Saturday, November 6, 2021

சிறப்புப் பிரயோகங்கள் -2

 

      சிறப்புப் பிரயோகங்கள் -2 

2. जो - வின் பிரயோகம்:

 जो - usage 

வாக்கியங்களை இணைப்பதற்குப் பயன்படக் கூடிய முக்கிய மான ஒரு சொல் 'जो' என்பதாகும், இதன் உபயோகம் விரிவானது. 

जो-வின் பொருள் எவன், எவள், எவைகள் என ஒருமையாகவும், எது, எந்த, எவர்கள், பன்மையாகவும் உள்ளன, 

जो -வுடன் ஏதாவது வேற்றுமை உருபு சேருமாயின் அது ஒருமையில் जिस எனவும், பன்மையில் जिन எனவும் மாற்றம் பெறும். 

जो,जिस, जिन - மூன்றும் ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும் பொதுவானவை. ஏனெனில் இவற்றிற்கு பால் வேறுபாடு இல்லை.வாக்கியத்தின் பயனிலையில் வரும் வினைச்சொற்கள் மூலமே இவற்றின் பால் அறியப்படுகின்றது. (உ-ம்) 

1.जो कल आया था , वह आज भी  आएगा।

நேற்று வந்தவன் இன்றும் வருவான்..

   இது ஓர் இணைப்பு வாக்கியம், आया था  என்று முதல் பகுதியிலும், आएगा என்று இரண்டாம் பகுதியிலும் அமைந்துள்ள பயனிலையை வைத்து जो ஆண்பால் ஒருமை என்று அறியலாம். 


2. जो किताब खरीदी है वह बहुत अच्छी है। 

நீ வாங்கியிருக்கும் புத்தகம் மிகவும் நல்லது.


3. दूसरों के लिए गढा खोदने वाला खुद उममें गिरता है। 

பிறருக்காக குழி வெட்டுகிறவன் தானே அதில் விழுகிறான்.


[இந்த சொற்றொடரை இணைப்பு வாக்கியமாக கீழே தந்துள்ளோம்]

जो दूसरों के लिए गढा खोदता है, वह खुद उसमें गिरता है। - 

खोदता है தோண்டுகிறான். என்பதை வைத்து

जो - ஆண்பால் என்பதை அறியவும்.


கவனிக்க:


जो வரும் வாக்கியத்தைச் சார்ந்து வரும் மற்றொரு வாக்கியத்தின் எழுவாய்  ஒருமையாயின் वह என்றும், பன்மையாயின் वे என்றும் அமையும்.


जो आदमी तुमको पुस्तकें देते हैं, वे कहाँ रहते हैं ?

எந்த மனிதர் உங்களுக்கு நூல்கள் தருகின்றாரோ அவர் எங்கே வசிக்கிறார்?


जो என்பது எந்த மனிதர்கள் என்ற பொருளையும் தரும். அப்பொழுது वे அவர்கள் என்று பன்மையாக மாறும். वे அவர் மரியாதைக்குரியவராக மேலே உள்ள வாக்கியத்தில் வந்துள்ளது.


जिन लोगों ने गाडी खरीदी, उन्हीं लोगों ने बैल भी खरीदे। 

எந்த மனிதர்கள் வண்டியை வாங்கினார்களோ, அவர்களே தான் மாடுகளையும் வாங்கினார்கள்.


जो - ஏன் जिन என்று மாறியுள்ளது? ஏனென்றால் लोग ने  என்ற முதல் வேற்றுமை உருபைத் தழுவியதால் जो- जिन  என்று மாறியது. இதேபோன்று वे என்பது उन எனமாறி उन लोगों ने  என்றே அமைதல் வேண்டும். ஆனால் वे - யுடன் "ही" தானே எனும் சொல் சேரவேண்டியிருப்பதால் उन என்பது उन्हीं என மாற்றம் பெற்றது, उन्हीं लोगों ने  -அதே மனிதர்கள் தான், எனும் பொருள் தருகின்றது.


जो -जिस ,  वह - उस +ही = उसी

जो जिन,  वे - उन + ही - उन्हीं 


जिस घर में हम रहते थे, वह वहाँ है।

நாங்கள் குடியிருந்த வீடு அங்கே இருக்கிறது.


जिनके पास प्रमाण पत्र है, वे मात्र अंदर अवे ।

யாரிடம் சான்றிதழ் உள்ளதோ அவர்கள் மட்டும் உள்ளே வரலாம்.


குறிப்பு:

         जो எனும் சொல்லை கேள்விக்குப் பயன்படுத்தக்கூடாது. வினா வாக்கியங்களுக்கு कौन , क्या , என  ''क'' - வில் தொடங்கும் சொற்களையே உபயோகிக்க வேண்டும்.


பின்வரும் சொற்களும் இணைப்பு வாக்கியங்களுக்கு உபயோகிகக்படுகின்றன.


जब - எப்பொழுது     ---     तब-அப்பொழுது.


जब पानी बरस रहा था, तब मैं बाजार में था । 

மழை பெய்து கொண்டிருந்தபோது நான் கடைவீதியில் இருந்தேன்.


जहाँ  - எங்கே ---   वहाँ-அங்கே

जहाँ प्रेम है वहाँ भगवान है ।

அன்பிருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறார்.


जितना -எவ்வளவு ----   उतना -அவ்வளவு

 जितना चाहो उतना खाओ ।

எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சாப்பிடு.


तुम जितना व्यायाम करोगे उतना स्वास्थ्य लाभ पाओगे । 

நீ எவ்வளவு தேகப்பயிற்சி செய்வாயோ அவ்வளவு ஆரோக்கியம் பெற்றிடுவாய்.


जितने रुपये मैंने दिये उतने वापस मिल गये । 

நான் எவ்வளவு ரூபாய் கொடுத்தேனோ அவ்வளவு திரும்ப கிடைத்துவிட்டன.


जितनी मालाएँ वहाँ हैं उतनी खरीदो ।

அங்கு எவ்வளவு மாலைகள் இருக்கின்றனவோ அவ்வளவு வாங்கு.


இதுபோல்:


जैसा ,जैसे ,जैसी  - எப்படிப்பட்ட, 

वैसा , वैसे, वैसी - அப்படிப் பட்ட என்றும், 

जैसे  - எப்படி (வினை உரிச்சொல்), 

वैसे  - அப்படி என்றும், 

जो (अगर போன்று நிபந்தனையைக் குறிக்கும்) 

तो - ஆல் என்பவையும் இணைந்து இணைவாக்கியங்கள் அமைகின்றன. 

(உ-ம்)

जो तुम चाहो , तो जा सकते हो। 

நீ விரும்பினால் போகலாம்.

(अगर तुम चाहो तो जा सकते हो ।) 


जो आप मुझ से पूछते तो मैं ज़रूर कहता ।

நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், நான் கட்டாயம் சொல்லியிருப்பேன்.


குறிப்பு:


நிபந்தனையைக் குறிப்பிடும் வாக்கியங்களில்

 முதல் வாக்கியம் अगर ,यदि , जो - வெனத் துவங்கும்.

 இரண்டாவது வாக்கியம் तो-வெனத் துவங்கும்.

 ''तो ''- விற்கு தமிழ்போல் "ஆல்" என்ற பொருள் வரும். 

நிபந்தனை வாக்கியத்தின் முன்னால் जो,अगर, यदि ஆகிய சொற்களை விட்டுவிடவும் செய்யலாம். 

ஆனால் ''तो"-வை விடலாகாது. 

(உ-ம்)

तुम चाहो तो जा सकते हो ।

आप मुझसे पूछते तो मैं ज़रूर कहता ।


    வினா வாக்கியங்களில் कब, कहां, कितना, कितने, कितनी, कैसा , कैसे, कैसी ஆகிய சொற்களையே உபயோகித்தல் வேண்டும். 

இணைச் சொற்களை உபயோகிக்கக் கூடாது.


मैं आपके साथ घर चलूँगा।

मेरे घर के पास एक आम का पेड़ है । இந்த வாக்கியங்களில் 'के' வேற்றுமையைத் தொடர்ந்து साथ, पास ஆகிய சொற்கள் தொடர்பை வெளிப்படுத்துகின்றன. சில இடைச் சொற்களின் முன் की உருபு வரும்.

      ஆனால் சில இடைச் சொற்களின் பிரயோகம் ஐந்தாம் வேற்றுமை உருபான 'से' உடன் சேர்ந்தும் காணப்படும். 

(உ-ம்)

तुम अब घर से बाहर मत जाओ । 

நீ இப்பொழுது வீட்டிலிருந்து வெளியே போகாதே.


देखो, घर के बाहर कौन खडा है ?

வீட்டிற்கு வெளியே யார் நிற்கிறான் என்று பார்.


बोलने से पहले खूब सोचो ।

பேசுவதற்குமுன் நன்றாக யோசி.


यह सब करने के पहले सोचना चाहिए था।

செய்வதற்கு முன் இது பற்றி எல்லாம் யோசித்திருக்க வேண்டும்.

சில நேரங்கள் உருபு இல்லாமல் கூட இடைச் சொற்கள் வாக்கியங்களில் பயன்படுகின்றன.


पीठ पीछे किसी की निन्दा मत करो । 

யாரையும் முதுகிற்குப் பின்னால் நிந்திக்காதே.


सोचे बिना बात मत करो । 

யோசியாமல் பேசாதே.


बिना बुलाये क्यों यहां आते हो ? 

அழையாமல் ஏன் இங்கே வருகிறாய்?


सिवा राम के कौन यह काम कर सकता है ? 

ராமனைத் தவிர வேறு யார் இப்பணியைச் செய்ய இயலும்? 

कमरे में उनके अलावा और कौन हैं ? 

அறையில் அவர்களை விடுத்து வேறு யார் இருக்கிறார்கள்?

सिवा राम के  - என்பதை கவனிக்கவும். के - பெயர்ச் சொல்லை அடுத்து வந்துள்ளது. (இப்படியும் கூறலாம்]


कई ओर  - நோக்கி, பக்கமாக

समुद्र की ओर कौन जाता है ?


கவனிக்கவும்:


எண்ணிக்கையைக் குறிக்கும் உரிச்சொல்

தழுவுமாயின் की -என்பது எப்பொழுதும் 'के' என்றுதான் அமையும்.

काबुल नगर के चारों ओर मुजाहिदों ने घेर लिया। 

காபூல் நகரின் நான்கு புறங்களையும் முஜாஹீத்கள் வளைத்துக் கொண்டனர்.


घर के दोनों ओर खाली ज़मीन है ।

வீட்டிற்கு இரு புறமும் காலி மனை உள்ளது. 

சில இடைச் சொற்கள் வினை உரிச் சொற்களாகவும் பயன் படுத்தப்படுகின்றன. 


இடைச்சொல்

हम छत के ऊपर सोते हैं ।

நாங்கள் மாடி மீது தூங்குகிறோம்.

तोता पेड़ के नीचे गिर पड़ा । 

கிளி மரத்தின் கீழே விழுந்துவிட்டது.


வினை உரிச்சொல்

ऊपर मत चढो ।

மேலே ஏறாதே.

तोता नीचे गिर पड़ा । 

கிளி கீழே விழுந்துவிட்டது.


'के'இல்லாமல் சில நேரங்களில் பயன்படுத்தப் படுகிறது.


नीचे लिखे अनुसार - கீழே எழுதியுள்ளபடி. 

केशव द्वारा -கேசவன் வாயிலாக.

के सामने , के आगे  - முன்னால் --- >மிகவும்

கவனமாக பிரயோகிக்கப்பட வேண்டிய இடைச் சொற்களாகும். வழக்குச் சொல் அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.


முன்னால்:

इस राजा के सामने प्रजा कांपती हैं ।

இந்த அரசனுக்கு முன்னால் மக்கள் நடுங்குகின்றனர்.


ஒப்பீடு :

शेर के आगे बिल्ली क्या है ? 

சிங்கத்தின் முன் பூனையா?


முன்பு (இடம்):


चोर न्यायाधीश के सामने खडा है

திருடன் நீதிபதி முன்பு நிற்கிறான்.

 (in the Presence of) 


மேற்கொண்டு:

आगे की कहानी सुनो । 

மேற்கொண்டு கதையைக் கேள்.


முன்பாக:

आगे की पंक्ति में राम खडा है । 

முன் வரிசையில் ராமன் நிற்கிறான்.


முன்னால் (நேரம்) :

सेलम जाने से पहले मुझ से मिलो।

சேலம் போவதற்குமுன் என்னைச் சந்தி. 


**************











No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...