Thursday, November 11, 2021

சிறப்புப் பிரயோகங்கள் -7 कि , लेकिन (किन्तु , परन्तु , पर  மற்றும் मगर) , ही नहीं  , बल्की  - ன் பிரயோகம்

 

சிறப்புப் பிரயோகங்கள்-7 

कि - ன் பிரயோகம்  

ஹிந்தியில் தமிழ்போலல்லாமல் அடிக்கடி கலவை வாக்கியங்களும்; இணை வாக்கியங்களும் அமைகின்றன. இவை பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு சில எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தரப்படுகின்றன. 


நாளைக்கு நீங்கள் போகிறீர்கள் என்று ராமன் கூறுகிறான்.

राम का कहना है कि आप कल जा रहे हैं । 


அவன் அங்கே செல்லவேண்டாமென்று யார் சொல்கிறார்.

कौन कहता है कि वह वहां न जाए ।


நாம் சினிமாவிற்கு போகிறோமென்று குழந்தைக்கு தெரிந்துவிட்டது.

बच्चा जान गया कि हम सिनेमा जा रहे हैं ।

பிற்பாடு வருந்த நேரிடும் செயலைச் செய்யாதே. 

ऐसा काम न करो कि बाद में पछताना पड़े ।


அவன் திருடிவிட்டான், எனவே போலீஸ் பிடித்தது. 

उसने चोरी की थी इसलिए उसे पुलिस ने पकड लिया । 


அவர்கள் தேனீர் அருந்துவதில்லை, எனவே பால் வரவழை. 

वे चाय नहीं पीते इसलिए दूध मंगाओ ।


इसलिए कि யின் சிறப்பு பிரயோகம்


உன்னிடம் வழி கேட்கவேண்டுமென்று அவன் வந்தான். 

वह इसलिए आया कि तुम से रास्ता पूछ ले ।


உங்களைக் காண இயலும் என்ற எண்ணத்தில் அவள் வந்தாள்.

वह इसलिए आयी कि आप से मिल सके ।


लेकिन - ஆனால்


ஒரு வீடு கிடைத்துவிட்டது ஆனால் அது நன்றாக இல்லை. 

एक घर मिल गया, लेकिन वह अच्छा नहीं है ।


நான் நண்பனைக் காணச்சென்றேன் ஆனால் அவன் வீட்டில் இல்லை. 

मैं अपने दोस्त से मिलने गया, लेकिन वह घर में नहीं ।


'लेकिन -ஐத் தவிர இதே பொருளில் किन्तु , परन्तु , पर  மற்றும் मगर ஆகியனவும் பயன் படுத்தப்படுகின்றன. 


यद्यपि / फिरभी -    ஆயினும் / இருந்தாலும்.


அவனுக்கு தொண்டை சரியில்லை ஆயினும் பாட நேரிட்டது. 

यद्यपि उसका गला खराब था फिर भी गाना पड़ा । 


ரமேஷிடம் பணம் இருந்தபோதிலும் எனக்குக் கொடுக்கவில்லை. 

यद्यपि रमेश के पास पैसे थे फिर भी मुझे नहीं दिये ।


ही नहीं  - மட்டுமன்று, बल्की  - ஆயின்.


शेखर खेलने में ही नहीं, बल्कि पढ़ने में भी होशियार है।

சேகர் விளையாடுவதில் மட்டுமல்ல, படிப்பதிலும் கெட்டிக்காரன்.


पता चला कि यह गाडी दस बजे नहीं, बल्कि बारह बजे रवाना होगी। 

இந்த வண்டி பத்து மணிக்கல்ல பனிரெண்டு மணிக்குப் புறப்படும் என்று தெரிய வந்தது.


*********************

धन्यवाद 

















No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...