கவிதைப் பூங்கா
9. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
குடும்ப விளக்கு
1. குடும்ப விளக்கு என்னும் பாடலில் பாரதிதாசன் விருந்தோம்பலின் முறையை எவ்வாறு விளக்குகிறார்?
பெயர்: பாரதிதாசன்
இயற்பெயர்: சுப்புரத்தினம்
பிறப்பு: 29.04,1891
பிறந்த இடம் : பாண்டிச்சேரி
இறப்பு : 21.04.1964
விருந்தினர் வருகையைத் தலைவி மாமன் மாமியிடத்துக்கூற அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முரைரயினை கீழ் வருமாறு கூறுகிறார்.
சிறப்புமிக்க தமிழர்களாகிய நாம் வந்த விருந்தினரை உயிரென்று நினைத்து தகுந்த விருந்தோம்பல் செய்வதே உலகத்தில் நாம் செய்த பெரிய புகழாகும். அனிச்ச மலரானது மோந்து பார்த்தால் தான் வாடிவிடும் ஆனால் விருந்தினர்கள் நாம் சற்று முகம் மாறுபட்டுப்பார்த்த உடனேயே மனம் வருந்தி திரும்பி சென்று விடுவார்கள் சமைக்கப்பட்ட உணவு சுவைமிக்கதாக இருந்தாலும் வந்த விருந்தினர்க்கு தந்த பிறகே நாம் உண்ண வேண்டும். நாம் அளித்த உணவை விருந்தினர் மகிழ்வோடு உண்பதைக் காண்பது மிக்க மகிழ்ச்சி தருவதாகும். இதனை நாம் நன்றாக உணரலாம்.
வந்த விருந்தினரை சிறப்பாக பாதுகாப்பதனால் தான் தமிழ் பெண்களை கவிஞர்கள் கட்டி கரும்பு என்றழைக்கிறார்கள். சுவையான விருந்து படைப்பவர் வீட்டில் முத்துப்போன்ற வெண்மையான கட்டித்தயிர் இருக்கும். பலவகையான பலகாரங்கள் இருக்கும் வெண்ணெய் உருண்டை உருண்டையாக விளாங்காய் அளவிற்கு இருக்கும் பால் அளிப்பதற்கு அங்கு பசுக்கள் இருக்கும்.
இலந்தை பழ வடை இருக்கும், நாகர்கோவில் பலாச்சுளை வற்றல் இருக்கும்.
எலுமிச்சை, நார்த்தை, மாங்காய் என பல வகை ஊறுகாய்கள் இருக்கும். இரவில் தயி கீரை கூடாது என்று உணர்ந்து தயிரில் நீரை ஊற்றி மோராக்கி வைத்திருப்பார்கள். அவ்வீட்டு சோற்றை அள்ளி எடுக்கும்போது வாழைத்தண்டில் ஊரும் சாறுபோல நெய் ஊறி வரும். விருந்தினரின் வாழை இலையின் வலப்பக்கத்தில் காய்கறி வகைகள் பரிமாறப்படும், குளிர்ந்த நீரும், வெந்நீரும் தனித்தனியாக விருந்தினர்க்கு தரப்படும்.
வெண்மையான சோறு இடும் முன் தேனில் ஊற வைத்த முக்கனிகள் வழங்கப்படும். உண்பவர்களின் குறிப்பறிந்து வேண்டிய உணவை மீண்டும் மீண்டும் தர வேண்டும். பயற்றுபாகு மிளகுச்சாறு போன்றவற்றை அருந்த தொன்னை வைக்கப்பட வேண்டும். அவர்கள் உண்டு முடித்தவுடன் கை கழுவ வேண்டிய நீர் தர வேண்டும் அவர்களுக்கு விசிறியும் விட வேண்டும். இவ்வாறு விருந்தோம்பலின் விதத்தை கவிஞர் கூறுகிறார்.
Best Sellers in Home & Kitchen
அழகின் சிரிப்பு
2. கவிஞர் பாரதிதாசன் செந்தாமரை என்னும் பகுதியில் இயற்கையை எவ்வாறு வர்ணித்துள்ளார்?
நீர், மலை, நீர்த்துளிகள் :
கவிஞர் பாரதிதாசன் குளத்து நீரில் படாந்திருக்கும் தாமரை இலையும் அதன் மீது ஒட்டாமலிருக்கும் நீர்த்துளிகளும் கண்ணாடித்தரையில் பச்சை நிறத்தட்டில் முத்துகள் இறைந்து இருப்பதைப் போல தோன்றுகின்றன எனக் கூறுகிறார்
தாமரையின் சிற்றரும்பும் முதிர் அரும்பும் :
அங்கு தாமரை அரும்புகள் பாம்பின் தலைபோல் நிமிர்ந்து இருக்கும். முதிர்ந்த தாமரை மலர்கள் வீட்டில் பெண்கள் தன்னுடைய சிவந்த கைகளில் ஏந்தியிருக்கும் விளக்கொளிபோல விளங்கும்.
அவிழ் அரும்பும், மலர்ந்த தாமரையும் :
தாமரையின் பச்சை இலைகளின் மேல் அரும்புகள் இதழ் விரித்து விளங்குவது ஆகாயத்தைப் பார்த்துச் சிரிக்கின்ற உதடுகளின் கூட்டத்தால் மாணிக்க மணிகள் சிதறுவது போலத் தென்படுகிறது. வெள்ளம் போல பரவிய நீரும், முத்து பிறக்கும் இடமாகிய பச்சிலை காடும், நன்றாக மலர்ந்த தாமரை மலரும் கண்ணில் வைத்து போற்றக் கூடியவையாகத் தென்படும்.
மலர்களின் ஒப்பு:
பெண்களின் வாய்போல காட்சிதந்து சில செந்தாமரை மலர்கள் நம்மை "வா" வென அழைக்கும். சில மலர்கள் அழகான கைகள் போலக் காட்சி தரும். சில மலர்கள் அழகான பெண்களின் முகம் போலத் தோன்றி நம் மனதை கவரும். எண்ணற்ற தாமரைகள் ஆயிரக்கணக்கான பெண்கள் நீரில் ஆர்ப்பாட்டம் செய்வது போலத் தென்படும் எனவும் கவிஞர் கூறுகிறார்.
செவ்விதழும் சிறப்பும் :
தாமரை பூவின் ஓரிதழ் குழந்தைகளின் கன்னம் போல் மென்மையாக இருக்கும். மற்றொன்று நன்றாக விரிந்து கண்களைப் போல இருக்கும். தாமரையின் சில இதழ்கள் கணவனின் வருகையைப் கண்டு மகிழும் பெண்ணின் உதப்டினைப்போல இருக்கும். ஓரிதழ் கெட்ட மனம் கொண்டவரின் இதயம்போல சிவந்திருக்கும். ஓரிதழ் வந்தவருக்கு சிவந்திருக்கும் வாரி வாரி வழங்கும் வள்ளலின் கைப்போல
தேன், வண்டுகள், பாட்டு, மணம் :
தாமரை மலரில் தேன் அதிகமாக இருக்கும். அதை குடிப்பதற்கு சில வண்டுகள் பாடும். தேனை உண்ட சில வண்டுகள் மற்ற மலருக்கு தாவும், சில தேனீக்கள் தேன்குடித்து வானத்தில் ஆட்டம் போடும். சில வண்டுகள் மலரினுள்ளே சிக்கி நன்றாக உறங்கும் சில வாசனையான மகரந்தத்தை வாரி இறைக்கும். இவ்வாறான காட்சியைக் கண்டு கவிஞர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.
தென்றல் காற்றின் சுகம் அவரை மகிழ்விக்கிறது. வண்டின் பாட்டும், பறவைகளின் கூட்டமும் மனதை மயக்க கூடியவை எனக் கவிஞர் கூறுகிறார்.
10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(தேசக் கொடியின் சிறப்பு)
1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் நம் தேசக்கொடியின் சிறப்புகளாக கூறுபவை யாவை?
பெயர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பிறப்பு : 27.07.1876
பிறந்த இடம் : தேருர் (தமிழ்நாடு)
இறப்பு - 26.09.1954
மாசிலா வீரர்களைப் பெற்றெடுத்த புகழ்பெற்ற பாரத தாயை பணிந்து நம் தேசக்கொடியின் சிறப்பினை கவிஞர் கூறுகிறார். உலகிலே சிறந்த மலையான இமயமலையில் வீரர்களால் ஏற்றப்பட்ட வணங்கப்படுகிறது. நமது அக்கொடி நாடு நமது கொடிபறக்கிறது. நம் அனைவராலும் என அது சுதந்திர நாடு தெரிவிக்கின்றது அது கங்கை, நதியை விட புனிதமானது. அதில் கதிரின் இனிய மணம் கமழும் அக்கொடி இந்திய மங்கையர் நோன்பு இருந்து உருவாக்கிய கொடி, அவர்களின் வாழ்வை தழைக்க செய்ய வந்த கொடியாகும்.
கொடி மின்னலுக்கும், இடிக்கும் பயப்படாது உயாந்து நிற்கும் வீரர் திலகர் போன்றோர் புகழ்ந்த கொடி மிதித்த சூர்களை ஒழித்த கொடி அனைவரும் தலைவணங்கும் கொடி நம் தேசக்கொடி சத்தியம் தவறாது நம்மை காக்கும் கொடி, நம் சமய சழக்குகளை எல்லாம் போக்கும் கொடி உயர்ந்த வீரர்களும், உத்தம பெண்களும் போற்றும் கொடி. கலியுகத்தின் தலைவன் மகாத்மா காந்தி ஏந்திய கொடி. இக்கொடி இருக்கும் இடத்தில் துறையில் புலியும், பசுவும் ஒன்றாக நீர் அருந்துகின்றன. தொண்டா்களின் கனவுகளை நனவாக்கும் கொடி வாழ்வில் இன்பம் பல தரும் கொடி. நாடு வளம்பெற செய்யும் மந்திர கொடி பட்டுப்போன மரத்தையும் துளிர்க்க செய்யும் மந்திரக்கொடி
இக்கொடி என கவிஞர் கூறுகிறார். பகைவர்கள் நண்பாகளாக மாற்றும் கொடி, துஷ்டர்களின் கொடுமையைப் போக்கும் கொடி திய சோம்பலைப் போக்கும் கொடி
கிழவரையும் இக்கொடி குமரனாக மாற்றும். எப்பொழுதும் நன்மை தரும் அழுதவரை சிரிக்க செய்யும், அடிமையை ஆண்டானாக மாற்றும் வல்லமையைப் படைத்தது. இக்கொடி ஏழைகளின் துன்பத்தைப் போக்கி அவர் இதயம் குளிர செய்யும் கொடி என்றும் உழைப்பின் சிறப்பை கூறும் கொடி, ஊக்கத்தை உள்ளத்தில் ஊட்டும் கொடி நம்மை ஆண்சிங்கமாக மாற்றும் கொடி குடிசைகளின் மீது ஆடும் கொடி நம்மை அரசாள வைத்த கொடி வெற்றி முழக்கம் செய்யச்செய்த கொடி மானம் உருவாக வந்த கொடி, நம் உயிருள்ள வரை நம்மை காக்க வந்த கொடி என பலவாறாக நம் தேசக் கொடியின் சிறப்புகளை கவிஞர் கூறுகிறார்.
Best Sellers in Shoes & Handbags
பாரதியும் பட்டிக்காட்டானும்
1. கவிஞர் பாரதியின் பாடல்களை கேட்டு மயங்கிய
பட்டிக்காட்டான் அப்பாடல்களின் பெருமையை எவ்வாறு
கூறினான்?
பட்டிணம் வந்த பட்டிக்காட்டான் பாடல்களை ஒருவன் பாரதியின் ஒருவன் பண்ணோடு பாடுவதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான் அப்பாடல்களினால் உண்டான் விளைவு களை தன் நண்பனிடம் கூறினான்.
கல்லும் கனிந்து பழமாக மாறும் அப்பாடல்களை கேட்டால், கன்றுக்குட்டியும் பால் குடிப்பதை மறந்து கேட்கும், அழகிற்கு அழகு சேர்க்கும் அப்பாடல்கள் குயிலும் கிளியும் குரல் கொடுக்கும். மயில் நடமிடும். அதில் ஆடும். குளுமையும் தோன்றும், மலர் மலர்ந்து வாசம் வீசும், கடல் அலைகளிலிருந்து முத்து வெளிப்படும், ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஒளி வீசும். நிலவும் மகிழ்ந்து ஒளிவீசும், சோலையில் மான்கள் மகிழ்வுடன் விளையாடும். அப்பாடல் தேன் போலவும், திணைபோலவும் இனிமையாக இருக்கும். மா, பலா, வாழை என்னும் முக்கனியை உண்டது போல இனிக்கும்.
ஈசன் திருவருளால் மந்திரங்கள் வெளிப்படும். பாட்டிலே உள்ளம் தெளிவடையும், ஊக்கமும் தோன்றும் உள்ளத்தில் கள்ளுண்ட களிப்பை ஏற்படுத்தும், "கரும்பு தோட்டத்திலே" எனும் பாடலைக் கேட்டால் இரும்பு நெஞ்சமும் உருகும். "செந்தமிழ் நாட்டின் என்னும் பாடலைக் கேட்டால் உள்ளத்தில் அமுதம் ஊறும், "பாப்பா பாட்டில் நெஞ்சம் பறிபோகும். பாஞ்சாலி சபதம்" எனும் பாடலைக் கேட்டால் கண்ணனின் கதை நம் கண் முன்னே நடக்கும்
வந்தே மாதரம்" எனும் பாடலைக் கேட்டால் ஒரு சக்தி சந்தேகமில்லாமல் கிடைக்கும், "எங்கள் நாடு" எனும் பாடல் கங்கை ஆறுபோல உள்ளத்தில் பாயும். "சின்னஞ்சிறு கிளி என்னும் பாடல் கனவில் தினமும் தோன்றும் குயில் பாட்டு கண்ணன் என் காதலன் ஆகிய பாடல்கள் இதயத்தை தொடுகின்றன. சுதந்திர பாட்டு கேட்க மனம் துடிக்கும். "தொண்டு செய்யும் அடிமை" என்னும் பகுதி நெஞ்சில் அம்பு தைத்ததுப் போல உணர்வை ஏற்படுத்தும், பெண் பிள்ளைகளின் பெருமையை அறியச்செய்யும். ஏழைபடும் பாடு பற்றி பாரதி பாடுவது பெரும் துயரத்தை மனதில் ஏற்படுத்தும், இப்படியாக பாரதியின் பாடல்களில் உள்ள சுவையை பட்டிக்காட்டான் தன் நண்பனிடம் கூறினான்.
11. நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கம் பிள்ளை
அவனும் அவளும்
1. நாமக்கல் கவிஞர் அவன் (மாதவன்) அவள் (கமலம்) ஆகிய இருவரைப் பற்றி என்ன என்ன கூறுகிறார்?
பெயர்: நாமக்கல் கவிஞர் -
வெ. இராமலிங்கம் பிள்ளை
பிறப்பு : 19. 10. 1888
பிறந்த இடம் : மோகனூர் (தமிழ்நாடு)
இறப்பு : 24. 08. 1972
(அவன் மாதவன்)
நாமக்கல் கவிஞர் மாதவனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் மாதவன் நீண்ட கைகளைக் கொண்டவன் அவனுக்கு அகன்ற மார்பும், கல்லைப் போன்ற திரண்ட இரு தோள்களும் தூண்களைப் போன்ற இரு கால்களும், அறிவொளி வீசும் கண்களும்,சீவி முடித்த தலை முடியும் உண்டு . காண்பவரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவன் அவனை கண்டால் சண்டைகள் ஓயும். சலிப்பு அறவே நீங்கும். அவன் உடுப்பிலும் வீட்டிலும் அழகு காண்பவன் அவன் குணக்குன்றாவான்.
அவன் பொது நலப்பணி குறித்து நாள்தோறும் பேசுவான நாடு விடுதலை பெற வேண்டும். ஊர் செழிக்க வேண்டும் உயிர்கள் மகிழ வேண்டும். உலகப்போர் அறவே ஒழிய வேண்டும் புதிய சமுதாயம் உருவாக வேண்டும். போன்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் வாழ்வில் கருணையும் வாய்மையும், மிளிர வேண்டும் என விரும்புபவன், தாய் மொழியான தமிழ்மொழியை போற்றுவதே அவன் வழக்கம் அயல் நாட்டாரும் நம்மை பின்பற்றும்படி வாழவேண்டும் என விரும்புபவன் எல்லாம் விதியின் விளைவு என்று கூறுபவரை விட்டொழிக்க வேண்டும் என்று கூறுபவன்.
அவள் (கமலம்)
2. நாமக்கல் கவிஞர் அவளை (கமலம்) பற்றி கூறிய கருத்துகள் :
கமலம் மான் போன்றவள் ஆனால் மருளும் தன்மை அவளிடம் கிடையாது மீன்போன்ற கண்களை உடையவள் எனினும் மீனிடம் அந்த கருமை கிடையாது. தெவிட்டாத மொழியை பேசுபவள் தோற்றத்தில் அவள் மயிலைப் போன்றவள், அவளது அடர்ந்த கூந்தலைப்போல தோகை பெண்மயிலுக்கு கிடையாது. ஏழிசையில் வல்லவள். அவளது குரலைப் போல இனிமையான குரல் குயிலுக்கு கிடையாது. அவளது மேனி வெயிலைப் போல ஒளிமயமானது எனினும் இவளது குளுமை வெயிலுக்கு கிடையாது, கூர்மையான பார்வை கொண்டவள். வேல் போன்றவள் எனினும் அவள் வேலைப் போல அழிப்பவள் கிடையாது, அவள் ஆக்குபவள்.
அவளது விரல்கள் பவளம், குரல்வளை சங்கு கைகளோ தாமரை தோள்கள் மூங்கில் போன்றவை. அவளைக் கண்டவர்கள் அவளை மறக்க முடியாது . அவளைப்பற்றிக் கேள்விப்பட்டோர் அவளைக்காண விரும்புவர் பெண்கள் அவளோடு பேச விரும்புவர். அவளோடு சேர்ந்தால் சண்டை சலிப்பு ஆகியவை மறையும். நோமை, நீதியற்ற சொற்களை கேட்கவும் அஞ்சுபவள். மற்றவர்களுக்கு தீமை விளைக்க விரும்பாதவள் ஒருபோதும் அதிர்ந்து பேசமாட்டாள் மனிதர்கள் அனைவரும் சமம் என்று கருதுபவள். அவள் உணவு உடை கடையில் வாங்கும் பொருள் அனைத்திலும் தூய்மை பார்ப்பவள் ஒழுக்கம் தவறாதவள். சொன்ன சொல்லை காப்பவள் கமலம் எளியவரை தாயெனப் போற்றும் இயல்புடையவள்.
கண்ணன் லீலை
1. நாமக்கல் கவிஞர் கண்ணனின் லீலை, கண்ணனின் உறவு ஆகியவற்றை எவ்வாறு கூறுகிறார் ?
கண்ணன் எனும் சிறுவனைப் பற்றி கவிஞர் கூறுகிறார். அவனை சிறுவன் என்று நினைக்காமல் அவனது செய்கையை காண்போம். அன்பே வடிவான கண்ணன் அழகானவன் நேரிடும் துன்பங்களைப் போக்குபவன். பல வழி முறைகள் அறிந்தவன் சூது பல செய்து உலகச் சூதை வெல்ல வழிச் சொல்வான். தீமை செய்வது போல் செய்து நன்மை செய்வான். பெண்களை மயங்க செய்வான் அவர்களின் அருகில் பெண் வடிவம் ஏற்று செல்வான். ஆண்களும் மயங்கி தன்னருகில் வர செய்வான். ஒரு நொடியில் பெண் வடிவாக மாறி பிறகு ஆண் வடிவு கொள்வான் தாயைப் போல அன்பு காட்டி ஆதரவு தருவான், தந்தை போலவும் கட்டளையிடுவான். மாயக்கார மணிவண்ணன் பல மகிமையான செயல்கள் செய்வான். கண்ணன் கலகப்பேச்சு பேசுவான் எனினும் அதில் கருணை இருக்கும். உலகம் முழுவதும் அவனது மாயை பரவியுள்ளது. இதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கண்ணன் உறவு :
நாம் என்றும் கண்ணனின் உறவை விட்டுவிடக்கூடாது. அந்த உறவினால் நயக்கு ஊக்கமும், உறுதியும் உண்டாகும். எல்லா துயரத்தையும் நாம் தாங்கிக்கொள்ளலாம். அன்பும், அறிவும் அதிகமாகும். அச்சம் அகலும் சிரிப்பும், மகிழ்ச்சியும், நிலவும் எரிச்சலடையும் உணர்வு நீங்கும். நம்மிடம் பக்தி மேலோங்கும்.
அவன் நமக்கு தாதுவனாவான். நமக்கு பல தொண்டுகள் செய்ணன், நாம் மகிழ புல்லாங்குழல் ஊதுவான். மக்களை கடமை செய்ய தாண்டுவான் பக்தர்களுக்கு அடைக்கலம் தந்து கொடியவர்களை அழிப்பான், அவன் இருக்குமிடத்தில் ஆடலும், பாடலும் இருந்தும் ஓடி விளையாடுவது அவனது விருப்பம்
அவனது எல்லா செயல்களும் களியாட்டமே. கண்ணனின் உறவு மேன்மையானது
காந்தி பிள்ளைத்தமிழ் (தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம்)
1. ராய. சொக்கலிங்கம் அவர்கள் காந்தி பிள்ளைத்தமிழில் என்ன என்ன கருத்துக்களைக் கூறியுள்ளார்?
காந்தி பிள்ளைத்தமிழ் என்னும் பாடலில் ராய சொக்கலிங்கம் கூறிய கருத்துகள் :
சப்பாணிப்பருவம் :
இனி ஒரு பிறவி எடுத்தால் நாம் காந்தியடிகளின் குணத்தோடு தமிழகத்தில் பிறக்க வேண்டும் அவரின் மனைவியாகிய கஸ்தூரிபாயின் குணநலன்கள் கொண்ட ஒரு பெண்னை மணக்க வேண்டும். தேவதாஸ் காந்தியை போன்ற அருமையான மகளை பெற வேண்டும் இத்தனை மாட்சியமை பொருந்திய வாழ்க்கை பெற்ற காந்தியடிகளே சான்றோரே! நீ கைக்கொட்டி அருள்வாயாக தர்மநெறி ஓங்க வாழும் காந்தி அடிகளே சப்பாணிக் கொட்டி அருள்க
முத்தப் பருவம் :
காந்தி மகானின் திருப்பெயரை மனத்தில் நினைப்பதாலோ காதால் கேட்பதாலோ ஒருவித சிறந்த மகிழ்ச்சியைத் தரும் நம் மனம் மகிழும், தேகம் புல்லரிக்கும், வாய் மணக்கும், கண் மகிழ்ச்சியடையும், தெவிட்டாத இன்பம் தரும். முன் செய்த பாவங்கள் அனைத்தும் மறைந்துபோகும். கோபம் நில்லாது ஓடும். முக்தி கிடைக்கும், காந்தியடிகளைப் பற்றி நினைத்தாலே பெருங்கருணை கிட்டும். காந்தியடிகளே உன் சிவந்த கொவ்வைப் பழ வாயால் முத்தம் தந்தருள்க.
அம்புலிப்பருவம் :
நிலவே வானத்தில் இருக்கின்ற நாம், பூமியில் வாழும் காந்தியடிகளோடு விளையாட வருதல் அழகானது அல்ல என்று நீ எண்ணக் கூடாது. நீ செல்லும் எல்லா நாடுகளிலும் காந்தியடிகளின் பெருமை பரவியுள்ளது. பரந்த அறிவு பெறாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் அறிவிலி அல்ல எங்கள் காந்தியடிகள் அறிவில் உயர்ந்தோருடன் கூடி விளையாடுதல் சிறப்பு. ஆகையால் நிலவே நீ காந்தியடிகளுடன் விளையாட வா!
நிலவே உனக்கு பதினாறு கலைகள் உண்டு.
காந்தியடிகளுக்கு பல்கலை அறிவு உண்டு. உனக்கு களங்கம் உண்டு ஆனால் காந்தியடிகளுக்கு களங்கமென்பது கிடையாது. உன்னை மறைத்தால் உன் ஒளி மங்கும். நீ மறைந்து விடுவாய் ஆனால் காந்தியடிகளை யாராலும் மறைக்க முடியாது. நிலவே! நீ ஒவ்வொருநாளும் குறைவாய் ஒருநாள் மறைந்தே விடுவாய் ஆனால் காந்தியடிகளுக்கு குறைவே கிடையாது. அவர் நிறைவே வடிவானவர், ஆதலால் நிலவே உன்னை விட அவர் உயர்வானவர் என்பதை உணர்ந்து அவருடன் விளையாட வா.
சிற்றில் பருவம் :
நீதி மன்றத்தில் காந்தியடிகள் அளித்த வாக்குமூலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆங்கிலேய அரசுடன் அன்பு கொண்டிருந்த நான் இன்று இந்திய விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுள்ளேன். கடமை என்று நான்நினைக்கும் இச்செயல் குற்றம் என்று கருதினால் எனக்கு தண்டனை தாருங்கள். இத்தகைய அடக்குமுறை சரியென்று கருதினால் நீதியரசரே என்னை தண்டியுங்கள். எனது கொள்கை சரி என்று ஏற்றுக் கொண்டால் நீங்கள் இந்த பதவியை துறந்து விடுங்கள். என்று கூறிய அருமை செல்வம் காந்தியடிகளே. சிறுமியர் நாங்கள் கட்டிய சிறுமணல் வீட்டை சிதைத்து விடாதீர்கள்.
சிறுபறைப் பருவம்
தென்னாப்பிரிக்காவில் இருந்து சத்தியாகிரகம் செய்த போது உதவிய நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை போன்ற தமிழகத் தியாகிகளின் சிறப்பினை உலகமறிய செய்து மகிழ்ந்த உத்தமனே, உயர்ந்தோனே, திருவள்ளுவர் படைத்த திருக்குறளின் வழி நின்று சிறந்து விளங்குபவனே, தேசதந்தையே, கரம் சந்த் காந்தியின் தவப்புதல்வனாக தோன்றிய காந்தியடிகளே! நீ சிறுபறை முழக்கி அருள்வாயாக முற்காலத்தில் நம் நாட்டில் பண்புடையோர் ஒன்றுகூடி ஊர்ப்பஞ்சாயத்து என ஒன்றை நிறுவித் துலாக்கோல் போல் நீதிவழுவாமல் நடுவுநிலையிலிருந்து எல்லா வழக்குகளையும் நன்கு விசாரித்து நீதி வழங்கினர். ஆனால் இன்று அந்நிலை மாறிவிட்டது. நீ சிறுபறை கொட்டி அருள்வாயாக
சிறுதேர்ப்பருவம் :
திருவள்ளுவரின் மறுஅவதாரமாவார். திருவள்ளுவர் நெசவுத்தொழிலை மேற்கொண்டார். காந்தியடிகளும் கைராட்டினம் கொண்டு மேற்கொண்டார் நூல் திருவள்ளுவர் நூற்று நெசவுத்தொழிலை பண்பு மாறா வாசுகியை மனைவியாகப் பெற்று இல்வாழ்க்கை நடத்தினார். அதுபோலவே காந்தியடிகளும் தன் கருத்துக்கேற்ற கஸ்தூரிபாய் என்னும் மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்தினார். ஆகையால் உலகம் போற்றும் உத்தம காந்தியடிகளே,சிறுதேரை உருட்டி அருள்க.
காந்தியடிகள் தாயாயினும், அறநெறி தவறி வழி நடத்தினால் அதை ஏற்காது நீதிமுறைப்படி வாழ்க்கை நடத்துதலே சிறந்தது என அறிந்து உண்மை. மன உறுதி அமைதி போன்ற காந்தியே, உன் திருக்கரத்தால் சிறுதேரை உருட்டி அருள்வாயாக என்று கவிஞர் காந்தியை பிள்ளைத்தமிழில் கூறியுள்ளார்.
13. கவிஞர் கண்ணதாசன்
பெயர்: கண்ணதாசன்
பிறப்பு : 24.06.1927
பிறந்த இடம் : சிறுகூடல்பட்டி (சிவகங்கை )
இறப்பு : 17.10.1981
இயேசு காவியம்
1. இயேசு நாதர் ஆற்றிய மலைச் சொற்பொழிவின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக
நீங்கள் மக்களின் குறைகளை மன்னித்தால் பரம பிதா உங்களை மன்னிப்பார் இல்லையெனில் பரமபிதா உங்களை மன்னிக்க மாட்டார் எப்பொழுதும் போலிவேடம் போடாதீர்கள் முகத்தில் மனத்தூய்மையைக் காட்டி ஆண்டவர் மட்டுமே தெரிந்து கொள்ளுமாறு நோன்பினை ஆற்றுவதே எப்பொழுதும் இன்பம் தரும்.
நாம் சேர்த்துள்ள பொருளை பூச்சிகள் அரிக்கலாம். திருடர்கள் கொள்ளையடித்துச் செல்லலாம். செல்வம் தானே அழிந்துவிடலாம். ஆனால் நாம் சேர்த்த விண்ணகச் செல்வம் சிறிதும் குறையாது நாள்தோறும் வளரும். ஒருவர் இரு குதிரையில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது. இரண்டு முதலாளிக்கு எவரொவரும் தொண்டு செய்ய முடியாது. செல்வம், கடவுள் இரண்டும் இரு துருவங்கள் நாம் செல்வத்தை நாடினால் நமக்கு துன்பமே கிடைக்கும். கடவுளை நாடினால் மன நிம்மதி கிட்டும் உணவும், உடையும் நாளும் தேடி அலையும் மக்களே! உணவைவிட உயிரே பெரியது உடையைவிட உடலே பெரியது. பறவையைப் பாருங்கள் அவை விதைப்பதோ, அறுப்பதோ அவற்றை பாதுகாப்பதோ கிடையாது பசி வரும்போது பரமபிதாவே உணவளிக்கிறார். பறவையைவிட மனிதன் உயர்ந்தவன் தானே.
