேட்ட வாலி தாரையிடம், மூன்று உலகங்களிலும் உள்ள எல்லா பொருட்களும் ஒன்று சேர்ந்து வந்து தாக்கினாலும் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. அந்த சக்தி தான் அழிந்து விடும் இதற்கு பல சான்றுகள் உள்ளன என்று கூறினான்.
மந்திர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் திருமாலை அடிக்கல்லாகவும் நிலவைத்தாண்களாகவும் தான் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் பெற்று தந்ததை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது என்று வாலி கூறினான், தன் வலிமைக்கு முன்னால் தேவர்களின் வலிமையும் தோல்வி அடைந்தது என்றும் எமனும் தன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நடுங்கி போவான் என்றும் வாலி கூறினான்.
இப்படிப்பட்ட வீரமிக்க தன்னுடன் போர் புரிய வலிமையற்ற சுக்கிரீவனுக்கு உதவிபுரிய யாருக்கும் மனம் வராது என்றான் ஒரு வேளை அவ்வாறு யாராவது சுக்கிரீவனுக்குத் துணையாக வந்தாலும் தனது வரத்தின் பலனாக எதிரியின் பலத்தில் பாதி தனக்கு சொந்தமாகி விடும் என்பதால் அவர்கள் தோற்பது நிச்சயம் என்றும் கூறினான்.
இவ்வார்த்தைகளை கேட்ட தாரை, சுக்கிரீவனோடு அயோத்தி ராமனே நட்பு கொண்டு வாலியின் உயிரைக் கொல்ல வந்துள்ளான் என்று கூறினான். இதனைக் கேட்ட வாலி உலகில் வருத்தப்படுகின்ற அனைத்து உயிர்களுக்கும் தன் வாழ்க்கையின் மூலம் வாழ்வு தரும் அறவழி காட்டும் அன்னல் இராமனை தாரை தன் சொற்களால் இழிவுப்படுத்தி விட்டாள் என்றே வாலி கருதினான். பேதை பெண் என்ற காரணத்தால் தான் இவ்வாறு தாரை கூறுகிறாள் என்றும் வாலி கூறினான்.
தனக்கே சொந்தமான அயோத்தியை மகிழ்வுடன் தன் தம்பி பரதனுக்கு கொடுத்த இராமன் என் மீது போர் புரிய துணையாக வந்து தன்னைத் தானே அழித்துக் கொள்ள மாட்டான் என்றும் வாலி கூறினான். உலகமே எதிர்த்தாலும் தன்னுடைய வில்லைத் தவிர வேறெந்தத் துணையையும் வேண்டாத ராமன் சுக்கிரீவனுடன் நட்புக் கொள்ள தன் தம்பியரைத்தவிர உலகில் வேறெந்தப் பொருளும் பெரிதல்ல என எண்ணும் ராமன் தனக்கும் தன் தம்பிக்கும் நிகழும் போரில் சுக்கிரீவனுடன் சேர்ந்து என்னை அழிக்க மாட்டான் என்றும் வாலி தன் மனைவி தாரையிடம் கூறினான். மேலும் அவன் நான் கக்கிரீவனை போரில் வென்று நலமாக திரும்புவேன், நீ எந்தவித கவலையுமின்றி நிம்மதியாக இரு என்று வாலி தன் மனைவி தாரையிடம் கூறினான்.
4. வாலியும், சுக்கிரீவனும் போரில் ஆர்ப்பரிப்பதைக் கண்டு இராம இலக்குவர்கள் தங்களுக்குள் நினைத்தவை யாவை?
வாலியும் சுக்கிரீவனும் தங்களுக்குள் போர் புரிய ஆர்பரிப்பதைக் கண்டு இராம இலக்குவர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். சுக்கிரீவனின் அழைப்பை கேட்டவுடன் வாலி திருமாலே விசுவரூபம் கொண்டு வந்தது போல் ஆரவாரம் செய்தான் வாலியைக் கண்டவுடன் இராமன் தன் தம்பி இலக்குவனைப் பார்த்து இவ்வாலிக்கு கடலோ, அசுரர்களோ, தேவர்களோ, மேகக் கூட்டங்களோ ஒப்பாக முடியாது என்று கூறினான். இதனைக் கேட்ட இலக்குவன் அதனால் தான் அவனது உயிரைப் போக்க சகல பராக்கிரமும் பொருந்திய உங்களை சுக்கிரீவன் அழைத்து வந்துள்ளான் என்று கூறினான். சுக்கிரீவன் தனித் தன்மை வாய்ந்தவன் அவன் குரங்களிலிருந்து மாறுபட்டவன்.குரங்குகள் செய்தற்குரிய இகழ்ச்சிக்குரிய போர் முறையை சுக்கிரீவன் செய்யமாட்டான் என்றுதான் கருதுவதாகவும் இலக்குவன் கூறினான்.
