Saturday, January 1, 2022

நிகழ்காலத் தொடர் வினை


  பாடம் -13

நிகழ்காலத் தொடர் வினை


 वह आता है।  அவன் வருகிறான்.

 वह आ रहा है। அவன் வந்து கொண்டிருக்கிறான். 

 सीता आ रही है। சீதை வந்து கொண்டிருக்கிறாள்.

लड़का आ रहा है। 

 சிறுவன் வந்து கொண்டிருக்கிறான். 

 लड़के आ रहे हैं।  

சிறுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.


'रहा" எனும் சொல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதைக் குறிக்கும். (रहा -கொண்டு] நிகழ் காலத்தில் வினைச் சொல்லுடன் சேர்க்கப்படும் விகுதி 'ता' விற்கு பதில் ''रहा, 'ते' விற்கு பதில் 'रहे ' யும், 'ती' க்கு பதில் ' 'रही'யும் அமையும். ता, ते,ती ஆகியவை வினைப் பகுதியுடன் சேர்த்து எழுப்படும். 

ஆனால் रहा,रहे,रही என்பவை தனித்து நிற்கும்.


सीता गाती है। சீதை பாடுகிறாள்.


सीता गा रही है । சீதை பாடிக்கொண்டிருக்கிறாள்.


जा ' - போ, என்ற வினையுடன் எழுவாயாக பிரதிப்பெயர்ச் சொற்களைப் பயன்படுத்தி தொடர் நிகழ்கால வாக்கியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


मैं जाता हूँ । நான் போகிறேன்.


   ஆண்பால்                  பெண்பால்


    मैं जा रहा हूँ ।                     मैं जा रही हूँ ।

    तुम जा रहे हो ।                   तुम जा रही हो ।

    वह / यह जा रहा है ।            वह / यह जा रही है ।

   हम/ आप/ वे /ये जा रहे हैं ।      हम / आप / वे /ये जा रही हैं ।


மேற்கண்டவாறு जा' வெனும் முக்கிய வினையை நீக்கி விட்டு வேறு பல வினைகளை அமைத்துப் பயிற்சி செய்க.

 கவனிக்கவும் -

எழுவாய் பெண் பாலானால் रहा, रहे என்பவைகளுக்குப் பதிலாக रही சேர்க்கவும்.


குறிப்பு: தொடர்வினை வாக்கியங்கள் எதிர் மறையானால் வினைக்கு முன் ' नहीं' சேரும். ஆனால் हूँ , ही , है , हैं   நீக்கப்பட மாட்டாது. சாதாரண நிகழ்கால வாக்கியங்களில் இவை நீக்கப்படும். முன்பே இது பற்றி நாம் குறிப்பிட்டுள்ளோம்.


मैं आता हूँ- 
நான் வருகிறேன்.

मैं नहीं आता -
நான் வரவில்லை.

मैं आ रहा हूँ । 
நான் வந்து கொண்டிருக்கிறேன்.

मैं नहीं आ रहा हूँ । 
நான் வந்து கொண்டிருக்கவில்லை.

आज वे नहीं खेल रहे हैं ।
இன்று அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.

கீழே தொடர் நிகழ்கால வாக்கியங்கள் பல கொடுக்கப் பட்டுள்ளன. 
புதிய வார்த்தைகளை நன்கு கற்றுக் கொள்ளவும்,

गाड़ी  -  வண்டி           नौकर - வேலைக்காரன்
बरस  - பெய்தல்        गाँव -- கிராமம்
शहर - நகரம்              बेच - விற்றல்
खरीद - வாங்குதல்   रो - அழ

नौकर क्या ला रहा है ?
வேலையாள் என்ன கொண்டு வந்து கொண்டிருகிறான்?

नौकर चाय ला रहा है ।
வேலையாள் தேனீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறான்.

बाहर पानी बरस रहा है ।
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது.

गोपाल गाँव जा रहा है ।
கோபாலன் கிராமத்திற்கு போய்க்கொண்டிருக்கிறான்.

ललिता क्यों रो रही है ?
லலிதா ஏன் அழுது கொண்டிருக்கிறாள்?

वह नहीं रो रही है।
அவள் அழுது கொண்டிருக்கவில்லை.

यह गाडी सेलम से आ रही है ।
இந்த வண்டி சேலத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது.

हम शहर से आ रहे हैं।
நாங்கள் நகரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறோம்.

लड़के मैदान में गेंद खेल रहे हैं ।

சிறுவர்கள் மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். 

मैं दूध पी रहा हूँ ।

நான் பால் குடித்துக் கொண்டிருக்குறேன்.

तुम कहाँ जा रहे हो ?

நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? 

कमला, तुम क्या ख़रीद रही हो ?

கமலா, நீ என்ன வாங்கிக் கொண்டிருக்கிறாய்?

मैं फल ख़रीद रही हूँ ।

நான் பழம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

वह औरत फूल बेच रही है ।

அந்தப் பெண் பூ விற்றுக் கொண்டிருக்கிறாள்.

अब कौन रोड़ियो पर बोल रहे हैं ?

இப்பொழுது யார் ரேடியோவில் பேசிக் கொண்டிருக்கிறார்?

*****************************










No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...