हिन्दी कहावतें और उनके तमिल और अंग्रेजी पर्याय
இந்தி, தமிழ், ஆங்கில இணைப் பழமொழிகள்
Hindi Proverbs and their equivalents in Tamil and English
(अ)
1. अंखिया सुख कलेजा ठंढा।
கண்ணுக்கும் குளிர்ச்சி மனதுக்கும் இதம்.
Bright to sight, heart's delight.
2. अंगूर खट्टे हैं।
சீ சீ இந்தப் பழம் புளிக்கும்
The grapes are sour.
3. अंडे सेवे कोई, बे लेवे कोई ।
இடித்தவள், கொழிந்தவன் இங்கே இருக்க எட்டிப் பார்த்தவள் கொட்டிக் கொண்டு போனானாம்.
பாட்டன் சேர்ந்த பணத்தைப் பேரன் தின்னு அழிச்சானாம்.
One soweth another reapeth.
4. अंत बुरे का बुरा ।
அ) கெடுவது செய்தால் படுவது சுருமம்
ஆ) கெடுவான் கேடு நினைப்பான்.
இ) கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.
a) Evil begets evil.
b) Do evil and look for like.
c) Harm watch, harm catch.
5. अंत भला, सौ सब भला।
அ) ஒட்டைச்சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
ஆ) நன்றாய் முடிவதெல்லாம் நன்றே.
All's well that ends well.
6. अंधा क्या चाहे, दो आँखें।
குருடனுக்குக் கண் வேண்டும்.
A blind person needs but two eyes.
7. अंधा क्या जाने बसंत की बहार।
குருடனைப் பார்த்து ராஜமுழி முழின்னானாம்.
Blindman should judge no colours.
8. अँधी देवियाँ, लूले पुजारी।
குருட்டுத் தேவதைக்கு, நொண்டிப் பூசாரியாம்.
Blind goddess, lame worshippers.
9. अंधे के आगे रोना अपने दीदा खोना।
அ) கழுதைக்குத் தெரியுமோ குந்தப்பொடி வாசனை
ஆ) கழுதைக்குத் தெரியுமோ கற்பூர வாசனை
a) Throwing pearls before swine.
b) He sprinkles incense on a dunghill.
10. अंधे को अंधा राह दिखाये दोनों खडु में गिरें ।
குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள்.
Blind leading the blind fall in a pit.
11. अंधेर नगरी चौपट राजा, टके सेर भाजी, टके सेर खाजा।
மூர்க்கராஜா ஆளும் முட்டாள்கள் பட்டினத்தில் காசுக்கொடு
பூனை; காசுக்கொரு யானை,
There is no rule in a fool's kingdom.
12. अंधेरे में हर औरत सुन्दर होती है।
இருட்டுக்கு எல்லாம் சரி
a) Put the light off and all women are beautiful.
b) All cats are alike grey in the night.
13. अंधों में काना राजा।
குருடர்கள் ஊரிலே ஒற்றைக்கண்ணனே ராஜா.
Triton among the minnows.
14. अकेला चना भाड नहीं फोड सकता।
அ) ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமா?
ஆ) ஒரு கை முழம் போடுமா
Single man is no strength.
15: अकेला चले न वाट।
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்.
Don't travel alone.
16. अक्ल वडी या भैंस ।
கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு.
It is skill, not strength that steers a ship.
17. अक्लमंद का इशारा ही काफी है।
உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.
A nod of an honest man is enough.
18. अक्लमंद को इशारा, अहमक को फटकारा।
நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை
A nod to the wise and a rod to the foolish.
19. अच्छा साथी रास्ता आसान।
துணையுடன் நடந்தால் தொலைவு தெரியாது
No road is long with good company.
20. अच्छी चीज़ खुद बोलती है।
ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்.
Quality speaks for itself.
21. अच्छे की आशा रखो; बुरे को तैयार रहो।
நல்லதை எதிர்நோக்கு தீமையை எதிர்கொள்
Hope for the best and prepare for the worst.
22. अज्ञानी किसी से नहीं डरते।
அஞ்சுவது அஞ்சாமை பேதமை.
They that know nothing fear nothing.
23. अज्ञानी धन चाहता है और ज्ञानी गुण।
பணத்தை நாடுபவன் முட்டாள் : குணத்தை நாடுபவன் அறிஞன் The foolish seek for wealth, the wise for perfection.
24. अटका बनिया दे उधार ।
குடல் காய்ந்தால் குதிரை வைக்கோல் தின்னும்
Needy trader lends the money.
25. अति किसी चीज़ की भी बुरी होती है।
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
a) Excess of everything is bad.
b) Too much of anything is good for nothing.
26. अदले का बदला ।
அ) அடிக்கும் பிடிக்கும் சரி
ஆ) அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி
இ) ஆனைக்கும் பானைக்கும் சரி. ம்
ஈ) செட்டி காசைக் குறைத்தான், சேணியன் காலைக் குறைத்தான்.
Tit for tat.
27. अधजल गगरी छलकत जाए।
அ) அரைக்குடம் தளும்பும்.
ஆ) குறைருடம் கூத்தாடும்
Empty vessels make the most sound.
28. अधिक परिचय होने से अवज्ञा होती है।
அ) கோவில் புளை தேவருக்கஞ்சுமா?
ஆ) நிதங்கண்ட கோழி நிறங்கெடும்
இ) பழகப் பழக பாலும் புளிக்கும்.
a) He that banquets everyday never makes a good meal.
b) Too much familiarity breeds contempt.
29. अधीर होने से काम जल्दी नहीं होता।
அ) பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும்
ஆ) பரப்பான் பயிரிழந்தான்.
இ) பதறாத காரியம் சிதறாது
a) Good and quick seldom meet.
b) Haste makes waste.
c) Patience spoils nothing.
30. अनजाने से जाना अच्छा होता है।
தெரியாத சாமியைவிட தெரிஞ்ச பிசாசு மேல்.
a) Better the devil you know than not.
b) A known devil is better than an unknown angel.
31. अनहोनी की चिंता व्यर्थ है।
வருவதை எண்ணி வருந்தாதே!
It is useless to worry about forebodings.
32. अनहोनी होकर रहती है।
அ) வருகிற வினை வழியில் நிற்காது.
ஆ) நடப்பது நடந்தே தீரும்.
Always expect the unexpected.
33. अनुचित चुप्पी मूर्खता है।
பொருந்தா மௌனம் பெருங்கேடு.
Unreasonable silence is folly.
34. अनुभव सारे ज्ञान की जननी है।
அ) அனைத்து அறிவிற்கும் அனுபவமே தாய்.
ஆ) வரவரக் கண்டறி மனமே.
இ) வேதம் ஒதியறி.
a) Experience is the mother of all knowledge.
b)Experience is the father of wisdom.
35. अनुभव सुगमता से प्राप्त नही होता।
அதிகவிலை கொடுத்தே அனுபவத்தைப் பெற வேண்டும்.
Experience cannot be bought too cheap.
36. अनुभवी व्यक्ति झांसे में नहीं आता।
ஆபத்தில் சிக்கான் அனுபவக்காரன்.
Clever birds are not caught with chaff.
37. अन्नदान महादान
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
Feeding the hungry is the great charity.
38. अपना अपना है पराया ।
அ) உதிரத்துக் கல்லவோ உருக்கம் இருக்கும்.
ஆ) தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
Blood is thicker than water.
39. अपना तोता अपना भरोसा।
தன் கையே தனக்குதவி.
If you want a thing well done do it yourself.
40. अपना पूत सभी को प्यारा ।
காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு.
a) All his geese are swans. .
b) The crow thinks her own bird fairest.
41. अपना पैसा खोटा, परखनेवाले का क्या दोष ।
நம்மிடம் குறையை வைத்துக் கொண்டு நாலு பேரைச் சொல்லக் குற்றமென்ன?
Judges are not blamed for one's faults.
42. अपना मकान कोट समान।
அ) தன்னூரில் இருப்பதே தனம்.
ஆ) பத்து கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே.
a) A man's house is like a castle for him.
b) East or west, home is best.
43. अपना माल गंवाय के दर दर मांगे भीख ।
அ) கைப்பறவையை விட்டு காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்காதே.
கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்திற்கு அண்ணாந்து நிற்பானேன்.
a) Ruining one's fountain and begging water from others.
b) Quit not certainty for hope.
44. अपना माल सभी को बढिया लगता है।
தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை.
Every potter praises his own pot.
45. अपना रख. पराया चख ।
ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
Save your's and consume other's.
46. अपना वही जो आवे काम ।
அ) ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை.
ஆ) அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி.
a) One who stands in need is ours.
b) A friend in need is a friend indeed.
47. अपना सब कुछ एक ही दांव पर मत लगा दो।
ஒண்ணா வச்சு மண்ணாப் போகாதே.
a) Don't put all your eggs in one basket.
b) Don't bet at once all you have.
48. अपना हाथ जगन्नाथ ।
தன் கையே தனக்குதவி.
Self help is the best help.
49. अपनी अपनी गरज को अरज करे सब कोय।
பண்டாரம் பிண்டத்திற்கு அழுகிறான் லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது.
a) Every one rakes the embers to bake his own cake.
b) All argues for their motives.
50. अपनी अपनी डफली, अपना-अपना राग ।
உன் துருத்தியை நீ ஊது.
Blow one's own trumpets.
51. अपनी इज्जत अपने हाथ ।
அ) தன் மரியாதை தன் கையில்.
ஆ) தன்னைத்தான் மதித்தால் பிறர்தன்னை மதிப்பர்.
Respect yourself and you will be respected.
52. अपनी गलती को मानना अच्छी बात है।
அ) உற்றது சான்னால் அற்றது பொருந்தும்.
ஆ) பழுது செய்ததை அறிக்கையிடல் பாதி நிவர்த்தி.
a) Have the courage to.own up one's mistake.
b) A fault confessed is half redressed.
c) Open confession is good for the soul.
53. अपनी गली में कुत्ता भी शेर होता है।
அ) தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை.
ஆ) சொந்த ஊரில் சோப்ளாங்கியும் சூரன் ஆவான்.
இ) தன்னிலத்தில் முயல் தந்தியிலும் வலிது.
a) Every dog is a lion at home.
b) Every cock fights best on his own dung hill.
c) Every dog is valiant at his own door.
54. अपनी गांठ में पैसा तो पराया आसरा कैसा ।
அ) கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
ஆ) உண்டானபோது பலர் கொண்டாடித் தொண்டு செய்வார்.
a) All doors open for the rich. a
b) Friends flock around the rich.
c) Where wealth, there friends.
55. अपनी छाछ को भला कौन खट्टा कहता है।
அ) தன்குற்றம் தெரியாது; பெண்டாட்டி நாற்றம் தெரியாது.
ஆ) தன்குற்றம் தனக்குத் தெரியாது.
a) No one cries on stinking fish.
b) Men are blind in their own cause.
56. अपनी मुसीबत खुद झेलनी पडती है।
தன் சுமையைத் தான்தான் சுமக்கணும்.
Every man must carry his own cross.
57. अपनी मुसीबत हर आदमी को बडी लगती है।
அவனவன் பாடு அவனவனுக்குப் பெரிசு.
Every one thinks his own cross is the heaviest.
58. अपनी हैसियत से बाहर काम करने से काम कभी सिरे नहीं चढता ।
விரலுக்கு தகுந்த வீக்கம்; தலைக்கு ஏற்ற குல்லாய்.
a) Don't bite more than you can swallow.
b) Know thy limitations.
59. अपने आप मियाँ मिट्टू न बनना।
அ) உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே.
ஆ) தான் தற்புகழ்தல் தகுதியன்றே
a) Self praise is no recommendation.
b) Never sound the trumpet of your own praise.
60. अपने काम से काम रखो ।
ஆரியக்கூத்தாடினாலூம் தாண்டவக்கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!
Let - every man mind his own business.
61. अपने किये को भुगतो ।
அ) பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேணும்.
(அ) கொன்றால் பாவம் தின்றால் (அனுபவித்தல்) போச்சு.
இ) வரும் விதி வந்தால் படும் விதி படவேண்டும்.
a) What cannot be cured must be endured.
b) No flying from fate.
c) Abide by your deeds.
62. अपने घर की बदनामी करना बुरी बात है।
தன்வீட்டுக்குக் கொள்ளி தான் வைக்கலாமா?
தன் தலையில் மண்ணைத்தான் போடலாமா?
To disrepute one's own home is a bad sign.
63. अपने दही को कोई खट्टा नहीं कहता।
அ) தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை.
ஆ) தன் சரக்கு மட்டமென்று எவனேனும் சொல்வானா?
a) Every potter praises his own pot.
b) Every cook commends his own sauce.
64. अपनों को सभी तलाश लेते हैं।
அவனவன் ஆளை அவனவன் தேடிக்கிறான்.
Every Jack must have his Jill.
அ) மானம் பெரிதா? பிராணன் பெரிதா?
ஆ) மானங்கெட்ட வாழ்க்கைக்கு மரணமே மேல்.
a) Dishonour is worse than death.
b) An honourable death is better than an inglorious life.
c) Death rather than dishonour.
66. अपराध का दोष लगाये जाने से कभी माफी नहीं मांगनी चाहिए।
குற்றம் சாட்டும் முன்னே கும்பிட்டு விழாதே.
Never ask pardon unless you are accused.
67. अपवाद ही नियम का प्रमाण है।
விதிவிலக்குகளே விதிகளின் சான்று.
The exception proves the rule.
68. अफवाहों के पंख होते हैं।
அ) உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியுமா.
ஆ) காற்றினும் கடுகிப்பரவும் அலர் (வதந்தி).
Rumours spread like fire.
69. अब पछताए क्या होत जब चिडिया चुग गई खेत ।
கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம்?
a) After death the doctor.
b) It is too late to spare when the bottom is bare..
c) When all is consumed repentance comes too late.
70. अबोध को भी बोध होता है।
சுவற்றிற்குக் கூட காது உண்டு.
Asses and pitchers have ears.
71. अभी दिल्ली दूर है।
அ) எட்டையாபுரம் கிட்டவா இருக்கு?
ஆ) அம்மா வீடு எங்கே? இன்னும் கொஞ்சம் தூரம்.
இ) உலைக்கு முன்னே இலையைப் போடாதே.
a) Destination is not yet in sight.
b) Make not your sauce till you have caught your fish.
72. अमीरी नजाकत और नाज़ नखरे सिखा देती है।
அ) திரு ஏற உரு ஏறும்.
ஆ) வசதி ஏற ஏற வசீகரம் கூடும்.
இ) தனம் பெருகப் பெருகத் தளுக்கும் குலுக்கும் தானே வரும்.
a) Wealth creates beauty.
b) Riches bring coquetry.
73. अवसर हाथ से न जाने दो।
அ) காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.
ஆ) அலைமோதும்போதே தலை முழுகு.
a) Strike while the iron is hot.
b) Make hay while the sun shines.
74. अशर्फियाँ लुटाते रहने से खजाने खाली हो जाते हैं।
அ) குந்தி உண்டால் குன்றும் மாளும்.
ஆ) சிறுகச் சிறுகத் தின்றால் மலையும் தின்னலாம்.
இ) ஆளுக்கொரு மயிர் பிடுங்கினால் அடியார் தலை மொட்டை.
a) Squandering makes treasures empty.
b) Hair and hair makes the Carle's head bare.
c) Many dogs soon eat up a horse.
75. अशर्फियाँ लुटीं, कोयलों पर मुहर ।
கடுகுபோன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
Penny wise, pound foolish.
76. अशुभ कार्य का अशुभ फल ।
அ) முதற்கோணல் முற்றிலும் கோணல்.
ஆ) விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
a) A bad way has a bad end.
b) Evil begets evil.
c) He who sows thorns will never reap grapes.
77. असलियत छिपती नहीं, सामने आ ही जाती है।
உண்மைகள் என்றும் ஒளிவதில்லை.
One can't escape reality.
78. अहमद की पगडी महमूद के सिर ।
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
To rob Peter and pay Paul.
************************
No comments:
Post a Comment
thaks for visiting my website