Wednesday, November 17, 2021

பாணபட்டர் /Bāṇabhaṭṭa (Sanskrit: बाणभट्ट)

  

பாணபட்டர்

  பாணரின் முன்னோர்கள்

            மகத நாட்டில் சோணை (the Son) யாற்றங்கரையில், ப்ரீதிகூடம் என்னும் நகரத்தில் பாணபட்டரின் முன்னோர்கள் வசித்துவந்தனர். ப்ரீதிகூடம் என்னுமிடம், பீஹாரின் மேற்குப் பகுதியில் இருந்தது போலும். பாணரின் முன்னோர் கள், கல்வி கேள்விகளாலும் நற்பண்புகளாலும் நிறைந்து விளங்கினர்.

            மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே அவருடைய இல்லம் கல்வி கற்பதற்கு ஏற்ற நிலையமாக இருந்தது வேதங்களையும் தர்மசாஸ்த்ரங்களையும் பயில்வதற்குப் பல்வேறு தூர தேசங்களிலிருந்து இங்கு மாணவர் பலர் வந்த வண்ணமாக இருந்தனர். யஜுர்வேத, சாமவேத மந்த்ரங்களை ஒதுவதினால் உண்டாகும் இனிய நாதம் இவருடைய இல்லத்தில் எப்பொழுதும் ஒலித்துக் கொண் டிருந்தது. இவர்களுடைய வீட்டில் வளர்க்கப்பட்ட பறவை களும் வேத மந்திரங்கள் ஓதுவதை யுணர்ந்திருந்தன (கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதைப்போல) கூட்டிலிருக்கும் நாகணவாய்ப்புள்ளும் (மைனாவும்) கிளிகளுங் கூட, மாணவர் சொற்களைக் கூறும் பொழுது பிழையிழைப் பரேல், அவர்களைத் தலையிற் குட்டித் திருத்துமாம். இதைப் பற்றிப் பாணரே எழுதுகிறார் :

                जगुरगृहेऽभ्यस्तसमस्तवाङ्मयैः ससारिकैः पञ्जरवर्तिमि: शुकरैः ।

               निगृह्यमाणा वटवः पदे पदे यजूंषि सामानि च यस्य शक्विताः ॥

                                                                                                     -(कादम्बरी).

           பாணபட்டரின் தந்தையின் பெயர் சித்ரபானு என்ப தாகும் அவர் சாத்திரங்களை நன்கு பயின்ற புலவர் அவரது கல்வித்திறம் அண்மையிலும் சேய்மையிலும் எங்கும் பரவி யிருந்தது. அவர்களுடைய இல்லத்தில் இல்லாமை என்பதொன்றும் இல்லை அவர்கள் செல்வ முடையவர்களாகவும் இருந்தனர்.



              இளமைப் பருவம்

                 பாணர் சிறுகுழந்தையாக இருக்கும் பொழுதிலேயே அவருடைய தாய்-தந்தையர் அவரைத் தனியே விட்டுவிட்டு வீட்டுலகம் சென்றுவிட்டனர் இல்லத்தில், அவருக்கு இன் மொழி கூறி, சீராட்டிப் பாராட்டுவார் ஒருவரும் இலர். செல்வம் படைத்த சிறுவர் ஆதலின், கட்டுக்கடங்காத காளையைப் போல், பாணர் அங்குமிங்கும், கேட்பாரின்றி, அலையத் தொடங்கினார். விரும்பத்தகாத பழக்கங்கள் பல இவரைப் பற்றிக் கொண்டன. நற்குடியிற் பிறந்தவர் ஆதலின், குலத்தளவே யாகுங்குணங்களுக்கு ஏற்ப, கல்வி கற்கும் கருத்து மட்டும் இவரை விட்டிலது. கல்வி பயில் வதில் இருந்த ஆர்வமும், பல இடங்களுக்குச் செல்வதால் உளதாகும் அனுபவமும் இவருக்குப் பெரிதும் நன்மையைச் செய்தன. அவை, இவரைப் போரறிவாளராகவும் உலகத் தோடு ஒட்ட ஒழுகும் பண்புடையவராகவும் ஆக்கின.

             பாணரை, அவருடைய இழிவான வழிகளின் பொருட்டு பாமரமக்கள் பழித்துப் பகர்வார் ஆயினர். அப்போது அரசு செய்திருந்த ஸ்ரீஹர்ஷர் செவிகளுக்கும் இத்தீய செய்தி எட்டியது.

           ஒருபொழுது, பாணர், அரசனைக் காணச் சென்றுவழி, அவர் அன்போடு மரியாதையாக உபசரிக்கப்படவில்லை என்பதோடு நில்லாது ஓரளவில் அவமரியாதையாக  (இழிவாக) வும் நடத்தப்பட்டார். எனினும், இவரது குலப் பெருமையைக் கருதி, ஹர்ஷர் தமது அவையில் இவருக்கு ஓரிடம் அளித்தார். விரைவிலேயே, பாணருடைய பேரறிவும் புலமைநலமும் நாற்புறமும் பரவிப் பிறங்கலாயின. இதனைக் கண்ணுற்ற அரசன் பெருமகிழ்வு எய்திப் பாணரைத் தம் அருமை பெருமைகளுக்குப் பாத்திரம் ஆக்கினான் முன்ன ரேயே, முன்னோர்களின் செல்வநலத்தைப் பெற்றிருந்தார் பாணர் ; அரசனது அவையில் ஏற்ற இடம் பெற்றமையில் அச்செல்வம் பின்னரும் மிகுந்தது எனவே, வறுமை என்பதை இன்னது என்பதையே யறியார் பாணர். அரசர் களுக்குரிய செல்வச் சிறப்பு நிறைந்த வாழ்க்கையையே எப்போதும் நடத்தினார் பாணர் இளமைப் பருவத்தைக் கடந்து, பாணர் காளைப் பருவத்தை நண்ணிய காலத்தில் நல்வாழ்வின் இனிய வைகறை புன்முறுவல் பூத்தது; அவரை வரவேற்பதற்கு வெற்றித் திருமகள் விருப்புடன் நின்றாள்.

         பாணருடைய நூல்கள்

             பன்னெடுங்காலம் ஸ்ரீஹர்ஷருடைய அவையில் வீற்றிருந்த பிறகு, பாணர் தம் இல்லந் திரும்பினார். மக்கள் அவர் வாயிலாக ஹர்ஷருடைய வாழ்க்கை வரலாற் றைக் கேட்கப் பெரிதும் விரும்பினார்கள். அவர்களின் பொருட்டு, அன்று அவர் தந்த ஹர்ஷரின் வரலாறே, பின்னர் “ ஹர்ஷசரிதம் " எனப் புகழ்ந்து பேசப்பட்ட காவ்யரத்கம் ஆயிற்று. சமஸ்க்ருத ஸாஹித்யத்திற் காணப்படும் பழங் கதைகளில் இதுவே மிகத்தொன்மையானது. அப்பழங் காலத்தில், இழுமெனும் ஒசையும் விழுமிய நடையும் உடைய தாய், (த்வந்த்வ, அவ்யயீபாவ, தத்புருஷ, கர்மதாரய பஹவ்ரீறி என்ற தொகைமொழிகளை (சமாஸங்களை சாலப்பெற்றதாயுள்ள நூலே உரைநூல்களிற் சிறந்ததெனப் பாராட்டப்பட்டது * ओजः-समासभूयस्वमेतद्गयस्य जीवितम् "- ஒள்ளிய சொற்களின் தெள்ளிய நடையும் தொகைமொழி களின் செழுமையுமே உரைநடையின் உயிர்நாடி என்க.




            ஹர்ஷசரிதம்” எட்டுப் பகுதிகளாக (உச்சுவாஸங் களாக)ப் பிரிக்கப்பட்டுள்ளது. உச்சுவாஸம் ' (उच्छवास:) என்னுஞ்சொல், ஒரு தொடர்கதையின் ( आखयायिका) ஒரு பிரிவினை (அத்தியாயத்தைச் சுட்டுவதற்காகப் பயன் படுத்தப்பட்டது (அணியிலக்கண வல்லுநர் எல்லாம் உரைநடை நூல்களை, 'கதை' (कथा) எனவும், ஆக்யாயிகா ( आख्यायिका) எனவும் இருகூறுகளாகக் கொள்கின்றனர். இம்முறையில் அவர்கள் பாணரது " ஹர்ஷ சரிதத்தை ஆக்யாயிகா எனவும், காதம்பரியைக் கதை எனவுங் கருது கின்றனர். எனினும் தண்டி ஆசிரியரும் பிறரும் இத்தகைய வேறுபாடுகளைக் காண்கின்றலர். முதற்பிரிவில், 21 செய்யுட் களினால், பாணர் கடந்தகாலத்துக் கவிஞர்களையும் அவர் களுடைய இலக்கியப் படைப்புக்களையும் பாராட்டுகின்றனர். இத்தகைய வியனுரை (சிறப்புரை) பின்வரும் எழுத்தாளர்க் குச் சீரியதொரு எடுத்துக்காட்டாக இலங்குகிறது.

                   இங்ஙனம், கவிஞர் பெருமக்களையும் அவர்தம் நூல்களையும் பற்றிப் பேசுங்கால், வியாசர், வாசவதத்த, பட்டார ஹரிச் சந்த்ர, சாதவா ஹன, ப்ரவரஸேன, பாஸ, காளிதாஸ பருகத்கதா (பெருங்கதை) ஆசிரியர் போன் றவர்களைப் பாராட்டிப் பாரித்துப் பேசுகின்றார் பாணர்.

                முதல் மூன்று பிரிவுகளில், பாணரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு காணப்படுகிறது. இதனைச் சுயசரிதை' (आत्म कथा) என்றே நவிலவேண்டும். முதல் உச்சுவாஸத் தின் கண், வாத்ஸ்யாயா (वात्स्यायन) மரபில் இவரது பிறப்பு இவருடைய முன்னோர்களின் வரலாறு, பலதிறப்பட்ட  நண்பர்களுடன் இவருடைய அயல்நாட்டுச் செலவுகள் (பிரயாணங்கள்) முதலியவை கூறப்பட்டுள்ளன. இரண்டாம் உச்சுவாஸத்தில், ஸ்ரீஹர்ஷருடைய சகோதரன் கிருஷ்ண னுடைய பணியாளன் - மேகலகன் " (मेखलक) என் பான், மன்னனைக் காணுமாறு பாணரிடம் அழைப்பிளை க் தெரிவிக்கின் முன் இவ்வழைப்பினை பாணர் விழைந்து ஏற்றுக்கொள்கின்றார். மூன் றிடங்களில் தங்கிப் பிறகு, அஜிர வதி நதிக்கரையில் அமைந்துள்ள மணிதாரா என்னுங் கிராமத்தைப் பாணர் எய்துகிருர். ஸ்ரீஹர்ஷரது சேனை அங்குத் தங்கியிருந்தது. பாணர், மன்னனைக் கண்டு அவனுடைய அன்பையும் பெருமதிப்பையும் பெறுகின்றார் மூன்றாம் பிரிவில், பாணர் தம் இல்லம் வந்தடைகின்றார்; தம்முடைய உறவினர்களுடைய (சிற்றப்பனின் மக்களுடைய) வேண்டுகோட்கு இணங்கி, ஹர்ஷருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூற இசைகின்றார்.

                தொடக்கத்திலே, ஸ்ரீ கண்ட - தேசத்தையும், அதன் தலைநகரான தானேஸ்வரத்தையும் வம்சத்தின் மூல புருஷரான புஷ்பபூதியையும் பற்றிப் பேசுகின்றார். இதன் பின்னர், தாந்திரிக சாதனைகளில் தமக்குத் துணை நின்ற பைரவாச்சாரியாரைப் பற்றிய தெள்ளிய விளக்கம் தருகின்றார் .

                  நான்காம் உச்சுவாஸத்தில், மரபைப்பற்றிச் சுருக்க மாகக் கூறிவிட்டு, இராஜாதிராஜர் ப்ரபாகரவர்த்தனரையும் அவருடைய இராணி யசோவதியையும் குறித்துக் கூறுகிறார் இவருடைய மூத்தமகன் ராஜ்யவர்த்தனனுடைய வாழ்க்கை வரலாறு விரிவாக, சுவைபடத் தீட்டப்பட்டுள்ளது. இதன் பின்னர், ஹர்ஷர், ராஜ்யஸ்ரீ என்றவர்களுடைய பிறப்பு சார்பான குறிப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. யசோவதியின் சகோதரன், தன்னுடைய மைந்தன் பண்டி भंडी யை அரசிளங்குமரர்களுக்கு அருந்துணைவன் ஆக்குகின்றான் மெளகரி க்ருஹவர்மாவுடன் ராஜ்யஸ்ரீயின் திருமணம் பேரரசர்களுக்கு உரிய பெருஞ்சிறப்புடன் நடந்தேறியது.

                 ஐந்தாம் உச்சுவாஸத்திலிருந்து. அரசகுமாரர்களுடைய வெற்றிக் கதை தொடங்குகிறது முரட்டு ஹணர்களை வென்று விரட்டுவதற்காக, ஹர்ஷரின் துணை கொண்டு, பெருஞ்சேனை பின் தொடர, ராஜ்யவர்த்தனன் விஜய யாத்திரையாகப் புறப்படுகிறான். ஹர்ஷர், வேட்டையாடக் காட்டிடையே செல்கின்றார். தமது தந்தையார் தீராத நோய்வாய்ப்பட்டுள்ளமை அறிந்து, தலைநகருக்குத் திரும்புகிறார்.

               பிரபாகரவர்த்தனர் இறப்பதற்கு முன்பே, யசோவதி “சதி'' தர்மத்தை மேற்கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டாள். அவர் இறந்த பிறகு, குடிமக்களெல்லாம் துன்பப்பெருங் கடலில் ஆழ்ந்தனர்.

              ஆறாம் உச்சுவாஸம், ராஜ்யவர்த்தனனின் நாடுதிரும் புகை, துன்பமதைத் தரும் மன்பதைபுரக்கும் பொறுப்பி லிருந்து விடுபட வேண்டி, ராஜ்யவர்த்தனன் முடிதுறந்து தன்னரசுரிமையைத் தன் உடன் பிறந்தான். ஹர்ஷனிடம் ஒப்படைத்தல் என்றவற்றை உரைக்கின்றது. க்ருஹவர்மன் இறந்த செய்தியையும், மாளவ நாட்டு மன்னனின் வஞ்சனை யால் ராஜ்யஸ்ரீ சிறை செய்யப்பட்ட செய்தியையும் செவி யுற்ற ராஜ்யவர்த்தனன், தன் சகோதரியை மீட்பதற்காகத் தன்னந்தனியனாகப் புறப்படுகின்றான். மாளவ மன்னனையும் வெல்கிருன் : எனினும் கெட மன்னனான் சசாங்கனாற் கொல்லப்படுகிறான். தமது சகோதரனுடைய கொலையின் பொருட்டுப் பழிவாங்க வஞ்சினங் கொள்கின்றார் ஹர்ஷர் .

            எழாம் உச்சவாஸத்தில், நஹர்ஷருடைய வீரவெற்றி கணப் பற்றிய சுவைகெழுமிய செய்திகளைத் தருகின்ரும் பாணர். தம்முடைய மாபெருஞ் சேனையுடன் தமது பேராற்றலைப் புலப்படுத்த காற்றிசையிலுஞ் சென்று வெற்றி பெறப் புறப்படுகிஞர் ஹர்ஷர். அத்தருணத்தில், ப்ராக்ஜோ . திஷ வேந்தனான பாஸ்கரவர்மனுடைய தூதனாகிய ஹம்ஸ வேகன் என்பான், மையறு சிறப்பிற் கையுரை (காணிக்கை) எந்தி, பெட்புறும் நட்புச் செய்தியைத் தாங்கி, ஹர்ஷரின் திருமுன்பு வருகின்றான்.

                   தம் தானை யோடு ஹர்ஷர் விந்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார் ; மாளவ மன்னனைப் போரில் வெல்கிறார். மாளவ நாட்டுச் சேனை - செல்வங்களின் மீது தனது ஆணை அதிகாரத்தை விதிக்கிருன் பண்டி (भंडी) 

                எட்டாம் உச்சுவாசத்தில், ஸ்ரீஹர்ஷர், ஒரு  சபர இளைஞனின் துணை கொண்டு, நிறைந்த நெஞ்சத்தோடு, தமது உடன் பிறந்தாள் ராஜ்யஸ்ரீயைப் பற்றிய புலனறியப் பெரிதும் முயல்கின்றார். இதற்கிடையே ராஜ்யஸ்ரீ ஆனவள் சிறை யினின்றும் தன்னை த் தானே விடுவித்துக் கொண்டவளாய் விந்தியக் காடுகளினூடே அலைந்து அல்லலுற்றுக் கொண் டிருந்தாள். ஹர்ஷர் திவாகரமித்ரர் என்னும் ஒரு பௌத்தத் துறவியின் இருப்பிடத்தை எய்துகிஞர். ஆண்டு, அப்பொழுது, தன்னைப் புரப்பாரற்று அநாதையாகவுள்ள பெண் ஒருத்தி, கொழுந்துவிட்டு எரியும் தீயிடைத் தன்னை மாய்த்துக்கொள்ளச் சித்தமாயிருக்கிறாள் என்ற செய்தியை, அவர்கட்குத் துறவியொருவன் கூறலுற்றுன். இதனை ச் செவி யுற்ற ஹர்ஷர் அவ்விடத்திற்குக் கடிதிற் சென்று, தம் சகோ தரி ராஜ்யஸ்ரீயைக் கண்டு, அவர்கட்கு ஆறுதல் தேறுதல் அளித்து, அவளை அழைத்துக்கொண்டு, திவாகரமித்திரரின் ஆச் சிரமத்தை அடைகின்றார் அங்கு திவாகரமித்திரர் ராஜ்ய ஸ்ரீயை நோக்கி, ஹர்ஷரைப் போன்ற வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு உபதேசிக்கின்றார். ஹர்ஷரும், திக் விஜயச் சார்பாகத் தாம் கொண்டுள்ள வஞ்சினம் நிறை வேறிய பின்னர், தூய காவியுடையணிந்து, ராஜ்யஸ்ரீயுடன் துறவறத்தை மேற்கொள்ள இசைகின்றார்.

                  தமது, "சம்ஸ்க்ருத இலக்கிய வரலாற்றில், ஸ்ரீயுத பலதேவ உபாத்தியாய என்பவர், இக்கதையைப் பற்றிப் பின் வருமாறு எழுதியுள்ளார் - "நிரலே வரையப்பட்டுள்ள இச்சுருக்கமான ஹர்ஷசரிதத்" திலிருந்து, வெறும் நிகழ்ச்சிகளையுங் குறிப்புக்களையும், இக்கால முறையை யொட்டி, வரையப்பட்டுள்ள உணர்ச்சியற்ற, சுவையொடு புணராத, வறுநிலம் போன்ற வரலாறு இது அல்ல என்பதும் பின்னர், ஒரு சீரிய இலக்கிய நூலிற்கு இன்றியமையாத இயல்புகளெல்லாம் இனிது அமையப் பெற்றதாய், உணர்ச்சி மீதூர சுவைகெழுமிய, வளமார்ந்த வரலாறு வாய்ந்த நூல் இது என்பதும் தெள்ளித் தெளிய விளங்கும். ஹர்ஷ மன்னரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு புலப்படுத்த வரலாற்று (சரித்திரக் குறிப்புக்கள் சான்று பகரும் என்பதில் ஐயமில்லை ; எனினும் தமது நூலை அழகுற அமைக்க சிறப்புறச் செய்யத் தம்மாலியன்ற அளவு, கவிஞர், அரும் பாடு பட்டுள்ளார் என்பதைக் கருதவேண்டும். எனவே காவ்யமுறையில் ஆக்கப்பட்டுள்ள இக்கதை, தனிப்பட்ட சீரிய இலக்கிய முறையில் ஒரு காவ்யம் அமைக்கப்பட வேண்டிய நெறிக்கு நேரிய எடுத்துக்காட்டாக இலங்குகிறது என்பது உணரற்பாற்று. பொதுவாக நோக்குமிடத்து இக்காவியத்தில், வீரரசமே தலைசான்ற ரசமாகக் காணப் படும்; எனினும், கருணாரசத்தைத் திறம்படப் புகட்டுவதிலும் பாணர் சிறப்புறத் திகழ்கின்றார் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. இறக்கும் நிலையிலிருக்கும் ப்ரபாகரவர்த்தனனுடைய காட்சி, உள்ளத்தை உருக்கும் தன்மையது. உடையில் சதியின் யசோவதியின் தோற்றமும், அவலகிலையில் அவளது இறுதிப் புலம்பலும் (ஐந்தாம் உச்சுவாஸம்), இராஜ்யவர்த்தனனுடைய துயரும், பாணருடைய காவ்யத் தில், ரசங்கள்(சுவைகள்) செறிந்த பகுதிகளிற் சிறந்தவற்றுட் சிலவாகும்.

              திக்விஜயத்தின் பொருட்டுப் புறப்படும் ஹர்ஷருடைய நிலை உயிரோவியமாக, உணர்ச்சி மிகுந்ததாகக் காணப்படு வதோடு, ஸ்லாநுவபத்துடன் கூடியதாகவும் விளங்குகிறது. ஏழாம் உச்சுவாஸத்தில், மாலைப்பொழுது, வனத்திடையே யுள்ள கிராமம், ஆண்டு அமைந்துள்ள சிற்றில்லங்கள் என்ற வற்றின் வருணனை, வண்ண வனப்புடையதாக, உணர்ச்சி மிகுந்ததாக, உயிரோட்டம் உடையதாகக் காட்சியளிக்கிறது.

               ஹர்ஷரிதம், காவ்யத்தின் கவின் கெழு தன்மைக் காக மட்டும் பாராட்டப்படவில்லை பின்னை நூற்றாண்டில், பாரதநாடு இருந்த எழில்வாய்ந்த, உண்மை ஏழாம் யொடு ஒன்றிய, ஒழுக்க நிலையைத் திறம்படச் சுட்டுகின்றது என்பதற்காகவும் என்க இப்பெருங் காவ்யத்திற் பேசப் படும் ஹர்ஷருடைய வாழ்க்கை - நிகழ்ச்சிகள் யாவும் வரலாற்று (சரித்திர) நூல்களால் அறியப்படுஞ் செய்தி களோடு முரண்பட்டுக் காணப்பட்டில ; அவற்றிற்கு அரண் செய்வனவாகவே இலங்குகின்றன. அக்காலத்துப் பண் பாட்டின் தலைசிறந்த நிலையை உணர்ந்து இன்புறுவதற்கு இக்காவ்யம், அருங்கருவி நூலாகப் பெரிதும் உதவுகின்றது இக்காவ்யத்தின் துணை கொண்டு, அக்காலத்திய பழக்க வழக்கங்கள், நடை-யுடை பாவனைகள், ஆடை அணிகலங்கள், சேனை யின் நிலைமை போன்றவற்றின் உண்மையான வடிவத்தைக் கண்டுகொள்ளலாம்.

               இராஜ்யஸ்ரீயின் திருமணத் திருவிழாவில், பொற்புடை சிற்பக் கலைஞரும் ஓவியக் கலைஞரும், காட்சிகளை வகுப்பதிற் புலப்படுத்திய வியக்கத்தக்க புலமைத்திறமை, கலைநோக்கில் ஈடும் எடுப்பும் இல்லாதது. இது சார்பாக, பெருங்கொடிகள் ET பதாகைகள், தோரணங்கள் என்றவற்றின் பொருட்டுப் பயன் படுத்தப்பட்ட பலதிறப்பட்ட வண்ணத் துணிகளின் வருணனை, உணர்ச்சியூட்டுவதாக, பண்பாட்டைப் புலப்படுத் துவதாக நம் அறிவினை வளர்ப்பதாக விளங்குகிறது இந்நோக்கிலிருந்து ஆராயுங்கால், வரலாற்று (சரித்திர நூல்) ஆசிரியர்களுக்கு, " ஹர்ஷசரிதத்தின் அருமை பெருமை யும் உதவியும் ஊதியமும் எண்ணில் அடங்காதனவாகும்”


                                       *************************

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS