Wednesday, April 7, 2021

வாக்கிய அமைப்பு

 

வாக்கிய அமைப்பு


     ஹிந்தி ஒரு இந்திய மொழி, இதை ஒரு இந்திய மொழியின் மூலமாகக் கற்பது தான் சிறந்த முறையாகும். ஹிந்தியில் சாதாரண வாக்கிய அமைப்புக்கள் யாவும் தமிழ் வாக்கியம் போன்றே அமை கின் றன ஆதலால் தமிழ் வாக்கியங்களில் உள்ளது போலவே ஹிந்தியிலும் சொற்களை வரிசைப்படுத்தி வாக்கியங்களை எழுதிப் பழகுதல் வேண்டும்.

        எம்மொழியாயினும் இலக்கணமில்லையேல் இலட்சண மற்று அம்மொழி அவலட்சணமாகிவிடும். ஆதலால் தெளிவான இலக்கண அறிவும் பெறவேண்டியது இன்றியமையாததாகும். கடிவாரே மற்ற குதிரையைக் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறே இலக்கண மற்ற மொழியறிவும் கச்சிதமாகவும் பிழையற்றதாகவும் இருக்க இயலாது. எதைப் படித்தாலும் எழுதிப் படித்தல் வேண்டும் இலக்கண அறிவுடன் மொழியைக்கற்பது தான் சிறந்த முறை யாகும்.


         பின் வரும் சொற்களை நன்கு பலமுறை பயின்று மனத்திலிருத் திக் கொள்ள வேண்டும்.


कागज़ - காகிதம்                    किताब - புத்தகம்

जमीन - தரை                           मेज़ - மேஜை

कुरसी - நாற்காலி                  चौकी - ஸ்டூல்

दरवाजा - கதவு                        खिड़की - ஜன்னல்

तसवीर -  படம்                          घडी -  கடிகாரம்

अखबार - செய்தித்தாள்       पत्रिका - பத்திரிகை

पानी - தண்ணீர்                    गरम - சூடான

ठंडा - குளிர்ந்த                     कुत्ता - நாய்

गाय - பசு                                बैल - காளை மாடு 

घोडा - குதிரை                      बकरी - ஆடு

रुपया - ரூபாய்                      पैसा - காசு


         இது பேனா, அது நாற்காலி, என அமைத்தாலே தமிழில் அவை வாக்கியங்கள் ஆகும் ஹிந்தியில் இது பேனாவாக இருக்கிறது. அது நாற்காலியாக இருக்கிறது என்று இறுதியில் இருக்கிறது என்ற வினைச் சொல்லைச் சேர்த்தால் தான் வாக்கியங்கள் ஆகும். ஹிந்தியில் வினைச்சொற்களில்லாமல் வாக்கியங்கள் அமைவதில்லை இது தமிழிலிருந்து மாறுபட்ட ஓர் நிலையாகும் எனவே இதை கவனிக்கவும்.


यह - இவன், இவள், இது, இந்த

वह - அவன், அவள் அது, அந்த

है - (வினைச்சொல்)    இருக்கிறான், இருக்கிறாள், இருக்கிறது.

क्या - என்ன    कौन- யார்


          வாக்கியங்களின் முடிவில் ஒரு சொங்குத்துக் கோடிடப்படும் இதுவே ஹிந்தியில் முற்றுப்புள்ளியாகக் கருதப்படுகிறது.


यह कलम है ।  இது பேனா

यह क्या है ? இது என்ன?

वह क्या है ?   அது என்ன ?

यह किताब है । இது புத்தகம் .

वह किताब है । அது புத்தகம் .

वह तसवीर है । அது படம்.


                (சொல்லிப் பழகுங்கள் )


       இதைப்போல் மற்ற சொற் களையும் பயன் படுத்தி வாக்கி யங்கள் பழகுங்கள் அமைத்து எழுதிப் பழகுங்கள்


                कागज

                ज़मीन

                अख़बार

      यह      पानी         है। 

      वह      गाय     

                घोडा 

                रुपया


यह कौन है ? இவன் யார் ?  இவள் யார் ? यह राम है ।

वह कौन है ?  அவன் யார் ? அவள் யார்  ? वह सीता है । 

वह रहीम है । அவன் ரஹீம் , वह गीता है । அவள் கீதா. .

यह क्या है ? இது என்ன?  यह कुत्ता है। இது நாய் .


       மேற்கண்ட வாக்கியங்களில் இவன் இவள்', ' இது  ஆகிய மூன்றையும் குறிப்பதற்கு 'यह ' என்றும், அவன், அவள் அது' என்பதற்கு 'वह' என்றும் ஒரே சொல்லை  உயோகிப்பதால், ஆண் - பெண் என்ற வேற்றுமை அறிய இயலாதே என்றும் ஐயம் ஏற்படலாம். இவை சுட்டிக் காட்டியே சொல்லப்படும் வாக்கியங்களா தலால் காட்டப்படும் அப்பொருளோ அல்லது நபரோ நம் பார்வையிலிருப்பதால் அவ்வித ஐயம் ஏற்படமாட்டா.

கோபாலை அவன், இவன் ', என் றும் உமாவை அவள் '- இவள் என்றும் தமிழில் உள்ள படியே ஹிந்தியிலும் குறிப்பிடப்படுகிறது


यह लड़का कौन है ? இந்தப் பையன் யார் ?

यह लड़का राजु है । இந்தப் பையன் ராஜ

वह लड़की कौन है ? அந்தச் சிறுமி யார் ?

वह लड़की सीता है । அந்தச் சிறுமி சீதை.

वह क्या है ?  அது என்ன?

वह कुत्ता है । அது நாய் .

       மேலே கண்டவாறு ஒரு பெயர்ச் சொல்லின் முன்பாக वह அல்லது यह என வருமாயின் அவை உரிச்சொற்களாகும். அவற் றிற்கு மட்டும்  அந்த அல்லது இந்த எனும் பொருள் ஏற்படும்


   वह लड़का  । அவன் சிறுவன் .

   यह लड़का राजू है । அந்தச் சிறுவன் ராஜு.


      வினா வாக்கியங்கள்

       यह क्या है ? वह क्या है ?  என்பவை அறியப்படாத நிலையில் அப்பொருள் என்ன வென்று கேட்கப்படும் கேள்விகளாகும். यह कलम है । यह दरवाज़ा है । என வரும் விடைகள் அது என்ன பொருள் என்பதைக் கூறும்.

         ஒரு பொருள் பற்றி நிச்சயமாக அறியப்படாத நிலையில் அப்பொருள் அதுதானா? எனக் கேள்விகள் கேட்பதும் உண்டு அது படமா?  இது மேஜையா? என வினா வாக்கியங்கள் அமையும். இங்கு தமிழில் வாக்கியங்களின் முடிவில் ' ஆ ' சேர்க்கப்படுகிறது. ஹிந்தியில் சாதாரண வாக்கியங்களில் துவக்கத்தில் क्या  என்ற சொல் சேர்க்கப்பட்டு இத்தகைய வினா வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.


वह तसवीर है । அது படம்

क्या , वह तसवीर है ? அது படமா?

यह कुरसी है । இது நாற்காலி.

क्या, यह कुरसी है ? . இது நாற்காலியா ?

           இம்மாதிரியான வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது, என்ன அது படமா? என்று 'என்ன' என்ற சொல்லைச் சேர்க்கத் தேவை இல்லை.  

         மேற்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கும் பொழுது, அப் பொருள் அதுவாகவே இருந்தால், வாக்கியத்தின் துவக்கத்தில் *हाँ ஆம் - என்றும், வேறாக இருந்தால் 'नहीं ' இல்லை ' என்றும் சொற்களைச் சேர்த்து வாக்கியங்கள் அமைப்பது வழக்கமாகும்.


क्या यह किताब है ? हाँ, यह किताब है । 

क्या यह कुरसी है ? नहीं, यह कुरसी नहीं है ।


' हाँ ' என்பதை உச்சரிப்பதற்கு 'ஹாம்' எனும் சொல்லை வாயை மூடாமல் ம் - . ஒலியை மூக்கால் வெளியிட்டால் சரியான உச்சரிப்பாகும்.

क्या वह तसवीर है ? அது படமா?

 हाँ , वह तसवीर है ஆம் அது படம். 

नहीं, वह तसवीर नहीं है। वह किताब है ।

அது படம் அல்ல, அது புத்தகம்.


        **********************

     

 


No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...