மேலும் இலக்குவன், சுக்கிரீவன் தன் சொந்த சகோதரனை பகைவனாக கருதி அவனை பிறரின் துணைக்கொண்டு அழிக்க முயலுபவன். நல்லவனாக இருக்க முடியாது ஆகையால் அவனோடு நட்பு கொள்வதென்பது தீயது என்றும் கூறினான். தன்தமையனிடமே இவ்வாறு நடந்து கொள்ளும் கக்கிரீவன் அயலாரிடத்தில் நன்றியுடன் எப்படி இருப்பான் என்றும் இலக்குவன் இராமனிடம் வினவினான்.
இதனைக் கேட்ட இராமனும் பகுத்தறிவு இல்லாத குரங்கினத்தை சேர்ந்த சுக்கிரீவனைப் பற்றி தான் ஒன்றும் கூற முடியாதென்றான். ஆனால் மனிதர்கள் கூட எல்லாரும் தன்சகோதர்களுடன் ஒற்றுமையாக வாழ்வது கிடையாது என்றான். இதனாலேயே பரதன் உயர்ந்தவன் என்று எல்லோராலும் போற்றப்படுகிறான் என்றும் இராமன் கூறினான்.
வேதத்தின் கூற்றுப்படி நல்லொழுக்கம் உடையவர்கள் ஒரு சிலரே உள்ளனர். ஆனால் தீயொழுக்கம் உள்ளவர்கள் பலர் உள்ளனர். நல்ல நண்பனால் கிடைக்கக் கூடிய நல்ல பயனைக் கொள்ள வேண்டியது குறிக்கோளாகும். ஏனென்றால் இவ்வுலகில் குற்றமற்றவர் என கூறுவதற்கு ஒருவருமில்லை என்பதே உண்மை எனவும் இராமன் கூறினான்.
வாலியும், சுக்கிரீவனும் இரண்டு திசையானைகள் சேர்ந்து போரிடுவது போலப் போரிட்டனர். ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்துடன் போரிடுவதும் போலவும், மலையோடு மலை மோதுவதும் போலவும் இருவரும் வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் மாறி மாறி போரிட்டனர். அப்போது அந்நிலம் குயவனது சக்கரம் போலச் சுழன்றது. இருவரும் மோதிக் கொள்ளும் போது உராய்வினால் தீப்பிழம்பு மின்னலைப் போல எழுந்தது. இந்த இரண்டு சகோதர்களும் போரிடும் காட்சியானது ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சுந்தன் உபசுந்தன் ஆகிய அரக்க சகோதரர்கள், 'திலோத்தமை 'என்ற அழகிய பெண் மீது கொண்ட அன்பினால் தங்களுக்குள் சண்டையிட்டது போல இருந்தது. கோபமே இரண்டு உருவமாக தோன்றி போரிடுவது போன்று இருவரும் போரிட்டனர். இருவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மேகங்கள் மேலும் கருமையடைந்தன.மலைகள் எரிந்தன. திசையானைகள் நடுங்கின. நானிலங்களும் நிலை குலைந்தன. தேவர்களும் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டனர்.
ஒருவர் மற்றவரை வான் மீதிலும், மலை மேலும், இவ்வுலகிலும் மேலுலகிலும் என மாறி மாறித் தாக்கினர், குத்தினர், கடித்தனர் அதில் இரத்தம் எங்கும் வழித்தோடியது. அந்த இரத்தம் பட்டு நட்சத்திரங்கள் செவ்வாய் கிரகம் போன்று சிவந்து காணப்பட்டன. மேகங்களும் செவ்வானம் போலவே தென்பட்டது. வாலியின் தோள்களும், சுக்கிரீவனின் மார்பும் உலைகளத்தில் சூடான இரும்பை சம்மட்டியால் அடிக்கும் பொழுது வெளிப்படும் தீப்பொறிப் போல் தெறித்தன.
இருவரும் ஒருவரை ஒருவர் மோதி தள்ளினர். தன் கால்களை நீட்டி உதைத்தனர். கைகளால் தாக்கினார், தள்ளினர். பெரிய மரங்களை கொண்டு தாக்கி மிரட்டினார். மலைகளையே பெயர்த்து மற்றவர் தலை மீது வீசி பயமுறுத்தினர். பயங்கரமான ஆரவாரம் செய்து தீப்பொறிப் பறக்க விழித்தனர். ஒருவரை ஒருவர் வீசியெறிந்தனர். மீண்டும் மீண்டும் எழுந்து பயங்கரமாகப் போரிட்டனர். ஒருவரை ஒருவர் தன் வாலினால் கட்டி எலும்பு நொறுங்க முறுக்கி இழுத்தனர் நகங்களால் கிறிக்கொண்டனர். காலோடு கால் சேர்த்து இழுத்தனர்.
இவர்களது கடுமையான போரினைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்தனர். இவ்வாறு பலளிதத்தில் போரிட்டப் போதும் சுக்கிரீவன் ஒரு கட்டத்தில் மன உறுதி குலைந்து இராம பிரானை அணுகி தனக்குதவுமாறு வேண்டினான. உடனே இரா மனும் வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக பூ, மாலை சூடி வாழ்த்தி மீண்டும் போருக்குச் செல்லப் பணித்தான். சுக்கிரீவனும் போர் புரியத் தொடங்கினான் புத்துணர்வுப் பெற்றவனாக மீண்டும்
6. இராமன் வாலியின் மீது அம்பு தொடுத்த விதமும்
வாலியின் நிலையையும் விளக்கி எழுதுக.
இராமன் வாலியின் மீது அம்பு தொடுத்ததும் வாலியின் நிலையும் :
வாலி தன் வலிமையான கைகளால் சுக்கிரீவனைத் தூக்கி பூமி மீது போட்டு கொல்ல முனைந்தான், அந்த நேரத்தில் இராமன் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு தொடுத்தான். இராமன் எறிந்த அம்பு வாழைப் பழத்தை எளிதாகத் துளைத்து உள்ளே செல்லு ஊசி போல தீ. நீர், காற்று, நிலம் ஆகிய நான்கு பூதங்களின் வலிமை ஒருங்கே பெற்ற வாலியின் உடம்பில் எளிதாக துளைத்துச் சென்றது.
ஊழி காற்றினால் அடியோடு நிலைப் பெயர்ந்து விழும் மேரு மலைப் போன்று வாலி கீழே விழுந்தான். சுக்கிரீவனை பிடித்திருந்த பிடியும் நழுவியது ஆனால் இராமனது அம்பை இறுக்கமாக வாலி பிடித்துக் கொண்டான். அவனது மன உறுதியை எமனும் வாழ்த்தினான் திடீரென்று வாலி வான் முகட்டையே இடித்து விடுவேன் என்று கூறியப்படியே எழுந்தான். மேலும் அவன் எட்டு திசைகளையும் ஒரு நொடியில் அழித்து விடுவேன் என்றும் கோபமாகக் கூறினான்.
அவன் தன் மீது அம்புபை எய்தது யார் என்று தெரிந்து கொள்ள விரும்பினான். அம்பு தொடுத்தவர் தேவரோ என எண்ணினான் பிறகு அவன் தேவர்களுக்கு தன்னை தாக்குகின்ற அளவிற்கு ஆற்றல் கிடையாதே எனவும் எண்ணினான். மும்மூர்த்திகளுக்கு ஈடான ஒருவனால் மட்டுமே இவ்வாறு செய்திருக்கக் கூடும் என எண்ணினான்
ஒரு வேளை திருமாலின் சக்கரப்படையோ, சிவபெருமானின் திரிருலமோ, இந்திரனின் வஜ்ராயுதமோ தன் மீது பாய்ந்திருக்கக் சூடும் என்று கருதினான். பிறகு தன் மீது அம்பு எய்த பரமன் யார் என்று அறிந்துக் கொள்ள வாலி மெதுவாக அம்பை மார்பிலிருந்து பிடுங்கினான் அப்பொழுது அவனது மார்பிலிருந்து இரத்தம் ஆறு போல வழிந்தோடியது.அக்காட்சியைக் கண்டு சுக்கிரீவன் மயங்கி கீழே விழுந்தான் அந்த அம்பில் இராமனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இராமனின் பெயரை அம்பின் மீது பார்த்தவுடன் வாலி மிக்க அதிர்ச்சியடைந்தான்.
7. அம்பில் இராமனின் பெயரைப் பார்த்ததும் வாலி இராமனை இகழ்ந்து கூறியவை யாவை
அம்பில் இராமனின் பெயரைக்கண்டதும் வாலி கூறிய வார்த்தைகள் :
சூரிய குலத்தின் பெருமையை இராமன் இத்தகையக் காரியத்தை செய்து குவைத்து விட்டானே என்று வாலி மிகவும் வருந்தினான். பெரிய குளத்தில் சிக்கித்தவிக்கும் யானையைப் போல வாலி வலியினால் துடித்தான். இருந்தாலும் ஒரு பெருஞ்சிரிப்பு சிரித்தான். தன் மீது இராமன் அம்பு எய்தது அறச்செயலாகாது என எண்ணினான். உயர்ந்த இடத்தில் உள்ளவரே தவறு செய்தால் தாழ்ந்த நிலையில் உள்ளவரின் இயல்பு என்னவாகும் என்றும் கேட்டான்.
பரதனுக்கு அறிவுரை கூறிய இராமன் இவ்வாறு தவறு செய்தது காவ்வாறு என்றும் வியந்து கூறினான். மூன்று உலகங்களுக்குத் தலைவனாகவும், குடிப்பிறப்பு கல்வி, வெற்றி என்ற மூன்று உயர்ந்த குணங்கள் உடைய இராமன் இவ்வாறு தன் மீது எதையும் அறியாதவன் போல் அம்பு எய்தலாமா? இராமன் தன் மனைவி சீதையைப் பிரிந்த துக்கத்தினால் மனம் மயங்கி தான் இந்த அதர்மத்தை செய்து விட்டானோ என கூறினான். ஏதோ ஓர் அரக்கன் ஒரு தீமை செய்தான் என்பதற்காக ஒரு குரங்கினத் தலைவனைக் கொல்ல வேண்டும் என்பது தர்மமாகுமா எனவும் இராமனைக் கேட்டான்.
பிறர் மீது அன்பு செலுத்துவதையே வழக்கமாகக் கொண்ட இராமன் இவ்வாறான தவற்றை செய்ய எவ்வாறு துணிந்தான் எனவும் வினவினான் உயர்ந்த செம்மலாகிய இராமனே இவ்வாறு செய்தால் மற்றவர்களின் இயல்பு எத்தகையதாக விளங்கும், என்றான். இது தான் மனு தர்ம நூலில் எழுதப் பட்டுள்ளதா எனக் கேட்டான். அனைவரின் மீதும் இரக்கம் கொண்ட இராமன் இவ்வாறான ஒரு இழிச்செயலை செய்ய எவ்வாறு துணிந்தான் என்று கேட்டான்
சிறந்த ஒழுக்கமுடைய இராமனே இவ்வாறு செய்தால் வேறு யார் சிறந்த செயலை செய்வார்கள் ? ஆற்றல் மிகுந்தவர்கள் இழிச் செயல் செய்தாலும் அவருக்கு புகழ் உண்டாகுமே தவிர தீமை உண்டாகாது என்றும் நினைத்தான். தந்தையால் பெற்ற நாட்டை தன் தம்பி பரதனுக்கு விட்டு தந்ததைத் தவிர வேறெந்த சிறப்பான் செயலும் இராமன் செய்ததுண்டா எனவும் வாலி வினவினான் இராமன் முறையற்ற செயலை செய்யும் பொழுது இராவணன் முறையற்ற செயலை செய்துள்ளான் எனக் கூற இராமனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் கேட்டான்
மறைந்து நின்று தன் மீது அம்பு எய்தது முறையோ, நேர்மையோ ஆகாது தன் உடல் பூமிக்கு பாரமாகாது என்றான். தான் எந்த விதத்திலும் இராமனுக்கு எதிரி அல்ல எனினும் இவ்வாறு என்னை கொன்றது முரையாகுமோ என்று கேட்டான். இந்த அநீதியான செயலால் சூரியகுலத்திற்கே பெருத்த அவமானம் என்றான் தானே வந்து போருக்கழைத்த சுக்கிரீவனுடன் ஓர் ஆண் மகனாக வீரத்துடன் போர் புரிந்த தன்னை இவ்வாறு இராமன் மறைந்திருந்து தாக்கியது முறையா? முறையற்ற செயலை செய்து விட்டு இப்போது சிங்கம் போல் கம்பீரமாக வெட்கமில்லாமல் நிற்பது இராமனுக்கு அழகல்ல என்றான்
வாலியை கொன்ற விதத்தால் இராமன் தர்ம நூல்களையும் முன்னோர் இயல்புகளையும், நன்னூல் ஒழுக்கத்தையும் மறந்து விட்டான் என்றான். இவ்வாறு வாலி இராமனை இகழ்ந்தான்.
https://www.amazon.in/shop/aksharamakshayam
8. வாலியை கொன்றதன் காரணங்களாக இராமன் கூறியது யாவை? அதற்கு வாலி உரைத்த பதில் யாது
(அல்லது)
தீது தீர்ப்பது தன் சிந்தைக் கருத்து என ஏன் இராமன் கூறினான்? அதற்கு வாலி என்ன பதிலளித்தான்
இராமனின் அம்பால் தாக்கப்பட்ட வாலி இராமனை பலவாறு இகழ்ந்து பேசினான் இராமன் செய்தது முறையற்ற செயல் என்றான். இதனைக் கேட்ட இராமன் வாலியைப் பார்த்து, மாயாவி என்ற எதிரியைத் துரத்தி சென்ற நீ வெகு நாட்களாகத் திரும்பி வராத காரணத்தால் குரங்கினத் தலைவர்கள் ஒன்றுகூடி சுக்கிரீவனை தன்னுடைய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். சுக்கிரீவன் அரசானை முதலில் மறுத்தான். எனினும் குரங்கினத் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதாலேயே அவன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான் நீ அந்த மாயாவியைக் கொன்று திரும்பியவுடன் முழு மனதுடன் தன் அரசபதவியை உனக்குக் தர சுக்கிரீவன் முன் வந்தான் ஆனால் நீ குற்றமற்ற அவனைக் கொல்ல முற்பட்டாய்,
அவனை வெகுதூரம் துரத்தியடித்தாய் தம்பி என்றும் பாராமல் அவனை தாக்கினாய். அவன் மதங்க முனிவரால் சாபமிடப்பட்ட இருசிய முக மலையை அடைந்தான். அங்கு சென்றால் மதங்க முனிவரின் சாபத்தால் உன் மண்டை வெடித்துவிடும் என்ற பயத்தால் நீ அவனை விட்டுவிட்டாய் அவன் அதனால் உயிர் பிழைத்தான். நீ மாற்றான் மனைவி என்று தெரிந்தும் சுக்கிரீவனின் மனைவி தாரையைக்கவர்ந்து சென்றாய். இவ்வாறு நீ குடிப்பிறப்பின் தன்மையை அழித்து விட்டாய் மேலும் இராமன் கூறினான் சுக்கிரீவன் என் உயிர் நண்பன். அவன் என் அடைக்கலத்தை நாடி வந்துள்ளான். நீ குற்றமற்ற சகோதரனை துரத்தியவன், தம்பியின் மனைவியினை கவர்ந்தவன் ஆனால்தான் உன்மீது அம்பு எய்தேன், தீதுதீர்ப்பது என் சிந்தைக்கருத்தாகும் எனவும் இராமன் கூறினான்.
தீதுதீர்ப்பது தன் சிந்தைக்கருத்து என் இராமன் கூறக் வாலி தன் நிலை விளக்கம் தர முற்பட்டான் தகாத கேட்ட செயல்கள் என்று நீ குறிப்பிட்ட எந்த செயலும் குரங்கினங்களுக்கு பொருந்தாது. மனித குலத்திற்குரிய இலக்கணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும், நாங்கள் குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள் ஆகையால் இச்செயல்கள் குரங்குப் பிறவிக்கு இழிச்செயல் அல்ல என்றான். விருப்பப்படி தொழில் செய்வதே தங்கள் பிழைப்பிற்குரிய செயல் எனவும் வாலி கூறினான். திருமணம் புரிந்த பெண்ணுடன் மட்டுமே வாழ்க்கை நடத்தும் முறை எங்கள் குரங்கு இனத்தின் சட்டமில்லை. பிரமன் எங்களுக்கும் அவ்வாறு எந்த முறைகளையும் அமைத்துத் தரவில்லை . உணர்ச்சிவழி செல்வதே எங்கள் பரம்பரைக் குணமாகும் என்று இராமனைப் பார்த்து வாலி கூறினான். இதனால்தான் எந்த தவறும் செய்யவில்லை என்று வாலி கூறினான்.
9. வாலி தன் பரம்பரைக் குணம் என எதை கூறினான்
அதற்கு இராமன் என்ன பதில் அளித்தான்?
(அல்லது)
உணர்ச்சி வழி செல்வது தம் பரம்பரை குணம் என வாலி ஏன் கூறினான், அதற்கு இராமன் என்ன பதில் கூறினான்?
இராமன் வாலியைக் கொல்ல முற்பட்டதின் காரணங்களை கூறும் போது வாலி தன் தம்பியின் மனைவி தாரையை கவர்ந்து சென்றது தவறு என்று கூறினான். அப்பொழுது வாலி இந்த தர்மம் மனித குலத்திற்கு மட்டுமே பொருந்தும், உணர்ச்சி வழி செல்வது குரங்கின பரம்பரைக் குணம் எனக் கூறினான். இப்படியாக நான் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை எனவும் வாலி கூறினான். அப்போது இராமன் வாலியைப் பார்த்து, நீங்கள் தேவர்களின் பிள்ளைகளாகப் பிறவியெடுத்து பல அரிய செயல்களை செய்துள்ளீர்கள் நீங்கள் ஒருபோதும் இழிப்பிறவியை அடையவில்லை. நீங்கள் விலங்குகள் அல்ல. வீரமிக்க வாலி இவ்வாறு முறைத்தவறி நடப்பது முறையா காது எனவும் இராமன் கூறினான்.
செய்த தவறை ஏற்றுக் கொள்ள மறுப்பது சிறந்த அறமாகாது. தீங்கு நேரும் போது ஆதிமூலமே' என்று அழைத்த யானையும் ஒரு விலங்கேயாகும். அதற்கும் மோட்சம் கிட்டியது, சீதையை இராவணன் கவர்ந்து சென்ற போது அவனுடன் வீரத்துடன் போர் புரிந்த சடாயுவும் விலங்கேயாகும். எது நன்மை, எது தீமை என்று பகுத்தறிய முடியாத நிலையைக் கொண்டது விலங்கினம். ஆனால் வாலியாகிய நீ அனைத்து அறநெறிகளையும் நன்றாக உணர்ந்துள்ளாய். அதற்கு நீ பேசும் வார்த்தைகளே உதாரணமாக விளங்குகின்றன
சிவபெருமானின் அருளாசியால் நீ மிகப்பெரிய வலிமை மிக்கவனாக உள்ளாய். குற்றமுடையோர் தாழ்ந்த பிறவியடைந்தாலும் தன் உயர்ந்த குணத்தால் உயர்ந்த நிலை அடைந்துள்ளனர். உயர்ந்த பிறவியான தேவர்களும், முனிவர்களும் கூட தவறு செய்துள்ளார்கள் செயல்களாலே யாராக அவர்களுக்கு இருந்தாலும் சிறப்போ அவரவர் செய்யும் அல்லது இழிவோ ஏற்படுகிறது. இதனை நன்கு உணர்ந்த நீ தம்பி மனைவி தாரையை கவர்ந்து அநீதி செய்து விட்டாய், என இராமன் கூறினான்.
10. வாலியை இராமன் மறைந்து தாக்கியது சரியே என
இலக்குவன் எவ்வாறு வாலியிடம் விளக்கினான் ?
இராமன் உத்தமன் உயர்ந்த குலத்தில் பிறந்தவன், தன் குலப்பெருமையை முழுமையாக உணர்ந்தவன் இருந்தாலும் எந்த குற்றமும் செய்யாத, தன்னை மறைந்திருந்து அம்பினால் தாக்கியது இழிச் செயலாகும் என வாலி கூறினான். மேலும் மறைந்திருந்து விலங்குகளை வேட்டையாடுவதுப் போல தன்னை அம்பால் தாக்கியது முறையற்ற செயல் எனவும் வாலி கூறினான் அப்பொழுது இலக்குவன், உனது சகோதரன் சுக்கிரீவன் இராமனிடம் புகல் அடைந்து தன்னை காப்பாற்றும் படி சரணடைந்தான். இராமனும் சம்மதித்தான். இப்போது போரில் உன் எதிரில் வந்து உன்னைத் தாக்கும் பொழுது நீயும் இராமனிடம் சரணடைந்து அவனது உதவியை நாடினால் இராமனால் மறுக்க முடியாது. அவ்வாறு நீ அவனிடத்தில் சரணடைந்து விடக் கூடாது என்று தான் மறைந்திருந்து உன் மீது இராமன் அம்பு தொடுத்தான் என்று இலக்குவன் கூறினா இந்த கருத்தை ஏற்று வாலி மிகவும் மகிழ்ந்து இராமனைத் தொழுதான்
11. இறக்கும் நிலையில் வாலி இராமனிடம் வேண்டியவை
யாவை?
சிறியன சிந்தியாதான், அற்பமான கருத்துகளுக்கு மனதில் இடம் தராத வாலி இராமனைப் பார்த்து, நீ உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயானவன், தர்மம், நேர்மை, சால்பு ஆகிய உயர் குணங்களை கொண்டவன், உன் சிறப்பை எங்களால் எவ்வாறு உணர முடியும் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எங்களுக்கு நற்கதியருளுக எனக் கூறினான். மேலும் வாலி, நான் என்னை சாதாரண விலங்காக குரங்காக எண்ணி உன்னை இழிச்சொல்லால் அவமானப்படுத்தியதை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டினான்
என் உயிர் பிரியும் இந்த நிலையில் எனக்கு நல்ல அறிவுரை தந்து நீ நல்வழி படுத்தினாய் என இராமனைப் பார்த்து வாலி கூறினான். நீயே மும்மூர்த்தி அவர்களில் சிறந்த நாராயணன் நீயே பாவமும், பகையும், தர்மமும், உறவும் அன்பும் எல்லா உயர் குணங்களும் நீயே எனக் கூறினான். தேவர் முதல் சிவபெருமான் வரை எனக்கு கொடுத்த வரங்களால் நான் எனது உடலை மாசுபடச் செய்து விட்டேன். நீ உன் அம்பால் எனது மார்பை பிளந்து என் அனைத்து களங்கத்தையும் போக்கி விட்டாய் எனக் கூறினான்.
மேலும் வாலி இராமனை நோக்கி என் போன்ற தியவர்களைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டி உன்னை சரணடைந்தவர்களை எல்லா பேறும் பெறுவர் எனக் கூறினான். இராமன் என்ற பெயர்களை சொல்ல எனக்கு கிடைத்த வாய்ப்பே மிகப் பெரிய பேறாகும் நீயே எல்லா பொருட்களிலும் நீக்கமற நிறைந்து உள்ளாய், நீ யார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். உன்னால் தான் எனக்கு வீடு பேறு கிடைத்தது. அறத்தின் முழு உருவான உன்னை தொழுவதில் நான் முழுமையடைகிறேன் எனவும் கூறினான்.
உன்னை இங்கு அழைத்து வந்து எனக்கு வீட்டுலக ஆட்சியை என் சகோதரன் சுக்கிரீவன் எனக்கு அளித்துள்ளான். உலக ஆட்சியை அவன் ஏற்று எனக்கு நற்கதி எனும் மேலுலக ஆட்சியளித்துள்ளான். இதை விட சிறந்த ஒரு நன்மை என்றும் தனக்கு கிடைத்தில்லை என இராமனிடம் வாலி கூறினான்.
Best Sellers in Grocery & Gourmet Foods
12. வாலி தன் சகோதரன் சுக்கிரீவனுக்கு அளித்த
அறிவுரைகள் யாவை ?
இராமன் எய்த அம்பினால் தாக்கப்பட்ட வாலி முதலில் இராமனை இகழ்ந்தான். பிறகு இராமன் உரைத்த மறுமொழிகளை கேட்டு மனம் தெளிந்தான், அவன் தன்தவற்றை உணர்ந்தான் சுக்கிரீவனைப் பார்த்து உலகில் தீமையை அழித்து நீதியை நிலை நாட்டுவதற்கு இராமன் பூமியில் வந்துள்ளான். அறம் வாலி தழைக்க வந்துள்ள அவனை உயிரினங்கள் அனைத்தும் வாழ்த்தி வணங்குகின்றன.அவனை நினைப்பதாலேயே உயிரினங்களுக்கு மோட்சம் கிட்டும் அதர்மவழி நின்ற என்னைக் கொன்ற சிறப்பொன்றே இராமனது புகழையும் பெருமையையும் தெரிந்து கொள்ள போதுமானது ஆடும் அவனது திருவடிகளை சேர்ந்து அவனுக்கு சேவை செய்து வாழ்வதே முக்தியடையும் எளிய வழியாகும். குரங்கினங்களுக்கே உரிய சஞ்சலம் மயக்கம் ஆகிய உணர்வுகளை விட்டுவிட்டு அவன் செய்த உதவியை மட்டும் நினைவில் கொண்டு அவன் கட்டளைகளை செவ்வனே செய்து உன்கடமைகளை செய். அவ்வாறு செய்வதால் உன் பிறவிப்பிணி அகலும் என்று வாலி கூறினான்.
முடிவாக, அரசனாகி விட்டாய் என கர்வம் கொண்டு இராமனை இகழ்ந்துப் பேசி விடாதே. அவனது திருவடியைப் புகழ்ந்து பாடி வாழ்க, அரசர்கள் நெருப்பு போன்று வாழ வேண்டும். நெருப்பை விட்டு அகலாமலும் அதனிடத்திலும் நெருங்காமலும் இருந்தால் நன்மை பயக்கும் அவ்வாறே நீயும் அரசபதவியை கவனமா கையாள வேண்டும். இராமனின் குறிப்பறிந்து நீ நடந்துக்கொள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு துன்பம் தரக்கூடாது எனவும் வாலி தன் தம்பி சுக்கிரீவனிடம் கூறினான்.
Best Sellers in Musical Instruments
13. இராமனின் அம்பினால் தாக்கப்பட்டு விழுந்துகிடக்கும்
தன் தந்தையை கண்டு அங்கதன் எவ்வாறு
வருந்தினான்? அவனுக்கு வாலி எவ்வாறு ஆறுதல்
கூறினான்?
தந்தையின் நிலை கண்டு அங்கதன் வருத்தமும், வாலியின் ஆறுதலும் :
இராமன் தன்னிடம் அடைக்கலம் நாடி வந்த சுக்கிரீவனுக்கு உதவும் பொருட்டும் உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும், வாலியை தன் அம்பினால் மறைந்திருந்து தாக்கினான். வாலி தன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். அவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அப்பொழுது தன் வாழ் நாளில் ஒரு பொழுதும் துன்பத்தால் வாடுபவரை கண்டறியாத அங்கதன் அங்கு வந்தான். அவன் தன் தந்தை வாலி இவ்வாறு வேதனையில் இருப்பதைக் கண்டு வருந்தினான்.
தந்தையை கண்டதும் அவன் கண்களிலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகின. அவன் வானத்திலிருந்து கீழே வீழ்வதைப் போல விழுந்தான். அவன் தந்தையே! தந்தையே! என கதறி அழுதான். மேலும் அவன் வாலியைப் பார்த்து எவருக்கும் எண்ணத்தாலும் தீங்கிழைக்காத தங்களுக்கு ஏன் இந்த துன்பம் நிகழ்ந்தது என வினவினான். உங்களை கொல்வதற்கும் ஒரு எமன் வந்துள்ளானோ என்றான். அப்படி இருந்தால் அவன் எத்தகைய வீரனாக இருப்பான் அவனை யாரால் அழிக்க முடியும். உங்களின் வாலின் வீரத்தை நினைத்தவுடனே இராவணனின் நெஞ்சம் துடிக்குமே இராவணனை தன்வாவால் சுற்றி வளைத்தப் பெருமையைக் கொண்ட தங்களுக்கு இந்த நிலையா
நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டால் இராவணன் மிக்க மகிழ்ச்சி கொள்வானே என அங்கதன் புலம்பி அழுதான். எட்டு மலைகளும் சக்ரவாள மலையின் சிகரமும் உந்தன் காலடிப்பட்டு இனி சிதறிப் போகாது, மந்திர மலை. வாசுகி பாம்பு போன்றவை. இருந்தாலும் உங்களது துணையின்றி தேவர்கள் இனி எவ்வாறு பாற்கடலை கடைவார்கள் எனவும் அங்கதன் வருந்தினான்.
சிவபெருமானை மட்டும் இதுவரை வணங்கிய நீங்கள் கடைந்து கொடுத்த அமுதத்தை குடித்த தேவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் இறந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களை விட சிறந்த வள்ளல் வேறு யாருமில்லை எனவும் அங்கதன் தன் தந்தையின் நிலையைக் கண்டு புலம்பினான்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட வாலி தன் மகன் அங்கதனை மார்போடு அணைத்துக் கொண்டான். மேலும் அவன். இராமன் என்னைக் கொன்றது, என் புண்ணியத்தின் பயனேயாகும் என்று சூறினான். பிறப்பதும், இறப்பதும் புதியதில்லை . நான் முற்பிறவியில் செய்தப் பயனே இப்பிறவியில் என்னை இராமன் கொன்றது. இரா மனே பரம் பொருள். அவனே பிறவியெனும் நோய்க்கு உற்ற மருந்தாவான்.
இராமன் என்னை கொன்றவன் என்று ஒருபொழுதும் எண்ணாதே. அவனால் நான் நன்மையே அடைந்துள்ளேன். நீயும் அவனுடன் சேர்ந்து பல நன்மைகளைப் பெற்றுக்கொள் அவனுக்கு சேவை செய்து அவனைப் போற்றி புகழ்ந்து அவனது திருவடிகளை புகழ்ந்துப் பாடி வாழ்வில் முன்னேற்றமடைவாயாக என அங்கதனைப் பார்த்து வாலி கூறினான்.
*******************************
No comments:
Post a Comment
thaks for visiting my website