Friday, November 5, 2021

எளிய வாக்கியங்கள்  பாடம் 11

 

எளிய வாக்கியங்கள் 
பாடம் 11


          சென்ற பாடங்களில் சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கவும், வினா வாக்கியங்கள் அமைக்கவும், எதிர்மறை வாக்கியங்கள் அமைக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது, குறிப்பாக சென்ற பாடத் தில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் யாவும் தன்னிலை மற்றும் படர்க்கை வாக்கியங்களாகவே அமைந்தன. 

    இப்பொழுது முன்னிலை வாக் கியங்கள் பற்றி நாம் பார்க்கலாம், முன்பே இதுபற்றி நாம் குறிப்பிட்டுள்ளோம்.


முன்னிலை ஒருமை तुम - நீ, நீர். 

முன்னிலை  பன்மை आप- தாங்கள், நீங்கள்.

तुम वहाँ हो ।    நீ அங்கே இருக்கிறாய்.

तुम घर में हो ।   நீ வீட்டில் இருக்கிறாய்.

तुम कहाँ हो ? நீ எங்கே இருக்கிறாய்?

आप वहाँ हैं । தாங்கள் அங்கே இருக்கிறீர்கள்.

आप स्कूल में हैं । தாங்கள் பள்ளியில் இருக்கிறீர்கள்.

आप कहाँ हैं ? தாங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?


                               நிகழ்காலம்

                                    कर - செய் 

ஆண்பால் ஒருமை      ஆண்பால் பன்மை 

मैं करता हूँ ।                                हम करते हैं।

நான் செய்கிறேன்.        நாம் செய்கிறோம்.


तुम करते हो ।                          आप करते हैं।

நீ செய்கிறாய்.                 நீங்கள் செய்கிறீர்கள்


वह करता है।                             वे करते हैं।

அவன் செய்கிறான்.      அவர்கள்     

                                               செய்கிறார்கள்.


यह करता है।                            ये करते हैं।

இவன் செய்கிறான்.    இவர்கள்     

                                            செய்கிறார்கள்.  


मैं करती हूँ ।                                हम करती हैं।

நான் செய்கிறேன்.        நாம் செய்கிறோம்.



तुम करती हो ।                          आप करती हैं।

நீ செய்கிறாய்.                நீங்கள் செய்கிறீர்கள்.


वह करती है।                             वे करती हैं।

அவள் செய்கிறான்.      அவர்கள்     

                                               செய்கிறார்கள்.



यह करती है।                            ये करती हैं।

இவள் செய்கிறான்.    இவர்கள்     

                                            செய்கிறார்கள்.  



           நிகழ்கால விகுதி :

ता  ஆண்பால் ஒருமையைக் குறிக்கும்.

ते ஆண்பால் பன்மையைக் குறிக்கும்.


ती பெண்பால் ஒருமை, பன்மை ஆகிய

     இரண்டையும் குறிக்கும்


இவ்விகுதிகள் வினைச் சொற்களுடன் சேர்க்கப்படும்.


அடுத்து  हो - இரு எனும் வினையும் முன் பாடத்தில் குறிப்பிட்டது போலவே எழுவாயை அனுசரித்து சேர்க்கப்படும்.


பொதுவாக ஹிந்தியில் வினைச் சொல்லின் பகுதி (Root) தொழிற் பெயரின் கடைசி எழுத்தை நீக்கி விட்டால் அமைந்து விடும்.                              

தொழிற் பெயர்ச் சொல்: 

बोलना  - பேசுதல்,  लिखना  - எழுதுதல் 

पढ़ना -படித்தல்,   खेलना - விளையாடுதல்


இது போன்ற தொழிற் பெயர்ச் சொற்களிலுள்ள கடைசி எழுத்தான 'ना' என்னும் பகுதியை நீக்கிவிட்டால் மீதமிருப்பது வினைச் சொல்லின் பகுதியாகும். அத்துடன் வாக்கியத்தின் எழுவாயை அனுசரித்து [ எண்ணுக்கும் பாலுக்கும் ஏற்றவாறு] ता, ती, ते  என்னும் பகுதிகளைச் சேர்த்தால் வினைச்சொல் சரியாக அமைந்து விடும். (உ-ம்)

पढ़ना - पढ़ - வினைப்பகுதி.


लड़का पढ़ता है ।                    लड़के पढ़ते हैं ।

பையன் படிக்கிறான். பையன்கள் படிக்கிறார்கள்.


लड़की पढ़ती है ।                  लड़कियाँ पढ़ती हैं ।

பெண் படிக்கிறாள். பெண்கள் படிக்கிறார்கள்.


सीता पढ़ती है ।                     राम पढ़ता है ।

சீதை படிக்கிறாள்.      ராமன் படிக்கிறான்


நிகழ்கால வாக்கிய அமைப்புப் பயிற்சி













No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...