Wednesday, November 17, 2021

ஸ்ரீ ஹர்ஷர் ( श्री हर्षः ) SHRI HARSHA

 

        ஸ்ரீ ஹர்ஷர் ( श्री हर्षः )

                   ஸம்ஸ்க்ருத ஸாஹித்யத்தில், தமது மேதையின் மேம் பாட்டினால், கோகிநூர் வைரத்தைப் போலப் பேரொளியுடன் விளங்கும் ஸ்ரீ ஹர்ஷரின் இடம் மிகப்பெருமைக்கு உரியது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. கலைமகளின் திருவருளைப் பரிபூர்ணமாகப் பெற்ற இக்கவிஞரிடத்து, தலையாய கல்விச் சிறப்பும் கருவிலே தோன்றிய பேரறிவின் சிறப்பும் தனிப் பட்ட முறையில் இயங்குகின்றன. இவரது இத்தகைய சிறப்பியல்புகளைக் கண்ணுறும் நாம் எய்தும் மகிழ்ச்சியாலும் வியப்பாலும் வாய்வாளாமை மேற்கொண்டு நிற்கின்றோம்.

                   ஸ்ரீ ஹர்ஷர், கல்விகேள்விகளாற் சிறந்த புலவர், பேரறிவு படைத்த இயற்கைக் கவி, யோகி, அரும் பெரும் தெய்விக சக்தி வாய்ந்தவர், தலைசிறந்த தத்துவ ஞானி. எத்துணை தான் துருவித் துருவி ஆராய்ந்து பார் தாலும், இவரையன் றி, மேலே சுட்டப்பட்ட நலங்களெல்லாம் ஒருங்கே வாய்ந்த பெரும் கவிஞர் வேறு ஒருவரைக் காண்டல் அரிது.

                   இக்கவிஞர் பெருந்தகையாரின் தந்தையார் ஹீர என்பவர் : மாமல்ல தேவி என்பது இவரது அன்னையாரின் திருநாமம் இவ்வுண்மை, ஸ்ரீஹர்ஷரின் பெருநூலாகிய நைஷதீய சரிதத்தில் " ஒவ்வொரு சருக்கத்தின் இறுதி யிலுங் காணப்படும் செய்யுட்களின் சில பகுதிகளிலிருந்து நன்கு புலனாகும்.

                श्रीहर्ष कविराजराजिमुकुटालंकारहीग: सुतम् 

                श्रीहीरः सुषुवे  जितेन्द्रियचयं मामल्लदेवी च यम् 

                இவர், மம்மடரின் மருமான் (சகோதரியின் மகன்) என்பதனை யாவரும் நன்கறிவர் கான்ய குப்ஜ அரசரது அவையில் இவருக்குப் பெருமதிப்பு இருந்தது பின் வருஞ் செய்யுட்களினால் இனிது விளங்குமாறு, அங்கு ஏற்ற ஆசனமும், நறுமணஞ் சான்ற வெற்றிலையும் கிடைக்கும் (அதாவது, அவருக்கு வேண்டிய நலங்கள் பலவற்றையும் பெற்றார்.)

                   ताम्बूलद्वयमासनञ्च लभते यः कान्यकुळ्जेश्वरात्

                   यः साक्षाकुरुते समाधिषु परं ब्रह्म प्रमोदार्णवम् ॥

                   यत् काव्यं मधुवर्षिधर्षितपररातर्केषु यस्योक्तयः

                   श्री श्रीहर्षकवेः कृति: कृतिमुदे तस्याभ्युदीयादियम् ॥

                  கான்யகுப்ஜ அரசனான ஜயசந்திரனுடைய அவைக் களத்தை அலங்கரித்தவர் ஆதலின் இக்கவிஞர் பெரு மானின் வாழ்-காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது உறுதிப் படுகிறது. ஒப்புயர்வற்ற தன் ஆற்றலினாலும், துங்கமான கங்கை நதியின் கரையில் ஓராண்டு “ சிந்தாமணி " ஜபஞ்செய்து அதனால் நேராகப் பகவதி த்ரிபுரையின் பேரருளைப் பெற்று அத்தேவியின் கருணைத் திறத்தாலும், தம் தந்தையாரை வாதினில் வென்ற தருக்க சாத்திரச் செருக்குடைய உதயனாசாரியனைத் தோற்கடித்துத் தம் தங்தையார்க்கு ஏற்பட்ட இழிவைப் போக்கினார். அவரது பேரறிவின் மேம்பாட்டினால் கூர்மை யாலும் அவருடைய காவ்யத்தை முதலில் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் மக்களிடம் இல்லாமல் இருந்தது மறுமுறையும் தவஞ்செய்தமையால், தேவியின் திருவருளால் மக்கள் அவருடைய, நூலை யறிந்துகொள்ளக் கூடியவர்கள் ஆயினர். இதன் பின்னரே, பல துறைகளிலும் வல்லுநராகிய ஸ்ரீ ஹர்ஷர் முன்பு, கற்றுத்தேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இலக்கியப் புலவர்களும் தலையிறைஞ்சி வணக்கஞ் செலுத்தினர். ஸ்ரீ ஹர்ஷர் வெறுங்கவிஞர் மட்டும் அல்லர் : பலதிறப்பட்ட சாத்திரங்களிலும், தத்துவ ஆராய்ச்சியிலும் பல கலைகளிலும் வல்லுநராக இருந்தார். இயல்பில் எழு கின்ற அறிவின் மேம்பாடும் புலமையும் இவரிடத்து இனிமையாக இணைந்திருந்தன இப்பெருங் கவிஞர் காவ்யத்தின் அமைப்பிலும் கடையிலும் வெகுறிபுணர். தம் காவ்யங்களில் அரிய அழகான செஞ்சொற்களைப் பயன்படுத்துபவர். சொற்களையும் பொருள்களையும் ஏற்ற வாறு அமைப்பதில் இவருக்கு இணை எவருமே இல்லை, இவருடைய சொற்கள் புலமை நலம் நிறைந்தவை. வியப் பைத் தரும் தருக்கமுறை செறிந்தவை, ஒன்றுக்கொன்று ஒவ்வாத இரு தன்மைகள் இனிமையாக ஓரிடத்திற் பொருந்தி யிருத்தலையும், மேதையின் மேம்பாட்டையும் ஒருங்கே காண விரும்பின் அவர்கள்,

    (1) இவரது புலமையின் பெருமையை யும், ஆறு தர்சன கரந்தங்களையும் தெள்ளத் தெளிய ஆராய்ந்து அறிந்துள்ள அறிவின் ஆற்றலையும் புலப்படுத் தும் “கண்டன கண்டகாத்தியத்தையும்'' (खण्डन खण्ड खाद्य' ) 

    (2) காவ்யக் கலையின் கோகிநூராகவும், பெருங்காவ்யத்தின் இயல்புகளெல்லாம் இனிமையாக எழும் இடையறாத ஊற்றாக வும் இலங்குகின்ற "நைஷதீய சரிதத்தையும் " नैषधीय चरितम् ' நன்கு கற்பாராக.

             அவரியற்றின நூல்களின் பெயர்களை எல்லாம் அவரது மகா காவ்யமாகிய நைஷதீய சரிதத்திலேயே சுட்டியிருக்கிறார். அவை, 

     (1) ஸ்தைர்ய விசாரப்ரகர்ணம் (स्थेर्य विचार-प्रकरण) 

     (2) விஜயப்ரபாஸ்தி (विजय प्रशस्ति), 

     (3) கண்டன கண்ட காத்திய (खण्डन खण्ड खाद्य), 

     (4) கௌடோர் வீர குல yoivg (गौडोबीशकुलप्रशस्ति),

     (5) அர்ணவ வர்ணனம் (अर्णव वर्णनम् ) 

     (6) சிந்தப்ராஸ்தி (छिन्दप्रशस्ति), 

     (7) சிவ-சக்தி சித்தி (शिव शक्ति सिद्धि). 

     (8) நவஸாஹஸாங்கசரித சம்பு (नवसाहरसाङचरित चम्पू),

     (9) நைஷதீய சரிதம் (नैषधीय चरितम्)) என ஒன்பது நூல்களாகும்.

                  மேலே சுட்டப்பட்ட நூல்களில், "खण्डन खण्ड खाद्य '' என்பது இவருடைய வேதாந்த (சாத்திர) நூல்களிற் சிறந்தது: “नैषधीय चरितम् ", காவ்யங்களுக்கு ஓர் அணிகல மாகத் திகழும் பெற்றியது. (नैषधीय चरितम्)  நைஷதீய சரித் திரத்தில், நிஷதநாட்டு மன்னனான நளனுடைய தூய கதை இனிய முறையில் கூறப்பட்டுளது. இப்பெரிய நூலில், 22 ச சருக்கங்களும் 2830 செய்யுள்களும் இருக்கின்றன இப்பெரிய நூலகத்து, நளன் வேட்டையால் அன்னத்திற் கும் நளவரசனுக்கும் இடையே நடந்த உரையாடல், தமயந் தியின் இடத்து நளனுக்கு அன்னத்தின் வாயிலாக ஏற்பட்ட காதல், பீமராஜன் ஏற்படுத்திய தமயந்தியின் சுயம்வரம் தமயந்தியை மணப்பதற்கு நளனுருவந் தாங்கி தேவர்களும் சுயம் வரத்திற்கு வருதல், திருவருட்குறிப்பினால், தமயந்தி உண்மை நளனை யுணர்ந்து அவனையே மணத்தல், முதலிய கவின் கெழு காட்சிகள், சொற்சுவை பொருட் களுடன் திறம்படத் தீட்டப்படுள்ளன. ("நைடதம் புலவர் சுவை களுக்கோர் ஔடதம் " என்பதனை நோக்குக.)

               கவிஞர் பெருந்தகை ஸ்ரீ ஹர்ஷர் வேதாந்த சாஸ்திரங் களிலும் பேரறிவுபடைத்தவர். அத்வைத மார்க்கத்தைத் தெள்ளத் தெளிய விளக்க வல்ல பேராசிரியர். தருக்க சாஸ்த்ர வல்லுநர்களின் வழியைப் பின்பற்றி இவர் எழுதியுள்ள  खण्डन खण्ड खाद्यम् ) என்னும் நூல் அத்வைத வேதாந்த  நூல்களில் தலைசிறந்ததாகும்.

               பண்டைய பெருங்கவிஞருள்ளே, காளிதாஸரையும் மாகரையுமே பெரும்பாலும் பின்பற்றியுள்ளார் ஸ்ரீ ஹர்ஷர் என்பது எளிதில் உணரற்பாற்று. ஸ்ரீ ஹர்ஷரின் தமயந்தி சுயம்வரம், காளிதாஸரின் இந்துமதி சுயம்வரத்தை அடி யொற்றி யமைக்கப்பட்டுளது. காளிதாஸர் அச்சுயம் வாத்தைக் கூற ஒரு சருக்கம் முழுவதும் எடுத்துக் கொண் டுள்ளார், ஆனால் ஸ்ரீ ஹர்ஷரோ நான்கு சருக்கங்களைக் கொண்டு அப்பணியை முடிக்கின்றார். "நைஷதீய சரிதத் தில்" 19ஆம் சருக்கத்தில் வருணிக்கப்படும் வைகறையை உற்றுநோக்கினால் அஃது எவ்வளவில் மாகரைப் பின்பற்றி இயற்றப்பட்டுளது என்பது விளங்கும் மாகருடைய வைகறை வருணனை இயற்கை எழிலுடையது. ஆனால் ஸ்ரீ ஹர்ஷரின் வருணனையில் உயர்வு நவிற்சியணி அதிச யோக்தி-மிகைப்படுத்திக் கூறல்) மிகுதியாகக் காணப்படு கிறது. ஸ்ரீ ஹர்ஷரின் இந்தச் சருக்கம் முழுவதுமே, மாகரின் ஆம் சருக்கத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது எனக் கூறுவது மிகவும் பொருத்தமுடையதே யாகும்.


                   ஸ்ரீ ஹர்ஷருடைய நைஷதீய சரிதத்தில் " திட்ப முடைய புலமையும் கூரிய அறிவின் நுட்பமும் ஒருங்கே இனிமையாக இணைந்துள்ளன. ஸ்ரீ ஹர்ஷர், தூய, பண்பட்ட தெள்ளத் தெளிந்த, கல்விநலஞ்சான்ற சொற்களின் தலைவர். வக்ரோக்தியின் (வக்ரோதி சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள்களைக் கொண்டு விடைபகர்வதாகிய ஓர் அணி) வாயிலாக எளிய சொற்களை இயக்குவதிற் கைதேர்ந் தவர் மன்னன் நளனுடைய பிரிவாற்றாது, நனிவருந்தி கடைக்கண் நோக்கையுங் கருதற்கு இயலாத கண்களை விளக்குவதற்கு, சிறகிழந்து பறக்க இயலாத வலியனை (வாலாட்டிக் குருவியைப் போல தனது சிற்றிட முற்றத்தே திரும்புவதற்கு முயலும் முடவன் ஒருவனது உவமையை உபயோசித்து, வக்ரோக்திக்குச் சிறந்ததோர் எடுத்துக் காட்டினை நல்குகிறார் கவிஞர் 

                    ஸ்ரீ ஹர்ஷர் கற்பனை க் கடல்: அவரிடத்து, கற்பனைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. மகளிரின் வடிவத்தையும் எழிலை யும் தீட்டுவதில் நிகரற்றவர் தமயந்தியின் வடிவழகைப் பேசும் இடந்தொறும் புத்தெழிலை, இளநலத்தைக் காணலாம் கூறியதையே கூறுவதால் தோன்றும் துனிப்பு (வெறுப்பு) இவ்விடத்தில் அறவே எழுவதில்லை ஸ்ரீ ஹர்ஷரின் "நைஷத மகாகாவ்யம் புலவர் பெருமக்களால் கற்று உணர்ந்து களிப்பதற்கு உரியதே யன்றி, மற்றையவரா படித்துப் பாராட்டும் பான்மையது அன்று. பொருளின் போக்கிலும் நோக்கிலும் காளிதாஸரோடு ஷரை ஓப்பிட ஒவ்வாது ஸ்ரீ ஹ கவி ரஸங்களைத் துய்ப்பதிலும் இயற்கையோடு இணந்தொழுகும் தன்மையிலும் தன்ன கரில்லாத் தனிப்பெருங் கவிஞர் காளிதாஸர். ஸ்ரீ ஹர்ஷரோ, எளிதிற் காண்பதற்கு அருமையான நல்லுரைகளைப் பல்லிடங்களிற் பயன்படுத்துபவர் : எழிலுடைய செயற்கை நடை மலிந்த உரிய காவ்யத்தைப் படைக்கும் ஆற்றல் அமைந்தவர். புதிய பொருள்களிற் சொற்களை அமைப்பதிற் சாலவும் வல்லவர்.

                     ஸ்ரீ ஹர்ஷர், இன்பச் சுவையை மிகுத்துக் கூறுங் கவிஞர் ; எனினும் அவருடைய இன் பச்சுவைகள் உள்ளத் திற்கு உவகை ஊட்டுவதை விட, அறிவிற்கே பெருவிருந்து அளிப்பன ஆகும். அவர், விழுமிய சாத்திரங்களையே பற்றித் தொழுது பின் செல்பவர் ஆதலின், ஸ்ரீ ஹர்ஷருடைய நூல்கள் கலையின் திறத்தினை காட்டுகின்றன; உளத் தைத் தொடும் தன்மையைப் பெற்றிலை.

                 பல்வேறு இடங்களில், மிக அருமையான சிலேடைகளை அமைத்து, ஸ்ரீ ஹர்ஷர் தமது பேராற்றலைப் புலப்படுத்து கின்றார்.

                  अस्यां मुनीनामपि मोहमूहे, भृगुमेहान् यत् कुचशैलशीली । 

                 नानारदाहादि मुखं श्रितोरु-व्यासो महाभारत-सर्ग-योग्यः ॥

                                                                        (VII95-नैषधीयचरितम्

               இவ்வாறே, மாலைநேரத்தில் நாற்றிசையிலும் பரவியிருக் கும் இருளைக் கூறும் பொழுது, சொல்லெழிற் சித்தரத்தைத் தீட்டுகிறார் கவிஞர்.

                  ऊर्पितन्युज-कटाह-कल्पे,

                         यद् व्यो म्नि दीपेन दिनाधिपेन ।।

                   न्यधायि तद् भूममिलद् गुरुं,

                         भूमौ तमः कज्जलमस्खलत् किम् ? ॥

                                                                                   (नैषधीय XXII-3)

                 சூரியன் விளக்கிற்கு ஒப்பிடப்படுகிறான். அதற்கு மேலே படிகின்ற மையைத் திரட்டுவதற்குத் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டுள்ள கிண்ணத்தைப் போலக் காணப்படுகிறது விண்ணகம் (ஆகாயம்), அக்கினண்ணத்தில் (விண்ணிடை) நிறைய மை இருத்தலால், அது வழிந்து நிலத்தில் விழுந்து அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவுகிறது. உலகத்து நிகழும் சாதாரண நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு, கவிஞர் காட்டும் காட்சி மிகவும் ஏற்றம் உடையதாகவும் இதயத் திற்கு இன்பம் பயப்பதாகவும் உள்ளது.

                   இங்ஙனம், கல்வித்திறம், அருமையான அறிவின் நுட்பம், வருணனைச் சிறப்பு பொருட்செறிவு உடைய அரிய சொல்லாட்சி என்றவற்றிற்கு ஸ்ரீ ஹர்ஷர் பெரும் பெயர் பெற்றவர் இப்பெருங் கவிஞருடைய சிறந்த உவமைகள், இருதயத்திற்கு இன்பம் நல்கும். உருவகங்கள் புலமையைப் புலப்படுத்தும் சிலேடைகள் என்றவற்றை எல்லாம், கல்விநலச் சான்றோர்களும் ஆன்ற ஆராய்ச்சி யாளரும் விரும்பி, வியந்து உவகையில் என்றுந் திளைத்தனர். இனியுற அங்ஙனமே திளைப்பர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை உலகம் உள்ளளவும்.


                               ****************************


No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS