Wednesday, February 3, 2021

PRAVEEN POORVARDH/TAMIL- Import questions

 

                    PRAVEEN POORVARDH paper-3 

                    TAMIL- Import questions 


                   தமிழ் இலக்கிய வரலாறு 50% ( portion )


       தமிழ் நாடும் மொழியும்

       சங்ககாலம்

       எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

      சங்ககாலம் ஒரு பொற்காலம்

      சங்க மருவிய காலம்

     பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

     இரட்டைக் காப்பியங்கள்

     பல்லவர் காலம்

     பன்னிரு திருமுறைகள்

     ஆழ்வார்கள் பன்னிருவர்

      சோழர் காலம்

       காப்பியங்கள்

      இலக்கண நூல்கள்

      உரையாசிரியர்கள்

      சைவ சித்தாந்த சாத்திரங்கள்

       நாயக்கர் காலம்

      பதினைந்தாம் நூற்றாண்டுப் புலவர்கள்


          Important Questions 


      எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்


1. எட்டுத்தொகை நூல்கள் யாவை? அவை எவற்றைப்

     பற்றிக் கூறுகின்றன?


எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்

         பல புலவர்களால் பாடப்பட்ட பாடல்களை அடி பொருள் என்னும் முறையால் தொகுக்கப்பட்ட நூல்களே எட்டுத்தொகையாகும் தற்றினை, குறுந்தொகை, கலித்தொகை அகநானூறு, என்னும் ஐந்து அகப்பொருள் கூறும் நூல்களாம். பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்னும் மூன்றும் புறப்பொருள் கூறும் நூல்களும் தார்ந்தது எட்டுததொகையாகும்

        எட்டுத்தொகை

   1.  நற்றிணை -

          இதில் முதல் 12 அடி வரை அமைந்துள்ள 450 பாடல்கள் உள்ளன. 175 புலவர்கள் இவற்றை பாடியுள்ளன. தனிமகனார். விழிக்கண் பேதைப் பெருங்கண்ணனார். அவருள் சிலர்

    2. குறுந்தொகை

          இதில் 4 அடி முதல் 8 அடி வரை அமைந்துள்ள 400 பாடல்கள் உள்ளன இருநூற்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் இப்பாடல்களை இயற்றியுள்ளனர்

     3. ஐங்குறுநூறு

          இதில் 3 வாழ்த்து உட்பட அடி முதல் 6 அடி வரை உள்ளது. கடவுள் 501 பாடல்கள் உள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளுக்கும் தலா நூறு பாடல்கள் உள்ளன. மருதத்தை பாடியவர் ஓரம்போகியார் நெய்தலைப் பாடியவர் அம்மூவனார், குறிஞ்சியினைப் பாடியவர் கபிலர், முல்லையைப் பாடியவர் பேயனார், பாலையைப் பாடியவர் ஒதல் ஆந்தையார்

      4. பதிற்றுப்பத்து

         சேர மன்னர் பதின்மரைப் பத்து புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும். இப்போது முதல் பத்தும் இறுதி பத்தும் நீங்கலாக 80 பாடல்கள் கிடைத்துள்ளன. இதனை இமய வரம்பன், சேரன் செங்குட்டுவன், இளஞ்சேரலிரும்பொறை ஆகிய மன்னர்களை பற்றி குமட்டுர்க்கண்ணனார், பரணர், அரிசில் கிழார் ஆகிய புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம் காணப்படுகின்றது

       5. பரிபாடல் -

         பரிபாடல் என்பது ஒரு வகை பாவாகும். இசை நயமிக்க இந்நூலின் 70 பாடல்களில் 22 பாடல்களே கிடைத்துள்ளன. இந்நூலில் முருகன், திருமால் ஆகிய கடவுளரையும் மதுரை மாநகரையும் புகழ்ந்துப் பாடப்பட்டுள்ளது.

         6. கலித்தொகை -

         இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஒரு சிறு கதையாகும். முல்லை குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகள் நல்லுருத்திரனார், கபிலர், மருதனிளநாகனார் பெருங்கருங்கோ ஆகியோர் பாடியுள்ளனர். நல்லந்துவனார்

         7. அகநானூறு -

          இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் நித்திலக் கோவை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்நூல் நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது

          8. புறநானூறு

          தமிழகத்தின் சிறப்புமிக்க வரலாற்றினை இது இனிதாக விளக்குகிறது இதில் ஒளவையார். கோவூர்கிழார். புலவர்களின் பாடல்கள் உள்ளன. ஆகிய

                             பத்துப்பாட்டு

         1. திருமுருகாற்றுப்படை :

         இதனை புலவராற்றுப்படை எனவும் கூறுவர் இதில் முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்பைப் பற்றி பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

        2. பொருநராற்றுப்படை

         முடத்தாமக்கண்ணியார் என்னும் பெண் புலவர் கரிகால் வளவனின் சிறப்பைப் பற்றிப் பாடிய பாடல்கள் இதில் உள்ளன. இதில் 248 வரிகள் உள்ள.

       3. சிறுபாணாற்றுப் படை :

        யாழ்ப்பாணர், சிறுபாணர் பெரும்பாணர் என இருவகை யினராவர் . இதில் சிறுபாணன் குறிக்கப்படுகின்றான். ஓயமாநாட்டு நல்லிய கோடனை, இளட்க்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாடல்களே சிறுபாணற்றுப்படை நூலாகும்.

     4. பெரும்பாணாற்றுப்படை :

         தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ள இந்நூலில் S00 அடிகள் உள்ளன.

      5. முல்லைப்பாட்டு -

         நப்பூதனாரால் இந்நூல் பாடப்பட்டது. இதில் 103 அடிகள் உள்ளன. முல்லை திணைக்குரிய ஒழுக்கத்தினை இந்நூல்

விளக்குகிறது.

       6, மதுரைக்காஞ்சி :

           தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியுள்ள பாடல்கள் மதுரைக்காஞ்சி நூலில் உள்ளன. இதில் 782 அடிகள் உள்ளன

        7. நெடுநல்வாடை

         தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியுள்ள பாடல்கள் இதில் உள்ளன. இந்நூலில் 188 அடிகள் உள்ளன

         8. குறிஞ்சிப்பாட்டு :

        ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் பெருமையை உணர்த்த கபிலர் பாடிய பாடல்கள் குறிஞ்சிப்பாட்டாகும். இதில் 261 வரிகள் உள்ளன.

         9. பட்டினப்பாலை

           சோழன் கரிகாற் பெருவளத்தானை உருத்திரகண்ணனார் என்னும் புலவர் பாடியப் பாடல்களே பட்டினப்பாலை நூலில் உள்ளன. இதில் 101 அடிகள் உள்ளன

          10. மலைபடுகடாம் :

           இது கூத்தாற்றுப்படை எனவும் வழங்கப்படுகிறது. நன்னனை, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பாடியுள்ள பாடல்கள் இந்நூலில் உள்ளன. இதில் 583 அடிகள் உள்ளன. 


                         -----------------------

             3. சங்க காலம் ஒரு பொற்காலம்

          முன்னுரை :

          அறிவில் சிறந்த காவலரும், பாவலரும் வாழ்ந்த சங்ககாலம் சிறந்த இலக்கியங்களை தோற்றுவித்தது. அரசர், அந்தணர் வேளாளர், வணிகர், ஆகியோர் பலரும் புலவராக விளங்கிய காலம் சங்ககாலம். அறிவிற் சிறந்த புலவர்களின் சொற்கேட்டு அரசர்கள் வாழ்ந்தனர் கோவூர்கிழார் மன்னரையும் இடித்துரைத்து வழி நடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இக்காலத்தில் ஆவூர்கிழார் அரிசில் கிழார், கோவூர்கிழார், இளவேட்டனார், கிள்ளிவளவன், ஒளவையார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, பொன்முடியார் எனப் பல புலவர்கள் வாழ்ந்தனர்.

        வாழ்க்கை முறை :

         இக்காலத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் உணர்வு எங்கும் நிலவியது. காழ்ப்புணர்ச்சி எவரிடத்திலும் காணப்படவில்லை. வணிகரும் கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை கொடாது வாழ்ந்து வந்தனர், இளம்போதியார் நக்கீரர் போன்ற சிறந்த புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். தமிழகத்து நகரங்களில் அறங்கூறவையம் எனப்படும் நீதிமன்றங்கள் இருந்தன. கொற்றவையை வழிபடும் வெள்ளிவிழா, திருவோண விழா, கார்த்திகை தீபம், முடிசூட்டு விழா எனப்பலவகை விழாக்கள் கொண்டாடப்பட்டன. தமிழர்கள் தங்கள் வாழ்வினை அகம் புறமென இருகூறாகப் பிரித்து வாழ்ந்தனர். நிலத்தினையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாக பிரித்து வாழ்ந்தனர்

          உயர்ந்த நோக்கு :

         சங்ககால மக்களின் உயர்ந்த நோக்கினை அக்கால இலக்கியங்களில் காணலாம் "யான் வாழ நாளும் பண்ணன் வாழ்க புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” குழையால் கோழியை விரட்டிய வளமிக்க வாழ்வினை தமிழர் பெற்று வாழ்ந்தனர் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் உயர்ந்த கருத்தினை ஆற்றுப்படை நூல்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன கற்பனை செறிவும் ஓசை இனிமையும், மொழித்துாய்மையும் உள்ளதை உள்ளவாறு உரைக்கும் பண்பும் பெற்று தமிழர் விளங்கியதை சங்ககாலம் தெரிவிக்கின்றது

       முடிவுரை :

         சிறப்புகள் பலவற்றையும் பெற்றிருப்பதால் சங்ககாலம் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம் எனப்படுகிறது தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் ஒரு மணிமகுடமாகும்.




          USHA Food Processors. Many Tasks one Master. 

                  ---------------------------------

                4. சங்க மருவிய காலம்

பதிணெண்கீழ்க்க ணக்கு நூல்கள் (11+6+1=18)

             கீழ்கணக்கு என்பது இரண்டடி முதல் ஆறடி வரையுள்ள வெண்பாவினால் எழுதப்பட்ட நூலாகும். கணக்கு என்றால் நூல் என்பதாகும். இதில் அறம், பொருள், இன்பம் ஆகிய கருத்துகள் பதிணெண்கீழ்கணக்கில் அறநூல்கள் பதினொன்று (11),அகப்பொருள் நூல்கள் ஆறு (6) புறப்பொருள் ஒன்று (1) இடம்பெற்றுள்ளன.

      1. திருக்குறள் :

       கீழ்கணக்கு நூல்களுள் பழைமையானது திருக்குறளாகும் இது திருவள்ளுவரால் எழுதப்பட்டது. திருவள்ளுவர் காலம் இமு 1 முதல் 300 க்கும் உட்பட்டது, திருக்குறள் உலகப் பொது மறையாக கருதப்படுகிறது இது ஐந்தாம் வேதமாகவும் கருதப்படுகிறது. இதில் 1330 குறள்கள் உள்ளன. அவற்றை 133 அதிகாரங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இது அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என் மூன்று பிரிவுகளாக எழுதப்பட்டுள்ளது

        2. நாலடியார் :

         நானூறு பாடல்கள் கொண்டது. இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. சமண முனிவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் திருக்குறளில் உள்ளது போலவே அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகள் உள்ளன.

      3. நான்மணிக்கடிகை :

       நான்கு மணிகளை கொண்ட மாலை நான்மணிகடிகையாகும். இதை இயற்றியவர் விளம்பி நாகனார். இந்நூலில் 101 வெண்பாக்கள் உள்ளன. இந்நூல் "அம்மை" என்ற வனப்பில் அடங்கும். இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும்

      4. இன்னா நாற்பது :

        இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும். இதனை இயற்றியவர் கபிலர், நாற்பது பாடல்கள் இதில் உள்ளன. இதில் துன்பம் தரும் விஷயங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

      5. இனியவை நாற்பது :

       இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும்: இதனை இயற்றியவர் பூதஞ்சேதனார். நாற்பது பாடல்கள் இதில் உள்ளன. இதில் இன்பம் தரும் விஷயங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று உள்ளது

      6. திரிகடுகம் -

         இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும். இதனை இயற்றியவர் நல்லாதனார். இந்நூலில் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற முக்கூட்டு மருந்து எல்லா நோய்களையும் போக்கும் அதுபோல இப்பாடலின் மூன்று கருத்து எல்லா நன்மைகளையும் செய்யும். இதில் 10 வெண்பாக்கள் உள்ளன

     7. ஆசாரக்கோவை -

         இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும். இதனை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார்

      8. பழமொழி -

          இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும். இதனை இயற்றியவர் முன்றுரையரையனார். இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன இவர் சமணர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு பழமொழி காணப்படுகிறது

      9. சிறுபஞ்சமூலம் -

         இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும். இதனை இயற்றியவர் காரியாசான். இவர் சமணர். கண்டங்கத்திரி வேர். சிறுமல்லி வேர். பெருமல்லிவேர், நெருஞ்சிவேர், சிறுவழுதுணைவேர் என்னும் 5 வேர்கள் நோய்களைப் போக்குவதைப் போல் இப்பாடல்களின் ஐந்து கருத்துகள் நன்மை தரும்

     10. முதுமொழிக்காஞ்சி :

          இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும், இதனை இயற்றியவர் கூடலூர்கிழார். இதில் அறிவுப் பத்து, பொய்ப்பத்து, சிறந்தப் பத்து என 100 பாடல்கள் உள்ளன

      11. ஏலாதி -

      இந்நூல் அறவொழுக்கம் பற்றியதாகும் இதனை இயற்றியவர் கணிமேதாவியார். ஏலம், சுக்கு, மிளகு, திப்பிலி இலவங்கப்பட்டை நாககேசரம் ஆகிய ஆறு மூலிகைகள் நோய்களைப் போக்குவதைப் போல் இப்பாடலின் ஆறு கருத்துகள் நன்மை தரும்.

      12. கார் நாற்பது :

       இந்நூல் அகப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் ரைக் கண்ணங்கூத்தனார், கார் காலத்தைப் பற்றி இந்நூல் தெரிவிக்கிறது

     13. ஐந்திணை ஐம்பது :

      இந்நூல் அகப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் மாறன் பொறையனார். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை திணைகளைப் பற்றிய ஐம்பது பாடல்கள் இதில் உள்ளன

     14. ஐந்திணை எழுபது :

      இந்நூல் அகப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் மூவாதியார். இவர் சமணர் எனக் கூறுவா முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை திணைகளைப் பற்றி தலா பதினான்கு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன

     15. திணைமொழிஐம்பது :

       இந்நுால் அகப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் கண்ணன் சேந்தனார். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை திணைகளைப் பற்றி தலா ஐம்பது பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன

     16. திணைமாலை நூற்றைம்பது :

       இந்நூல் அகப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் கணிமேதாவியார் ஆவார். இதில் முல்லை , குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை ஆகிய ஐவகை திணைகளைப் பற்றி தலா 30 (முப்பது) பாடல்கள் வீதம் மொத்தம் 150 பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன

      17. கைந்நிலை :

       இந்நூல் அகப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் புல்லங்காடனார். இதில் ஐவகை திணைகளைப் பற்றி தலா 12 பாடல்கள் வீதம் மொத்தம் 60 பாடல்கள் உள்ளன

       18. களவழி நாற்பது :

        இந்நூல் புறப்பொருள் பற்றியதாகும். இதனை இயற்றியவர் பொய்கையார். சோழ மன்னன் கோச் செங்கண்ணணின் வெற்றியை புகழ்ந்து பேசி சேரமான் கணைக்கால் சேரனை சிறையிலிருந்து மீட்பதற்காக இந்நூல் இயற்றப்பட்டது.


                           இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரே குடும்பத்தைப் கூறுவதால் அழைக்கப்படுகிறது இசை இரட்டைக் காப்பியங்கள் என

      சிலப்பதிகாரம் :

     சிலப்பதிகாரத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இடம் பெற்றுள்ளன. இதனை முத்தமிழ் காப்பியம் பொருள் தொடர்நிலை செய்யுள், உரையிடை இட்ட பாட்டு எனவும் கூறுவர். இந்நூல் மூன்று பெரிய நீதிகளை உலகிற்கு உணர்த்த எழுதப்பட்டது.

       1. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

       2. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

      3. பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் போற்றுவர்

  நூல் அமைப்பு :

           முதல் பாடல் மங்கல வாழ்த்தாகும். கடைசி பாடல் வரந்தரும் காதையாகும். மொத்தம் 30 காதைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார், இவர் சைவர் என்று கருதப்படுகிறார். சிலர் இவரை சமணர் எனவும் கருதுவர்.இதில் கயவாகு என்னும் இலங்கை வேந்தனைப் பற்றியும் கூறுவதால் இந்நூல் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தது எனலாம். இளங்கோவடிகள் /உலகோர்க்கு பல அரிய கருத்துகளையும் உபதேசங்களையும் இதரலில் தந்துள்ளார். சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் லைவி கண்ணகி ஆவாள், மாதவி கோவலனின் இரண்டாம் மனைவியாவாள். இந்நூல் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும்

      மணிமேகலை :

          சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலனுக்கும். மாதவிக்கும் பிறந்தவளே மணிமேகலையாவாள். அவளுடைய வாழ்க்கை வரலாற்றை கூறுவதாலேயே இந்நூல் மணிமேகலை என்று பெயரிடப்பட்டுள்ளது

        இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூலை மணிமேகலைத்துறவு எனவும் கூறுவர். இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். இந்நூலில் பசி நீக்குதல் பரத்தை ஒழிப்பு. மது ஒழிப்பு, அறச்சாலைகள் அமைத்தல் போன்ற சீர்திருத்தங்கள் நன்றாக விளக்கப்பட்டுள்ளன. பௌத்த சமய கருத்துகளை இந்நூல் விளக்குகின்றது, இந்நூல் சிலப்பதிகாரக் கதையோடு பெரிதும் தொடர்புடையதாகும். இந்நூல் விழாவளை காதையில் தொடங்கி அறுகெனப் பாவை நோற்ற காதையில் முடிவடைகிறது. மொத்தம் முப்பது காதைகள் உள்ளன நாட்டில் சிறப்பான, ஒழுங்கான ஆட்சி நடைபெறாவிட்டால் நாடு அழியும் என் இந்நூல் கூறுகிறது. இந்நூலுக்கும் மணிமேகலைக்கும் கருத்து ஒற்றுமை, அடி ஒற்றுமை, தொடர் ஒற்றுமை, சொல் ஒற்றுமை என்றுப்பல ஒற்றுமைகள் உண்டு "ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்னும் கருத்து இரண்டு காப்பியங்களிலும் பேசப்படுகின்றது. 

     முத்தொள்ளாயிரம் -

         சேர, சோழ, பாண்டிய அரசர்களைப்பற்றி தலா 900 பாடல்கள் வீதம் 2700 பாடல்கள் இருந்தன. ஆனால் நமக்கு 109 செய்யுட்களே கிடைத்துள்ளன.

      பல்லவர்காலம் :

       சங்ககாலத்தில் சிறப்புமிக்கதாக இருந்த தமிழகம் சங்கமருவிய காலத்தில் களப்பிரர் ஆட்சி காரணமாக வளர்ச்சி இழந்தது தமிழகத்தின் வடபகுதியை பல்லவர்களும், தென் பகுதியை களப்பிரரும் ஆட்சி செய்தனர். பல்லவ ராஜ்ஜியத்தில் தமிழ் இலக்கியங்கள் பல தோன்றின. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடியது இக் காலத்தில் தான் ஆழ்வார்கள், திவ்ய பிரபந்தம் இக்காலத்தில்  தான் பாடினார்கள்.


                         ---------------------------

                      6. பன்னிரு திருமுறைகள்

        சைவ சான்றோர்கள் இயற்றிய பாடல்களை சமயச் வகைப்படுத்தி தொகுக்கப்பட்ட தொகுதியே பன்னிரு திருமுறையாகும்.


பன்னிரு திருமுறைகள் :

   1.   1,2, 3 திருமுறைகள்

      திருஞான சம்பந்தர் இயற்றியது. கி.பி 7ம் நூற்றாண்டை சார்ந்தது.

   2.   4, 5, 6 திருமுறைகள் :

         திருநாவுக்கரசர் இயற்றியது. கி.பி 7 ம் நூற்றாண்டை சார்ந்தது.

   3. ஏழாம் திருமுறை :

        சுந்தரர் பாடியது. நூற்றாண்டை சார்ந்தது.

    4. எட்டாம் திருமுறை :

         மாணிக்க வாசகர் இயற்றியது

    5. ஒன்பதாம் திருமுறை :

          திருமாணிக்கத்தேவர். கருவூர்தேவர் போன்ற ஒன்பது பேர்பாடியது.

   6. பத்தாம் திருமுறை :

        திருமூலர் பாடியது. 3000 செய்யுட்கள் கொண்டது.

    7. பதினோராம் திருமுறை :

        திருவால வாயுடையார். காரைக்கால் அம்மையார் போன்ற பன்னிருவர் பாடிய பாடல்கள்.

      8. பன்னிரண்டாம் திருமுறை

         சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணமே பன்னிரண்டாம் திருமுறையாகும். கி.பி 12 ம் நூற்றாண்டை சார்ந்தது. 


    முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள்

       இவை   திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பாடல்களாகும். சம்மந்தர் சோழவள நாட்டில் பிறந்த அந்தணராவார் இவரை காழியார் கோன், ஆளுடைப்பிள்ளை எனவும் கூறுவர் ஜலர் மூன்று வயதில் ஞானப்பால் அருந்தியவர். இவரின் தந்தை சிவ பாத இருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் கி.பி 7ம் நூற்றாண்டை சேர்ந்தவர்

     நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் :

           உழவாரப்படையினால் அயராது பாடுபட்ட திருநாவுக்கரசர் இயற்றியதே இத்திருமுறைகள். இவர் கி.பி 7ம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவர் திருவாமூரில் பிறந்தவர். தந்தையார் புகழனார் தாயார் மாதினியார். இவர் சகோதரி திலகவதியாரால் ஆதரிக்கப்பெற்றவர். சமண மதம் மாறிய இவர் சூலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் சைவராக மாறியவர். இவர் அப்பூதியடிகளின் மகனை மீண்டும் உயிர்ப் பெற செய்த பெருமையுடையவர்

      ஏழாம் திருமுறை :

            சுந்தரர் பாடிய தேவார பதிகங்களே 7ம் திருமுறை எனப்படும். இவர் திருநாவலூரில் பிறந்தார். தம்பிரான் தோழர். நம்பி ஆரூரார். வன்றொண்டர் ஆகியவை இவரது மற்ற பெயர்களாகும். இவர் கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவரது தந்தை சடையனார். தாயார் இசை ஞானியார். இவர் இறைவனால் ஓலைக்காட்டி தடுத்தாட் கொள்ளப்பட்டவர்

      எட்டாம் திருமுறை :

             மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகமும், திருக்கோவையாரும் 8ம் திருமுறையாகும். திருவாதவூரில் பிறந்தார். இவரது தந்தை சம்புபாதசாரியார் தாயார் சிவஞானவதியார் ஆவார். பௌத்தரை வாதில் வென்றது. ஊமை பெண்னைப் பேச வைத்தது இவரது அற்புதங்களாகும். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி.இவர் கி.பி மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

    ஒன்பதாம் திருமுறை

         திருமாளிகைத் தேவர், கருவூர்த்தேவர், சேந்தனார், காடநம்பி பூந்துருத்தி போன்ற ஒன்பது சான்றோர்கள் பாடிய பாக்கள் ஒன்பதாம் திருமுறை எனப்படும்

     பத்தாம் திருமுறை :

         திருமூலர் பாடிய திருமந்திரமே பத்தாம் திருமுறையாகும் இதில் 3000 செய்யுட்கள் உள்ளன. 232 அதிகாரங்கள் உள்ளன இவர் 3000 ஆண்டுகள் முன்பு வாழந்தவர்.

       பதினோராம் திருமுறை :

           திருவால வாயுடையார். காரைக்காலம்மையார், கபில தேவர், நம்பியாண்டார் நம்பி என பன்னிருவர்களால் பாடல் பெற்ற பாடல்களே பதினோராம் திருமுறையாகும்

      பன்னிரண்டாம் திருமுறை :

          திருத்தொண்டர்  புராணம் எனப்படும் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும். இதனை இயற்றியவர் சேக்கிழார். சிவபெருமானே சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று நூல் பாட அடி எடுத்துக் கொடுத்தார். இவர் கி.பி 12 ம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

                 ------------------------------------

                  ஆழ்வார்கள் பன்னிருவர்


            வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களே திவ்யபிரபந்தம் இயற்றினர்

      1. பொய்கையாழ்வார் :

         இவர் காஞ்சி பொற்றாமரைக் குளத்தில் பிறந்தார் எனவே இவரை பொய்கையார் என அழைத்தனர். இவரது பாடல்கள் முதல் திருவந்தாதி எனப்படும்

      2. பூதத்தாழ்வார் :

        இவர் திருகடல் மல்லை என்னும் மகாபலிபுரத்தில் பிறந்தார் இவரது பாடல்களில் பல இடங்களில் பூதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவரது பாடல்கள் இரண்டாம் திருவந்தாதி எனப்படும். 

     3. பேயாழ்வார்

         இவர் மைலாப்பூரில் வாழ்ந்தவர். இவர் பேய் பிடித்தவர் போல் ஆடிப்பாடி இறைவனைப் போற்றி பாடியதால் இப்பெயர் பெற்றார் இவரது பாடல்கள் மூன்றாம் திருவந்தாதியாகும்.

    4. திருமழிசையாழ்வார் :

         பூவிருந்தவல்லி அருகேயுள்ள திருமழிசை என்னும் ஊரில் பிறந்தார். சைவ சமயத்தில் திருமூலரைப் போன்றே வைணவத்திற்கு பிலி திருமழிசையாழ்வாராவார்

     5. நம்மாழ்வார் -

        இவரே ஆழ்வார்களுள் தலை சிறந்தவர். திருவாய்மொழி இவர் பாடிய நூலாகும். இவர் எல்லா நாட்டினருக்கும்.இனத்தவருக்கும் உரியவராக கருதப்படுகிறார் இவரை சடகோபர் என்றும் கூறுவர்

      6. மதுரகவியாழ்வார் :

       திருக்கோளூரில் பிறந்தார் இனிமையான பாடல்களை பாடியதால் இவரை மதுர கவிராயர் என அழைக்கிறார்கள். இவர் நம்மாழ்வாரின் சீடர்

      7. குலசேகரத்தாழ்வார்

        இவர் சேர நாட்டை சேர்ந்தவர். திருமாலின் கவுத்துவமணியின் அம்சமாக தோன்றியவர் இவர். "பெருமாள் திருமொழி" இவரால் பாடப்பெற்றது. இவர் சிறந்த பக்தராவார்

       8. பெரியாழ்வார் :

        இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார் திருமாலுக்கு இவர் பல்லாண்டு பாடியவர். இவர் வீட்டு சித்தன், பட்டர்பிரான் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது மகளே ஆண்டாள். இவர் கண்ணனை குழந்தையாக கண்டு மகிழ்ந்தவர். இவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்

     9. ஆண்டாள் -

        இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாவார் இவர் ஸ்ரீவில்லி புத்தூரை சார்ந்தவர். திருப்பாவை இவரே இயற்றினார் நாச்சியார் திருமொழியும் இவர் இயற்றியதே. இவர் நூற்றாண்டை சேர்ந்தவர் எட்டாம் 10. தொண்டரடிப்பொடியாழ்வார் :

        இவரது இயற்பெயர் விப்பிர நாராயணர் திருமண்டங்குடியைச் சார்ந்தவர். திருமாலை, திருப்பள்ளியெழ்ச்சி ஆகியவை பாடியவையாகும். இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து திருமாலுக்கு மாலை சாற்றியவர் இவர்

     11. திருபாணாழ்வார்:

        இவர் பாணர் குலத்தில் உறையூர் என்னும் இடத்தில் பிறந்தார். 'அமலனாதிப்பிரான் என்பது இவர் இயற்றிய நூலாகும்

      12. திருமங்கையாழ்வார் :

        இவர் திருக்குறையலூரில் பிறந்தார், இவரது இயற்பெயர் நீலன் என்பதாகும். பெரிய திருமொழி, சிறிய திருமடல், பெரிய திருமடல் திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை என் நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

                --------------------------


                   10. உரையாசிரியர்கள்

           தமிழ் இலக்கணம் இலக்கியம் என்னும் கலைக்கோவிலில் விளக்கேற்றியவர்கள் உரையாசிரியர்கள், அவர்கள் 

    1. இலக்கண உரையாசிரியர்கள் 

    2. இலக்கிய உரையாசிரியர்கள் என இருவகைப்படுவர்.


        1. இளம்பூரணர் :

        இவர் தொல்காப்பியத்திற்கு எளிய நடையில் உரை எழுதியவர். இவரை இளம்பூரண அடிகள் எனவும் அழைப்பர். இவர் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

      2. பேராசிரியர் -

         இவர் சைவர் இவர் திருகோவையாருக்கு உரை எழுதியுள்ளார் கல்வியறிவுமிக்க இவர் தொல்காப்பியத்திற்கும், குறுந்தொகைக்கும் உரை எழுதியுள்ளார்

      3. சேனாவளராயர்

         இவரது உரைநடை விடைகளோடு கூடியதாயிருக்கும். தொல் காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு இவர் உரை எழுதியுள்ளார். இவரை படைத்தலைவர் எனவும் கூறுவர்

      4. நச்சினார்க்கினியார் :

         நச்சினார்க்கினியன் எச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர் எனப்படும் இவர் கூட்டிப் பொருள் சொல்வதில் வல்லவர். இவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவரை "அமுதவாயா" எனவும் கூறுவர். இவர் குறுந்தொகையின் கடைசி பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்

     5. பரிமேலழகர் :

        திருக்குறளுக்கு உரை எழுதிய பத்து பேரில் மிகவும் உயர்ந்தவர் பரிமேலழகர் ஆவார். இவர் காஞ்சியில் பிறந்தார் இவர் வைணவ அந்தணர் ஆவார். மேற்கோள் காட்டுவதில் வல்லவரான இவர் மற்றவர்களின் உரையை மறுத்து தன் கருத்தை நிலைநாட்டுவதில் வல்லவர். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார்.

6. அடியாருக்கு நல்லார் !


இவர் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளார். இரை நூல்கள் முதலிய பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பது இவரது ஆழ்ந்த புலமையைக் காட்டுகிறது. வீரசோழியத்திற்கு பெருந்தேவனார் தொல்காப்பியச் உரை எழுதியுள்ளார் சிவஞான முனிவர் சூத்திர விருத்தி, சிவஞான போதத்திற்கும் உரை எழுதியுள்ளார். நம் பிள்ளை என்பவர் பெரிய திருமொழி திருவிருத்தம், திருப்பள்ளியெழுச்சி முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். வைணவ சமயத்தை சார்ந்த பிரபந்தம் பாடல்களுக்கு எழுதப்பட்டுள்ள உரைகள் போன்று திருவாசகங்களுக்கு உரை எழுதப்பட வேண்டும்.










 






No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...