Amazon Business Exclusive Deals
14. மனித தெய்வம் காந்தி காதை
(அருட்கவி, அரங்க சீனிவாசன்)
அரசியல் காண்டம் - உப்புப் படலம்
1. மனித தெய்வம் காந்தி காதையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் யாவை?
இறைவனின் திருவருள்
ஆங்கில அரசின் ஆனையை மீறிக்கடலில் உப்பு எடுக்கும் உண்மைப் போரை ஆரம்பிக்கக் காந்தியடிகள் எண்ணினார். அவர் அன்பே வடிவானவர் இந்த அறப்போரை நடத்த ஓர் எண்ணம் அவர் மனதில் தோன்றியது இறைவனின் திருவருளேயாகும்.
காந்தியடிகளின் ஓலை :
காந்தியடிகள் ஆங்கிலேயருக்கு கீழ்கண்டவாறு ஓலை அனுப்பினார். கடலில் உப்பு எடுக்க உரிமை தருக. இந்நாள் வரை பொறுத்துப் பார்த்தோம் உங்களது பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் வேண்டுவதில் பயனேதுமில்லை உங்களை நாங்கள் அந்நியர் என்று வெறுத்து ஒதுக்கவில்லை எங்களுடன் சேர்ந்து வாழ உங்களுக்கு உரிமை தருகிறோம்.
தர்மத்தை மறந்து எங்களது உரிமைகளை கவர்ந்து கொள்வதைத்தான் வெறுக்கிறோம். பசிக்கு உண்ணும் கூழிற்குக்கூட உப்பிடும் உரிமையை தடை விதித்து தடுக்கிறீர்களே! நீதி எங்கள் பக்கம் இருக்கும் போது எங்களது தியாகத்தை ஒருபோதும் தடுக்க முடியாது. விசுவாமித்திரர் யாகம் செய்தபோது உங்களால் அதனை அறமே வடிவான ராமன் காத்தபோது அரக்கர்கள் யாகத்தை தடுக்கவோ அழிக்கவோ முடியவில்லை, என்னை நீங்கள் சிறையில் அடைத்தாலும், மேலும் பலர் தம் இன்னுயிரைப் பனையம் வைத்து புறப்படுவர். ஆலமரத்தின் நுணியைக் கிள்ளினால் அதிலிருந்து மேலும் பல கிளைகள் தோன்றும்.
அரசு தந்த பதிலுரையும், காந்தியின் சபதமும் : ஆட்டுக்கூட்டம் எதிர்த்து வந்தால் அதைக்கண்டு புலி அடங்கியிருக்காது.எங்களது ஆணையை எதிர்த்து நீங்கள் அறப்போர் நடத்தினால் நாங்கள் பேசாமல் இருக்கமாட்டோம் என்று ஆங்கிலேய அரசு காவத்தோடு பதிலுரை த்தது
நீதியைக் கைவிட்ட ஆங்கில அரசின் போக்கிற்கு விடையளிக்கும் விதமாக காந்தியடிகள், இந்திய மண்ணில் ஏற்பட்ட களங்கம் நீங்கும் வரை நான் சோர்வடைய மாட்டேன் என்று சபதமேற்றார்.
காந்தியடிகள் அறப்போராட்டத்திற்கு தயாராகுதல் :
காந்தியடிகள் அறப்போராட்டத்திற்கு தயாரானதும் பெண்கள் அவருக்கு வெற்றித் திலகமிட்டனர். வாழ்க என போற்றி வாழ்த்தி ஆரத்தி எடுத்தனர். சாபர்மதி ஆசிரமத்திலிருந்து எழுபது பேர் காந்தியடிகளைப் பின் தொடர்ந்தனர். அறுபது வயதிற்கு மேற்பட்ட வயது கொண்ட காந்தியடிகள் பெருமித நடைபோட்டு நடந்தார் வழியெங்கிலும் மக்கள் நீர் தெளித்து மலர் தூவினர். தன்னை வரவேற்ற மக்களிடம் காந்தியடிகள் அனைவரும் கதர் உடுத்துங்கள் என அறிவுறுத்தினார். அறப்போருக்கான அழைப்பு வரும் வரை பொறுமையாக இருங்கள். வாழ்க்கையில் அகிம்சையே சிறந்தது என கூறினர். போரிட நேர்ந்தால் புறப்பட தயாராக இருங்கள் எனவும் கூறினர்.
காந்தியடிகள் உப்பெடுத்த காட்சி:
தண்டி கடல் துறையில் அண்ணல் காந்தியடிகள் உப்பெடுத்த போது திருமாலின் அம்சமான கண்ணன் இடைக்குலச்சேரியில் நுழைந்து உள்ளங்கையில் வெண்ணெயை அள்ளுவது போல இருந்தது என்று கவிஞர் அரங்க சீனிவாசன் கூறுகிறார்
விடுதலைக் காண்டம்
பொதுப்பணிப் படலம்
1. பொதுப்பணிப்படலம் என்னும் தலைப்பில் கவிஞர் எவ்வாறு காந்தியடிகளின் செய்திகளை விளக்குகிறார் ?
அரிசனம் ஏட்டில் காந்தியடிகளின் வழங்கிய செய்திகள் :
காந்தியடிகள் தாம் வெளியிட்ட அரிசனம் என்னும் ஏட்டில் முதலில் நம் நாடு அடிமைத்தளையினை அகற்றி விடுதலைபெற மக்கள் அனைவரும் சமம் என்ற உணர்வு வர வேண்டும் என்றார். அறிவை மயக்கும் கள் அரக்கனை ஒழிக்க வேண்டும் என்றார். மேலும் அந்நிய நாட்டுப்பொருட்களை முழுவதுமாக வெறுத்து ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பீகார் பூகம்பத்தின் போது காந்தியடிகள் கூறிய அறிவுரைகள் :
பீகார் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டது, சேவாக்கிராமத்தில் இருந்த காந்தியடிகள் உடனே அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். உதவிகள் பலவும் செய்தார். தீன்டத் தகாதவர்கள் என ஒதுக்கும் அநீதியைப் போக்க பல முயற்சிகளைச் செய்தார்.
அரிசனங்கள் மீது இரக்கம் காட்டுங்கள் என்று உயர்குடி மக்களுக்கு அறிவுரை தந்தார். அரிசனர்களின் அறிவு விளக்கினைத் தூண்டி அவர்களின் அறியாமையைப் போக்கினார். ஊழ்வினை என்று கருதி வறுமையில் வாடும் மக்களுக்கு இராட்டை சுற்றும் வழக்கத்தை ஏற்படுத்தினார், ஊழ்வினை மாற்றும் வழியினை கூறினார். இந்திய நாட்டின் உயிர்நிலை நகரங்களில் இல்லை அது சேரிகள் நிறைந்த சிற்றூர்களில் தான் உள்ளது எனவும் கூறினார். எனவே சிற்றூர்களில் வறுமையைப் போக்கி, அதனை வளமாக்குவதே சுயாட்சியின் அடிப்படை எனக் கூறினார்.
தேவைக்குமேல் செல்வத்தை சேர்ப்பவர்கள் திருடர்கள் என் காந்தியடிகள் கூறினார் உழைப்பால் நில வளத்தை பெருக்கவேண்டும் என்றார். ஏழை எளியோருக்கு மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்று கூறினார். அவர்களுக்கு உணவு, உடை, வசிப்பிடம், கல்வி பயிலும் வசதி ஆகியவை தரப்பட வேண்டும் எனக் கூறினார். இவையனைத்தும் செல்வந்தர்களின் கடமையாகும் எனவும் அறிவுறுத்தினார்.
ஒருவருக்கு உரிய செல்வம் அவர் இறந்த பிறகு நாட்டவர்க்கு உரியது என்ற புதிய கொள்கையை உருவாக்கினார். கைகுத்தல் அரிசியே சத்தானது எனக் கூறினார். பால், வாழைப்பழம், கடலை கிரை போன்றவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளது எனவும் கூறினார். பிறரை சார்ந்து இருக்காமல் வளம் பல கொண்ட உரிமைபெற்று குடியரசு அமைவிதே சர்வோதயம் எனப்படும் என்றார். சாதி மத பேதம் நீங்க கலப்புத் திருமணம் அவசியம் என்றார். மக்கள் ஆங்கில மொழி மீது இருக்கும் மோகத்தை நீக்கி இந்தி மொழியை கற்க வேண்டும் என்றார். அதுவே நமது கடமையாகும் என்றார்.
15. கவிஞர் வைரமுத்து
பெயர் : வைரமுத்து
பிறப்பு : 13/07/1953
பிறந்த இடம் : வடுகபட்டி (தமிழ்நாடு)
1. கவிஞர் வைரமுத்துவின் பார்வையில் பாரதியார் :
கவிதையைத் தெருவிற்குக் கூட்டி வந்தவன் பாரதி. ஓர் அறிவுக் கடல் அவன் ஒரு விடுதலைக் கவிஞன், அடிமையான இந்தியனுக்கு அகல்விளக்கு செய்து தந்தவன் அவனே தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் ஆயுத எழுத்தாக மாற்றியவன் வசந்தம் பற்றி இலையுதிர் காலத்தில் எழுந்த கனவுகளே அவனது எழுத்துக்கள் காணி நிலம் நமக்கு வேண்டுமென காளிக்கு வேண்டுகோள் தம் கவிதையில் விடுத்தான். ஆனால் அவனது கல்லறைக்குக் கூட காணி நிலம் கிடைக்கவில்லை. கற்பனையில் விடுதலை பெற்று வீதிப் பெண்களை கும்மியடிக்கும்படி கூறினான்.
பாரதி மக்கள் விழித்தெழ வேண்டும் என்றான். அவன் கணவு கண்டான். அக்கனவுகள் இன்று சுருங்கி கையடக்கப் பதிப்பாகக் காட்சியளிக்கிறது. காக்கை குருவி எங்கள் சாதி என்பது அவனது கவிதை நமக்கு பகுத்துண்ணும் பண்பு இல்லாததால் காக்கையும் குருவியும் கூட நம்மை வெறுக்கின்றன. ஆனாலும் ஒரு நாள் அவனது கவிதை வரிகளுக்கு நம் வாழ்வு உரை எழுதும் அப்போது அவனது ததும் பெருமை அடையும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்.
தீக்குச்சித் தின்னக் கொடுப்போம்
மக்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கொட்டகையின் செயற்கை இருட்டில் இருக்கிறார்கள், அவர்கள் சினிமா டிக்கெட் வாங்குவதற்கு வடிக்கும் வியர்வை அதிகம் இன்றைய திரையரங்குகள் தேனீக்களை கூட கொசுக்களைப்போல மாற்றிவிட்டன. நாம் சினிமா பார்ப்பதற்கு காசு கொடுத்து இரவு நேரத்தை அடகு வைத்து மதியக் காட்சி காண்பதற்கு பகலை அழுக்கு ஆக்குகிறோம் சினிமா என்னும் இராட்சச இருட்டின் கைகளை பிடித்து இன்னும் எவ்வளவு தூரம் நடப்பது சினிமா என்னும் மயில்கள் தோகை விரித்து நிழல்தராமல் நமது ஓய்வு நேரத்தின் மீது எச்சமிடுகின்றன.
நம் சிறுவர்களுக்கு பல் முளைக்கும் முன்பே சினிமா மீசை முளைக்க வைத்து விடுகிறது. சினிமாக்கலைஞர்களின் முகவரி அழிந்து விடக்கூடாது என் கல்லூரி மாணவர்கள் தம் விடுதி சுவர்களுக்கு வெள்ளையடிப்பதில்லை. சினிமா என்பது இன்று ஒரு வியாபாரம், சில முற்போக்கு முலாம் பூசுகின்றன. திரைப்படங்கள் இரவில் வெளிச்சம் காட்டிப் பகலை இருட்டாக்கும் மாய வேலையே செய்கின்றன. திரைப்படம் ஓர் அற்புத கருவி, ஆனால் நாம் அதனை முதுகு சொரியத்தான் பயன்படுத்துகிறோம். அது உயர்ந்த அணு குண்டு நாம் அதற்கு மத்தாப்புக்குரிய மரியாதைதான் தருகிறோம்.
சினிமா தயாரிப்பாளர்கள் நினைத்தால் மக்கள் சமுதாயக் கல்லை சிற்பமாக்கலாம் அவர்களது கலப்பை முனையில் மக்களின் உள்மனதைக்கூட உழலாம். இன்று லாபத்தை மட்டும் ஏற்றுக்கொள்வது நீதி ஆகிவிட்டது உடல் வலிமையற்ற, நாட்டிற்கு சினிமா ஒரு மயக்க மருந்து, அது நம் மூர்சசையை தெளிவாக்கும் மூலிகை மருந்தாக விளங்க வேண்டும். இளைஞர்களின் கையிலாவது சினிமா அழுக்குத்திரை சலவை செய்யப்படவேண்டும். அவ்வாறு நடைப்பெறவில்லை எனில் திரைப்பட கருள்களைத் தீக்குச்சிக்கு இரையாக்குவோம் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்.
16. வழிபாட்டுப் பாடல்கள்
அ. தேவாரம்
நாளைய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்ரும் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கேளிலிளம் பெருமானே!
- திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர் நெஞ்சைப்பார்த்து கூறியது :
அறியாமை நிறைந்த மனமே நம் வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் நீலகண்டனாகிய சிவபெருமானுக்கே தொண்டு செய்வோம், அவனது திருப்பெயரை பிறர் சொல்லக் கேட்போம். திருகோனிலி என்னும் ஊரில் எழுந்தருளும் சிவபெருமானின் திருவருளால் நம் சுற்றம் தழைத்தோங்கும் அவன் கேடற்ற நல்ல திறமையை நமக்கு தருவான். நம் குற்றங்கள் யாவையும் அவன் நீக்குவான்.
ஆ. திருவாய்மொழி
நாளேல் அறியேன் எனக்குள்ளன
நானும் மீளா அடிமைப்பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச்சோலை கள்சூழ் திருநாவாய்
வாள் தடங்கண் மடப்பின்னை மணாளா!
- நம்மாழ்வார்
திருவாய்மொழி பாசுரத்தின் கருத்து:
வாள் போன்ற ஒளிமிக்க பெரிய கண்களை உடைய நட்பின்னை பிராட்டியின் அன்பிற்குரிய கண்ணனே! அடிமையாகிய நான் என் வாழ்நாள் இன்னும் எவ்வளவு என்று அறியேன். என்னால் முடிந்த தொண்டை உனக்குச் செய்ய முயன்றேன், நீ எனக்கு அருள் புரிவாய்.
இ. இயேசுநாதர்
ஒருகன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னம் காட்டென்றும்
கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும்
பொருநரையும் நேசி என்றும் போதனையால் சாதனையால்
மருவைத்த கிறிஸ்துடன்தன் மலரடியில் அடைக்கலமே
திரு.வி.கலியாணசுந்தரனார்
இயேசுநாதரின் பெருமையென திரு.வி.கலியானசுந்தரனார் கூறியது
ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு என்றும், போர்க்கருவியால் மற்றவரை வெட்டுபவர் தாமும் அதே போல் ஒருநாள் வெட்டப்படுவர் என்றும் பகைவனையும் பகைமைப் பாராட்டாமல் தன் நன்பனாகவே கருதவேண்டும் என்றும் போதனை செய்து அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய சாதனை படைத்த இயேசு பெருமானே! உன் காலடியில் நாங்கள் சரண் அடைகிறோம் என கவிஞர் திரு.வி.க கூறுகிறார்
ஈ. புத்தபிரான்
மாசில் அன்பின் அறநெறியில்
மன்னும் உயிர்கட் கெலாமுதவிப்
பேசும் இந்த உலகத்துப்
பிறப்போ டிறப்புத் துன்பமெலாம்
ஆசை தன்னை அறுப்பதனால்
அழித்தே உயர்க எனஉரைத்த
நேசன் எங்கள் புத்தபிரான்
நினைக்கும் அன்பர் உளத்திருப்பான்
- மு.ரா.பெருமாள் முதலியார்
புத்தபெருமான் போதித்த போதனை :
மக்கள் அன்புடன் தர்ம வழியில் நின்று உலகில் உள்ள உயிர்களுக்கு உதவி புரிய வேண்டும். ஆசையை அறவே நீக்கினால் நம் பிறப்பு இறப்பு என்னும் துன்பங்கள் அறவே நீங்கும். நாம் வாழ்வில் உயரலாம் என போதிக்கும் புத்தன் என்றும் இடைவிடாது தன்னை நினைக்கும் அன்பர்களின் மனதில் நீங்காது இருப்பான் என கவிஞர் மு.ரா. பெருமாள் முதலியார் கூறுகிறார்
உ. அபிராமி அந்தாதி
தனம்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
களம்தரும் பூங்குழ லாள் அபி ராமி கடைக்கண்களே
- அபிராமிபட்டர்
அபிராமியின் அருள் திறத்தை
அபிராமிபட்டர் போற்றிப் பாரட்டியது :
முடித்த கூந்தலையுடைய திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமியின் கடைக்கண்கள் தன்னை வணங்கும் அடியார்கள் அனைவருக்கும் பெருஞ்செல்வத்தைத் தரும். சிறப்பான கல்வியைத்தரும், சோர்வில்லாத மனத்தைக் தரும் கடவுளின் தோற்றத்தைத் தரும், அவர்களின் மனத்தில் வஞ்சனை இல்லாத நல்லவர்களின் நட்பைப் பெற்றுத்தரும் என அபிராமிபட்டர் கூறுகிறார்
****************************
No comments:
Post a Comment
thaks for visiting my website