''पड'' என்ற பதத்தின் மாற்றங்களும் உபயோகிக்கும் விதிமுறைகளும்
நாம் இன்று 'पड' என்ற பதம் எப்படி எல்லாம் உபயோகிக்கப் படுகிறது என்பதை விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த சொல்லின் செயல்பாடுகளைப் பற்றி பார்க்கும் போது ஒரு உண்மை நமக்கு புலப்படும். அது என்னவென்றால் पड என்ற பதத்தை தனியே உபயோகிப்பது இல்லை. இந்த சொல்லின் முன்போ அல்லது பின்போ வேறு சொற்கள் வந்தால் தான் இதற்கு பொருள் கிடைக்கும். இதை பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும் போது இப்படி சொல்வதுண்டு. "पड" என்ற சொல் மிகவும் பயந்த சுபாவம் உடையது. எனவே அது தனக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ மற்றொரு சொல்லை துணைக்கு அழைத்து வரும். உதாரணத்திற்கு
पडा रहना படுத்து கிடத்தல்
पडा पाना – படுத்த நிலையில் காண்பது
करना पडता - செய்ய நேரிடுதல்
आना पडा - வர நேர்ந்தது.
हाथ धोना पडेगा - இழக்க நேரிடும்.
''पड ' என்ற சொல்லை நேரிடுதல் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கும் போது "होना" வின் உபயோகம் போன்றே எழுவாயுடன் को சேர்க்கப்பட வேண்டும். को சேர்த்தவுடன் வினைச்சொல் பயனிலையை பொறுத்தே வரும்.
சில உதாரணங்களைப் பார்ப்போம்.
जान पडता है कि अगले महीने से शाम को पाँच बजे तक स्कूल चलेगा।
அடுத்த மாதத்தில் இருந்து பள்ளி மாலை ஐந்து மணிவரை செயல்படும் என தெரியவருகிறது.
हमको इस किताब के लिए दो सौ रुपये देने पडेंगे।
நாம் இந்த புத்தகத்திற்காக இரு நூறு ரூபாய்கள் கொடுக்க நேரிடலாம். (கொடுக்க வேண்டிவரும்)
राम को परीक्षा लिखने के लिए पूरी किताब पढनी पडी।
தேர்வு எழுதுவதற்காக ராம் புத்தகத்தை முழுமையாக படிக்க நேரிட்டது.
मुझे काम करने के लिए कहाँ जाना पड़ेगा?
வேலை செய்வதற்காக நான் எங்கு செல்ல வேண்டிவரும்?
पिताजी को मेरी पढाई के लिए और भी ज़्यादा कमाना पडता है। எனது படிப்பிற்காக அப்பா மேலும் அதிகமாக சம்பாதிக்க நேரிடுகிறது.
मेरी माँ पंद्रह दिनों से बीमार पड़ी है।
எனது தாயார் பதினைந்து நாட்களாக நோயுற்று கிடக்கிறாள்.
वह आदमी पेड से गिर पडा ।
அந்த மனிதன் மரத்திலிருந்து விழுந்து விட்டான்.
बरसात के समय सब को छत्री की जरूरत पड़ती है।
மழை காலத்தில் எல்லோருக்கும் குடையின் தேவை ஏற்படுகிறது.
पैसे के अभाव के कारण उसे अपनी इच्छा से हाथ धोने पडे।
பணம் இல்லாத காரணத்தால் அவள் தனது ஆசையை கைவிட நேர்ந்தது.
இதில் हाथ धोना என்ற பதத்திற்கு கையை சுத்தப்படுத்துதல் என்ற பொருள் இல்லை. கைவிடுதல் என்பதுதான் பொருள்.
ऐसे पडे रहने से क्या फायदा है? चलो उठकर कुछ काम करो ।
இப்படி படுத்து கிடப்பதால் என்ன பயன்? எழுந்து ஏதாவது வேலை செய்.
हमें बडों की बात माननी पडेगी।
நாம் பெரியவர்களின் வார்த்தைகளை மதிக்க (ஒப்புக்கொள்ள) வேண்டும்.
भविषय के लिए सब को कुछ पैसे बचाकर रखने पड़ते हैं। எல்லோரும் எதிர்காலத்திற்காக சில துகையை சேமித்து வைக்க நேரிடுகிறது.
बीमारियों से बचने के लिए ज्यादा तरकारी खानी पड़ती है।
நோய்களிலிருந்து விடுபட (தப்பிக்க) அதிகமாக காய்கறிகளை உண்ண வேண்டி இருக்கிறது.
अब बारिश कम पड गयी, चलो अब घर चलें।
இப்பொழுது மழை குறைந்து போகலாம். பட்டது. வீட்டிற்குப் போகலாம்.
रोज़ उससे मिलना पडता है।
தினமும் அவனை சந்திக்க நேரிடுகிறது.
वह दूकान कहाँ पडती है?
அந்த கடை எங்கு இருக்கிறது? (அந்த கடையை எங்கு பார்க்கலாம்) அடையாளம் காணும் போது இப்படி கேட்கப்படுகிறது.
वह दूकान मंदिर के बाजू में पडती है।
அந்த கடை கோவிலுக்கு அருகில் இருக்கிறது.
धन्यवाद!!!🙏🙂
No comments:
Post a Comment
thaks for visiting my website