Thursday, November 11, 2021

சிறப்புப் பிரயோகங்கள் -8

 

      இணைச்சொற்களின் வரிசையில் और, कि,इसलिए, क्योंकि, परन्तु   ஆகியவை இருவாக்கியங்களை இணைக்கின்றன. 

     और ,  तथा , एवं , व, या ,  अथवा  ஆகியன சொற்களை இணைக்கின்றன. எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதை நினைவு கூறுங்கள்.


      ஒரே சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவது விரும்பத் தக்கதல்ல, ஆனால் ஒரே பொருள் தரக்கூடிய பல சொற்களை மாற்றி அமைப்பதுவே ஓர் மொழிக்கு தனி அழகைத் தரும்.


1. '"உம்","மேலும்" எனும் பொருள்தரும் சொற்கள் और ,  तथा , एवं , व என அறிவீர்கள். இதில் " व " என்பது சுருக்கமாக இருசொற்களை மட்டுமே இணைக்கும். இது வாக்கியங்களை இணைக்க பயன்படுத்தப் படுவதில்லை,


2. " அல்லது " எனும் பொருள் தரும் சொற்கள் : या , अथवा , किंवा , वा ।


3. "ஆகையால்" எனும் பொருள் தரும் சொற்கள் : इसलिए,  अतः अतएव ।


4. “ ஆனால்'' எனும் பொருள்தரும் சொற்கள்: पर , परन्तु , किन्तु , लेकिन,  मगर , वरन् , बल्कि இவற்றில் எது எரிக எனும் சொற்கள் இருவாக்கியங்களை இணைப்பதற்கே பயன்படுத்தப்படும். "சொல்லப்போனால்" என்ற பொருளில் அமையும் முதல் வாக்கியத்தில் '"न केवल " அல்லது " न  सिर्फ என்ற சொற்களும் இரண்டாவது வாக்கியத்தில் "भी " எனும் சொல்லும் இடம்பெறும்.


राजाजी न केवल नामी राजनीतिज्ञ थे, वरन् मशहूर लेखक भी थे।

 இராஜாஜி புகழ்பெற்ற அரசியல்வாதியாக மட்டு மன்றி புகழ்மிகு எழுத்தாளராகவும் விளங்கினார். 


5. ''अर्थात", " याने '' ஆகிய சொற்களும் 'அதாவது' எனும்  பொருள் தரும்.


केरल में साक्षरता ज्यादा है, अर्थात् वहाँ पढ़े-लिखे लोग अधिक हैं।

கேரளத்தில் எழுத்தறிவு கூடுதலாக உள்ளது, அதாவது அங்கு படித்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

இரு சொற்களால் அமையும் இணைச் சொற்கள்


1.या तो  ... या , या तो गाओ,  या चुप रहो।

பாடு, அல்லது சும்மா இரு.


2. क्या ... क्या , क्या छोटे,  क्या बड़े , सब स्वार्थी हैं।

சிறியவன் என்ன, பெரியவன் என்ன, அனைவரும் சுயநலமிகள்.


3. न तो ... न,   उसके पास न तो खाना है , न कपडे ।

 அவனிடம் உணவுமில்லை, உடையுமில்லை.


4. चाहे .... चाहे , तुम चाहे पढ़ो , चाहे सोओ। 

 நீ வேண்டுமானால் படி, அல்லது தூங்கு.


5. चाहे .... पर , चाहे कुछ भी चला जाए, पर मान न जाए। 

எது வேண்டுமானாலும் போகட்டும், ஆனால் மானம் போய்விடக் கூடாது.

6. यदि(अगर) ... तो , यदि समय मिले ,तो मैं राम से मिलूंगा ।

நேரம் கிடைத்தால் நான் ராமனைச் சந்திப்பேன்.


7. यद्यपि  ...तथापि (तो भी) ,  यद्यपि वह गरीब है , तो भी अभिमानी है ।

அவன் ஏழையானாலும் தன்மானமுள்ளவன்.

8. इसलिए..कि , वे इसलिए आए थे  कि आप से कुछ माँगे।

தங்களிடம் ஏதோ கேட்பதற்காக அவர் வந்திருந்தார்.


9. न... कि,   वे मेरे मालिक हैं , न कि रिश्तेदार। 

அவர் எனது முதலாளி, சொந்தக்காரர் அல்ல.




**************

धन्यवाद 







No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...