சிறப்புப் பிரயோகங்கள் - 1
लग - usage
1. लगना - வினையின் சிறப்பு மாற்றம்
लग என்பதற்கு " தொடங்குதல்" என்று பொருளாகும்.
वह क्यों इतनी जल्दी सोने लगती है ?
அவள் ஏன் இவ்வளவு சீக்கிரம் தூங்கத் தொடங்குகிறாள்?
शाम को चिडियाँ चहचहाने लगेंगी ।
மாலையில் பறவைகள் கிரீச்சிடத் தொடங்கும்.
'लगना ' என்பது முக்கிய வினையாகவும் பயன்படுகின்றன.
दीवार पर तस्वीर लगी है।
சுவற்றின்மேல் படம் மாட்டியிருக்கிறது.
'लगाना' என்ற செயப்பாட்டுவினையின் தன்வினை लगना ।
1. முக்கிய வினையாக ' लगना' பல்வேறு அர்த்தங்களில் பயன்படுகின்றன.
कटी हुई ऊँगली पर नमक लग रहा है।
வெட்டுப்பட்ட விரலில் எரிச்சில் ஏற்பட்டுள்ளது.
उसको तो ऐसा रोग लगा कि बस उसकी जान ही ले बैठा । அவனைப்பிடிச்ச வியாதி உயிரையே பறித்துவிட்டது.
वहाँ बैठे-बैठे मेरी आँखें लग गयीं ।
அங்கே உட்கார்ந்து உட்கார்ந்து (உட்கார்ந்து கொண்டே) தூங்கிவிட்டேன்.
सावधान, पैर में कांटा लग जाएगा ।
ஜாக்கிரதை, காலில் முள் தைத்துவிடும்.
कल रात नौ बजे से चन्द्रग्रहण लगेगा ।
நாளை இரவு ஒன்பது மணியிலிருந்து சந்திர கிரஹணம் ஏற்படும்.
पेड पर फल लगे हैं।
மரத்தில் பழங்கள் உள்ளன.
अलमारी में दीमक लग गयी है ।
அலமாரியில் கரையான் பிடித்துள்ளது.
2. துணை வினையாக 'लगना' வரும்பொழுது 'ஆரம்பம்' என்ற பொருளை மட்டுமே தரும்.
वह रोने लगा। அவன் அழத் துவங்கினான்.
वह बोलने लगी । அவள் பேசத் துவங்கினாள்.
वे झगड़ने लगे । அவர்கள் சண்டைபோட ஆரம்பித்தனர்.
3. 'लगना' முக்கிய வினையாகப் பயன்படும் மற்றும் சில உதாரணங்கள்.
इन दो दरवाजों पर परदे लगे हैं।
இந்த இரண்டு கதவுகளில் படுதா (திரை) போடப்பட்டுள்ளது.
वह अपना प्यारा दोस्त है ।
இதன் பொருள் 'அவன் தன்னுடைய பிரியமான நண்பன் " எனவாகும். ஒருவன் தனக்கே நண்பனாக எப்படி இருக்க முடியும் ? ஆதலால் இங்கு பொருந்தாது. அவன் எனக்கோ அல்லது உங்களுக்கோதான் " நண்பனாக இருக்கமுடியும். ஆகவே वह मेरा அல்லது आपका प्यारा दोस्त है। என்றே அமைந்திடும். இங்கு वह வேறு मेरा வேறு.
वह -उसका என்பதுதான் தவறாகக் கொள்ளப்படும்.
तुम्हारा नाम कागज़ पर लिखो ।
உன்னுடைய பெயரைக் காகிதத்தில் எழுது.
இது தவறான பிரயோகமாகும். लिखो என்பதற்கு तुम என்ற எழுவாய்தான் வரும். எழுவாயை அமைத்தால் तुम-तुमहारा என இணைந்துவிடும். ஆகவேதான் तुम अपना नाम कागज़ पर लिखो । என்பது சரியான அமைப்பாகும். नाम என்பது तुम எனும் எழுவாய்க்கு உரியது. ஆதலால் अपना பொருந்தும்.
நமது கருத்தை சொற்றொடர்கள் மூலம் சுருக்கமாகவோ, இணைப்பு வாக்கியங்கள் மூலம் விரிவாகவோ எடுத்துக் கூறத் தக்கவாறு அமைப்புக்கள் உள்ளன.
No comments:
Post a Comment
thaks for visiting my website