रस
ஓர் அறிமுகம்
रस என்றால் தமிழில் சுவை என்று பொருள்.
உணவுக்கு அறுசுவை !
உணர்வுக்கு ஒன்பது சுவை !!
இந்த ஒன்பது சுவைதான் 'நவரஸம்' என்கிறோம்.
ஆனால், ஹிந்தியில் சேர்த்து वात्सल्य रस -ஐ பத்து வகையாகப் பிரிக்கின்றனர். இது தவிர श्रृंगार रस - संयोग श्रृंगार என்றும் என்றும் பிரிந்து रस ஹிந்தியில் மொந்தம் பதினொரு வகையாக வழங்கப்பட்டு வருகிறது.
காவியங்களை படிக்கும்போதோ அல்லது கேட்கும் போதோ, அந்த காவியங்களின் கருத்திற்கொப்ப மகிழ்ச்சியோ, துக்கமோ அல்லது வேறு பல உணர்வுகளையோ நாம் வெளிப்படுத்துகிறோம். அவ்வாறே நாடகமோ, சினிமாவோ காணும்போதும் இத்தகைய உணர்வுகளை நாம் வெளிப்படுத்துகிறோம்.
எனவே रस இல்லாமல் காவியமோ, கவிதையோ இயற்ற முடியாது என நமக்கு தெளிவாகிறது.
रस निष्पत्ति
रस எப்படி அமைய வேண்டும் என்பதை भरत मुनि என் தன்னுடைய என்ற நூலில் கூறியுள்ளார்.
विभावानुभावव्यभिचारि संयोगाद्रसनिष्पत्तिः
இந்த இலக்கணத்தை பின்வருமாறும் கூறலாம்.
भाव विभाव अनुभाव
संचारी भाव संयोगात्
रस निष्पत्ति”
எனவே, स्थायी भाव , विभाव ,अनुभाव, और संचारी भाव ஆகியவைகளின் துணையுடன் தான் VHI அமைக்க முடியும் என்பது நன்கு தெளிவாகிறது. இனி இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. स्थायी भाव :
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சில நிலையான உணர்வுகள் இருக்கின்றன. ஒரு நிகழ்ச்சியையோ அல்லது காட்சியையோ காணும்போது அந்த உணர்வுகள் விழித்துக் கொள்கின்றன. அதைத்தான் நாம் स्थायी भाव என்று கூறுகிறோம். ஒவ்வொரு रस க்கும் ஒவ்வொரு உணர்வுகள் வீதம் स्थायी भाव மொத்தம் பத்து வகையாகப் பிரிக்கலாம். அவை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
स्थायी भाव
श्रृंगार இன்பச்சுவை रति/प्रेम அன்பு
हास्य நகைச்சுவை हास சிரிப்பு
करुण அவலச்சுவை शोक சோகம்
रौद्र வெகுளிச்சுவை क्रोध கோபம்
वीर வீரச்சுவை उत्साह உற்சாகம்
भयानक அச்சச்சுவை भय பயம்
बीभत्स இளிவரல்சுவை जुगुप्सा / घृणा வெறுப்பு
अद्भुत வியப்புச்சுவை विस्मय ஆச்சரியம்
शांत சமநிலைச்சுவை निर्वेद பற்றின்மை
वात्सल्य மழலை/பரிவுச்சுவை ममता தாய்/தந்தை பாசம்
2. विभाव
நம் உள்ளத்திலிருக்கும் உணர்வு எந்த காரணங்களினால் தட்டி எழுப்பப்படு கின்றனவோ அதை विभाव என்று கூறுகிறோம். அதனை आलंबन विभाव என்றும் - उद्दीपन विभाव என்றும் இரண்டு விதமாக பிரிக்கலாம்.
आलंबन विभाव
இதை 1.आश्रय என்றும் 2. विषय என்றும் இரண்டாகப் பிரிக்கின்றனர்.
1.आश्रय : யாருடைய மனதில் சோகம். கருணை. பயம் போன்ற स्थायी भाव உண்டாகிறதோ அதை आश्रय என்பர்.
2. विषय: யார் மீது சோகம். கருணை. பயம் போன்ற स्थायी भाव ஏற்படுகிறதோ அதை विषय என்று கூறுவர்.
उद्दीपन विभाव: विषय வின் दशा (நிலைமை) மற்றும் परिस्थित (சூழ்நிலை) ஆகியவைகளைப் பற்றி கூறுவது उद्दीपन विभाव ஆகும்.
3. अनुभाव :
आश्रय வின் दशा (நிலைமை) மற்றும் कार्यकलाप (செயல்கள்) ஆகியவைகளைப் பற்றி கூறுவது अनुभाव ஆகும்.
4.संचारी भाव :
स्थायी भाव ல் வருகிற பத்துவகை உணர்வுகளைத் தவிர இன்னும் சில உணர்வுகளும் உள்ளன. அவைகளை संचारी भाव என கூறுகிறோம். व्यभिचारी என்றும் இதை கூறுவர். இது முப்பத்தி மூன்று வகைப்படும். அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. उदासीनता 2. ग्लानी 3. शंका
4. असूया 5. मद 6. श्रम
7. आलस्य 8. दैन्य 9. चिन्ता
10. मोह 11. स्मृति 12. धृति
13. लज्जा 14. चपलता 15. हर्ष
16. आवेग 17. जडता 18. गर्व
19. विषाद 20. औत्सुक्य 21. निद्रा
22. अपस्मार 23. स्वप्न 24. जगना
25. अमर्ष 26. गोपन 27. उग्रता
28. मति 29. व्याधि 30. उन्माद
31. त्रास 32. वितर्क 33. मरण
**************
No comments:
Post a Comment
thaks for visiting my website