சிறப்புப் பிரயோகம் - 6
எதிர்மறைச் சொற்கள் - मत , न , नहीं
ஹிந்தியில் எதிர்மறைச் சொற்களாக ''मत , न , नहीं'' பயன்படுத்தப்படுகின்றன. இதுபற்றி முன்பே விளக்கமாகக் கூறப்பட்டவைகளை நினைவுபடுத்திக் கொள்ளவும். ஒரு சிலஉதாரண வாக்கியங்கள் கீழே தரப்படுகின்றன.
आप ज्यादा देर मत बैठिए ।
தாங்கள் அதிகநேரம் உட்காராதீர்கள்.
ज्यादा मत सोइए ।
அதிகம் உறங்காதீர்கள்.
'मत ' - முன்னிலை எழுவாய் தொடர்பான ஆணை வாக்கியங்களில் பயன் படுத்தப்படுகிறது.
आप ज्यादा न बोलें ।
தாங்கள் அதிகம் பேசவேண்டாம்.
आप राम के लिए कुछ न खरीदे ।
தாங்கள் ராமனுக்காக ஒன்றும் வாங்கவேண்டாம்.
तुम इस तरह वहाँ न जाना ।
நீ அங்கே இப்படி செல்லாதே.
'न' முன்னிலைக்கு மட்டுமல்லாது படர்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது, அத்துடன் ஆணையாக இல்லாமல் ஓர் வேண்டுகோளாகவும், பணிவுகலந்த ஆணையாகவும் பொருள் தரும்.
'नहीं '- எளிய எதிர்மறை வாக்கியங்களில் ஈகி் பயன்படுத்தப் படுகின்றன.
राम उस घर में रहता है । वह इस घर में नहीं रहता ।
****************
धन्यवाद
No comments:
Post a Comment
thaks for visiting my website