Wednesday, November 10, 2021

  சிறப்புப் பிரயோகம் 5. வேற்றுமை உருபுகளின் சிறப்புப் பிரயோகம்

 

சிறப்புப் பிரயோகம் - 5

5.வேற்றுமைஉருபுகளின் சிறப்புப் பிரயோகம்


1. को -ஐ -பொதுவாக பெயர்ச் சொல், பிரதிப் பெயர்ச்சொல் ஆகியவற்றுடன் को  சேர்க்கப்படும். பிராணிகள், அஃறிணைச் சொல்லுடனும், ஊர் பெயர்களுடனும் இணைவதில்லை. முன்பே இதுபற்றிக் கூறியுள்ளோம். இருப்பினும் சில நேரங்களில் கர் இணைவதுண்டு (குறிப்பிட்ட பொருளைச் சுட்டி) मैंने उस हाथी को देखा । मैंने उस खत को पढा । நாட்கள் மற்றும் நேரத்தைக் குறிக்கும் சொற்களுடன் க க சேர்க்கப்படும்.

पाँच तारीख को , रात को , दिन को ,

चौदह बरस के लिए राम वन को गये । 

आज रात को शायद पानी बरसेगा । 

ஆனால் சில நேரங்களில் को தொக்கியிருக்கும்.

इस समय यहाँ कोई कहीं ।

இப்பொழுது இங்கு யாரும் இல்லை.


कल रात राम यहाँ नहीं था ।

நேற்று இரவு ராமன் இங்கு இல்லை,


2. கீழ்க்கண்ட வினைகளின் முன் 'से ' எனும் உருபையே பயன்படுத்த வேண்டும், தமிழ் அமைப்பை மனதில் வைத்துக் கொண்டு को, के पास, के साथ  ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது.


बोल - பேசு     मैं कामराज से बोल रहा हूँ ।

कह - சொல்   तुम राम से क्या कहते हो ।

मिल- சந்தித்தல்.  मैं कल जिलाधीश से मिला ।

लड़ - சண்டையிடு. राम रावण से लड़ा ।

पूछ - கேள் (வினவு) वह तुम से क्या पूछता है। 

सुन - கேள் (காதால்) मैं रेडियो से गाना सुन रहा हूँ।

मांग - கேள் (பொருளை). आपने किस से रुपये माँगे ।

डर - பயப்படு.  बिल्ली कुत्ते से डरती है।


प्रेम कर, मुहब्बत कर, प्यार कर - நேசி 


1. नवाब बेगम से मुहब्बत करते हैं ।

2. शेखर शीला से प्रेम करता है ।

3. आप गरीबों को प्यार कीजिए ।


प्यार कर -நேசி , இவ்வினைக்கு மட்டும்  'को' சேரும்  'से' அல்ல.


கவனிக்க :


घृणा करना - வெறுத்துப.  तुम किसी से घृणा मत करो ।


इनकार करना - மறுத்தல் . वह गांव जाने से इनकार करता है।


பின்வரும் வினைகளைப் பயன் படுத்தும்பொழுது அவற்றின் नां " की " எனும் உருபையே உபயோகித்தல் வேண்டும். வேறு எந்த உருபையும் உபயோகிக்கக் கூடாது.


1. सेवा करना - தொண்டு செய்தல்

सब को अपने देश की सेवा करनी चाहिए । 

எல்லோரும் தங்கள் நாட்டிற்கு (நாட்டின்) தொண்டு செய்ய வேண்டும்.


2. इज्जत करना -  மரியாதை செய்தல்

 हमेशा बडों की इज्जत करो । 

எப்பொழுதும் பெரியவர்களுக்கு (ளின்) மரியாதை செலுத்து.


3. आज्ञा देना - கட்டளை இடுதல் 

वह बाहर जाने की आज्ञा देता है । 

அவன் வெளியே செல்வதற்கு கட்டளை இடுகிறான் 


4. नकल करना - பின்பற்றுதல்

गीता लता की नकल करती है । 

கீதா லதாவைப் பின்பற்றுகிறாள்.


5. प्रशंसा करना, तारीफ़ करना - புகழ்தல்

गोपाल अपने पुत्र की प्रशंसा करते हैं । 

கோபால் தன் மகனைப் புகழ்கிறார்.


6. परवाह करना -  பொருட்படுத்துதல் 

सिपाही अपने प्राण की परवाह नहीं करते । 

போர் வீரர் தன் உயிரைப் பொருட்படுத்துவதில்லை.


7. राह देखना, प्रतीक्षा करना - எதிர் பார்த்தல்

आप किनकी राह देख रहे हैं ? 

தாங்கள் யாரை எதிர்பார்க்கிறீர்?


கீழ்க்காணும் வினைகளுக்கும் இவ்விதி பொருந்தும்


परीक्षा करना, जांच करना - ஆய்வு செய்தல்.

पूजा करना - ஆராதித்தல் 

मदद करना - உதவி செய்தல்.

रक्षा करना - பாதுகாத்தல்.

भेंट होना - சந்திப்பு ஏற்படுதல்.

जरूरत पड़ना - தேவைப் படுதல் 

निंदा करना - இகழ்தல்.

खोज करना - தேடுதல்.

उम्र होना  - வயதாகுதல்.

मृत्यु होना - மரணம் ஏற்படுதல். 

कोशिश करना - முயற்சி செய்தல்.

की अपेक्षा- காட்டிலும்.

देख - रेख करना -பராமரித்தல்

दिल्लगी करना  - கேலிசெய்தல்


3. பின்வரும் வினைக்குமுன் 'को' எனும் உருபைத்தான் சேர்க்க வேண்டும்.


1. आदर करना - மரியாதை செய்தல்

 हमेशा अध्यापक का आदर करो ।

 எப்பொழுதும் ஆசிரியரை மதி.


2. स्वागत करना - வரவேற்றல் - 

हम आपका स्वागत करते हैं । 

நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.


3. पता लगाना - கண்டு பிடித்தல்

    पुलिस ने चोरों का पता लगा लिया। 

போலீஸ் திருடர்களைக் கண்டு பிடித்தது.


4. भला करना  - நன்மை செய்தல் 

   ईश्वर आपका भला करेंगे । 

   இறைவன் உங்களுக்கு நன்மை செய்வார்.


5. अंत होना  - முடிவேற்படுதல் 

    उसके शासन का अंत हो चुका है । 

   அவனுடைய ஆட்சி முடிந்து விட்டது.


கீழ்க் கண்டவைகளுக்கும் இவ்விதி பொருந்தும்


त्याग करना - தியாகம் செய்தல்

 बिगड़ना - தீங்கிழைத்தல்

इंतजार करना - எதிர்பார்த்தல் 

इंतजाम करना - ஏற்பாடு செய்தல்


सामना करना ,  मुकाबला करना - எதிர்த்தல், ஏதும கொள்ளுதல்

अपमान करना - அவமதித்தல்

रास्ता लेना     - வழியே போதல்

शिकार करना - வேட்டையாடுதல்

पालन करना - கடைபிடித்தல்

शौक होना   - விருப்பம் ஏற்படுதல்

इलाज करना - மருத்துவம் செய்தல் 

इस्तेमाल करना , उपयोग करना - உபயோகித்தல்


குறிப்பு:


2,3-ல் की ,को  மட்டும் பயன்படுத்தப் படுவதற்குக் காரணம் , அச்சொற்களின் பால்தான். தமிழில் இம்மாதிரி இடங்களில் 'को'  ' ஐ' உருபுதான் பெரும்பாலும் வருகின்றது. ஆனால்  को -வை இந்த இடங்களில் பயன்படுத்தலாகாது.


4. உறவு,உடமை, உடலின் உறுப்புகள் ஆகியவற்றைக் குறிப்ப தாயின் அப்படிப்பட்ட வாக்கியங்களில் ' உருபு மட்டுமே பயன்படுத்தப்படும்.


உறவு:

राम के एक बच्ची पैदा हुई ।

ராமனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

दशरथ के तीन रानियाँ थीं । 

தசரதனுக்கு மூன்று ராணிகள் (மனைவி) இருந்தனர்.


உடமை:

इन घरों में मेरे भी एक घर है।

இவ்வீடுகளில் என் வீடு கூட ஒன்று உள்ளது.


यह राम का कुरता है, मेरे कुरता लाओ । 

இது ராமனுடைய சட்டை, என் சட்டையைக் கொண்டுவா.


உறுப்பு:

हमारे दो आँखें हैं । 

நமக்கு இரு கண்கள் உள்ளன. எனக்கு ஒருமுகம் உள்ளது. 

बंदरों के पूँछ होते हैं । 

குரங்குகளுக்கு வால் உள்ளன.


को - ' ஐ' ,  ‘க்கு'

நாம் நமது நாட்டை நேசிக்கவேண்டும்.


வேண்டும் - चाहिए .

 எனவே எழுவாயுடன் விதிப்படி 'को' சேர்க்கவேண்டும். 

हमको अपने देश को  (ஐ) प्यार करना चाहिए। 

 को  சேர்ந்த இரண்டையும் எழுவாயாகக் கொள்ளலாம்.  சந்தர்ப்பம் கண்டு தெளிவான பொருள் வெளிப்பட்டாலும், இலக்கண விதிப்படி வாக்கியம் திட்டவட்டமான கருத்தைக் கொடுக்கும்படி அமைக்கப்படவேண்டியது அவசியமாகும். 

    எனவே இதை हमें  अपने देश को  (ஐ) प्यार करना चाहिए।  என அமைப்பதே சரியாகும். 

(हम + को  = हमको  அல்லது हमें ) இந்த வாக்கியத்தை हमको अपने देश से प्रेम करना चाहिए  என அமைப்பதும் ஏற்புடையதே.


     சங்கரனுக்கு இப்பழத்தைக் கொடு, என்பதை ஹிந்தியில் शंकर को इस फल को दो । என்று மொழி பெயர்த்தால் விதிப்படி சரியே. ஆனால் शंकर को , फल को என்று இருமுறை அடுத்தடுத்து வருவது சற்று உறுத்தல் அளிப்பதாகும். 'फल 'உயிரற்ற பெயர்ச் சொல்லாக இருப்பதால் 'को'-வைத் தவிர்க்கலாம்.

शंकर को यह फल  दो । என்பதே ஹிந்திக்கு ஏற்றதாகும்.

ஆசிரியர் எதைக் கற்றுக் கொடுத்தார்? अध्यापक ने किसको पढ़ाया ?


ஆசிரியர் பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். अध्यापक ने पाठ को पढाया ।


மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயற்பு விதிப்படி சரியாக இருந்தாலும், குழப்பத்தைத் தருவதாக உள்ளன.


ஆசிரியர் பாடத்துக்கே படிப்பித்தார். என பொருள் தருகிறது. 'को -வின் தேவையற்ற பிரயோகம்தான் காரணம், 

முறையே --

अध्यापक ने क्या पढ़ाया ? अध्यापक ने पाठ पढाया ।

என்று அமைக்க வேண்டும். को - வின் பிரயோகம் பற்றி முன்பே  சொல்லி -யுள்ளவற்றை கவனத்தில் வைக்கவும்.


उस कुरसी को लेकर यहाँ डालो ।

அந்த நாற்காலியை எடுத்து இங்கே போடு.


को लेकर  என்ற இந்த அமைப்பினை பல தேவையற்ற இடங்களிலும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

तुम्हारी बात को लेकर हम दुखी हुए । 

உன் பொருட்டாக நாங்கள் துயருற்றோம். 

मामाजी व्यापार को लेकर चिंतित हैं।

மாமா வியாபாரம் நிமித்தம் கவலையடைந்துள்ளார்.

लडके गेन्द को लेकर लड रहे हैं ।

சிறுவர்கள் பந்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இவ்வாக்கியங்களில் 'को लेकर ' என்பது பயனற்றது.

तुम्हारी बात पर हम दुखी हुए । 

मामाजी व्यापार पर चिंतित हैं ।

 लडके गेन्द के लिए लड रहे हैं । என்பதே போதும்.

चाहिए,  होना , पड़ना , போன்ற துணைவினைகளைப் பயன் படுத்தும்பொழுது எழுவாயுடன் 'को ' சேர்க்கப்பட வேண்டியது விதியாகும். அப்பொழுது கூட எழுவாய் பிரதிப் பெயர்ச்  சொற்களாக இருந்தால் 'को '-வின் சுருக்கத்தைப் பயன்படுத்தி को -வின் உபயோகத்தை குறைப்பது நல்லது. 

(உ-ம்)

मुझको राम को रुपये देने पड़ते हैं ।

मुझे राम को रुपये देने पड़ते हैं । என்றால் போதும்.


जो+को= जिसको  அல்லது जिसे  எனப்படும். 

நீங்கள் அனுப்பிய வேலைக்காரன் நன்றாக வேலை செய்கிறான்.

वह नौकर खूब काम करता है,जिसे (जिस को) आप ने भेजी था ।


 नौकर  -உயிருள்ள பெயர்ச்சொல் , எனவே 'को ' சேர்ப்பது சரியே.


நீங்கள் அனுப்பிய புத்தகம் நன்றாக இருக்கிறது.

 वह पुस्तक अच्छी है, जिसे आप ने भेजी थी ।


पुस्तक -உயிரற்ற பெயர்ச்சொல், எனவே को சேர்ப்பதோ அல்லது அதன் சுருக்கமான जिसे  - யை இணைப்பதோ தேவையில்லை. வாக்கியத்தை இப்படி அமைக்கலாம்.


वह पुस्तक अच्छी है, जो आपने भेजो थी ।


**************************

धन्यवाद 

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS