Tuesday, February 4, 2020

Praveshika/தமிழ் பொழில் II

Praveshika

தமிழ் பொழில் II

1. உத்தம நண்பர்


இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

1. உன்னைப் பகையாகக் கொண்டு போரிடும் புதல்வர்

தோற்றால் உனக்குப் பின் நீ உனது பெரும் செல்வத்தை யாருக்குத் தரப் போகிறாய்

இடம் :
'உத்தம நண்பர்' என்னும் கட்டுரையில் இத் தொடர் இடம் பெறுகிறது. கோப்பெருஞ் சோழனுடைய புதல்வர்கள் தம் தந்தையின் அரசுரிமையைப் பறித்துக் கொள்ளும் எண்ணத்துடன் தந்தையை எதிர்த்துப் போருக்குச் சென்றனர். மன்னனும்
அவர்களை எதிர்த்துப் போரிடப் படைகளைத் திரட்டினான். இச் செயலை அறிந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர்
மன்னனிடம், "உன்னைப் பகையாக கொண்டு போரிடும் புதல்வர் தோற்றால் உனக்குப் பின் நீ உனது பெரும் செல்வத்தை யாருக்குத் தரப் போகிறாய்?" என்று கூறினார்

பொருள் விளக்கம் -
 மன்னனும் மக்களும் ஒருவரோடு ஒருவர்
போரிட நிற்பதைக் கண்ட புல்லாற்றூர் எயிற்றியனார், "வேந்தே உன்னுடன் போரிட வருபவர் உனது பகைவர் அல்லர். நீயும்
அவர்கட்குப் பகைவன் அல்லன். உனக்குப் பிறகு ஆட்சிக்கு உரியவர் உன் மைந்தர்களே. போரில் உன் புதல்வர் தோற்றால்
உனது பெருஞ்செல்வத்தை யாருக்குத் தரப் போகின்றாய்? அல்லது நீ அவர்க்குத் தோற்றால் பெரும் பழியே வந்து சேரும். உன்
பகைவரும் உன் நிலை கண்டு மகிழ்வர். ஆதலால் போரைத் தவிர்க" என அரசனுக்கு அறிவுரை கூறிப் போரைத் தடுத்தார்.




<SCRIPT charset="utf-8" type="text/javascript" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?rt=tf_cw&ServiceVersion=20070822&MarketPlace=IN&ID=V20070822%2FIN%2Fmuthukumarig-21%2F8010%2Fe2878da9-1d8c-4d4a-a9b8-e7ab1567eb76&Operation=GetScriptTemplate"> </SCRIPT> <NOSCRIPT><A rel="nofollow" HREF="//ws-in.amazon-adsystem.com/widgets/q?rt=tf_cw&ServiceVersion=20070822&MarketPlace=IN&ID=V20070822%2FIN%2Fmuthukumarig-21%2F8010%2Fe2878da9-1d8c-4d4a-a9b8-e7ab1567eb76&Operation=NoScript">Amazon.in Widgets</A></NOSCRIPT>

2. சான்றோர் சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

இடம் : '
உத்தம நண்பர்' என்னும் கட்டுரையில் இவ்வரிகள் இடம் பெறுகின்றன. கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும்
ஒருவரையொருவர் காணாமலேயே நட்புக் கொண்டர்வர்கள்.! கோப்பெருஞ்சோழன் தான் வடக்கிருக்கத் துணிந்தபோது தன்
நண்பர் பிசிராந்தையார் வடக்கிருக்க ஓர் இடம் ஒதுக்குமாறு சோழன் கூறினான். பிசிராந்தையார் வாழும் பாண்டிநாடு
தொலைவில் உள்ளது. அவர் எப்படி வருவார் என பலர் ஐயுற்றனர். ஆனால் சோழன் கூறியவாறே பிசிராந்தையாரும் வந்து
சேர்ந்தார். அப்போது கண்ணகனார் என்னும் புலவர்,

"சான்றோர் சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே,
என்று கூறினார்.

பொருள் விளக்கம் :
தன் நாடு வெகு தொலைவில் இருந்த போதும் கோப்பெருஞ்சோழன் கூறியவாறு பிசிராந்தையார் உடன் வடக்கிருக்க வந்ததை அறிந்த கண்ணகனார், "பொன்னும்
பவளமும் முத்தும் மணியும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் மதிப்புமிக்க அணிகலன் அமைக்கும்போது ஒன்று சேர்வது  போலச் சான்றோர் எப்பொழுதும் சான்றோர் பக்கமே சேர்வர். சால்பு
இல்லாதவர் அத்தகைய இயல்புடை யாருடனேயே  சேர்வர்" என்று பாராட்டினார்.

2. இனியவை நாற்பது

1. நாயைக் கட்டி இழுத்துவருவது போன்று என்னை இழுத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இடம் : '
இனியவை நாற்பது' என்னும் கட்டுரையில் இத்தொடர் இடம் பெறுகிறது. சேரன் இரும்பொறை க்கும் சோழ செங்கணானுக்கும்  போர் நடந்தது. போரில் சேரன் தோற்றான அவனைக் குடவாயில் கோட்டம் என்னுமிடத்தில் சோழன் சிறை
வைத்தான். குடிக்க நீர் கேட்ட போது சிறைக் காவலன் தன்னை அவமானப்படுத்தியதைச் சேரன் நினைத்தான். மேலும் தன்னை
சிறையிலிடும்பொழுதும்,

நாயைக் கட்டி இழுத்து வருவது போன்று என்னை இழுத்துவந்து சிறையில் அடைத்தனர்'
எனக் கூறி வேதனைப்பட்டான்.

பொருள் விளக்கம் :
சிறைக் காவலன் சேர மன்னனை அவமானப்
படுத்தும் வகையில் காலம் தாழ்த்தி நீரைக் கொண்டு வந்து இடம் கையால் அலட்சியமாக அவனுக்கு எதிரில் நீரை வைத்தான். அது
தன் மானத்துக்கு இழுக்கு என்று நினைத்த சேரன், "என்னைச் சிறையிலிடும் பொழுதும் நாயைக் கட்டி இழுத்து வருவது போன்று
என்னை இழுத்து வந்து சிறையில் அடைத்தனர். மானம் இழந்தும் உயிர் துறக்காமல் இன்னும் வாழ்ந்து வருகிறேன். இக் காவலனிடம் நீர் கேட்டு உயிர்வாழ்தல் சரியன்று' எனக் கூறி நீரைப் பருகாமல்
மானத்தைக் காத்து உயிர் துறந்தான்.

2. நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப் பெற்றேன்

இடம் : '
இனியவை நாற்பது' என்னும் கட்டுரையில் இத்தொடர் இடம் பெறுகிறது. திருநாவுக்கரசர் தம் இல்லத்தில் உணவு
உண்ண வேண்டுமென அப்பூதியடிகள் கேட்டார். நாவரசரும் அதற்கு இசைந்தார். அப்பூதியடிகள் தம் மனைவியிடம் தூய
நற்கறிகளை அறுவகை சுவையால் ஆக்கி, ஆய இனிய உணவும் ஆக்குமாறு பணித்தார். பிறகு தம் மைந்தன் மூத்த திருநாவுக்கரசை
அழைத்து அடியவர் அமுதுண்ணத் தோட்டத்திலிருந்து வாழையிலை அரிந்து வருமாறு கூறினார். தந்தை கட்டளையை
ஏற்ற அம்மன்

"நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப் பெற்றேன்"

என மகிழ்வோடு கூறினார்.

பொருள் விளக்கம் :
"அடியவருக்கு அமுதூட்ட வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த என் தாயும் தந்தையும் வாழையிலையை
அரிந்து வருமாறு என்னை ஏவியதால் நான் செல்கின்றேன்" என்று உளம் நிறைந்த மகிழ்வோடு விரைந்து சென்று
கொல்லையில் வாழையிலையை அரியத் தொடங்கினான்.

