Thursday, May 27, 2021

👉கட்டளை வினை வாக்கியங்கள்👈 hindi

 

👉கட்டளை வினை வாக்கியங்கள்👈


तुम -நீ,

आप - நீங்கள், தாங்கள்.

कल -நாளை, 

आम - மாம்பழம் 

अमरूद - கொய்யாப்பழம், 

अब -இப்பொழுது, 

सबेरे -காலையில், 

चाय -தேனீர், 

पानी -தண்ணீர், 

गीत  -பாடல், 

वहाँ - அங்கே,

धीरे - மெல்ல.


சில வினைச் சொற்கள்


1.மெய்யில் முடியாத உயிரெழுத்தொலியில் முடியும் 

   சில வினைகள்.

आ - வா      जा -  போ  ला - கொண்டு வா    सो - தூங்கு  सी - தை  

नहा -குளி  गा -பாடு


2.மெய்யில் முடியும் சில வினைகள்


बोल - பேசு          डर  - பயப்படு    मार - அடி    लड़ - சண்டையிடு 

चल - செல்,நட  देख - பார்


கட்டளை வினை அமைப்பு


1. மெய்யில் முடியாத வினைகளுடன் तुम என்பதற்கு 'ओ'வும் என்பதற்கு 'हुए' யும் சேர்க்கவும்.


2.மெய்யில் முடியும் வினைகளின் கடைசி எழுத்துடன் तुम 

   என்பதற்கு 'ओ' ஒலியை இணைக்கவும் आप என்பதற்கு

   'इ'  ஒலியை இணைக்கவும் அத்துடன் 'ए' சேர்க்கவும்.


வினை         तुम            आप


आ                  आओ           आइए

जा                   जाओ          जाइए                           

ला                  लाओ           लाइए

सो                  सोओ           सोइए

नहा                 नहाओ          नहाइए

गा                    गाओ            गाइए

चल                  चलो             चलिए

डर                   डरो             डरिए

बोल                 बोलो            बोलिए

मार                   मारो             मारिए

लड़                    लड़ो            लडिए

देख                   देखो             देखिए


விதிவிலக்கான கீழ்க்காணும் வினைகள் 

பின் கண்டவாறே  அமையும்.

कर   -   செய்         करो             कीजिए

दे    -    கொடு       दो                दीजिए 

पी   -    குடி            पिओ            पीजिए

ले    -   எடு             लो               लीजिए


மேற்கண்ட விதிவிலக்கான 4 வினைகளைத் தவிர

மற்ற வினைகளை விதி 1 - 2 ன் படியே மாற்றவேண்டும்.


கட்டளை வினை வாக்கியங்கள் :


तुम कल आओ । நீ நாளைக்கு வா.

तुम बाज़ार जाओ । நீ கடைவீதிக்குப் போ.

तुम यहाँ आओ । நீ இங்கே வா.

तुम तरकारी लाओ ! நீ காய்கறி கொண்டு வா.

तुम केला लाओ ।  நீ வாழைப்பழம் கொண்டு வா.

तुम सबेरे नहाओ । நீ காலையில் குளி.

तुम एक तमिल गीत गाओ ।  ஒரு தமிழ்ப் பாட்டு பாடு.

मोहन, तुम बाहर जाओ । மோஹன் நீ வெளியே போ.

आप आइए । நீங்கள் வாருங்கள். 

आप अब सोइए நீங்கள் இப்பொழுது தூங்குங்கள்.

आप फल लीजिए । நீங்கள் பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு

 கூடாது, வேண்டாம் என எதிர் மறையாக்க வினையின்

 முன் 'மத்' 'मत ' எனும் சொல்லைச் சேர்க்கவும்.


तुम कल मत आओ । நீ நாளைக்கு வராதே.

तुम बाजार मत जाओ । நீ கடை வீதிக்குப் போகாதே.

तुम चाय मत पिओ । நீ தேனீர் அருந்தாதே.

आप मत सोइए । நீங்கள் தூங்காதீர்கள்.

आप सिनेमा मत जाइए । நீங்கள் சினிமாவிற்குப் போக வேண்டாம்


कल , बाज़ार , तरकारी , केला , सबेरे , गीत , बाहर , फल 


[நாளை ,  கடைவீதி, காய்கறி, வாழைப்பழம், காலையில், பாட்டு, வெளியே,  பழம்]


********************




No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS