Tuesday, November 9, 2021

சிறப்பு பிரயோகங்கள் -4 usage )     4. कोई - कुछ - usage

 

சிறப்பு பிரயோகங்கள்-4 (usage )


         4. कोई - कुछ - usage 

          நிச்சயமற்ற பிரதிப் பெயர்ச் சொற்களான இவற்றின் பிரயோகம்பற்றி அறிந்திருப்பது மிகவும் தேவையாகும்.


कोई  : கீழ்க் காணுமாறு பிரயோகிக்கப் படுகிறது.

बाहर कोई खडा है।

 வெளியே யாரோ நிற்கிறான்.


कोई तीन घंटे में यह काम पूरा होगा । 

ஏறத்தாழ மூன்று மணி நேரத்தில் இப்பணி முடியலாம்.

इस पुस्तक में  कोई 240 पृष्ठ  हैं। 

இப்புத்தகத்தில் கிட்டத்தட்ட 240 பக்கங்கள் இருக்கின்றன.


குறிப்பு:

      कोई என்ற பிரதிப் பெயர்ச்சொல் ஏதேனும் எண்களைக் குறிக்கும் சொல்லுக்கு முன்னால் 'ஏறத்தாழ' என்ற அர்த்தத்தில் வரும் பொழுது அத்துடன் வேற்றுமை உருபு சேராது.

किसी लड़के को बाहर भेजो । 

எந்தச் சிறுவனையாவது வெளியே அனுப்பு.


कोई चार दिन में वह आएगा । 

ஏறக்குறைய நான்கு நாளில் அவன் வருவான்.


सब कोई (सब लोग) எல்லோரும்

सब कोई अच्छे हैं । எல்லோரும் நல்லவர்கள்.


हर कोई - (प्रत्येक) ஒவ்வொருவரும், 

हर कोई कविता नहीं लिख सकता ।

எல்லோராலும் கவிதை எழுத இயலாது.


कोई एक- குறிப்பிட்ட ஒருவர். 

कोई एक आप की तारीफ़ करता था ।

குறிப்பிட்ட ஒருவர் தங்களைப் புகழ்ந்துவந்தார்.


कोई न कोई - யாராவது ஒருவர்.

कोई न कोई हमारी मदद करेंगे ।

 யாராவது ஒருவர் நமக்கு உதவி செய்வார்.


कुछ -SOME,கொஞ்சம்,(ஏதோ)


कुछ लोग आये, कुछ लोग नहीं आये । 

சிலர் வந்தனர், சிலர் வரவில்லை.


दूध में कुछ है । 

பாலில் ஏதோ இருக்கிறது.


उसके दिल में कुछ है । 

அவன் மனதில் ஏதோ இருக்கிறது. 

राम को भी कुछ दो।

ராமனுக்கும் கொஞ்சம் கொடு.

उन्होंने कुछ का कुछ समझ लिया । 

அவர் ஒன்று கெ(கி)டக்க ஒன்றை புரிந்துகொண்டார்.


सब कुछ -எல்லா வற்றையும், 

कुछ कुछ - கொஞ்சம் கொஞ்சம்,

कुछ न कुछ  -ஏதாவது, 

कुछ नहीं -  ஒன்றுமில்லை, 

कुछ  भी नहीं  - ஒன்றுமே இல்லை, 

बहुत कुछ  - நிறையவே, 

और कुछ - இன்னும் கொஞ்சம்கூட, 

कुछ और  - வேறு ஏதாவது. 

        

     कर -  செய், வினையின் சிறப்பான பிரயோகம் பற்றி அறிவது மிகவும் அவசியமாகும்.


खाना - சாப்பிடுதல், வினைப்பகுதி 

खा +कर - खाकर  சாப்பிட்டு, 

बोलकर - பேசி, 

पढ़कर - படித்து, 

सोकर தூங்கி, 

पीकर - குடித்து, 

लेकर  -எடுத்து, 

देकर - கொடுத்து, 

आकर - வந்து, 

जाकर போய்.

         இப்படி எல்லா வினைப் பகுதியுடனும் कर  சேர்க்கலாம். ஓர் செயலை முடித்துவிட்டு அடுத்த செயலுக்கு எழுவாய் போகும் போது முதல் செயலுக்கான வினையுடன் F சேர்க்கப்படும்.


पिताजी सबेरे उठकर टहलने जाते हैं ।

தகப்பனார் காலையில் எழுந்து உலாவச் செல்கிறார். 

मैं दूकान जाकर जल्दी वापस आऊँगा ।

நான் கடைக்குப் போய்விட்டு விரைவாக வருவேன்.


श्री राजीव गान्धी मद्रास आकर फिर श्रीपेरुमपुतूर गये । 

திரு. ராஜீவ் காந்தி சென்னைக்கு வந்துவிட்டு ஸ்ரீபெரும்புதூர் சென்றார்.


जल्दी नहाकर आओ । 

விரைவாகக் குளித்து விட்டு வா.


अब बोलकर क्या प्रयोजन है ?

இப்பொழுது பேசி என்ன பயன் ?


நீங்கள் இதே முறையில் வினைகளுடன் कर  சேர்த்து பல வாக்கியங்களை சுயமாக அமைத்துப் பழகுங்கள். முதலில் சிறு சிறு வாக்கியங்களையே அமைத்துப் பழகுங்கள். முக்கியமானது காலம். எனவே பலவித காலங்களுக்கு ஏற்றவாறு வினைகளை அமைக்கத் தெரிந்துகொள்வது முதல் தேவை, பிறகு படிப்படியாக வாக்கியங்களை விரிவாக்க வேண்டும்.

          வாக்கியங்களை விரிவாக்குவதற்கு கேள்விச் சொற்கள் மிக்க பயன்படுகின்றன. அத்துடன் எழுவாயைச் சேர்ந்த சொற்களை எழுவாயுடனும், பெயர் உரிச்சொற்களை பெயர்ச்சொற்களுக்கு முன்பாகவும், வினை உரிச்சொற்களை முன்பாகவும் அமைத்தல் வேண்டும். வினைச் சொற்களுக்கு சரியானபடி சொற்களை அமைக்காவிடில் மாறான பொருளைத் தரக்கூடும்.


(1) वह कम दूध लाता है । (2) वह दूध कम लाता है ।

         பார்ப்பதற்கு ஒரே பொருளைக் கொடுக்கும் வாக்கியமாகக் காணப்பட்டாலும். பொருள் வெவ்வேறானது.


कम दूध -குறைவான பால் என்றும்  

कम लाता है என்பது பால் குறைவான தடவை கொண்டு வருவதாகவும் பொருள்படும்.

कम பெயர் உரிச்சொல் , 

कम लाता है - வினை உரிச் சொல் . 

ஒரே சொல் இரு விதமாகவும் வரக்கூடும்.


வாக்கிய விரிவாக்க உதாரணங்கள்


1. मैं ने एक कलम खरीदी।  

कब ? मैं ने पिछले हफ़्ते एक कलम खरीदी । 

कहाँ ? मैं ने पिछले हफ़ते सेलम में एक कलम खरीदी । 

कितने में ? मैं ने पिछले हफ़्ते सेलम में चार सौ रुपये में एक कलम खरीदी ।


2. शेखर गया ।

    कौन शेखर ? मेरा दोस्त शेखर 

    कहाँ ? मदुरै के पास एक गांव 

    कब ? कल सबेरे 

    क्यों ? अपने पिता को देखने


3. सीता गयी ।

    कब ? जब पानी बरस रहा था ।

    कैसे ? गाडी से ।

    कहाँ ? जहाँ उसका स्कूल है । 

    क्यों ? क्योंकि आज उसको परीक्षा देनी है ।

        பல வகை இணைச்சொற்களைப் பயன்படுத்தியும் வாக்கியங்களை விரிவாக்கம் செய்யலாம்.

गाय उठी और  भाग गयी । 

गाय उठी । वह भाग गयी । 

गाय उठकर  भाग गयी । 

     இங்கனம் மூன்று வகையாக இதை அமைக்கலாம். 


சிறுவாக்கியங்களை இணைத்தல்

(உ-ம்)

1. वह बहुत बीमार है । चल-फिर नहीं सकता । 
அவன் மிகவும் நோயுற்றிருக்கிறான். நடமாட முடியாது. 
वह इतना बीमार है कि चल - फिर नहीं सकता ।


2. मेरे पास रोटी नहीं ।  चाय भी नहीं है ।

என்னிடம் ரொட்டி இல்லை. தேனீர் கூட இல்லை.

मेरे पास न तो रोटी है न चाय


3. सूरज  निकला।  अंधेरा दूर हुआ ।

சூரியன் உதித்தது. இருள் அகன்றது. 

सूरज के निकलते ही अंधेरा दूर हुआ ।

******************************

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...