3. புலமைப் பெண்டிர்

1. யானை தனது கொம்பினிடையே வைக்கப் பெற்ற கவளம் போன்று பரிசில் நம் கைகளிலேயே உள்ளது.

இடம் :
'புலமைப் பெண்டிர்' என்னும் கட்டுரையில் இத்தொடர் இடம் பெற்றுள்ளது. ஒளவையார் அதியமானின் அவைக்களப் புலவர். அதியமான் இரவலர்க்கு என்றும் எளியவன். ஒரு நாள் சென்றாலும் இரு நாட்கள் சென்றாலும், தொடர்ந்து பல நாட்கள் பலரோடு சென்றாலும் முதல் நாளில்
விருப்பத்தோடு வரவேற்றதைப் போலவே வரவேற்பான்'' என்று கூறிய ஔவையார்,

"யானை தனது கொம்பினிடையே வைக்கப் பெற்ற கவளம் போன்று பரிசில் நம் கைகளிலேயே உள்ளது. அது தப்பாது''

என்று கூறுகிறார்.

பொருள் விளக்கம் :
யானையின் கொம்புகளுக்கிடையே
'பெற்ற உணவு கப்பாமல் அதன் வாய்க்குள் செல்லும், கல்லும் அதுபோன அதியமான் பரிசில் வழங்கக் காலம் நீட்டித்தாலும் அப்
தவறாமல் இரவலர்க்குக் கிடைக்கும் என்பதை அழகிய உவமை மூலம் ஒளவையார் உணர்த்துகிறார்.

2. "மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று மிதியாமை கோடி யுறும்

இடம் : இவ்வரிகள் புலமைப் பெண்டிர் என்ற பாடத்திலிருக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருள் : உலகத்தில் என்னென்ன பொருட்கள் கோடிபெறும் என்று பரிசாக
கேள்விக்கு ஒளவையார் இந்த பாடலை
கொடுத்துள்ளார். பிறருக்கு கொடுத்து வாழ்பவரே உயர் சாதியினர்

பொருள்:
 இருந்தும் கொடுக்காதவர் தாழ்ந்த சாதியினர். நம்மை மதியாதவர்கள் வீட்டு வாசலை கோடி ரூபாய் கொடுத்தால் கூட
மிதக்கக் கூடாது. நம்மை மதிப்பவர்கள் நமக்கு செல்வம் கொடுக்கவில்லை. என்றால் கூட நமக்கு அவர்களை நண்பர்கள்
என்று எடுத்துரைக்கிறார்

2. இவர் மானுடப் பிறவி அல்லர் : நற்பெருந் தெய்வம்

இடம் -
புலமைப் பெண்டிர்' என்னும் கட்டுரையில் இத் தொடர் இடம் பெற்றுள்ளது. தன் மனைவி புனிதவதியைப் பின் வெளிநாட்டிற்குச் சென்று பிறகு பாண்டிய நாட்டிற்குத் திரும்ப
பரமதத்தன் வேறொரு பெண்ணை மணந்து குழந்தை பெற்றான் பாண்டிய நாட்டில் இருந்த பரமதத்தனைக் காணப் புனிதவதியைச் சுற்றத்தார் அழைத்துச் சென்றனர். புனிதவதியாரைக் கண்ட
பரமதத்தன் தனது மனைவியுடனும் மகவுடனும் அவர்கள் முன் சென்று வணங்கி,

இவர் மானுடப் பிறவி அல்லர் ; நற்பெருந் தெய்வமே
எனக் கூறித் துதித்தான்.

பொருள் விளக்கம் :
இறைவன் திருவருளால் புனிதவதியார்
அதிமதுரம் மாங்கனி ஒன்றைப் பெற்றுத் தன் கணவன் பரமதத்தனுக்குப் படைத்தார். அதனால் அவன் தன் மனைவி தெய்வப் பிறவியே எனக் கருதினான். எனவே அவளைப் பிரிந்து வெளிநாடு சென்றான். பாண்டிய நாடு திரும்பி வேறொரு
பெண்ணை மணந்து குழந்தை ஒன்றையும் பெற்றான். புனிதவதியார் பாண்டிய நாட்டில் தம் சுற்றுத்துடன் பரமதத்தனைக்
கண்டபோது, முன்னர் அவர் இறைவன் அருளால் மாங்கனி பெற்றுத் தந்ததை நினைவு கூர்ந்து "புனிதவதியார் மானுடப் பிறவி அல்லர். சிறந்த தெய்வமே" என அவரைத் தொழுது வணங்கினான்.

'3. மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்

இடம் :
 'புலமைப் பெண்டிர்' என்னும் கட்டுரையில் இத் தொடர் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் மகள் கோதை எனப்படும்
ஆண்டாள் தம் தந்தையார் பாடிய பாடல்களைக் கருத்தூன்றிப் படித்ததால் கோதையின் உள்ளத்தில் கண்ணனின் உருவம் கொண்டு, குறைந்திருந்தது. கண்ண பெருமானையே தம் கணவனாக

"மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய்"

என்று கோதை கூறி வந்தார்.

பொருள் விளக்கம் :
கோதையின் உள்ளத்தில் கண்ணனது உருவமே என்றும் பொலிவுடன் இருந்து வந்தது. கண்ண பெருமானையே தம் கணவனாகக் கொண்டார். அதனால்
"மானிடர்க்கு என்னை மணம் முடிக்கும் பேச்சு எழுந்தால் நான் உயிர் வாழ மாட்டேன்" என்று கூறினார்.

4. மேதை வேதநாயகர்

1. நான் ஊர்வந்து சேர்ந்த பின்னரும் என்       உள்ளம் இன்னும் இங்கு வந்து                சேரவில்லை.

இடம் : 
மேதை வேதநாயகர்' என்னும் கட்டுரையில் இத் தொடர் இடம் பெற்றுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத் தலைவரான

தமிழ்க் கடல் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரை வேதநாயகர்
ஆதீனத்தில் சந்தித்துப் பலநாட்கள் உடனிருந்தார். அந் நாட்டு
இருவரும் தமிழ் அமுதைப் பருகி மகிழ்ந்த னர். ஒருநாள் தேசிகரி
விடைபெற்றுத் திரும்பிய வேதநாயகர் தம்

பிரிவுத் துயரை வெளிப்படுத்த
நான் ஊர்வந்து சேர்ந்த பின்னரும் என் உள்ளம் இன்னும் இங்குவந்து சேரவில்லை "

எனப் பாடல் எழுதி அனுப்பினார்.

பொருள் விளக்கம் :
தேசிகரும் வேதநாயகரும் தமிழறிஞர்கள்
வேதநாயகர் திருவாவடுதுறை ஆதீனத்தில் பலநாட்கள் தங்கியிருந்து தேசிகரோடு அளவளாவித் தமிழ் அமுதைப் பருகினார். அவரைப் பிரிந்து வந்த பின் தாம் அவரை மறக்க முடியவில்லை என்பதை உணர்த்துவதற்காக, "நான் ஊர்வந்து
சேர்ந்த பின்னரும் என் உள்ளம் இங்குவந்து சேரவில்லை. உடனே என் உள்ளத்தை இங்கு அனுப்ப மாட்டீர்களா?'' என்னும் பொருள்
கொண்ட பாடலை எழுதி அனுப்பினார்.

(2) இந்த உத்தியோகம் என்ன பெரிதா-நெஞ்சே!
இது போனால் நாம் பிழைப்பது அரிதா?

இடம் :
 இவ்வரிகள் மேதை வேதநாயகர் என்னும் பாடத்தில் இருந்து தரப்பட்டுள்ளன. இது மேதை வேதநாயகரின் கூற்று.

பொருள் :
வேதநாயகர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்து வந்தார். ஒரு சமயம் அவர் வேலையில் தாமதம் செய்ததாகக் கூறி ஆங்கில நீதிபதி ஒருவர் அவரை வேலையிலிருந்து நீக்கினார். அப்போது கூட வேதநாயகர் மனம்
கலங்கவில்லை இந்த வேலை இல்லாவிட்டால் உலகில் வேறு பல
வலைகள் உள்ளன. அதில் ஒன்றைச் செய்து பிழைக்க முடியும்.
அதனால் மனமே நீ கலங்காதே என்று பொருள் தரும் இந்த
வரிகளைப் பாடி வேதநாயகர் தமக்குத் தாமே தைரியம் சொல்லிக்
கொண்டார். |


5. கரிகால் வளவன்


1. உன்னையும் பகலையும் கண்டு முன்னர் மகிழ்ந்தோம்.
- இல்லையெனில் எமக்குப் பகல் எவ்வாறு கழியும்

இடம் : ' கரிகால் வளவன்' என்னும் கட்டுரையில் இத்தொடர் இடம்
பெற்றுள்ளது. கரிகால் சோழன் போரிட்ட சேர மன்னன் முதுகில் புண் பட்டால், அது தன் மானத்திற்கு இழுக்கு என நினைத்து அவன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான், அதனைக் கண்ட கழாஅத் தலையார் என்னும் புலவர்.

"உன்னையும் பகலையும் கண்டு முன்னர் மகிழ்ந்தோம்.
நீ இல்லையெனில் எமக்குப் பகல் எவ்வாறு கழியும்?" |

என்று கூறினார்.

பொருள் விளக்கம் :
இரவுப் பொழுதில் முடங்கி இருக்கும்
உயிர்கள் பகல் பொழுதைக் கண்டால் மகிழ்ச்சி கொள்வது இயற்கை. பகலில் மகிழ்ச்சி கொள்வது போலச் சேரலாதனைக்
காணும் போதும் மகிழ்ச்சி ஏற்படும். அவன் வடக்கிருந்து உயிர் திறந்துவிட்டால்
அவனாலும் பகல் பொழுதினாலும் மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சியற்ற துன்பம் மிக்க பகல் பொழுது எவ்வாறு கழியும் என்று புலவர் வருந்திக் கூறினார்.

2. காவிரிப் பூம்பட்டினத்தையே பரிசிலாகக் கொடுத்தாலும்
என் தலைவியைப் பிரிந்து வாரேன்.

இடம்:
 'கரிகால் வளவன் என்னும் கட்டுரையில் இத்தொடர் இடம் பெற்றுள்ளது. கரிகால் சோழன் புகழைக் கூறும் நூல் பட்டினப்
பாலை என்பது. இந் நூலில், வணிக நிமித்தம் வெளிநாடு செல்ல நினைந்த தலைவன் தன் நெஞ்சினை நோக்கி,

"காவிரிப் பூம்பட்டினத்தையே பரிசிலாகக் கொடுத்தாலும்
என் தலைவியைப் பிரிந்து வாரேன்"

என்று சொல்லுவதாக இத்தொடர் இடம் பெற்றுள்ளது.

'பொருள் விளக்கம் :
காவிரிப்பூம்பட்டினம் நில வளமும் நீர் வளமும்
மிக்கது. வணிக வளத்தால் அந்நகரில் செல்வ வளம் பெருகியது.  அந்நகரில் வாழ்வது மகிழ்ச்சியைத் தரும். ஆனால், காவிரி
பூம்பட்டினத்தில் பரிசிலாகக் கொடுத்தாலும் என் தலைவியைப் பிரிந்து வாரேன் எனத் தலைவன் கூறியதிலிருந்து, வளங்கள்
நிறைந்த காவிரிப் பூம்பட்டித்தைவிடத் தலைவி அதிக இன்பத்தைத் தருபவள் எனத் தலைவன் நினைத்தான் என அறியலாம்.

அந்நகரில் வாழ்வது மகிழ்ச்சியைத் தரும். ஆனால், காவிரி பூம்பட்டினத்தில் பரிசிலாகக் கொடுத்தாலும் என் தலைவியைப் பிரிந்து வாரேன் எனத் தலைவன் கூறியதிலிருந்து, வளங்கள் நிறைந்த காவிரிப் பூம்பட்டித்தைவிடத் தலைவி அதிக இன்பத்தைத்தருபவள் எனத் தலைவன் நினைத்தான் என அறியலாம்.

6. குமரகுருபரர் -

1. நீ காசிக்குச் சென்று வந்தபின் உனக்கு உபதேசம் செய்வோம்.


இடம் :
 'குமர குருபரர்' என்ற கட்டுரையில் இத்தொடர் இடம் பெற்றுள்ளது. ஊமைக் குழந்தையாய் இருந்த குமர குருபரர்,
திருச்செந்தூர் முருகப் பெருமான் அருள் பாடும் வல்லமை பெற்றார். குமர குருபரர் இறைவனை வணங்கும் போது, அவர்

வட திசை செல்லும் போது அவரது வாக்கு தடைப்படும் இடத்தில் ஓர் குருவினிடம் ஞானோபதேசம் கிடைக்கும் என ஓர் ஒலி
கூறியது. குமரகுருபரர் தருமபுர ஆதீனத் தலைவரான மாசிலாமணி தேசிகரைச் சந்தித்து உரையடியபோது அவரது
வாக்குத் தடைப்பட்டது. குமரகுருபரர் அவரிடம் தமக்கு ஞானோபதேசம் அருளுமாறு வண்ட "நீ காசிக்குச் சென்று வந்த பின் உனக்கு உபதேசம் செய்வது" என்று கூறினார்.

பொருள் விளக்கம் -
மாசிலாமணி தேசிகர் குமர குருபரரிடம்
சில வினாக்களைக் கேட்டார். எல்லா வினாக்களுக்கும் விடை கூறிவந்த குமரகுருபரரால் 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' என்னும் திருத்தொண்டர் புராணப் பாடலுக்கு விளக்கம் தர இயலவில்லை . முன்னர் முருகப் பெருமான் அருளியவாறு
ஞானகுரு இவரே எனத் தெளிந்து, தமக்கு ஞானோபதேசம் அருளுமாறு வேண்டினார். அப்போது தேசிகர் குமரகுருபரர் காசிக்குச் சென்றுவந்தபின் அவருக்கு உபதேசம் செய்வதாகக் கூறினார்.


7. அமுதசுரபியும் ஆபுத்திரனும்

1. வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது தான் தொலைவில்லாத் தகைமையது.

இடம் : '
அமுதசுரபியும் ஆபுத்திரனும்' என்னும் கட்டுரையில் இத் தொடர் அமைந்துள்ளது. இரவு நேரத்தில் பசியால் வாடிய சிலர்
ஆபுத்திரனிடம் உணவு வேண்டினர். அவன் சிந்தாதேவி என்னும் தெய்வத்தை வணங்கி அவர்களின் பசியைப் போக்குமாறு
வேண்டினான். அத் தெய்வம் ஆபுத்திரன் கையில் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து,

"வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவில்லாத் தகைமையது''

என்று அப்பாத்திரத்தின் சிறப்பைக் கூறுவது
பொருள் விளக்கம் : சிந்தாதேவி தான் வழங்கிய பாத்திரத்தில் இடப்பெறும் உணவு நாடு மழையின்றி நீர்வளம், நில வளம்
குன்றிய காலத்தும் உணவைப் பெறுபவர்களின் கை வருந்துமே யல்லாமல் ஒருநாளும் குறையாது என்று ஆபுத்திரனிடம் கூறியது.

2. அப்பாத்திரம் உன்னை வந்து அடையினும் அடையும். நீ அங்குச் செல்க.

இடம் :
 'அமுதசுரபியும் ஆபுத்திரனும் என்னும் கட்டுரையில் இத் தொடர் அமைந்துள்ளது. ஆபுத்திரன் அமுத சுரபியை மணிப்பவத் தீவில் கோமுகிப் பொய்கையில் ஒவ்வோராண்டும் புத்தர் பிறந்த வைகாசிப் பௌர்ணமி நாளில், வெளிவந்து. அருள் உள்ளம் கொண்டோர் வரின் அவர் கையில்,
சோக என்று கூறி உயிர்நீத்தான். மணிமேகலை ஒருசமயம்  அத்தீவை அடைந்த போது தீவதிலகை என்பவள் அவன் முன்

"அப்பாத்திரம் உன்னை வந்து அடையினும் அடையும். நீ அங்குச் செல்க"

என்று கூறினாள்.

பொருள் விளக்கம் :
மணிமேகலை மணிபல்லவத் தீவு அடைந்த நாள் புத்தர் பிறந்த வைகாசிப் பௌர்ணமி நாளாகும். அதனால் அந்நாளில் அமுதசுரபி கோமுகிப் பொய்கையிலிருந்து வெளிவந்து
மணிமேகலையை அடையக் கூடும் என்றும், ஆகவே அவளை அங்கே செல்லுமாறும் தீவதிலகை கூறினாள்.


8. தமிழ்த் தாத்தா

உ.வே. சாமிநாதய்யர்

1. நவீன -இலக்கிய தலைசிறந்த
ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியாளர் : நவயுகத் தமிழ் எழுத்தாளர் முதன்மையா
எழுத்தாளர்.


இடம் :
'தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்' என்னும் கட்டுரையில் இத்தொடர் அமைந்துள்ளது. உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் உயிர் நீத்தபொழுது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வீழ்ந்த ஆலமரம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில்

நவீன இலக்கிய ஆராய்ச்சியாளரில் தலைசிறந்த ஆராய்ச்சியாளர் நவயுக தமிழ் எழுத்தாளரில் முதன்மையான எழுத்தாளர்
என்று உ.வே.சா. அவர்கள் பாராட்டுகிறார். '

பொருள் விளக்கம்
உ.வே. சாமிநாதையர் பழந்தமிழ்
இலக்கியங்களைக் கண்டுபிடித்து அச்சேற்றி வெளியிட்டார் ; பல கட்டுரை நூல்களை எழுதி வெளியிட்டார் ; புதிய எளிய தமிழ் நடையில் எழுதி அதில் வெற்றிபெற்றார். எனவே கல்கி
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உ.வே.சா. அவர்கள் நவீன இலக்கிய ஆராய்ச்சியாளரில் தலைசிறந்தவர் என்றும், நவயுக எழுத்தாளர்
முதன்மையானவர் என்றும் பாராட்டுகிறார்.

9. தென்னாட்டுத் திலகர்


வ.உ. சிதம்பரனார்

1. துறவியாக வாழ்பவருக்குக் குலமும் கிடையாது ; கோத்திரமும்
கிடையாது. பழிப்பவர் பழிக்கட்டும்.!

இடம் -
 'தென்னாட்டுத் திலகர் வ.உ. சிதம்பரனார்' என்ற கட்டுரையில் இத் தொடர் இடம் பெற்றுள்ளது. வ.உ.சிதம்பரனார். கீழ்க்குலத்தில் பிறந்த துறவி ஒருவரைத் தம் வீட்டில் வைத்துக் காப்பாற்றி வந்தார். ஊரார் இச் செயலைக் கண்டித்துப் பேசலாயினர். அது கேட்டுச் சிதம்பரனார் வருந்தியபோது அவரது முதல் மனைவி வள்ளியம்மை என்பவர்,

"துறவியாக வாழ்பவருக்குக் குலமும் கிடையாது :
கோத்திரமும் கிடையாது; பழிப்பவர் பழிக்கட்டும்"

என்று கூறிக் கணவனை ஆறுதல் படுத்தினார்.

பொருள் விளக்கம் :
இல்லறத்தில் வாழ்பவர்களுக்குத் தான்
குலமும் கோத்திரமும் சொல்லப்படும். திருமணம் செய்யும் போதுதான் குலம், கோத்திரம் எல்லாம் பார்ப்பார்கள். துறவிகள்
திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்கள் அல்லர். எனவே அவர்களுக்குக் குலமும் கோத்திரமும் கிடையாது ; பழிப்பவர்கள்
பழிக்கட்டும் என ஆறுதல் கூறும் வ.உ.சி.யின் மனைவி நற்பண்பு வாய்ந்தவர் என விளங்குகிறது.

2. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை; அதனை நான் அடைந்தே தீருவேன்.

இடம் :
இவ்வரிகள் லோகமான்ய பாலகங்காதர திலகர் கூறிய வரிகள். நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. 'தென்னாட்டுத்
திலகர் வ.உ.சிதம்பரனார்' என்னும் பாடத்தில் இவ்வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. சுதந்திரம் கேட்டதை தேசத் துரோகம்
என்று சொல்லி ஆங்கில அரசு திலகர் கைது செய்தது. அப்போது திலகர் இவ்விதம் கூறினார்.

பொருள் :
இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிர்களும்
சுதந்திரமாகவே பிறக்கின்றன. எனவே சுதந்திரம் என்பது பிறப்புரிமை. அதை இடையில் வருபவர்கள் தட்டிப் பறிக்க முடியாது. எப்பாடு பட்டாவது நான் சுதந்திரத்தை அடைந்தே தீருவேன்.



10. ஆதிரை

1. தீயும் கொல்லாத் தீவினையாட்டியேனாகிய யான் செய்த தவறு யாதோ? |


இடம் : '
ஆதிரை' என்னும் கட்டுரையில் இத் தொடர்
அமைந்துள்ளது. ஆதிரையின் கணவன் சாதுவன் வெளிநாடு சென்ற போது மரக்கலம் கவிழ்ந்து கடலில் இறந்தான் எனத்
தப்பிவந்தவர் சிலர் கூறினர். கணவனைப் பிரிந்து உயிர்வாழ விரும்பாத ஆதிரை, ஊரார் அமைத்துக் கொடுத்த நெருப்புக்
குழியினுள் புகுந்தாள். அத் தீ அவளைச் சுடவில்லை . அப்போது ஆதிரை,

தீயும் கொல்லாத் தீவினை அடியேனாகிய நான் செய்த
தவறு யாதோ?

என்று கூறினாள்,
பொருள் விளக்கம் 1 ஆதிரையைத் திடாது விடுத்தது. அவன
பாடிய பூக்கள் வாடவில்லை : உடுக்கிய கடடை எரியவில்லை
சிய சந்தனம் அழியவில்லை. நெருப்பு தன்னை ஒன்றும்
செய்யாதிருப்பதைக் கண்ட ஆதிரை நெருப்பும் கொல்லாத
வினை உடையவளாகிய தான் செய்த தவறு யாது என்று

வருந்தினாள்.

2. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக.


இடம் :
 'ஆதிரை' என்னும் கட்டுரையில் இத் தொடர் அமைந்துள்ளது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை அறவண அடிகள் வாயிலாகவும், காயசண்டிகை வாயிலாகவும் ஆதிரையின் பெருமையை அறிந்தாள். அமுதசுரபியில் முதன்முதலாக அவளிடம்
உணவைப் பெறச் சென்றாள். ஆதிரை அந்த அமுத சுரபியில்,

"பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக"

என்று கூறி உணவிட்டாள்

பொருள் விளக்கம் :
 மணிமேகலை ஆதிரையைத் தேடிச் சென்று
அமுத சுரபியைக் கையிலேந்தி நின்றாள். அப்போது ஆதிரை, இவ்வமுத சுரபியால் உலகம் முழுவதும் பசிநோய் நீங்கட்டும் என்று
வாழ்த்தி உணவிட்டாள்.


2 comments:

  1. Thank you ji... There were few spelling mistakes.. but it can be understood.. is it important questions of 3rd paper?

    ReplyDelete

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS