Thursday, May 27, 2021

💁‍♀️ பிரதிப் பெயர்ச் சொற்கள்:🧏‍♀️

 

   

        💁‍♀️ பிரதிப் பெயர்ச் சொற்கள்:🧏‍♀️


मैं - நான்           हम  - நாம், நாங்கள்

तुम  - நீ , நீர்      आप -தாங்கள், நீங்கள்

वह - அவன், அவள், அது, அந்த

यह - இவன், இவள், இது, இந்த

वे - அவர்கள், அவைகள்

ये -இவர்கள், இவைகள்.


        ஹிந்தியில் வினைச் சொல்லில்லாமல் வாக்கியங்கள் அமைவ தில்லை. ஆகவே ' இரு' எனும் பொருள் தரும் வினையான வானது தம் எழுவாயின் படி இ.க. மாற்றம் பெற்று வருகின்றன.


मैं हूँ , तुम हो , वह , यह - है , हम, आप , वे , ये  ஆகிய நான்கு எழுவாய்களும் பன்மையாக இருப்பதால் हैं யும் சேரும். கீழே தரப்பட்டிருக்கும் உதாரணங்களை கவனிக்கவும்.


मैं हूँ     - நான் இருக்கிறேன்.

तुम हो  - நீ இருக்கிறாய்.

वह है - அவன் இருக்கிறான், அவள் இருக்கிறாள், அது இருக்கிறது.

यह है - இவன் இருக்கிறான். இவள் இருக்கிறாள், இது இருக்கிறது


हम हैं - நாம் இருக்கிறோம்.

आप हैं -தாங்கள் இருக்கிறீர்கள்.

वे हैं -அவர்கள் இருக்கிறார்கள், அவை இருக்கின்றன. 

ये हैं -இவர்கள் இருக்கிறார்கள், இவை இருக்கின்றன.


मैं  राम  हूँ ।    நான் ராமன்.

मैं गीता  हूँ।    நான் கீதா.

हम लड़के हैं । நாங்கள் பையன்கள்.

हम लड़कियाँ हैं । நாங்கள் சிறுமிகள்.

तुम गोपाल हो । நீ கோபாலன்.

तुम सीता हो । நீ சீதை.

आप अध्यापक हैं । நீங்கள் ஆசிரியர்.

वह लड़की है । அவள் சிறுமி.

वह राजन है । அவன் ராஜன்.

यह ललिता है।  இவள் லலிதா.       

यह मणि है  இவன் மணி. .

यह घर है।  அது வீடு.                        

यह कुत्ता है ।  இது நாய்

वे  दुकान  हैं । அவை கடைகள்.   

वह कपड़  है। அவை துணிகள்.

लड़का- சிறுவன்                          लड़की - சிறுமி     

लड़के -சிறுவர்கள்                       लडकियाँ  - சிறுமிகள்


कुत्ता- நாய்                कुत्ते - நாய்கள்       क्या - என்ன 

घर  - வீடு                  दुकान  -கடை          अध्यापक- ஆசிரியர் 

किताब - புத்தகம்      कौन  - யார்             घड़ी - கடிகாரம் 

अलमारी -- அலமாரி   घोडा - குதிரை     हाथ- கை 

ज़मीन - தரை             और -உம்-மேலும்   में - இல் , உள் 

पर  - மேல், இல்        कलम - பேனா

वह क्या है ? அது என்ன?     वह कलम है । அது பேனா.

यह क्या है  ? இது என்ன?  यह किताब है।  இது புத்தகம்.

वह कौन है ? அவன் யார்?   वह राजन है। அவன் ராஜன்.

यह कौन है  இவள் யார் ?   यह विजया है।  இவள் விஜயா.

तुम कौन हो ? நீ யார்?           मैं रहीम हूँ ।  நான் ரஹீம்.

वे कौन हैं ? அவர்கள் யார்?  वे लडके हैं ।  அவர்கள் சிறுவர்கள்.

हम लड़के हैं। நாங்கள் சிறுவர்கள்.

हम लड़कियाँ हैं। நாங்கள் சிறுமிகள்.

जमीन पर क्या है ? தரையின் மேல் என்ன இருக்கிறது?

जमीन पर मेज़  है । தரையின்மேல் மேஜை இருக்கிறது. 

मेज़ पर क्या है ? மேஜையின்மேல் என்ன இருக்கிறது? 

मेज़ पर किताब है।  மேஜையின்மேல் புத்தகம் இருக்கிறது.

मेज़ पर क्या - क्या है ? மேஜையின்மேல் என்னென்ன உள்ளன?

मेज़ पर कलम और किताब है।  

மேஜையின்மேல் பேனாவும் புத்தகமும் உள்ளன.

 मेज़ पर घड़ी, किताब और कलम है।  

மேஜையின் மேல் கடிகாரம், புத்தகம் மற்றும் பேனா உள்ளன.


      और -உம், மேலும் - இரு சொற்கள் அல்லது வாக்கியங்களை இணைப்பதற்கு உபயோகப்படுகிறது, இரண்டிற்கு மேல் சொற்களை இணைக்க நேர்ந்தால் எல்லாவற்றிற்கும் [ , ] குறியீட்டு और  அடுத்து ஒரு சொல் வரும்படி இணைக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லிற்கும் பிறகு और சேர்ப்பது தவறாகும்.

         ஹிந்தியில் வாக்கியம் முடிவுற்றதும் முற்றுப்புள்ளிக்கு பதில் [। ] கோடு இடப்பட வேண்டியது அவசியமாகும். மற்ற குறிகள் அனைத்தும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருப்பவை போன்றதே யாகும்.

       புள்ளிகள் பற்றி நீங்கள் கவனக்குறைவாக இருக்கலாகாது. எண், பால் பற்றிய தவறுகளுக்கு அது காரணமாகலாம்.


குறிப்பு :


(1)  है என்பது ஒருமையைக் குறிக்கும். பன்மையைக் குறிப்பதற்கு है யின் மேல் புள்ளியிட்டு हैं  மாற்றவேண்டும். 

(2) ஹிந்தியில் 'आ' வென முடியும் ஆண்பால் சொற்கள் அனைத்தும் பன்மையில் 'ए' யென மாறும்-

लड़का -லட்கா,  लड़के - லட்கே, कमरा -  கம்ரா - அறை, कमरे - அறைகள்.


(3) பன்மையில் '' யென மாறிய சொற்கள் யாவும் ஆண் பால் தான் என்பதை சந்தேகமின்றி நினைவில் வைக்கவும். 


(4) பன்மையில் 'ए' என மாறிய சொற்களை ஒருமையாக்க வேண்டுமானால்'ए'யை 'आ' வென மாற்றவும். 

लड़के - சிறுவர்கள், लड़का - சிறுவன்.


(5) 'இவன்', இவள்', இது' ஆகிய மூன்றையும் குறிப்பதற்கு 'यह' என்றும்; 'அவன்', 'அவள்', 'அது' என்பவற்றைக் குறிக்க 'वह' எனும் ஒரே சொல்லை உபயோகிப்பதால், ஆண் - பெண் என்ற பாகுபாடு அறிய இயலாதே எனும் ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். இவை சுட்டிக்காட்டியே சொல்லப்படும் வாக்கியங்களாதலால் காட்டப்படும் அப்பொருளோ அல்லது நபரோ நம் பார்வையிலிருப்பதால் அவ்வித ஐயம் ஏற்படமாட்டா.


கோபாலனை அவன்', இவன்' என்றும் 

சீதையை அவள் இவள்' என்றும் 

அஃறிணைகளை அது , இது என்றும்  

 தமிழில் உள்ளபடியே ஹிந்தியிலும் குறிப்பிடப்படுகிறது 


यह लड़का कौन है ? இந்தப் பையன் யார்?

यह लड़का राम है । இந்தப் பையன் ராமன்।

यह लड़की कौन है ? இந்தச் சிறுமி யார்?

यह लड़की उमा  है । இந்தச் சிறுமி உமா.

यह क्या है ? இது என்ன?

यह कुत्ता  है । இது நாய்.

यह कुत्ता टामी है । இந்த நாய் டாமி.

 மேலே கண்டவாறு ஒரு பெயர்ச் சொல்லின் முன்பாக यह அல்லது वह  வருமாயின் அவை உரிச்சொற்களாகும். அவற்றிற்கு மட்டும் 'அந்த' அல்லது 'இந்த' எனும் பொருள் ஏற்படும்.


***********



No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...