Sunday, January 2, 2022

छंद - மாத்திரை / எண்களைக் குறிக்கும் வார்த்தைகள்

 

           छंद 

எண்களைக் குறிக்கும் வார்த்தைகள்

சில வார்த்தைகள் எண்களை குறிக்கும் வண்ணம் இருப்பதுண்டு அவைகளை ஹிந்தியில் सूचक शब्द என்பர்.

தமிழில் சில 1  3/4 தையனா வருகிறான் என்பார்கள். அப்படியென்றால் என்ன என்று நமக்குப் புலப்படாது. சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால் தமிழ் எண் 1 என்பது 'க'.
1/4 என்பது 'ழு' அதோடு 'தை' சேர்த்தால் 1 3/4தை 'கழுதை'. அதாவது கழுதை வருகிறான் என்பதை இவ்வாறு சூசகமாக கூறியிருக்கிறான் எனப் புரியும்.

அதேபோல், அவர் 8  1/4 லட்சணம் கொண்டவர் என்றால் என்னவென்று புரியாமல் முழிப்போம். தமிழ் எண் 8 என்பதற்கு 'அ' 1/4 என்பதற்கு 'வ'. 
எனவே 8  1/4 லட்சணம் என்றால் 
அவ லட்சணம் என்று பொருள்.



சரி, ஹிந்தியில் சில छंद களில் சில வார்த்தைகளுக்கு சில எண்ணிக்கைகள் வழங்குகிறோம். உதாரணமாக सरिता  (13 மாத்திரைகள் என்றும்) - दिन (7 மாத்திரைகள் என்றும்) श्रृंगार (16 மாத்திரைகள் என்றும்) रत्न (14 மாத்திரைகள் என்றும்) रवि (7 மாத்திரைகள் என்றும்) ஆகியவைகளை கூறலாம். இவைகளுக்கு எவ்வாறு மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன என்னும் தாத்பர்யத்தை ஆராய்வோம்.

* பிரபஞ்சத்தில் பரமாத்மா ஒருவரே! எனவே பரமாத்மா என்ற வார்த்தைக்கு 1 மாத்திரை என்று கொள்ளலாம்.

* உலகில் ஆண், பெண் ஜாதி இரண்டு. மனிதர்களுக்கு கண்கள் இரண்டு. பாம்பிற்கு நாக்கு இரண்டு. சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் என்பது இரண்டு. எனவே जाति  / आँख / सर्प का जीभ / पक्ष/ ஆகியவைகள் இரண்டு மாத்திரைகள் எனலாம்.

பொதுவாக யானைக்கு தந்தம் இரண்டு ஆனால் யானை முகம் கொண்ட பிள்ளையாருக்கு ஒரு தந்தம் தான் உள்ளது. (ஒரு தந்தத்தை ஒடித்து மஹாபாரதம் எழுதியதாக புராணக்குறிப்பு உண்டு) எனவே गणेश का दंत என்றால் ஒரு மாத்திரை என்று கொள்ள வேண்டும்.

சிவனுக்கு நெற்றிக் கண்ணும் சேர்த்து மூன்று கண்கள் உள்ளன. எனவே அவரை त्रिनेत्र (த்ரிநேத்ரன்) என்றும் அழைப்பதுண்டு. ஆகையால் त्रिनेत्र என்றால் மூன்று மாத்திரைகள் எனக் கொள்ளலாம்.


7 தினங்கள் ஒரு வாரம் ,7 ஸ்வரங்கள் ஒரு ராகம் , 7 முறைதான் பிறவி வரும். எனவே   दिन, स्वरम्, लयम என்ற வார்த்தைகளுக்கு 7 மாத்திரைகள் என பொருள் கொள்ளலாம்.

மேற்கூறிய விபரங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு எண்ணுக்கும் என்னென்ன வார்த்தைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை கீழே விவரித்துள்ளோம். பயன்படுத்திக் கொள்க.

எண் 1 க்கு मुख, आत्मा, परमात्मा, मन, सूर्य, चंद्र, हाथी का 
                         सूँड, गणेश का दंत, ऐरावतं (இந்திரனின் 
                         யானை ) शुक्राचार्य की आँखें आदि। 

எண் 2 க்கு   नदी के तट, कान, सींग, अयन, साँप की जीभ, 
                           पक्ष, आँख, भुजा आदि ।

எண் 3 க்கு   भुवन, कालिदास के काव्य, त्रि शंख की रेखा, 
                           काल, शिव के नेत्र आदि ।

எண் 4 க்கு  उपाय, सेना के अंग, विष्णु की भुजाएँ, वर्ण 
                         आश्रम, वेद, युग आदि ।

 எண் 5 க்கு  गायत्री के मुख, पांडव, पंच भूत, पंचेंद्रिय, 
                          स्वर्ग के तरु, महाकाव्य

எண் 6 க்கு  रस, राग, वेदांत, ऋतु आदि । 

எண் 7 க்கு वार, दिन, गिरि, ताल, स्वर, ऋषि आदि ।

எண் 8 க்கு  गज, छाप, दिशाएँ, याम, योग, ब्रह्मा के कान ।

எண் 9 க்கு  रस, नाडी, ग्रह, निधि ।

எண் 10 க்கு  दशा, दोष, रावण के सिर, अवतार, अंगुलियाँ,    
                            ब्रह्मा के कान, अवस्था आदि।
  
எண் 11 க்கு  रूद्र, दुर्योधन की सेना।

எண் 12 க்கு  सूर्य, राशि, मास, भूषण, कार्तिकेय के नेत्र आदि 

எண் 13 க்கு  किरण, नदी, सरिता आदि ।

எண் 14 க்கு भुवन, रत्न, विद्या, मनु, यम आदि।
 
எண் 15 க்கு  तिथि।
 
எண் 16 க்கு श्रृंगार, संस्कार।

எண் 17 க்கு संगम ।

எண் 18 க்கு  पुराण, स्मृति, विद्या ।

எண் 19க்கு  द्वीप। 

எண் 20 க்கு नख, विष्णु की अंगुलियाँ, रावण की आँखें। 

எண் 27க்கு  नक्षत्र ।

*********



















No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS