காதம்பரி
"கதாம்பரி'' என்பது பாணபட்டரின் பிறிதொரு நூல் ஸம்ஸ்க்ருத உரை நடை இலக்கியத்தில், இது ஒரு தலை சிறந்த சுவைமிகுந்த நூல். இதன்கண், (1) பூர்வார்தம் (முற்பகுதி) எனவும், (2) உத்தரார்தம் (பிற்பகுதி) எனவும் இரு கூறுகள் உள்ளன. இதனை ஊன்றி ஓதும் ஒருவனும் உவகை உறாமல் இருக்க இயலாது. எவ்வாறு நோக்கினாலும் அதனது பேரெழில், எடுத்துரைக்கும் தன்மையது அன்று பாணர் எதனைத் தொட்டாலும் அதனை அழகுறச் செய்யா மல் விட்டார் என்பதில்லை. வியன்பெரு விந்தியத்தின் கவின் கெழு காடுகளின் வருணனை, சபர-சேனையின் பேரச்சத்தை விளக்கும் சித்திரம், ஜாபாலி முனிவரின் தோற்றப் பொலிவு அவரது தூய இருக்கையின் எழிற்கோலம் என்ற இவை யாவும் இணையற்று இலங்குகின்றன. ஒருவயினே (பக்கத்தில் இடத்தில்), வனங்கள் உபவனங்கள், மலைகள், ஆறுகள் முனிபுங்கவரின் துங்கமான ஆச்சிரமங்கள் என்றவற்றில் வருணகள பொற்புடன் புன்னகை பூத்து பொலிகின் யற்றெருவயினே, சிறப்புறப் பொறிக்கப்பட்டுள்ள, ஹாரீத), ஜாபாலி, தரராபீடன், சுகராசர், மஹாஸ்வேதா, காதம்பரி முதலியோரின் வாழ்க்கை வரலாறும் ஒப்பும் உயர்வும் இல்லாமல் ஒளிர்கின்றது.
இப்பெருநூலைப் படித்தபின்னர், பாணபட்டர், கலைமகளின் (சரஸ்வதியின்) பேரருளுக்குப் பாத்திரமான அருங் குமரன் என்பது நன்கு புலப்படும், ஆராய்ச்சித் துறையிற் சிறந்த பண்டைய ஆன்றோரெல்லாம் இதனையே வலியுறுத்தி வந்துள்ளனர். கோவர்த்தனாச்சாரியர் என்பார் பாணபட்ட ரை, கல்விக்கு இறைவியாகிய கலைமகளின் அவதாரம் என்றே கருதுகிறர். அவர், பின்வருமாறு கூறியுள்ளார் : * प्रागरभ्यमचिकमामु बाणो वाणी बभूवेति " । அதாவது, பெரும் - புகழைப் பெறவேண்டும் என்ற தன் பெருவிருப்பினால் வாணி (கமைகள், ஸரஸ்வதி) ஆனவள், பாணரது வடிவத்தை யடைந்தாள்.
கதாஸாரம்
விதிசா நகரத்தில், பெரும் பேரும் புகழும் படைத்த சூத்ரகன் என்னுமோர் அரசன் இருந்தான் அவனது பேரவைக்கு, தீண்டாதவர் இனத்தைச் சார்ந்த பேரெழில் படைத்த நங்கை ஒருத்தி, தன்கையில், "வைசம்பாயனன் '' என்னும் பெயருடைய கிளியைத் தாங்கி வருகிருள். கிள்ளையோ மக்களைப் போலப் பேசுகிறது : தன்னுடைய அக் அறிவுரைகளால் கேட்டார் உள்ளங்களைப் பிணிக்கின்றது.
இக்கிளி, காதம்பரியின் கதையைத் தொடங்குகிறது அதுவோ மிக நீண்டதொரு கதை அதுவும் ஒரு பிறப்பைப் பற்றியதும் அன்று ; சந்திராபீடன், புண்டரீகன் என்றவர் களுடைய தொடர்ச்சியான மூன்று பிறப்புக்களுடன் தொடர்புடையது இக்கதை இக்கதையுடன் வைணம் பாயனனுக்கும் தொடர்பு உண்டு கதையின் போக்கில் ஜாபாலி கூறியதாக, சந்திராபீட மன்னன், அவனது நண்பன் வைஸம்பாயனன் என்றவர்களுடைய கதை வருகிறது. தனது வெற்றிச் செலவிடையே, மன்னன் சந்திராபீடன் இமயமலைப் பிரதேசத்தை யடைகின்றான். அங்கு அவன் கின்னர தம்பதியரைக் காண்கின்றான் ; கண்டு அவர்களைப் பின் தொடர்கின்றான். அக்கின்னா இணை மறைந்துபோய் விடுகிறது. மன்னன், " அச்சோத" என்னும் திவ்யதடா சுத்தையடைகிறான். அண்மையிலிருந்த ஒரு மரத்தில் தன் குதிரையைக் கட்டிவிட்டு, சிவபெருமானது தூய கோயிலை நோக்கிச் செல்கிறான். அக்கோயிலில் வீணாகானம் பண்ணிக்கொண்டிருந்த மஹாஸ்வேதாவைக் காண்கிறான் ; அவளது இனிய இசையைச் செவிமடுத்து, அங்கேயே இனப்பாறத் தங்கிவிடுகிறான். அங்கு மஹாஸ்வேதாவின் பழக்கம் ஏற்படுகிறது ; பின்னர் அவளது தோழி காதம்பரி யைக் கண்ணாரக் காண்கின்றான்.
சந்திராபீடனும் காதம்பரியும் தத்தம் எழில் உருவங் களாலும் பிற குண கலங்களாலும் ஒருவர்க்கொருவர் ஈர்க்கப் படுகின்ற னர். எனினும், அவர்களது அன்பு, இறுதி எல்லையை எய்து முன்னரே, மன்னவன், தன் தலைநகரான உஜ்ஜயினிக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறான். இங்கு மூங்கிலினாலியன் ற வெற்றிலைப் பெட்டியைத் தாங்கும் பத்ர லேகா என்பவள் காதம்பரியின் மெய்க் காதற் செய்தியைத் தாங்கி வருகின்றாள்.
இங்கு, இதன் முதற்பகுதி முடிகிறது. இம் முதற்பகுதி முழு நூலின் (2/3) மூன்றில் இரு பங்காகும் முதற் பகுதியை மட்டுமே பாணர் தீட்டினார், எஞ்சிய பிற்பகுதியை, முழு நூலின் மூன்றில் ஒரு பங்கை பாணரின் மகனார் புலிக் பட்டனார் எழுதினார்.
இரண்டாவது (பிற்) பகுதியில், சந்திராபீடன், மஹாஸ் வேதாவின் மாட்டுத் திரும்ப வருகிறான். அங்கு அவன் தன் நண்பன் வைஸம்பாயனனுக்கு நேர்ந்த பேரிடர்ப்பாட்டுச் செய்தியை அறிகிறான். வைஸம்பாயனன், மஹாஸ்வேதா வுடன் தன் காதற்றொடர்பினை நாட்ட முயல்கின்றான், ஆனால் அவன் அம்முயற்சியில் வெற்றியைப் பெற்றிலன். அவன் தவக்கோலந்தாங்கியுள்ள மஹாஸ்வேதாவின் சுடுஞ்சினத் திற்குப் பாத்திரமாகி, கிளியின் வடிவத்தை அடைகின்றான். சந்திராபீடன் தன் நண்பனுக்கு உற்ற துன்பநிலையைப் பொறானாய் உள்ளம் உடைந்துத் தன் உடலை நீத்து விடுகிறான், இத்துன்பச் செய்தியைச் செவியுற்ற காதம்பரி ஆண்டுவந்து, சந்திராபீடனின் பிரிவாற்றாமையினாற் பெரிதும் புலம்புகிருள். சந்திராபீடனின் அன்னை விசாலவதியும் தந்தை தாராபீடனும் இப்பரிதாபச் செய்தினால் மிகவும் கைந்து புண்பட்ட உள்ளத்தினர் ஆகின் றனர். இஃதுடன் ஜாபாலியின் கதை முடிவடைகிறது.
கிளிவடிவத்திலுள்ள தன் நண்பனை (மந்திரிமகனான வைஸம்பாயனன) நாடி, கபிஞ்ஜலன், ஜபாலி முனிவரது ஆச்சிரமத்திற்கு வருகிறான் ; வந்து, தன் நண்பனுக்கு நேரிட்ட துன்பநிலை குறித்து உள்ளம் நொந்து மிக வருந்து கிறான். அக்கிளி, பறந்து சென்று, ஒரு சண்டாளனை அடைகிறது. அதனை, அவன் தன் மகளுக்கு அளிக்கிறான். அச்சண்டாள மகள், அச்கிளியை யுடன் கொண்டு, சூத்ரக மன்னனுடைய அவை (சபை)யை அடைகிறாள். உண்மை யை உற்றுணருங்கால், அச் சண்டாள மகள், புண்டர் கனுடைய தாய், லக்ஷ்மியே என்பது புலப்படாநிற்கும். புண்டரீகன் அப்பிறப்பில் வைஸம்பாயனன், இப்பிறப்பிற் கிளி எனவுங் கண்டு கொள்க.
சூத்ரக மன்னன், முற்பிறப்பிற் சந்திராபீடன் ஆவான் அவன், முன்னொரு காலத்திற் சந்திரனாய் இருந்து, யாதோ வொரு சாபங் காரணமாக விண்ணுலகம் நீத்து, மண்ணுல கத்திற்கு வரநேர்ந்தது. லஷ்மி மறைந்து விடுகிறாள் ; சூத்ரகனுடையவும் கிளியினுடையவும் சரீரங்கள் கீழே விழுந்துவிடுகின்றன. இதன் விளைவாக, ஆண்டுக் கீழே வீழ்ந்து மாண்டுக் கிடந்த சந்திராபீடனின் உடல் மீண்டும் உயிர்பெற்று எழுகின்றது; புண்டரீகனும் வானத்திலிருந்து புவியில் இழிந்து வருகின்றான்.
புண்டரீகனும் மஹாஸ்வேதாவும் முகமலர்ச்சியுடன் மன மகிழ்ந்து ஒன்றுபடுகிறார்கள் ; அவ்வாறே சந்திராபீடனும் காதம்பரியும் உள்ளத்து உவகையோடு ஒருமைப்பாட்டை எய்துகின் றனர். இவ்விரு :தம்பதிகளும் தங்காலத்தைக் களிப்புடன் கழித்து மட்டில்லாத மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்.
வேறு நூல்கள்
ஹர்ஷ சரிதம் '', "காதம்பரி'' என்றவை போக பாணரியற்றிய இருநாடகங்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று , பார்வதி-பரிணயம் எனப்படும் மற்றொன்று முகுடதாடி தகம்” ( சாக) என்று கூறப்படும்.
பார்வதி.பரிணயம் என்பது உலகத்துக்கெல்லாம் மாதா - பிதாக்களாகிய பார்வதி - பரமேஸ்வரர்களுடைய புனிதத் திருமணத்தை இனிதாகப் பேசும் அழகிய நாடக மாகும். இந்நாடகத்தில் காளிதாஸருடைய " குமார சம்ப வத்தின் '' தெள்ளிய சாயைகளும் ஒள்ளிய குறிப்புக்களும் காணப்படுகின்றன.
இது பாணருடைய நூலாகுந் தன்மையுடையது அன் எனவும், பின்னர், இப்புலவர் பெருந்தகையாரின் பெயராகி “பாணபட்டர் " என்ற பெயரையே தனக்கும் பெயராகம் பெற்று, பதினேழாம் நூற்றாண்டிடையே வாழ்ந்த தென்னாட்டுக் கவிஞர் ஒருவரால் இஃது இயற்றப்பட்டதா இருத்தல் வேண்டும் எனவும் சில அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இங்ஙனமே ' முகுடதாடிதகத்தைப் பற்றியும் கல்வியாளர்களிடையே கருத்து வேறுபாடு உளது. எனினும் “நளசம்பு" ("नल चम्पू") விற்கு வரையப்பட்டுள்ள வ்யாக் யாகத்தில் (உரையில்), ஜைனப் புலவர்களான சந்த்ர பாலரும், குணவீஜயமணி என்பாரும், “ இங்நாடகம் பாணர் இயற்றியது 'என்றே கூறியுள்ளனர் இக்கூற்றுக்குச் சான்றாக, அந்நூலிலிருந்து ஒரு செய்யுளும் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது, ஆனால் இதைத் தவிர, * முகுடதாடிதக:" என்னும் நாடகத்தின் பெயர் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை பாணருடைய நூல் என ஏற்றுக்கொள்வது ஐயத்திற்கு இடந்தருவதாகும்.
தமது “ ஸம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு என்னும் நூலில், ஸ்ரீயுத பஏதேவ உபாத்யாய என்பவர், பாணபட்ட ருடைய இயற்கை வருணளையைப் பற்றியும், காதம்பரியின் இலக்கியச்சுவை, உணர்ச்சித் ருறம் என் றவற்றைப் பற்றி யும், பாணரின் நடையின் போக்கைப் பற்றியும் மிக கப் பின்வறுமாறு கூறியுள்ளார்: அழகா
இயற்கை வருணனை (காட்சி)
காதம்பரி "யில் இயற்கைக் காட்சி அருங்கவினை யும் பெருங்களிப்பினையும் ஊட்டவல்லதாய்த் தீட்டப்பட்டுள்ளது. சம்ஸ்க்ருதத்தில், சில கவிஞர் பெருமக்கள், இயற்கை அன்னையின் மதமான, இனிய தோற்றத்தை மட்டும் விளக்குவதில் ஆற்றல் படைத்தவர்களாகக் காணப்படு கிருர்கள் : பின்னுஞ்சில கவிஞர், இயற்கையின் பயங்கரமான தோற்றத்தையும், அச்சத்தை நல்கும் கோலத்தையும் புலப்படுத்துவதிரிலேயே தங்கருத்தைச் களாகக் காணப்படுகிறார்கள். செலுத்தியவர் ஆனால், பாணபட்டரின் மாட்டுக் காணப்படும் தனிப்பட்ட மாண்பு என்னவெனில் இயற்கையின் புன்னகையோடு மிளிரும் இனிய, சௌம்ய, அமைதியான நலங்களையும், அஞ்சா நெஞ்சத்தவரும் அஞ்சத் தக்க கோரக் காட்சிகளையும் அருந்திறம்படத் தீட்டி அதனால், இருவகையிலும் ஒத்த வெற்றியைப் பெறும் பெற்றியது என்க. இவற்றைப் பின்னும் அழகுறவும் திறம்படவும் அமைப்பதற்கு, கவிஞர் பெருமானார், பலதிறப் பட்ட அணிகளின் துணையைப் பேணுகிறார் உவமை தற்குறிப்பேற்றம் (உதப்ரேக்ஷா), முரண், பரிசங்க்யானம் என்ற பல்வகை அணிகளால் ஆக்கப்பட்ட தூணை எழுப்பி, தாம் வருணிக்கப் புகுந்த பொருள்களின் விழுமிய காட்சி யினைக் காண்பார் முன் நிறுத்திக் களிப்பூட்டுகின்றார் கவிஞர் விந்தியக்காடுகளின் நடுக்குறச் செய்யும் தோற்றத்தைத் திறம்படத் தீட்டிய முறை பெரிதும் வியக்கத் தக்கதே.
விந்தியக்காடு, ஹிமவானின் மகளாகிய பார்வதியைப் போல, ஸ்தாணுவுடன் கூடியதாகவும் (ஸம்ஸ்க்ருதத்தில் சீஸ்தாணு' என்ற சொல்லுக்கு (1) சிவன் (சங்கரன்) என்றும், (2) மரம் என்றும் இரு பொருள்கள் உண்டு. பார்வதியுடன் சிவபெருமான் இருப்பது போல, விக்தியக்காடு மரங்களுடன் இருக்கிறது என்ற நயம் தோன் றுமாறு கண்டு கொள்க. பிற நயங்களையும் இவ்வாறே உற்றுநோக்கி யுணர்ந்து உவகை பூத்து இன்புறுக.) மிருகபதியினால் (मृगपति:) சிம்ஹம், சிவபெருமான்) சேவிக்கப்பட்டதாகவும் விளங்குகிறது ஜானகியைப் போல லவ-குசங்களை கொடுக்கிறது. (ஜானகியம்மையார் லவ-குசர்களை ஈன்றுள் விந்தியக்காடு "குசம் '' என்னும் தூய புல்லின் ( சிறு துணுக்கு (துண்டுகளை உண்டாக்குகிறது (கொடு கிறது). சீதா பிராட்டியார் நிசாசரர்களால் (அரக்கியர்களால் சூழப்பட்டவராக இருக்கிறார்; அங்ஙனமே விந்தியக்காடும் நிசாசரர்களால் (இரவில் சுற்றித் திரியும் பேய் பிசாசு திருடர்கள் நரிகள், கொடிய பாம்புகள் வற்றல்) சூழப்பட்டதாக இருக்கிறது முதலிய சில சமயங்களில் விந்தியக்காடு, நறுமணம் வாய்ந்த சந்தனம், புனுகு என்ற வற்றை அணிந்து, அகில், திலகம் என்றவற்றைப் பூண்டு காதலனது வருகைக்குக் காத்திருக்கும் காதற்கிழத்தியின் தோற்றத்தை நல்குகிறது. (காட்டிடையே சந்தன மரங்கள் உண்டு : " திலகம் '' என்னும் சொல், (1) நெற்றியில் அணியும் பொட்டு, முதலிய குறிகளையும் (2) மரத்தையும் சுட்டும் இளங்காற்றினால் அசையும் இளந்தளிர்கள் மெல்ல வீசி அக்காதற் கிழத்தியின் களைப்பினைப் போக்கு வது போலக் காணப்படுகின்றன.
அமைதியும் ஆனந்தமும் அழகும் சொட்டும் வண்ணம் குறிப்பிடப்பட்டுள்ள ஜாபாலியின் ஆச்சிரம வருணனையைப் படிப்போரின் உள்ளங்கள், தபோவனத்தின் சீரிய தோற்றத் தால் ஈர்க்கப்படாமல் எங்ஙனம் இருக்கமுடியும் ? காவ்யத் திற்கு இன்றியமையாத எல்லா இயல்புகளையும் ஒருங்கே அமைத்து, கவிஞர் நம் கண்களின் முன்னே இணையற்ற இனிய எழிலார்ந்த சித்திரக் காட்சியை யன்றே படைக்கின்றார் வலிமையற்றவர்களாய், விழியிழந்தவர்களாய், துறவியர், வழியறியாது தட்டுத்தடுமாறி ஆச்சிரமங்களின் உள்ளே செல்லும் காலத்திலும், வெளியே வரும்பொழுதி லும், தங் கைகளிற் கோல்களைத் தாங்கி, அவர்களுக்கு வழி காட்டியுநவம் கட்பு கலஞ்சென்ற நாங்குகளின் கோலக் காட்சியை காம் ஒரு காலமும் மறக்கவே இயலாது. परिचित शाखः मृग-कराकृष्ट-यष्टि- निष्कास्यमान प्रवेश्यमानजरदन्धतापसम। ".
பருவங்களின் வருணனையும் ஆழ்ந்த கருத்துடனேயே செய்யப்பட்டுள்ளது. விடியற்காயுைம் ஞாயிறு மடியும் மாலையும், எங்கும் படரும் இருளும், திங்களின் ஒளியும் இவைபோன்ற பலவகைப்பட்ட இயற்கைக் காட்சிகளும், சீரிய சுவையோடும், கனிந்த கருத்தோடும் உண்மைக்குச் சேரவும் திறம்படக் கையாளப்பட்டுள்ளன.
அச்சோத (अच्छोद) தடாகத்தின் சித்திரம், பொருள் களைக் கூர்ந்து நோக்கி அவற்றை யுள்ளவாறு உரைக்கும் கவிஞர் பெருமான் பேராற்றலுக்குச் சான்று பகர்கின்றது. காற்றினால் அசைக்கப்பட்ட நீர் அலைத்துளிகளின் மீது சூரியனுடைய கிரணங்கள் படுவதால் எண்ணிறந்த வான வில்கள் எழிலுறத் தோன்றும் என்பதைக் கவிஞர் நன்குணர்வார். கரைகளின் மீது வளர்ந்துள்ள கதம்ப மரங்களிலிருந்து குரங்குகள் தாவிக் குதிப்பதை வருணிப்பது இயல்பான நிகழ்ச்சி . (तट - कदम्ब- हरिकृतजलप्रपात - क्रीडम् ।")
தடாகத்தின் தெளிவைப் புலப்படுத்த, பாணர், உவமைகள் செறிந்த நீண்டதொரு பங்க்தியை (வரிசையை) நம்முன் நிறுத்துகிறார்.
" अद्य परिसमाप्तमीक्षणयुगलस्य द्रष्टव्यदर्शनफलम् , आलो कितः खलु रमणीयानामन्तः, दृष्टः आह्लादनीयानामवधि:, वीक्षिता मनोहराणां सीमान्त-लेखा, प्रत्यक्षी कृता प्रीतिजननानां परिसमाप्तिः विलोकिता दर्शनीयानामवसानभूमिः "
இதைக் காட்டிலும் மகிழ்ச்சியை நல்கும் எழில் வாய்க்க சொற்களின் அமைப்பு வேறு எங்கேனும் காணக்கூடுமோ?
காதம்பரி - அதன் கலைத்திறன் (கலாபாரம்) (இலக்கியச்சுவை)
பாணருடைய காதம்பரியில், பலதிறப்பட்ட பொருள்களின் வருணனை, இயற்கையின் அழகான, அஞ்சத்தக்க வருணனைகளைப் போலவே, கருத்தைக் களிப்பித்துக் கரம் கூடியதாகக் காணப்படுகிறது. தம்முடைய வருணனைகள் சாய தோற்றமுடையவைகளாகவும், கன்கு இணைக்கப்பட்ட வைகளாகவும் அமைய வேண்டியும், தம்முடைய ரபாலக் களுக்குச் செழுமையூட்டவேண்டியும், பாணர், உவமை உத்ப்ரேக்ஷை, சிலேவை, விரோதாபாஸம் போன்ற அணிகளைத் திறம்பட அமைத்துள்ளார். எனினும், அவர், பரிஸங்க்யானம் என் னும் அணியைக் கையாளுவதில், தலைசிறந்தவர் (கைதேர்ந்தவர்) ஆகக் காணப்படுகிறார், பரிஸங்க்யானத்தை ஸ்லேஷையோடு எத்துணைத் திறமை யோடு பாணர் பயன்படுத்தியுள்ளாரோ அத்துணைத் திறமை யோடு நயந்தோன்ற வேறெந்தக் கவியாவது கையாண்டுள் ளாரோ என்பது பெரிதும் ஐயத்திற்கு இடமானதே. அணி களின் ஆட்சிமுறை பாணரது உரை நடைக்குத் தனிப்பட்ட உணர்ச்சி, உயிர், ஒளி என் றவற்றை அளித்துள்ளது, தமது “ ஹர்ஷ சரிதத்தில் "பாணரே குறிப்பிட்டாங்கே ஒரு சிறந்த (எடுத்துக்காட்டாக இலங்கும்) நூலுக்கு அமைய வேண்டிய எல்லா இயல்புகளும், இவருடைய உரை நடை நூலிடையே தெள்ளத் தெளியக் காணப்படுகின்றன. புத்தம் புதிய பொருள்களை (அர்த்தங்களை) நல்க வல்ல சீரிய சொற்களின் சேர்க்கை, வாழ்க்கையோடு பொருந்திய பொருள்களைப் புகலப் பயன்படுத்தும் விழுமிய மொழிகள் தெள்ளிய ஸ்லேஷைகள், ரஸங்களரின் கம்பீரமும் தெளிவும் உடைமை, கன்மொழிகளைப் புணர்த்தும் எழிலுடைமை என்றவையெல்லாம் காதம்பரியை ரசங்களின் சீரிய இருப்பிடமாக, எடுக்க எடுக்கக் குறையாத கருவூலமாக (பொக்கிஷமாக) ஆக்கியுள்ளன. அவர் ஸ்லேஷா அணியைக் கையாளும் திறமை, சம்பகமலர்களோடு மல்லிகை மலர்களையும், இணைத்துக் கோத்த மலர்மாலையைப் போல, உள்ளத்திற்குப் பேருவகையை ஊட்டுவதாகும் : निरन्तरं पधना: सुजातयो महास्रजश्चम्पक- कुड्मलैरिव". " ரஸநோபமா " ("रसनोपमा") இதற்கு, இது எவ்வளவு இன்பந்தரும் எழிலுடைய எடுத்துக்காட்டு (உதாரணம்) ஆகின்றது:
"क्रमेण च कृतं मे वपुषि, वसन्त इव मधुमासेन,
मधुमास इव नवपल्लवेन, नवपल्लव इव कुसुमेन,
कुसुम इव मधुकरैण, मधुकर इव मदेन नवयौवनेन प्रमदम् ॥"
பரிஸங்க்யானம் என்னும் அணியைப் பாணர் எத்துணைத் திறம்பட ஆண்டுள்ளார் என்பதற்கு ஏற்ற இனிய எடுத்துக்காட்டு, ஜாபாலி முனிவரின் தூய இருக்கை யைக் கூறுங்கால், அவர் தீட்டித் தந்துள்ள அழகொழுகும் சித்திரமே ஆகும். அது பின்வரும் மேற்கோளினால் இனிது புலப்படும். அப்பகுதி கற்றறிந்த கவிஞர், புலவர் பெருமக்கள் உள்ளங்களுக்குக் கழிபெருங் களிப்பைப் பல்காலும் நல்காமல் எவ்வாறு இருத்தல் இயலும்?
"यत्र च महाभारते शकुनिवधः पुराणे वायुप्रलपितम्, वैयः- परिणामे द्विजपतनम् , उपवन-चन्दनेषु जाड्यम्, अदीनां भूति मत्वम् , एणकानां गीत-व्यसनं, शिखण्डिनां नृत्यपक्षपातः, भुजङ्ग- मानां भोगः, कपीनां श्रीफलाभिलाषः, मूलानामघोगतिः ।"
மஹாபாரதத்தில் சகுனி கொல்லப்பட்டான், (வேறெங்கும் பறவைகளின் கொலை நிகழவில்லை (1) शाकुनि : துரியோதனன் முதலியோரின் தாய்மாமன், (2) : பறவை. இவ்வாறே वायु: द्विजः முதலிய சொற்களின் இரு பொருள்களைக் கண்டு கொள்க.) (வாயு) புராணத்தில் வாயுவின் (வாதத்தின், காற்றின்) பிறப்பு கூறப்பட்டுள்ளது (கை-கால் பிடிப்பு போன்ற வாத-ரோகத்தினால் பீடிக்கப்பட்டு ஆற்றொணாத் துயரால் அரற்றுவார் ஒருவருமிலர்), முதுமைப் பருவத்தில் மட்டுமே (இருபிறப்புடைய) பற்கள் விழுதலைப் பெறுகின்றன (இரு பிறப்புக்களுடைய அந்தணர் முதலியோர் தம்முடைய உயர்ந்த நிலைகளில் இருந்து நழுவி விழுவதில்லை, ஏனெனில் ஒரு பொழுதும் அவர்கள் அற ஒழுக்கத்தினின்றும் வழுவாமல், தமக்கு உரிய ஒழுக்கநெறி நின்று விழுப்பத்தைப் பெறுகின் றனர்), மடிமை (சோம்பேறித்தனம்) என்பது வனத்திடையேயுள்ள சந்தன மரங்களிடத்தே காணப்படும் (வெறெங்கும், யார் மட்டும் மடிமைத் தன்மை காணப்படவில்லை), சாம்பலைப் பூசுவது நெருப்பிடையே தான் (வேறெங்கும் இல்லை), இசையைக் கேட்குந் துன்பம் (தீய பழக்கம் மான்கள் மாட்டே (வேறு யாண்டுமில்லை), மயில்கள் தோகை விரித்து ஆடுங்காலத்து அவற்றின் இறகுகள் விழுந்தன (வேறு ஒருவர்க்கும் நாட்டியத்தில் சிறப்பான நாட்டமில்லை, அதனால் தம் நிலை குலையும் வாட்டமு மில்லை) பாம்புகள் மட்டும் பரந்த படங்களை (भोगः)ப் பெற்றிருந்தன (அறநூல்களால் விலக்கப்பட்ட பொறி-புல இன்பங்களை (भोग:) நுகராதவர்களாய் மக்கள் இருந்தனர்), வானரங்கள் மட்டுமே வில்வப்பழத்தை (श्री फल) விரும்பின (மக்கள் செல்வத்தை, மாறுபடும் அழியும் தன்மைத்தாகிய செல்வத்தை ( श्री फल இலக்ஷ்மியின் பலம், அதாவது செல்வம் விழைந்திலர்), கீழ்நோக்கிச் செல்லுதல் (अधो गति :) என்பது மரங்களுடைய வேர்களின் தொழில் (மக்கள் கீழ்நோக்கி (நரகத்தை போக்கிச் செல்லவில்லை). "
காதம்பரி இருதய பஷம் உணர்ச்சியின் திறன்
(உள்ளத்திற்கு வட்டும் உவகை முதலிய உணர்ச்சி)
காதம்பரி " நெஞ்சத்தை எவ்வாறு தொடுகின்றது எவ்வித உணர்ச்சிகளை உள்ளத்து எழுப்புகின்றது என்பது சால இன்றியமையாதது. தம்முடைய கதா பாத்திரங்களின் இயல்புகளை யுட்புகுந்து நன்கு உணர்ந்துள்ளார் கவிஞர். பல திறப்பட்ட நிலைகளில் (சந்தர்ப்பங்களில்) உளவாம் அவர்க ளுடைய மனோபாவங்களை (உள்ளத்து உணர்ச்சிகளை)க் கூர்ந்து ஆராய்கிறார் ; ஆராய்ந்து அவற்றை அந்நிலைகளுக் கேற்ற சொற்களைக் கொண்டு விளக்குகிறார். புண்டரீகனைப் பிரிந்துழி, மஹாஸ்வேதையின் உள்ளத்து எழுந்த கோமள நுண்ணிய உணர்ச்சிகளை உள்ளவாறு அழகுறப் புலப் படுத்திய தன்மை, கவிஞர் பெருமானின் எழுத்துவன்மையை விளக்குவதற்கு அமைந்த சிறந்த சான்றாகும். சந்திராபீடன் பிறந்த பொழுது அரச-அரசியர் அகத்தெழுந்த அன்பு கெழுமிய உணர்ச்சிகளைக் காட்டத் தீட்டிய பாணரது சித்திரம், எத்துணை விசித்திரமான (வியக்கத்தக்க)தோ அத்துணை விழுமிய தும் இயற்கைப் பண்புடையதும் ஆகும் சந்திராபீடனை முதலிற் சந்தித்து, அவன் தன்னிருப்பிடத் திற்குத் திரும்பிய பிறகு, காதம்பரியின் கெஞ்சத்தெழுந்த உணர்ச்சிகளை உரைக்கும் முறையொன்றே, மனோபாவங் களைப் பகுத்தறியும் பாணரது ஆற்றலை அறிவிப்பதற்குப் போதிய சான்ருகும்.
பாணரது கருத்தை உற்றுநோக்கின், " மெய்யன்பு என்பது பொதுவாக உல கிடையே காணப்படும் வெறும் உடலுறு தொடர்பிற்கு மறுபெயர் அன்று என்பதும் பின்னே அது எழுமையும் (ஏழு பிறப்புக்களில் தொடரும் உழுவலன்பு, ஆன்மாவைப் பற்றிய தெய்விக அன்பு என்பதும் இனிது புலப்படும். "காதம்பரி " முற்பிறப்புக்களோடு தொடர்புடைய அன்பினை விளக்கும் செவ்விய சித்திரம், இது (" காதம்பரி), உற்றுணரும் ஞாபசக்தியின் துணை கொண்டு, மறதியினால் மறைப்புண்ட கடந்த காலத்தையும், இயங்குகின்ற நிகழ்காலத்தையும் இணைத்து ஒன்றுபடக் காட்டும் காதற்கதை உண்மை அன்பு என்பது, குலம் (மரபு) சமூகம் என்றவற்றின் மரியாதைகளை (எல்லைகளை, கட்டுப்பாடுகளை)ப் புறக்கணிப்பதில்லை (கடந்து மீறி நடப்பதில்லை என்பதைப் பாணர் தெளிவு படுத்தி யுள்ளார் அது, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் தன்னலமற்றதாகவும் இருக்கிறது. காலத்தின் பெருநிழல் அதனை மறைக்க முடியாது, காலத்தின் கடப்பு (போக்கு அதனை மறுக்கவோ, மாற்றவோ ஆற்றலற்றது. மஹாஸ் வேதா புண்டரீகன் என்பவர்கள் இடையும், காதம்பரி-சந்திரா பீடன் என்பவர்களிடையும் எழுந்த உண்மையான அன்பு என்றும் மாறுபாடில்லாமல் ஒரே படித்தாய் நின்று, பல பிறப்புக்கள் சென்றும் விரும்பிய வண்ணமே முடித்துக் கொள்ள முடிந்தது என்பது சீரிய அன்பிற்கு (காதலுக்கு)ச் சிறந்த, இனிய எடுத்துக்காட்டாகும்.
தமது இனிய எழில்வாய்ந்த கதையில், நாமெல்லாங் காண, அமைத்துள்ள அன்பு, புறாழில் காரணமாக எழுகின்ற, பொன்றும் உலகம் போற்றும் பொருள்களைச் சார்பாகக் கொண்ட வெறும் அன்பு அன்று ; பின்னை, ஈருள்ளங்களை ஒருள்ளமாக இடையீடு இன்றி இணைத்து பல பிறப்புக்களிலும் பற்றித் தொடர்ந்து இணையில்லாத இன்பத்தை நல்கும் தனிச் சிறப்பு வாய்ந்த, தெய்வத்தன்மை யுடைய அன்பு ஆகும் காதம்பரியிற் காட்சியளிக்கும் காதல் ஒரு பிறப்பில் இறந்தொழிவதன்று, மூன்று பிறப்புக் களிலும் பல வேறுபட்ட வடிவங்களைப் பெற்றாலும், ஆர்வத் திலும் இனிமை நலத்திலும் ஒரு சிறிதும் குறைபாடுடையது அன்று. உடலால் மாறுபட்ட வடிவங்கள் காணக்கூடும் பண்டை வினைப்பயனாக (தொல்விளைக்கு ஈடாக) ஆன்மாக் கன் வெவ்வேறு கர்ப்பங்களிற் புகலாம், எந்நிலையிலும், அத் தீவிரமான அன்பு இணை பிரியாமல் தொடர்ந்தே வருகின் றது வியக்கத்தக்க இப்பெருஞ் செய்தியின் உண்மையை, காதம்பரியின் கதை ஐயந்திரிபற இனிது விளக்குகின்றது.
நிலைத்து நில்லாத இயல்புடைய பொருளின் செல்வி யாகிய லக்ஷ்மியின் குற்றங்குறைகளை, இளவரசனாகிய சந்திராபீடனுக்குத் தெற்றென எடுத்துரைக்கும் பொழுது, சுகநாசர், அரசியல் அறிவு, நற்காவ்யப் பண்பு என்ற இரண்டையும் இனிது புலப்படுத்துகிறார் ரூபகங்களும் உவமைகளும் மிகத் திறம்பட, இனிமையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், பல்வகைச் சிறப்புக்களுடன் கூடிய திருமகளின் திரு உருவம் நம் கண்களின் முன்னர் எழுந்துத் திகழ்கின்றது.
"तथाहीये संबर्धनवारिधारा तृष्णाविषवल्लीनां, व्याधगीतिरिन्द्रिय- मृगाणां, परामर्शूधूमलेखा सच्चरितचित्राणां, विभ्रमशय्या मोहदीर्घ- निद्राणां, निवासजीर्णवलमी धनमदपिशाचिकानां, तिमिरोद्गतिः शास्त्रदृष्टीनां, पुरः पताका सर्वाविनयानामुत्पत्तिनिम्नगा कोधावेग- ग्राहाणामापानभूमिर्विषयमधूनाम् "
"திருமகள் (இலக்ஷ்மி), ஆசையெனும் நச்சு (விஷ)க் கொடி, பச்சை பசேரெனப் படர்வதற்குத் துணை செய்யும் நீரோடை போன்றவள் ; பொறி புலனுணர்வு என்ற மானை எய்த்து ஈர்க்கும் வேட்டுவனுடைய பாட்டு ஆவாள் ; ஒழுக் கத்தால் உயர்ந்தோரின் எழிலுருவ ஓவியத்தை மறைத் தழிக்கும் கரும்புகைப்படர் ; அறிவினை அழித்து நீண்ட மோகத்தூக்கத்தைத் தூண்டும் ஆசை அமளி (படுக்கை); செல்வச் செருக்குருவாம் பேய் பிசாசுகள் பாழிடம் அறநூல்களை யறியவொட்டாமல் வாழ்தரும் கண்ணை மறைக்கத் தோன்றிய திமிரம் (கண்ணோய்) ; பணிவுடைமை சற்றுமில்லாத கொடியவர் ஏந்தியணியும் கொடி ; குரோதா வேசத்தின் (உள்ளங் கவர்ந்தெழுந்தோங்கும் சினப்பரபரப் பின்) வடிவமான : முதலைகள் உறைவிடமாகிய நதி; சிற் றின் பம் என்னும் மதுவைக் குடிப்பதற்கான சாராயக் கிடங்கு (கள்ளுக்கடை)." ரூபகத்தின் சீரிய சிறப்பினால் பெருமையைப் பெறுகின்றது இவ்வருணனை. வேறிடத்தில் விரோதாபாஸம் என்னும் அணியின் செழுமை காணப்படு கிறது. கவியின் கருத்துக்கள் பீடும் பெருமையும் ஏற்றமும் எழிலும் உடையவை இங்ஙனம், செல்வச் செருக்கினால் உளவாகும் பொல்லாங்குகளையும் தீமைகளையும் குற்றங் குறைகளையும் இத்துணைத் தெளிவாக விளக்குவதிலிருந்து கவிஞர் பெருமானின் தீர்க்கதரிசனத் தன்மை, பொருள்களை யுள்ளவாறு கூர்ந்து நோக்கும் நுண்ணறிவு இனிது புலப் படும். மஹாஸ்வேதாவைக் கண்ட மாத்திரையிலேயே, புண்டரீகன் உள்ளத்து எழுந்த நினைவினைப் புலப்படுத்துவது, புலவர் பண்டைய காதல் பெருமானுடைய மக்கள் மனோதத்துவ அறிவுடைமையைக் காட்டப் போதிய சான் நகும். புண்டரீகனின் உள்ளத்தினுள்ளே புதிதாகப் புகவிருக்கும் விருந்தினன் ஆகிய காமதேவனை விரும்பி வரவேற்பதற்காகவே உரோமங்கள் (மெய்) சிலிர்த்து எழுந்து கின் போலும் எனப் புகல்கின்றார் புலவர் பாணர். முனி கையில் கொண்ட ஜமால், நடுக்கம் காரணமாக அசைய (ஆட)த் தொடங்கியது விரதம் பங்கம் ஒருவேளை, அவள் மேற்கொண்டிருந்த (முறிந்துவிடல்) ஆனதைக் கண்டு அவள் அஞ்சியதன் காரணமாகவோ என ஐயுறற் கிடமுண்டு .
பாணர், சம்ஸ்க்ருத மொழியின் இணையில்லாத முடி யுடைய மன்னர். அவர் ஒப்புமுயர்வுமற்ற சொல்லாற்றல் படைத்தவர். அவரது உரைநடையின் போக்கு வியக்கத் தக்கது சில சமயங்களில், அவருடைய உரைநடை, கற்களோடு பொருது பேரிரைச்சலைச் செய்துகொண்டுப் புரண்டோடிவரும் மழைகாலத்து ஆற்றைப் போல, சொல் லோசையினை யுடையதாகக் காணப்படுகிறது; சில சமயங்களில், அது எவ்வளவு விரைந்து சென்றாலும், குளிர்காலத்து ஆற்றெழுக்கினைப் போல அமைதியாகவும் அழகாவும் காட்சியளிக்கிறது. என்றும் வாடாத புதுமை (இளமை) வற்ருத வளமை, பாணபட்டருடைய வாக்கியங்களிற் காணப்படும் பண்புகள். அவருடைய நூல் முழுவதையும் எவ்வளவுதான் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தாலும் பலமுறை அடிபட்டுத் தேய்ந்து மாய்ந்து சுவை இழந்த சொற்களை யாண்டும் காண இயலாது. யாண்டும் புத்தம் புதிய சொல்லாட்சி, புதுப்புதுப் பொருளுடைமை, மறைமுக மாகக் கருத்தையுங் களிதருஞ் சுலைகளையும் புலப்படுத்தும் கிறையொழிகள் என்ற இவையாவும் ஆராய்ச்சியாளர்க்கு ஆராத ஆனந்தத்தை அளிப்பன ஆகும்.
பாணபட்டருடைய காதம்பரியில் ", ஸம்ஸ்க்ருத உரைநடையில் எத்துனை வேகமும் விறுவிறுப்பும் காணக் கூடுமோ, இழுமெனும் இனிய ஓசைபோடு இழிதரும் விழுமிய ஒழுக்கும் எத்துணை எதிர்பார்க்கப்படுமோ, சொல்லும் சுவையும் ஒல்லென ஒளிர எத்துமோ இயலுமோ, அத்துணை யும் ஒருங்கே காணக்கிடக்கும். எனவே, தர்மதாயர் என்ற பண்புடைய ஆராய்ச்சியாளர் ஒருவர், தம் உள்ளத்துப் பொங்கி யெழுந்த மகிழ்ச்சியின் மேலீட்டினால், உள்ள படியே, பாணரை வாயாரவானுறப் புகழ்ந்துள்ளார் அப்புகழுரை பின்வருமாறு :-
" रुचिर-स्वर-वर्णपदा रसभाववती जगन्मनो हरति।
सा किं तरुणी ? नहि नहि वाणी बाणस्य मधुरशीलस्य ॥"
"இழும் எனும் இனிய ஓசை, விழுமிய நிறம் (அல்லது எழுத்துக்கள், वर्ण = நிறம், எழுத்து) அழகிய பாதங்கள் (அடி கள்) என்றவற்றையுடையதும்(அல்லது உடையவளும்), நல் புணர்ச்சி, நற்சுவை (அழகிய அபிநயங்கள்) என்றவற்றைப் பெற்றதும் (அல்லது பெற்றவளும்) ஆன ஒரு பொருள் (ஒருத்தி ) உலகத்தார் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொள்கிறது (அல்லது கொள்கிறாள்); அது (அவள்) எழில் நலம் வாய்ந்த இளநங்கையோ? இல்லை, இல்லை; அது, இனிய இயல்புடைய பாணருடைய சொல்லோவியமாகிய "காதம் பரி” என்னும் நூல்; அவள், இனிய-இயல்புடைய பாணபட்டர் படைத்த "காதம்பரி"
**********************
No comments:
Post a Comment
thaks for visiting my website